“மாதேசி” மீது மோடிஜிக்கு ஏன் விசேஷ அக்கரை ……?

madhesi struggle

 

 

இந்தியாவின் அண்டை நாடு ( neighbouring country )….
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பின்னிப்பிணைந்த உறவு உள்ள நாடு….
நட்புறவுள்ள ( friendly country ) நாடு….

பாஸ்போர்ட் கூட இல்லாமல், தங்குதடையின்றி மக்கள்
சென்று வரக்கூடிய நிலையில் உள்ள ஒரு அண்டை நாடு….

-இந்தியாவின் மீது முதல் முறையாக ஐக்கிய நாடுகள் சபையில்
மிகவும் தீவிரமான குற்றச்சாட்டுகளுடன் புகார் செய்துள்ளது…

அண்டை நாடான இந்தியா, நாலு பக்கமும் நேபாளத்துடனான
இந்திய எல்லகளை அதிகாரபூர்வமற்ற விதத்தில்,
அறிவிக்காமல் மூடி, நேபாளத்திற்கான
அத்தியாவசிய சப்ளைகளை முடக்கி இருப்பதாக புகார்….!!!
சுமார் 6000 சப்ளை லாரிகள் எல்லையிலேயே இந்தியாவால்
முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகப் புகார்…..!!!

காய்கறி மற்றும் உணவுப் பொருட்களும்,
முக்கியமாக பெட்ரோல், டீசல்,
மற்றும் எரிவாயு சப்ளை தடுக்கப்படுவதாகவும் புகார்….!

10 நாட்களுக்கும் மேலாக எரிபொருள் எதுவுமே கிடைக்காத
நிலையில் நேபாளம் ஸ்தம்பித்துப் போயிருக்கிறது. ஒரு லிட்டர்
பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை – க்காக மக்கள் அடித்துக்
கொள்கிற நிலை உருவாகி இருக்கிறது.

இதன் காரணமாக நேபாள அரசாங்கம் நேற்றைய தினம்
கல்கத்தாவுக்கு தனது 2 போயிங் 757 ரக டான்டன் எரிவாயு
விமானங்களை அனுப்பி, அவற்றில் பெட்ரோல் மற்றும் டீசல்
எரிவாயுக்கள் நிரப்பப்பட்டு சுமார் 66 டன் எடைகொண்ட
பெட்ரோல் மற்றும் டீசல் எரிவாயு நேபாளத் தலநகர்
காத்மாண்டூவுக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்தியா என்ன பதில் கூறுகிறது – ?
இந்தியா எந்தவித குறுக்கீட்டிலும் ஈடுபடவில்லை.
சப்ளை லாரிகள் எல்லையை தாண்டி செல்லாததற்கு காரணம் –
நேபாள எல்லைக்குள் நிகழும் கலவரங்கள் தான்.

அங்கு “மாதேசி” இனத்தவரால் நிகழ்த்தப்படும் போராட்டங்கள்
காரணமாக, சாலைப்போக்குவரத்துக்கு போதிய பாதுகாப்பு இல்லை.
நேபாள அரசால் தன் நாட்டிற்குள் வரும் வாகனங்களுக்கு
பாதுகாப்பை உறுதிசெய்ய முடியாததால் – லாரிகள் இந்திய-நேபாள
எல்லையிலேயே தடைபட்டு நின்று கொண்டிருக்கின்றன.
இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டியது நேபாள அரசுதான்.

உள்நாட்டு நிலவரத்தை நேபாளம் உறுதி செய்தால் –
சப்ளைகள் செல்வதில் எந்த தடங்கலும் இருக்காது….!!!

இது எந்த அளவிற்கு உண்மை…..?

நேபாள எல்லையில் போக்குவரத்துக்கு பாதுகாப்பு இல்லை
என்று காரணம் சொல்லி, வேண்டுமென்றே தான் இந்தியா
எல்லையை மூடி, சப்ளையை நிறுத்தி வைத்திருக்கிறது….
என்று சொல்லப்படுவதில்
எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது…..?

நேபாளத்தில் என்ன குழப்பம்….?
இந்தியாவுக்கும் நேபாளத்திற்கும் உறவில் என்ன சிக்கல்…?

மிகச்சுருக்கமாகச் சொன்னால் –

நேபாளம் பல இன மக்களை கொண்ட ஒரு நாடு…..
நேபாளத்தின் சுமார் 30 சதவீதம் பேர் –
நேபாளத்தின் தென் பகுதியில் பீகாருடனான
எல்லையில் வசிப்பவர்கள் – “மாதேசி” எனப்படுவோர்…..
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, “இந்தி” மொழி பேசும் மக்கள்…!
( பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பீகாரிலிருந்து
சென்றவர்கள் என்று வைத்துக் கொள்ளலாம்….!!! )

நேபாளம் அண்மையில் தனது புதிய அரசியல் சட்டத்தை
உருவாக்கிக் கொண்டது. அதில் நேபாளத்தை பூகோள ரீதியாக
7 பிரதேசங்களாகப் பிரித்தது. ஒவ்வொரு பிரதேசத்திலிருந்தும்
பாராளுமன்றத்திற்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்கள்
அனுப்பப்படுவர்.

7 states

புதிய அரசியல் சட்டத்தில் இந்தி மொழி பேசும் 30 சதவீத
மாதேசி மக்கள் தாங்கள் வசிக்கும் மாதேசி பிரதேசத்தை,
ஒரு தனி பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்றும்
அப்போது தான் தங்களுக்கான போதிய பிரதிநிதித்துவம்
கிடைக்கும் என்றும்
போராடினார்கள்.

ஆனால், அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் –
மாதேசிக்களை இரண்டுக்கும் மேற்பட்ட வெவ்வேறு
பிரதேசங்களுடன் இணைத்து, மாதேசிக்கள் எந்தவொரு
பிரதேசத்திலும் பெரும்பான்மையாக
இல்லாதவாறு செய்து விட்டனர்.
இதனால் கடும்கோபமடைந்த
மாதேசி மக்கள் புதிய அரசியல் சட்டத்திற்கு எதிராக
போராடி வருகிறார்கள். இந்தியாவின் பரிபூரண ஆசி
இந்த போராட்டங்களுக்கு உண்டு….!!!

ஏன் அப்படி ….?

புதிய அரசியல் சட்டம் – மசோதா அளவில் இருக்கையிலேயே –
மோடிஜி தனது விசேஷ தூதரை நேபாளத்திற்கு அனுப்பி –
இந்தி பேசும் மாதேசிக்களுக்காக தனி ” மாதேசி பிரதேசம் ”
அமைக்க புதிய அரசியல் சாசனத்தில் வழி வகை செய்யப்பட
வேண்டுமென்று வலியுறுத்தி வந்தார். கடந்த ஓராண்டாக
இதற்காக கடுமையான முயற்சிகள் டெல்லியிலிருந்து
மேற்கொள்ளப்பட்டன….

ஆனால், அரசியல் சட்டத்தை உருவாக்கும் பொறுப்பில்
செல்வாக்குடன் இருந்த நேபாள அரசியல்வாதிகள் –
(அநேகமாக கம்யூனிஸ்ட் கட்சியினர்….)
மோடிஜி தங்கள் உள்நாட்டு விஷயங்களில் குறுக்கிடுவதை
விரும்பவில்லை.
எனவே, இந்தியாவின் விருப்பத்திற்கு
எதிராகவே, மாதேசிகளுக்கு என்று தனி பிரதேசம்
அமைக்கப்படாமலே நேபாளத்தை 7 பிரதேசங்களாகப் பிரித்து
சென்ற மாதக் கடைசியில் புதிய அரசியல் சட்டம்
ஏற்றுக்கொள்ளப்பட்டு அமலுக்கும் வந்து விட்டது….

இதை எதிர்த்து தான் ( டெல்லியின் பரிபூர்ண ஆசியுடன் )
எல்லையில் தீவிரமாக மாதேசி இன மக்கள் போராட்டம்
நடத்தி வருகிறார்கள்.
அத்தியாவசிய சப்ளைகள் ஏற்றி வரும்
எந்த வாகனத்தையும் அவர்கள், தங்கள் ஏரியாவை
தாண்டிச்செல்ல அனுமதிப்பதில்லை…..

விளைவு – சப்ளை இல்லாமல் –
நேபாளத்தின் திணறல் …
ஐ.நா.வில் புகார் etc. etc….

நேபாளத்தில் “மாதேசி”க்களுக்காக தனி பிரதேசம் அமைக்கப்பட
வேண்டும் என்கிற அவர்களது கோரிக்கையில் மோடிஜி அரசு
இவ்வளவு தீவிரம் காட்டுவது ஏன்…?
இது நேபாளத்தின் உள்நாட்டு விவகாரங்களில்
குறுக்கிடுவது போல் ஆகாதா … என்று கேட்கிறீர்களா …?

குறுக்கீடு தான்….
ஆனால் அடுத்த மாதம் பீகாரில் தேர்தல் வருகிறதே….!
அதன் பின்னர் உத்திர பிரதேசத்தில்….!!!
இந்தி மொழி பேசும் இந்திய மாநிலங்களில் தேர்தல்
வரவிருக்கையில், மத்திய அரசு நேபாளத்திலுள்ள
“இந்தி” மொழி பேசும் மக்களுக்காக எந்த அளவிற்கு
தீவிரமாகச் செயலாற்றுகிறது என்பதை இந்தி -ய மக்களுக்கு புரிய
வைக்க வேண்டாமா….?

இது ஒரு பக்கமிருக்க ….

இன்னொரு கோணத்தில் பார்த்தால் –
ஒரே மொழி பேசும் 30 சதவீத மக்கள் தங்களை தனித்தனியே
பிரித்து வெவ்வேறு மாநிலங்களுடன் இணைக்காமல் –
ஒரே மாநிலமாக/ பிரதேசமாக அமையுங்கள் என்கிற
கோரிக்கையை நேபாள அரசு ஏற்றுக் கொள்ள மறுப்பது
சரி அல்ல என்பதும் நியாயமே…..

எனவே நமது வாதம் –
மாதேசி மக்களின் கோரிக்கைக்கு எதிரானது அல்ல….
மத்திய அரசு அதற்கு ஆதரவாக செயல்படுவதற்கு
எதிரானதும் அல்ல ….

இதே அளவுகோல் –
இதே பார்வை –

இலங்கைத் தமிழர்கள் விஷயத்தில் எடுக்கப்படாதது ஏன்…?
என்பது தான் நம் கேள்வி…

இலங்கைத்தமிழர்களின் இன்னல்களைப் பற்றி தமிழகம்
வலியுறுத்திப் பேசும்போதெல்லாம் –

மத்திய அரசின், பாஜக அமைச்சர்களின் அணுகுமுறை –
(முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் – கூடத்தான் …. )
எப்படி இருந்தது …இப்போதும் எப்படி இருக்கிறது ….?

“இலங்கை நமது அண்டை நாடு,
இலங்கை நமது நட்பு நாடு.
இலங்கை பூரண சுதந்திரமுள்ள ( sovereign democracy )
தன்னுரிமை பெற்ற நாடு….
அதன் உள் விவகாரங்களில் நாம் எப்படித் தலையிட முடியும் …?

மிஞ்சி மிஞ்சி போனால் –
கேட்டுக் கொள்ளத்தான் முடியும் ( can only be requested ) –
அதற்கு மேல் எந்தவிதத்தில் இந்தியா தலையிட முடியும் ….?

” அய்யா மத்திய ஆட்சியாளர்களே –
நேபாளம் வாழ் “இந்தி” மொழி பேசும் மக்களுக்கு
ஒரு அணுகுமுறை –

இலங்கை வாழ் “தமிழ்” மொழி பேசும் மக்களுக்கு
வேறு வித அணுகுமுறை –

என்கிற உங்களது போக்கு எந்த அளவிற்கு நியாயமானது ….?
என்பதே நமது கேள்வி …..

 

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to “மாதேசி” மீது மோடிஜிக்கு ஏன் விசேஷ அக்கரை ……?

 1. thiruvengadam சொல்கிறார்:

  The solution is ” Tamilnatil TAMRAI malaranum which is very remote.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  இங்கு அளவுகோல்கள் அவரவர் தேவைக்கு உட்பட்டது. எங்களுக்கு தேவையெனில் நாங்கள் ட்விட்டர், முகநூல் என மாறி மாறி தகவல் போடுவோம். தேவையில்லை எனில் வாய்மூடி பேசாமல் இருப்போம். அப்படி பேச வேண்டும் என்றால் அவர் சொன்னார் இவர் சொன்னார் ஒற்றுமையாக இருங்கள் என்று மக்களுக்கு மட்டும் சொல்லுவோம். எங்க சொந்த கருத்து எதுவும் வராது. இதை சொல்லவே ஒரு தேர்தல் பிரசார மேடை தேவைப்பட்டது. என்னென்றால் நம்ம ஆளே நம்ம சொல்லுக்கு மதிப்பு கொடுக்க மாட்டான் என தெரியும். இருக்கவே இருக்கு தேர்தல் பிரசார மேடை அல்லது வெளிநாட்டு மேடை அதில் மட்டுமே பேசுவோம். மக்களை அங்கே தானே முட்டாளாக்க முடியும். இவர்கள் மக்களை பற்றி கவலை படவில்லை, தங்கள் பதவி, அதிகாரம், செல்வாக்கு,சுயநலம் இதற்கு மட்டுமே கவலை படுகிறார்கள் இல்லையெனில் மாட்டுக்காக கவலை படுகிறார்கள். இத்தனை நாட்களும் இந்திய சமூகம் (புலால் உண்பவர்கள் மட்டும்) மாட்டு கறி சாப்பிடாமல் இன்றா சாப்பிட ஆரம்பித்தார்கள். இதில் உள்ள உண்மையை மக்கள் அறிய வேண்டும். பதவிக்காக மக்கள் இங்கு பலி கடா ஆக்கப்படுகிறார்கள்.இந்த பின்னூட்டம் வேறு விசயம் எழுதிவிட்டேன், ஒரு இந்தியனாக மனம் ரணமாக வலிக்குது சார். இந்த பதிவிற்கு ஒரு வரி தான் சார், நம்ம தமிழ்நாடு இந்தியாவிலிருந்து ரொம்ப தூரம்…அவங்க கண்ணுக்கு நாம தெரியவே மாட்டோம்.

 3. தமிழானவன் சொல்கிறார்:

  தங்களது நாட்டில் பெரும்பான்மைக் கருத்தியல் அரசியல் செய்து விட்டு, அடுத்த நாட்டின் சிறுபான்மை உரிமைக்குப் போராடுவதுதானே எல்லாரும் செய்வது

 4. எழில் சொல்கிறார்:

  ஐயா, நீங்கள் மேலே சொன்னதை விட இன்னொரு காரணமும் பரவலாக நம்ப படுகிறது.

  உலகின் ஒரே இந்து நாடாக இருந்த நேபாளம் 2007 இல் மக்கள் புரட்சிக்கு பின் மதசார்பற்ற நாடாக மாற்றப்பட்டது. இந்நிலையில் இங்கு மாட்டு கறி சாப்பிடுவதையே பாதகமாக கருதும் அறிவு ஜீவிகள் வழி வந்த நம்மை ஆள்வோருக்கு இது பெரிய உறுத்தலாக இருந்தது. இவர்கள் பின்னணியில் அங்குள்ள இந்துவ சார்பு கட்சி மூலமாக மீண்டும் இந்து நாடாக அறிவிக்க கோரி கொண்டு வரப்பட்ட பிரேரணை, 601 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்தில் 21 பேரின் அதரவு மட்டுமே பெற்றதால் முழு வாக்கெடுப்புக்கு விடாமலே செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள் நிராகரிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவு தர வேண்டும் என்று ராஜ தந்திர ரீதியில் வலியுறுத்தியும் செவி மடுக்காத ஒரு சிறிய, பலவற்றுக்கு நம்மையே நம்பி இருக்கும் நாட்டின் இந்த போக்கு நம் செல்பி தலைவர் குழாமுக்கு பெரிய மூக்குடைப்பாக பார்க்கப்பட்டது. அதன் பின் விளைவே நீங்கள் மேலே கூறிய பாரஊந்து தடை போன்றவற்றுக்கு காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.

  எது எப்படியோ நீங்கள் சொன்ன தமிழருக்கு ஒரு அளவுகோல், இந்தி பேசுவோருக்கு ஒரு அளவுகோல் என்பது மட்டும் நூற்றுக்கு நூறு உண்மை. மேலே ஒரு நண்பர் கூறியது போல் இதயம் வலிக்க தான் செய்கிறது. 😦

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.