திரு.கமல்ஹாசனும் 16 கோடியும் – எது வரை உண்மை ….?

kamal pothis add

ஆடை நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படத்தில் நடித்ததற்காக
தனக்கு கிடைத்த சம்பளமாகிய 16 கோடி ரூபாயை
நடிகர் கமல்ஹாசன் எய்ட்ஸ் நோயால்
பாதிக்கப்பட்ட சிறுவர்/சிறுமியர்களுக்கு உதவும்‘பெற்றால் தான்
பிள்ளையா’ என்ற ட்ரஸ்ட்டிற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்
என்கிற செய்தி –

முதலில் http://www.dnaindia.com என்கிற ஆங்கில செய்தித்தளத்தில்
கீழ்க்கண்ட தலைப்புச்செய்தியாக வெளியாகியது….

Kamal Haasan donates brand endorsement salary
of Rs 16 crore to help HIV-affected children

இதற்கு ஆதாரமாக, ‘பெற்றால் தான் பிள்ளையா’ ட்ரஸ்டிலிருந்து
வெளியிடப்பட்ட கீழ்க்கண்ட சர்டிபிகேட்டையும் வெளியிட்டது….381544-certificate

(http://www.dnaindia.com/entertainment/report-
kamal-haasan-donates-entire-brand-endorsement-
salary-to-help-hiv-affected-children-2130919 )

பின்னர் திரு.rajiv nambiar – founder trustee/ ptp trust
வெளியிட்டதாக கூறி ஒரு மறுப்புச் செய்தியும் அதே தளத்தில்
கீழ்க்கண்ட தலைப்பில் வெளியாகியது….

PTP Trust denies that Kamal Haasan made a
donation to them

( http://www.dnaindia.com/entertainment/report-
ptp-trust-denies-that-kamal-haasan-made-a-donation
-to-them-2131017)

முழு செய்தியையும் சேர்த்து சுருக்கமாக கீழே தருகிறேன்….

கமல்ஹாசன் முதன்முதலாக நடித்த போத்தீஸ் நிறுவனத்தின்
விளம்பரப்படம் மூலம் கிடைத்த ரூ.16 கோடி பணத்தை அவர்
எய்ட்ஸ் பாதித்த குழந்தைகள் நலனுக்கான அமைப்பாக விளங்கி
வரும் ‘பெற்றால்தான் பிள்ளையா” என்ற அமைப்பிற்கு
நன்கொடையாக கொடுத்ததாக செய்தித்தளங்களில்
தகவல்கள் வெளிவந்தன.
அதற்கு ஆதாரமாக அந்த தொண்டு
நிறுவனம் வெளியிட்ட ஒரு சர்டிபிகேட்டும் வெளியிடப்பட்டது.

பின்னர் ஆங்கில தளங்களில்
திரு.rajiv nambiar – founder trustee/ ptp trust
அவர்களின் பெயரிலும்,

தமிழ் செய்தித்தளங்களில் –
ட்ரஸ்ட்டின் ப்ராஜக்ட் மானேஜர் திருமதி வினிதா சித்தார்த்த
கூறுவதாகவும் கீழ்க்கண்ட செய்தி வெளியாகி இருக்கிறது…..

“அது முழுக்க முழுக்க பொய்யான தகவல். எங்கள் லெட்டர்
ஹெட்டைப் பயன்படுத்தி யாரோ இப்படி ஒரு பொய்யைப்
பரப்பியிருக்கிறார்கள். எங்களை பாதிப்புக்குள்ளாக்கும்
இத்தகைய ஒரு தவறான தகவலைப் பரப்ப வேண்டாம்”

—————————-

இந்த செய்திகளின் விளைவுகளுக்கு வருகிறேன்….

இந்த “‘ பெற்றால்தான் பிள்ளையா ” என்கிற தொண்டு நிறுவனம்
வருமான வரி விதிப்பில் இருந்து விலக்கு பெற்றிருக்கிறது….

இந்த நிறுவனத்திற்கு தங்கள் வருமானத்திலிருந்து நன்கொடை
அளிப்பவர்கள் அந்த தொகைக்கு 100 % வருமான வரி விலக்கு
பெறுவார்கள்.

The Trust is registered under Section 12AA of
Income Tax Act 1961 vide DIT(E)No:2(767)
11-12 dt.22-Jun-2012 with effect from 04-Jan-2012.

All donations to the trust from 06.07.2012 are
deductible u/s 80G of the Income Tax Act 1961,
vide DIT (E) No:2(767)/11-12 dt.21.12.2012.

திரு.கமல்ஹாசன் நடித்த அந்த விளம்பரம் வெளியாகி விட்டது.
இதற்காக அவர் பெற்ற சம்பளம் எவ்வளவு என்பது
வெளியார் யாருக்கும் தெரியாது.

இந்த சம்பளம் நன்கொடையாக அளிக்கப்பட்டிருந்தால்,
அவருக்கு முழு தொகைக்கும் வருமான வரிவிலக்கு கிடைக்கும்.
இல்லையேல் அவர் தான் பெற்ற சம்பளத்திற்கு
30 % வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த செய்தி முதலில் வெளியாகவும்,
அந்த நிறுவனத்தின் லெட்டர் பேடில் சர்டிபிகேட் வெளியிடவும்
யார் காரணம் என்பது இதுவரை வெளியே தெரியவில்லை.

பின்னர் அந்த நிறுவனத்தின் சார்பில் மறுப்பு வெளியிடப்பட்ட
போதும், இந்த செய்தி உருவானதன் பின்னணி விளக்கப்படவில்லை…


திரு.கமல்ஹாசன் அவர்கள் நன்கொடை கொடுத்திருந்தால் –
அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
அப்படி இல்லை யென்றால், திரு.கமல்ஹாசன் சார்பாக இந்த
செய்தி எப்படி வெளிவந்தது என்பதற்கான விளக்கங்கள்
கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு தொடர்பில்லாமலே
இந்த செய்தி வெளியாகி இருந்தால் – பொய்யான சர்டிபிகேட்டை
வெளியிட்டவர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும்.

திரு.கமல்ஹாசன் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு
புகழ்பெற்ற மனிதர் என்பதால் – இந்த நடவடிக்கைகள் அவசியம்…

இவை எதுவுமே இல்லாமல் –
தொண்டு நிறுவனத்தின் சார்பாக பொத்தாம்பொதுவாக
செய்தி மறுப்பு மட்டும் அளிக்கப்பட்டிருப்பது வினோதமாக இருக்கிறது….

ஏனென்றால் –

இந்த ” பெற்றால் தான் பிள்ளையா ” தொண்டு நிறுவனத்தின்
இரண்டு நிறுவனர்களில் திரு.கமல்ஹாசனும் ஒருவர்…..
( மற்றவர் – Hello FM வானொலியின் தலைமை நிர்வாக அதிகாரி
திரு.ராஜீவ் நம்பியார்….)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to திரு.கமல்ஹாசனும் 16 கோடியும் – எது வரை உண்மை ….?

 1. Pingback: திரு.கமல்ஹாசனும் 16 கோடியும் – எது வரை உண்மை ….? | Classic Tamil

 2. paamaran சொல்கிறார்:

  பாவம் போத்திஸ் …. ! இந்த விளம்பரம் கமலின் சுய விளம்பரம் போல அவருடைய போட்டோ காலரியும் — ரசிகர்களின் மகிழ்ச்சியும் தான் பிரதானமாக { முதல் அடையாளம் போல் } தெரிகிறதே தவிர — அடுக்கபட்டிருக்கும் அட்டை பெட்டிகளும் — தொங்குகின்ற சொற்ப கோட்டுகளும் — இவர் சொல்லும் : இதோ … தமிழ்நாட்டின் அபிமானத்தின் இன்னொரு அடையாளம் … போத்திஸ் . people “s pothys …. இது மக்களின் போத்திஸ் . என்பதற்கா —- 16– கோடிகள் …. ? { இதில் 10 — கோடி போத்திஸ் பணமும் — 6– கோடி கமலின் சொந்த பணம் என்று டீடைல்ஸ் வேற கொடுத்தாங்க } பாவம் போத்திஸ் …. இதுல காதுல பூ சுத்துகிற ” நன்கொடை — பொய்யான லெட்டர் பேடு ” விவகாரங்கள் வேற …. அப்பப்பா .. என்னமா .. கவுண்டமணி ஸ்டைலில் ” டகால்சி ” வேலைகள் …. !!!

 3. அபிமன்யு - சித்தார்த் அபிமன்யு சொல்கிறார்:

  “விஸ்வரூபம்” படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம். வருமானவரித்துறை நடத்திய விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார் கமல். அதில் கலந்துகொண்டு அவர் பேசியது –

  “வருமான வரி செலுத்துவது எனது கடமை.
  அதன்மூலம் எனக்கு வருமான வரித்துறையுடன் நெருக்கம் உள்ளது.
  வருமான வரியை செலுத்த வேண்டியவர்கள் அதை தவிர்க்காமல், முறையாக செலுத்த வேண்டியது கட்டாயம் ஆகும். இது நாட்டுக்கு நாம் செய்யும் கடமை. இப்போது நான் `விஸ்வ ரூபம்’ என்ற சினிமா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அந்த படத்தின் மூலம் அடுத்த வருடம் நான் அதிக வருமான வரி செலுத்தவேண்டியவனாக இருப்பேன் என்று நினைக்கிறேன்!”

  இவரைப் போய் குறை சொல்கிறார்களே.

 4. Sundar சொல்கிறார்:

  Why we people are too much thinking about Kalai Koothadigal’s & their earnings. Pavapatta Panam they cant do anything…. write it down….. Are you ready to buy things if he suggest or Recomends!!!!!!!!!!

  • today.and.me சொல்கிறார்:

   //Are you ready to buy things if he suggest or Recomends!!!!!!!!!!/
   நண்பரே நான் தயார் இல்லை. ஆனால் ஏகப்பட்ட அப்பாவிகள் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்கள்.விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டியது மீடியாவின் கடமை.

   • Sundar சொல்கிறார்:

    I appreciate your words. But if that is their fate we cant do anything…. Theethum nandrum pirar thara vaaraaaa! Please think beyond the level. Thanks for your reply Mr./Mrs. today.and.me

    • today.and.me சொல்கிறார்:

     //But if that is their fate//
     நண்பரே, விதி வலியது தான். கொஞ்சம் மதியைப் புகட்டுவோம் நமக்குத் தெரிந்தவரை. உங்களுக்குத் தெரிந்ததை எனக்கும் எனக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.
     🙂 I took your comment cool.

     • Sundar சொல்கிறார்:

      Mr./Mrs. today.and.me Its not our duty. We can guide..we can discuss..everyone has to think about on their own way in positive way. .

      I give some examples:
      In this world who earn a lot of money and who has lot of followers since current society gives the respect to them.

      1. Politicians
      2. Cinema Actors/Actresses
      3. Athletics/sportsmen

      One interest thing here is they dont require any qualifications……If you say below are Correct then we are not at all fit to write comments.

      1. Have to marry only one as a partner in our life and love that one in our whole life.
      2. Not suppose to do malpractice in our life to earn money or fame
      3. Keep ethics in life
      4. Be honest – all ways.

      Please boss…. we just pass this life just like that since we are living with Jokers….

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்பர் சுந்தர்,

      மூவரோடு நிறுத்தி விட்டீர்களே …
      ஏன் இன்னும் ஒரு category-யை விட்டு விட்டீர்கள் ….”ஆன்மிகவாதிகள்….! ”

      நமக்கு தெரிய வருவதை, நம் கருத்துக்களை உரக்க பரிமாறிக்கொள்ளத்தான்
      இந்த வலைத்தளம்….

      அதனால் எதாவது பலன் விளைந்தால் நல்லதே…
      குறைந்த பட்சம் மனம்விட்டு எண்ணங்களை/ தகவல்களை பரிமாறிக்கொள்ள
      இந்த தளம் உதவுகின்றதல்லவா ?

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 5. Thani Oruvan சொல்கிறார்:

  Mr ka maithan, Unga amma(JJ) taxum kattama returnum file pannama oora yemathunatha paththiyum; kadaisila vera vazhi illamai fine pay pannatha paththi oru vamarisanamum pannala, aana Kamal than ennamo tamilnattai aalvathu polavum, vari yeippu sethathu polavum ullathu onga vimarisanam

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப தனி ஒருவன்,
   நீங்கள் உங்களது பிளாக்- எங்காவது நீங்கள் குறிப்பிட்டுள்ள விசயம் பற்றி எழுதியிருக்கிறீர்களா? குறிப்பிடுங்களேன், வந்து படித்துவிட்டு அங்கும் கமெண்ட் போட்டுவிடலாம்,

   ஓவர் நைட்டில் நீங்களும் ஒபாமா ஆகிவிடலாம், சாரி காமை ஆகிவிடலாம்.
   …………………..
   அப்புறம், ”கமல்தான் என்னமோ ” என்று ஏன் கமலுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்பதையும் விளக்கமாக நீங்கள் எழுதியிருக்கலாமே?

   கமல் தரப்பில் என்ன நியாயம் உள்ளது என்பதை நாங்களும் தெரிந்துகொண்டிருப்போமே?

   …………
   உங்களுக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?

   :-)))))

  • அபிமன்யு - சித்தார்த் அபிமன்யு சொல்கிறார்:

   அய்யா தனி ஒருவன்,

   காவிரிமைந்தன் அவர்கள் என்ன சொல்லி இருக்கிறார் ?

   // திரு.கமல்ஹாசன் அவர்கள் நன்கொடை கொடுத்திருந்தால் –
   அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
   அப்படி இல்லை யென்றால், திரு.கமல்ஹாசன் சார்பாக இந்த
   செய்தி எப்படி வெளிவந்தது என்பதற்கான விளக்கங்கள்
   கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு தொடர்பில்லாமலே
   இந்த செய்தி வெளியாகி இருந்தால் – பொய்யான சர்டிபிகேட்டை
   வெளியிட்டவர் மீது போலீசில் புகார் கொடுத்திருக்க வேண்டும்.

   திரு.கமல்ஹாசன் பொதுவாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒரு
   புகழ்பெற்ற மனிதர் என்பதால் – இந்த நடவடிக்கைகள் அவசியம்…//

   இதில் என்ன தப்பு இருக்கிறது ?

   இந்த விளம்பரத்திற்கு இத்தனை ரூபாய் சம்பளம் வாங்கினேன்;
   நன்கொடை கொடுத்தேன் அல்லது கொடுக்கவில்லை –
   இவ்வளவு தானே அவர் சொல்ல வேண்டியது? ஏன் தயக்கம் ?

   கமலஹாசன் விளக்கம் எதுவும் கொடுக்க வேண்டாம்: விளக்கினால் மாட்டிக் கொள்வார் என்றோ,
   போலீசில் புகார் கொடுத்தால், அவர்கள் உண்மையை
   வெளிக்கொண்டு வந்தால்
   அவருக்கு சங்கடம் என்றோ சொல்கிறீர்களா ?
   இடுகையில் உள்ள விஷயத்தைப் பற்றி பேசாமல் எங்கெங்கோ
   சுற்றுகிறீர்களே ஏன் ?

   அபிமன்யு – சித்தார்த் அபிமன்யு

 6. Tamil Thiratti சொல்கிறார்:

  மிக மிக சிறந்த பதிவு நண்பரே. உங்களின் இந்த பதிவை தமிழ் திரட்டியிலும் (http://tamilthiratti.com) இணைத்து இன்னும் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

 7. seshan சொல்கிறார்:

  இந்த ” பெற்றால் தான் பிள்ளையா ” தொண்டு நிறுவனத்தின்
  இரண்டு நிறுவனர்களில் திரு.கமல்ஹாசனும் ஒருவர்…..
  ( மற்றவர் – Hello FM வானொலியின் தலைமை நிர்வாக அதிகாரி
  திரு.ராஜீவ் நம்பியார்….)

  the issue between above two persons , showing in different colour….

  cat will come out soon….

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.