மோடிஜி கவலை – ‘பிஹாரில் நிதிஷ் வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு இருக்கும்’

rss-icon-

முதலில் கீழே பத்திரிகைச் செய்தி –

பிஹாரில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில்
நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்றால்
ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்
மறைவிலிருந்து தனது கட்டுக்குள் ஆட்சியை கொண்டு
வருவார், ஆட்சி நிர்வாகத்தில் அவரது தலையீடு இருக்கும்
என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

பிஹாரில் – சசாரம் கூட்டத்தில் மோடி கூறியதாவது:

“மகா கூட்டணி” வெற்றி பெற்றால் லாலு கை ஓங்கும். தன்னால் தேர்தலில் நிற்க முடியாது என்பதால்
மறைவிலிருந்து ஆட்சியை ரிமோட் கன்ட்ரோல் செய்ய
லாலு விரும்புகிறார்.
அவர் மிகப்பெரிய ஆள்.
தான் சொல்வதற்கெல்லாம் பிறரை ஆட வைக்கும்
திறமைமிக்கவர்.

————————————-

மோடிஜி தன் சொந்த அனுபவத்தையே
பீகார் நிலையாக மாற்றி
யோசிக்கிறாரென்று
தோன்றுகிறது….

செய்தியில் ஒரே ஒரு சின்ன மாற்றத்தைச் செய்து
படித்துப் பாருங்கள் –

நிதிஷ்குமார் என்று வரும்
இடங்களில் எல்லாம் நரேந்திர மோடி.

லாலு என்று வரும்
இடங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.

அகில இந்திய அளவில் இப்போது இது தானே நடக்கிறது…?

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

மோடிஜி கவலை – ‘பிஹாரில் நிதிஷ் வெற்றிபெற்றால் ஆட்சியில் லாலு தலையீடு இருக்கும்’ க்கு 2 பதில்கள்

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  ஐயா, ஆஹா அருமை. உங்களது கருத்து முற்றிலும் உண்மை.

 2. ravi சொல்கிறார்:

  //நிதிஷ்குமார் என்று வரும்
  இடங்களில் எல்லாம் நரேந்திர மோடி.
  லாலு என்று வரும்
  இடங்களில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.
  அகில இந்திய அளவில் இப்போது இது தானே நடக்கிறது…?//

  இதை ஒவ்வொரு கட்சியாக பார்த்தால் …

  காங்கிரஸ் பின்னே இத்தாலி கும்பல் .
  தலிவர் கலைஞ்சர் பின்னே கே.டி கும்பல்.
  அம்மா பின்னே மன்னார்குடி கும்பல் ..
  லாலு பின்னே அவர் குழந்தைகள் கூட்டம் (9 பேர்) ..
  எவரும் தேற மாட்டார்கள் போலிருக்குதே

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.