ப.சிதம்பரமும், அருண் ஜேட்லியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் – ராம் ஜெத்மலானி

ram-jethmalani2

இதுவும் செய்தி மட்டும் தான் ….!!!
( விமரிசனம் என்று நினைத்து பாஜக அன்பர்கள் என்னைத் திட்ட
முற்பட வேண்டாம்….!!! )

நேற்றிரவு, டெல்லியில் திரு.ராம் ஜெத்மலானி கூறியது-
” இந்திய மக்களை ஏமாற்றிய மோடி
தண்டிக்கப்பட வேண்டும் ” : ராம் ஜெத்மலானி – என்கிற தலைப்பில்
பிரசுரிக்கப்பட்டது.

இன்று காலை, ராம் ஜெத்மலானி பாட்னாவில் பேசியது
விவரமாக செய்தியாக வெளிவந்திருக்கிறது. அது கீழே –

————–

மோடி, ஜேட்லியால் ஏமாற்றப்பட்டேன்: ஜேத்மலானி
By பாட்னா,
First Published : 05 October 2015 03:37 AM IST
( http://www.dinamani.com/india/2015/10/05 )

“”பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி
ஆகியோரின் செயல்பாடுகளால் நான் ஏமாற்றமடைந்தேன்”

என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்குரைஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான ராம் ஜேத்மலானி தெரிவித்தார்.

பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்
அவர் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில், நரேந்திர மோடியை நாட்டின்
தலைவராகப் பிரசாரம் செய்ததற்காக பிராயச்சித்தம் தேடி
நான் வந்துள்ளேன். இந்தியாவைக் காப்பதற்கு கடவுள் அனுப்பிய
தேவ தூதராக மோடியை நினைத்திருந்தேன். ஆனால், நான் ஏமாற்றப்பட்டேன்.

வெளிநாடுகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை
கொண்டு வருவதற்கு, காங்கிரஸ் தலைமையிலான
முந்தைய அரசும், பாஜக தலைமையிலான தற்போதைய
மத்திய அரசும் தவறிவிட்டன.

கருப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்கு நாம் உண்மையிலேயே விரும்பினால், ப.சிதம்பரமும், அருண்
ஜேட்லியும் கைது செய்யப்பட்டு
தண்டிக்கப்பட வேண்டும்.

ஜெர்மனியில் கருப்புப் பணத்தைப் பதுக்கிவைத்துள்ள
1,400 நபர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று
மத்திய அரசு எழுத்துபூர்வமாகக் கோரிக்கை விடுத்தால்,
அந்தப் பெயர்களை வெளியிட ஜெர்மனி அரசு தயாராக இருந்தது.

இதுதொடர்பாக, பாஜக தலைவர்களுக்கு
நான் கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.
என்னை முட்டாளாக்கியது போல், பிகார் மக்களையும் பாஜக முட்டாளாக்க முடியாது என்றார் ஜேத்மலானி.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to ப.சிதம்பரமும், அருண் ஜேட்லியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் – ராம் ஜெத்மலானி

 1. paamaran சொல்கிறார்:

  paamaran சொல்கிறார்:
  8:03 முப இல் ஒக்ரோபர் 1, 2015
  சபாஷ்.. தானாக முன்வந்து கருப்பு பண தகவலை அளித்த இந்தியர்கள்! ரூ.3770 கோடி வசூலாக வாய்ப்பு
  Read more at: http://tamil.oneindia.com/news/india/govt-collects-rs-3-770-crore-from-over-600-stash-holders-und-236841.html …. பத்திரிக்கைகள் ” சபாஷ் ” போட்டு எழுதுகின்றன …. ! இந்தியர்கள் ஆசை — ஆசையாய் இன்னும் மோடிஜி ஆளுக்கு 15 –லட்சம் கருப்பு பணம் மீட்பில் கொடுப்பார் என்று நினைப்பில் இருக்கிறார்கள் …!! என்ன கொடுப்பார் … ? மோடிஜி சொன்ன கணக்கில் தற்போது வந்துள்ளது —- எத்தனை சதவீதம் தேறும் ….? என்று கேட்டு தங்களுக்கு ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தேன் …. !{ இது அக்டோபர் 1 — ம் தேதி செய்தி } —– கருப்பு பணம் பற்றிய திரு ராம்ஜெத்மலானியின் இன்றைய ஆதங்கம் : // பாஜக தலைவர்களுக்கு
  நான் கடிதம் எழுதினேன். ஆனால் யாரும் பதிலளிக்கவில்லை.
  என்னை முட்டாளாக்கியது போல், பிகார் மக்களையும் பாஜக முட்டாளாக்க முடியாது என்றார் ஜேத்மலானி.மேலும் ” இந்திய மக்களை ஏமாற்றிய மோடி
  தண்டிக்கப்பட வேண்டும் ” கருப்புப் பணத்தைக் கொண்டு வருவதற்கு நாம் உண்மையிலேயே விரும்பினால், ப.சிதம்பரமும், அருண்
  ஜேட்லியும் கைது செய்யப்பட்டு
  தண்டிக்கப்பட வேண்டும். // இந்த செய்திகளை எல்லாம் படித்து விட்டு மறந்து விடுவது தானே …. இந்திய மக்களின் நடைமுறை …. ! இதில் ப.சிதம்பரம் ஒரு துரும்பையும் கருப்பு பண மீட்புக்கு கிள்ளி போடவில்லை —- ஆனால் எங்கள் ஜெட்லி ரூ .3700 — கோடி அளவுக்காவது மீட்டு இருக்கிறாரே என்று மார் தட்டுகிறார்கள் ப.ஜ.க.வினர் …. இது எப்படியிருக்கு …. ?

 2. ravi சொல்கிறார்:

  இப்படி எல்லாம் பேசிவிட்டு ,
  அய்யா அவர்கள் எதற்கு 2ஜி வழக்கில் கனிமொழிக்காக ஆஜராக வேண்டும் ??

  சாருக்கு ஒரு கவர்னர் பத்தி பார்சல் !!!

 3. Pingback: ப.சிதம்பரமும், அருண் ஜேட்லியும் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் – ராம் ஜெத்மலானி | Classic Ta

 4. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I lost trust in Jeth malini. He has strong personal motive. He is another MK.

 5. Surya சொல்கிறார்:

  I like most of the blogs from Kavirimainthan. Ram Jethmalini is not someone very respectable, based on the cases he generally takes up. He goes for saving rich. If that is the case, why any importance to his statements to be included. Just because he mentioned ‘Modi’ in a bad light!?

  KM Sir – There is no better person than Jaya for TN at the moment. I am sure you agree to this. Lets also agree there is no better PM than Modi at the moment!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப சூர்யா,

   திரு.ராம் ஜெத்மலானி ஒரு மிகச்சிறந்த வழக்கறிஞர்.
   ஆனால் – நல்ல அரசியல்வாதியோ, தலைவரோ அல்ல
   என்பதை நூற்றுக்கு நூறு ஒப்புக் கொள்கிறேன்.

   நான் இங்கு ராம் ஜெத்மலானியின் பேச்சுக்கு முக்கியத்துவம்
   கொடுத்து பதிவு செய்ததற்கு காரணம் உண்டு.

   வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணத்தை மீட்டுக் கொண்டு வருவது
   பற்றி ராம் ஜெத்மலானி காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலேயே
   சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார். மிகத்தீவிரமாக
   அதை துரத்திக் கொண்டும் ( chasing ) இருந்தார்.
   அது இன்னமும் நடந்து வருகிறது.

   தேர்தலுக்கு முன்னர் மோடிஜி, அருண்ஜி ஆகியோர்
   பாஜக பதவிக்கு வந்தால் வெளிநாடுகளிலிருந்து
   கருப்பு பணத்தை – மோடிஜியின் வார்த்தைகளின்படி –
   சுமார் 80 லட்சம் கோடி – மூன்று மாதங்களுக்குள்
   மீட்டு வருவோம் என்றும் அதை கொண்டு வந்தால் ஒவ்வொரு
   இந்தியனின் வங்கிக்கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போட முடியும்
   என்றும் தொடர்ந்து பேசி வந்தார்கள்.

   மோடிஜி பிரதமர் ஆவதை – ராம் ஜெத்மலானியும் முழுமனதோடு
   வரவேற்று ஆதரித்து பேசவும் செய்தார்.

   ஆனால் – ஆட்சிக்கு வந்த பிறகு, மோடிஜியோ,அருண்ஜியோ
   கருப்புப் பண விவகாரத்தில் சீரியசாக எதையும் செய்யவில்லை
   என்பது மறுக்க முடியாத உண்மை.
   சம்பந்தப்பட்டவர்களில் பாஜகவிற்கு வேண்டப்பட்ட தொழிலதிபர்கள்
   பலரும் இருப்பார்கள் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
   இதனால் விரக்தியும், கோபமும் அடைந்த ஜெத்மலானியின்
   ரீ-ஆக்ஷனை இந்த வலைத்தள நண்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
   என்பதற்காகத்தான் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து பதிவிட்டேன்.

   ஏமாற்றமும், கோபமும் ஜெத்மலானிக்கு மட்டுமல்ல.
   பாஜக /மோடிஜியின் தீவிர அபிமானிகளைத் தவிர
   மற்ற அனைவருக்கும் தான்….

   நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இன்னும் நான்கு
   ஆண்டுகளுக்கு மத்தியில் மோடிஜி தான் ஆட்சியில்
   இருக்கப்போகிறார்…அந்த உண்மை நம் மனதிற்கு புரியத்தான் செய்கிறது.

   இருந்தாலும், ஏமாற்றத்தையும், கோபத்தையும்
   மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
   இது ஜனநாயக நாடு –
   நாம் ஏமாற்றப்பட்டால் – அதை உரக்கச் சொல்ல நமக்கு உரிமை உண்டு.

   மக்களின் எதிர்ப்பு தீவிரமானால்,
   அது ஆட்சியில் இருப்பவர்களுக்கு புரிந்தால் –
   ஒருவேளை அவர்களின் போக்கில், செயல்பாடுகளில் –
   மாறுதல்கள் வரக்கூடும் ….

   அது தான் நாம் விரும்புவது…
   இத்தகைய இடுகைகளின் நோக்கமும் அதுவே…!

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றி சூர்யா.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Surya சொல்கிறார்:

    நன்றி காவிரிமைந்தன்!

    கருப்பு பணம் அதிகம் உள்ளது அரசியால்வதிகளிடம் தான் (+ corporate ). அப்படி இருக்க, ஒரு அரசியல் தலைவர் கருப்பு பணத்தை மீட்பேன் என்று சொல்வதை ஒரு தேர்தல் வாக்குறுதியாக மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து. அப்படி கருப்பு பணம் மீட்கப்படுமஏனால், பல அரசியல் வாதிகள் சிரியா நாடு போல வெளிநாடுகலுக்கு அகதிகள் ஆவார் (மோடி போல்… லலித் மோடி போல் என்றும் சொல்லலாம் !!!!)

   • Surya சொல்கிறார்:

    >>> ஏமாற்றமும், கோபமும் ஜெத்மலானிக்கு மட்டுமல்ல. பாஜக /மோடிஜியின் தீவிர அபிமானிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் தான்….
    இப்படி திருத்தலாம்… பாஜக /மோடிஜியின் தீவிர அபிமானிகலும் ஏமாற்றமும், கோபமும் அடைவர். அவர்கள் அதை மற்றோர்க்கு வெளிபடுத்த மாட்டார்! 🙂

   • விக்ரம் சொல்கிறார்:

    Wonderful clarification Sir.

 6. K.Veeraraghavan சொல்கிறார்:

  Yes Friends, I agree with Mr.Kavirimainthan.

  In a democracy, this type of articles /blogs are
  very essential for communicating various facts
  known and /or unknown and creation of public opinion.
  At times this also helps in changing the heart of people
  at the helm of affairs.
  10 lakh worth of coat was auctioned
  only because of negative opinion it created.
  Same is the case with Land Grab bill also.
  After passing 3 Ordinances, the govt. went back
  dropping the bill because of serious resentment
  from public.

  Mr.K.M. you are doing a good service to the soceity
  and please continue the same. I wish you all the
  best in your efforts.

  K.Veeraraghavan

 7. Sidarth abhimanyu சொல்கிறார்:

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.