கலைஞர் மற்றும் மூப்பனார் அவர்கள் பற்றி செய்தியாளர் முராரி சொல்வது உண்மையா ….?

kalaignar and gk mooppanar

தொடர்ந்து ஊடகங்களை கவனித்து வருபவர்களுக்கு –
மூத்த செய்தியாளர் முராரி அவர்களைப்பற்றி தெரிந்திருக்கும்….
இண்டியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் ஹெரால்டு போன்ற செய்தி
நிறுவனங்களில், அரசியல்சிறப்பு செய்தியாளராகப் பணியாற்றியவர். சில நேரங்களில் தொலைக்காட்சி விவாதங்களில் கூட அவரைப் பார்த்திருக்கலாம்.

அண்மையில், ஒரு வார இதழில் அவர் எழுதியிருக்கும்
கட்டுரையில், போகிற போக்கில் பிரச்சினைக்குரிய ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டு போயிருக்கிறார்.

முதலில் அவர் எழுதியிருக்கும் கட்டுரையிலிருந்து
– அவரது வார்த்தைகளிலேயே – சம்பந்தப்பட்ட பகுதி –

———-

1989-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டது.
அதாவது, ஜானகி, ஜெயலலிதா, காங்கிரஸ், திமுக ஆகிய நான்கு
கட்சிகளுமே தனித்தனியாக போட்டியிட்டன. அப்போது, காங்கிரஸ்
சார்பில், தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியில் மூப்பனார்
போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுக சார்பில் கல்யாணசுந்தரம்
போட்டியிட்டார். அந்த தொகுதியில் செய்தி சேகரிப்பதற்காக
நானும் சென்றேன்.

மூப்பனாருக்கு திமுக வேட்பாளர் கடுமையான போட்டியாகவே
இருந்தார். இந்த கடும் போட்டிக்கு மத்தியில் மூப்பனார் தோற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், மூப்பனார் தோற்பதை கருணாநிதி விரும்பவில்லை….
உடனே மறு எண்ணிக்கைக்கு உத்திரவிடப்பட்டது.
மறு எண்ணிக்கையில் கல்யாணம் தோற்றதாகவும், மூப்பனார்
வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது…..!

ஜி.கே.மூப்பனார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
ஆட்சி அமைந்த ஓரிரு மாதத்தில், சட்டமன்றத்தில் நடந்த
கூச்சல் குழப்பத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டார்.
உடனே அவர் டெல்லிக்கு சென்று ராஜீவ்காந்தியிடம்
கருணாநிதியின் அரசை உடனே கலைக்க
வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.

அப்போது மூப்பனார் ராஜீவிடம் வாதாடி,
ஒரு ஆட்சி அமைந்து இரண்டு மாத
காலத்திற்குள் அதை கலைக்க நினைப்பது மிக தவறான
ஐடியா என்று கருணாநிதிக்காக வாதிட்டார்…..

———–

இது குறித்த விவரங்கள் முழுமையாக என் நினைவில் இல்லை.
எனவே, செய்திக் குறிப்புகளை அடிப்படையாக வைத்தே
இதை எழுதுகிறேன்…

இந்த தகவல் உண்மையாக இருந்தால் –
அது பல கேள்விகளை எழுப்புகிறது…..

1) முதலில் மூப்பனார் அவர்கள் தோற்று விட்டதாக அறிவிக்கப்பட்டது –

ஆனால் – அப்போதைய முதல்வராக இருந்த திரு.கருணாநிதி
அதை விரும்பவில்லை என்பதால் –
மறு எண்ணிக்கைக்கு உத்திரவிடப்பட்டது –

அதன் விளைவாக மூப்பனார் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டது….

– என்று சர்வசகஜமாக சொல்கிறார் திரு.முராரி.
அனுபவப்பட்ட – மிக மூத்த செய்தியாளர் ஒருவர்
இதைச் சொல்கிறார் என்றால் –

அது அந்நாளைய அரசியல், நிர்வாக நிலைமைகளையும்
முதலமைச்சர் பொறுப்பிலிருந்தவர் நினைத்தால் –
தேர்தல் முடிவுகளையும் மாற்றலாம் என்கிற அளவிற்கு
தேர்தல் கமிஷன் மீது முதல்வரின் ஆதிக்கம் இருந்தது
என்பதையும் கூறுகிறது.

2) முராரி அவர்கள் எழுதியிருப்பதைப் பார்த்தால் –
திரு மூப்பனார் அவர்களுக்கும் இதில் உடன்பாடு இருந்ததாகவே தெரிகிறது ( பின்னால் ராஜீவ் காந்தியிடம் கலைஞருக்காக வாதாடி return gift கொடுத்திருக்கிறாரே…! )

3) பிற்காலத்தில் (2009 ) சிவகங்கைச்சீமையில் நடந்த
ஒரு பாராளுமன்ற தேர்தலில் முதலில் தோற்றதாக
அறிவிக்கப்பட்டவர் – சென்னை கோட்டையிலிருந்து
மாவட்ட கலெக்டருக்கு தகவல் சென்ற பிறகு மறு எண்ணிக்கை
நடத்தப்பட்டு – ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட விஷயம்
நினைவிற்கு வரவே செய்கிறது….!!!

( அப்படி தோற்று – பிறகு ஜெயித்ததாக அறிவிக்கப்பட்டவர், ஐந்து முழு ஆண்டுகளுக்கும் மத்தியில் கேபினட் அமைச்சர் பதவி வகித்ததும் – அந்த தேர்தல் வழக்கு இன்னமும் நிலுவையில் இருப்பதும் – நமது ஜனநாயகத்தின் சாபக்கேடுகள். )

இந்த நிகழ்ச்சியின் போதும் முதல்வராக கோட்டையில் கோலோச்சி கொண்டிருந்தவர் கலைஞர் தான் என்கிற உண்மை நினைவிற்கு வரும்போது,

இது மூப்பனார் காலத்திலேயே நிகழ்த்தப்பட்ட
சாதனை தான் … இதெல்லாம் இவர்களுக்கு ரொம்ப சகஜமப்பா.. என்பதும் புரிய வருகிறது…!!!

1989ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாபநாசம் தொகுதியில்
மூப்பனார் அவர்கள் ஜெயித்ததாக அறிவிக்கப்பட்ட பிறகு வெளியே சொல்லப்பட்ட அதிகாரபூர்வமான வாக்கு விவரங்கள் கீழே –

திரு ஜி.கே.மூப்பனார் – 36278

திரு கல்யாணசுந்தரம் – 35186

இந்த மாயம் எப்படி நடந்ததோ …!
கலைஞர் ஒருவர் மட்டுமே அறிந்திருக்கக்கூடிய மாயம் அது… கலைஞருக்கு தான் ஞாபக சக்தி அதிகமாயிற்றே . …
பிற்பாடு – எப்போதாவது நெஞ்சுக்கு நீதியில்
எழுதுகிறாரா பார்ப்போம்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to கலைஞர் மற்றும் மூப்பனார் அவர்கள் பற்றி செய்தியாளர் முராரி சொல்வது உண்மையா ….?

 1. thiruvengadam சொல்கிறார்:

  இதுபோல் பழங்கதை அண் ணாநகரில் ஹண்டே மு க மோதலில் நீண்ட இழுவைக்கு பின் செய்த அறிவிப்புதான் மு க வுக்கு ” தோல்வியே காணாதவர் என்ற சிறப்புக்கு எம்ஜிஆர் அப்போது உதவிய வதந்தி நினைவுக்கு வருகிறது. தேர்தல் நடைமுறை மாற்றங்கள் இவை தவிர்க்க செய்கின்றன.

 2. shiva சொல்கிறார்:

  இது எந்த அளவுக்கு சரியானது என்று தெரியவில்லை. ஏன் என்றால் 1989ல் ஜனாதிபதி ஆட்சி இருந்தது (ஜானகி அரசாங்கம் கலைக்கப்பட்ட பின்). அதனால் கலைஞர் எந்த அளவுக்கு தேர்தல் முடிவை மாற்றி இருக்க முடியும். (2009ல் அவர் முதல்வராகவே இருந்தார் அதனால் அப்போது முடிவை மாற்றி இருக்க வாய்ப்புண்டு).
  இப்படி கூறுவதால் நான் கலைஞருக்கு ஆதரவாக எழுதுவதாக நினைக்க வேண்டாம். கலைஞர் போன்ற ஊழல் அரசியல்வாதிக்கு அவர் இறப்பதற்குள் தக்க
  தண்டனை கொடுக்க வேண்டும்.

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  முராரி சொல்வது உண்மையைப்போல் தெரியவில்லை. கருணானிதி அப்படி நினைத்திருந்தால், ரொம்ப வீக் வேட்பாளரைத் தி.மு.க சார்பாகப் போட்டிருக்கலாமே. ஆனால், சிதம்பரம் ஜெயித்தது, மத்தியிலிருந்து வந்த கட்டளை. கருணானிதியே, அண்ணா நகரில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது எம்.ஜி.யார் தயவால்தான். இதற்கெல்லாம் காரணம், வாக்குகள் எண்ணும் மையத்தில் உள்ள புல்லுருவிகள்தான்.

  • ஸ்ரீநிவாசன் சொல்கிறார்:

   வீக் வேட்பாளரை போட்டு, மூப்பனார் தானாகவே வெற்றி பெற்றிருந்தால், கலைஞருடைய சாதுர்யத்திற்கு வேலையே இல்லையே. அதுபோல் நடந்திருந்தால் கலைஞருக்காக மூப்பனார், ராஜீவ் காந்தியிடம் வாதாடுவதற்கான வாய்ப்புகள் குறைவு அல்லவா.

   ஆக ஒரே கல்லில் மூன்று மாங்காய்
   1. தேர்தல் முடிவு முதல் அறிவிப்பு மூலம், மக்களிடம் திமுகவின் செல்வாக்கை மூப்பனாருக்கு காட்டியாகி விட்டது.
   2. முடிவை மாற்றி அறிவித்ததின் முலம், தனது செல்வாக்கையும் காட்டிக்கொண்டார்.
   3. அதேபோல் மூப்பனார் திமுக/கலைஞர் க்கு கட(ன்)மைப்பட்டதாகவும் ஆகிவிட்டது

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ஸ்ரீநிவாசன்,

    ஒரு விதத்தில் நீங்கள் சொல்வதும்
    பொருத்தமாகத் தான் இருக்கிறது.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி, ஜி.கே.மூப்பனார் அவர்களை
    முதல்வர் வேட்பாளராகவே களமிறக்கி இருந்தது என்று நினைவு….

    இந்த நிகழ்வுக்குப் பிறகு தான் மூப்பனாருக்கும், கலைஞருக்கும்
    நல்ல நெருக்கம் ஏற்பட்டது,….என்று நினைக்கிறேன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 4. TamilBM சொல்கிறார்:

  வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.