வித்தியாசமான விஷயங்கள் – ( பகுதி…..1 )

.

.

தேடலில் மிகுந்த விருப்பம் உண்டு எனக்கு…..
நாம் பார்க்காதது, கேட்காதது, படிக்காதது, உணராதது என்று நாம் அறியாத அற்புதமான விஷயங்கள் உலகில்
எத்தனையெத்தனையோ இருக்கின்றன.

விஞ்ஞானம் நமக்களித்த அற்புதமான கொடை
கணிணியும் – வலைத்தளங்களும்……
ஒரு கணிணியும் இன்டர்னெட் இணைப்பும்
இருந்து விட்டால், இந்த உலகமே
கையில் இருப்பது போல் தான்.

ஆர்வம் இருக்க வேண்டும்….
தேடித்தேடி படிக்க வேண்டும், பார்க்க வேண்டும் என்கிற ஆர்வம் இருந்தால்,
பொக்கிஷம் போல், புதையல் போல், தோண்டத்தோண்ட
கிடைத்துக் கொண்டே இருக்கின்றன…

வித்தியாசமான பழங்காலத்து புகைப்படங்கள்,
வரலாற்று நாயகர்களின் சரித்திர சம்பவங்கள்,
வித்தியாசமான வீடியோக்கள்…..

நமக்கு சுலபத்தில் படிக்கக் கிடைக்காத விஷயங்கள்…. அரிய எழுத்துக்கள், கட்டுரைகள்,

நமக்கு நேரம் தான் கிடைப்பதில்லை.
இடுகைகள் எழுதுவதற்காகவே
நிறைய படிக்க வேண்டி இருக்கிறது. எழுதுவதிலும், படிப்பதிலுமே
பாதிப்பொழுது போய் விடுகிறது. மற்ற நேரங்களில் எனக்கு
விருப்பமானவற்றை தேடிப் படித்துக் கொண்டே இருக்கிறேன்.

என் ரசனைக்கேற்ற புகைப்படங்கள், செய்திகள், கட்டுரைகள்,
வீடியோக்கள் என்று சில கிடைக்கின்றன.
அந்த சமயங்களில், நான் பார்ப்பனவற்றை
இந்த வலைத்தளத்தின் நண்பர்களுடன்
பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றினாலும்,
நான் ரசிப்பது அவர்களுக்கும் ரசிக்கும் என்பது என்ன நிச்சயம்….
வீணாக மற்றவர் நேரத்தை வீணடிக்க வேண்டாமே
என்றும் தோன்றும்.

இருந்தாலும், அண்மைக்காலங்களில், தயக்கத்துடனேயே
நான் பதிவிட்ட அத்தகைய சில இடுகைகள், நண்பர்களிடையே
நல்ல வரவேற்பை பெற்றதை கண்டேன்.

எனவே, இனி – நான் பார்ப்பனவற்றில்,
எனக்கு பிடித்த சிலவற்றை,
வாரம் ஒரு நாள் – மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது என்கிற
முடிவிற்கு வந்திருக்கிறேன்.

இனி வாரம் ஒரு நாள் – ” வித்தியாசமான விஷயங்கள் ” என்கிற தலைப்பில் அத்தகைய இடுகைகளை
பதிவிடலாமென்று இருக்கிறேன்.

ஒரு முக்கியமான விஷயம் – இது ஒரு வழிப்பாதையாக
இருந்து விடக்கூடாது. நான் ரசிப்பதை உங்களுடன் பகிர்ந்து
கொள்வது போல், இந்த வலைத்தளத்து நண்பர்களாகிய நீங்கள்
ரசிப்பனவற்றையும் பகிர்ந்து கொள்ள இங்கே வழி செய்ய
வேண்டுமென்று விரும்புகிறேன்.

எனவே, உங்கள் பார்வைக்கு கிடைக்கும்
வித்தியாசமான விஷயங்களை – புகைப்படங்கள், வீடியோக்கள்,
நிகழ்வுகள் – குறித்த தொடர்புகளை ( links ) –

என் மின்னஞ்சலுக்கு
( kavirimainthan@gmail.com ) தனியே அனுப்பி வைத்தால் –

வாரம் ஒரு நாள் பதிவு போடும்போது அவற்றையும் அங்கே
( இன்னார் உபயம் என்று உங்கள் பெயருடன்….!!! )
பதிவு செய்து விடுகிறேன்…. அநேகர் பகிர்ந்து கொள்வதன் மூலம் வித்தியாசமான பல விஷயங்கள் பார்வைக்கு கிடைக்கலாம்…

ஒரே ஒரு விஷயம் – நீங்கள் தேர்வு செய்து அனுப்பும் விஷயம், மற்றவர்களுக்கும் பிடிக்க வாய்ப்பு இருக்கிறதா
என்று யோசியுங்கள்….
தயவுசெய்து இந்த வலைத்தளத்தின் போக்குக்கு, ரசனைக்கு –
ஏற்றவாறு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தினர்
அனைவரும் ரசிக்கத்தக்கதாக இருக்கட்டும்…
என் மனம் ஏற்றுக் கொள்வதைத் தானே நான் இந்த தளத்தில்
பதிவு செய்ய முடியும் .,…?

நல்ல விஷயங்களை தள்ளிப் போடக்கூடாது அல்லவா …?

” வித்தியாசமான விஷயங்கள் ”
தலைப்பிலான முதல் இடுகையாக – இன்று
சில வீடியோ பதிவுகள் கீழே –

இதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருமே
காணச்செய்யுங்கள் …

இந்த வீடியோவின் பிறப்பிடம் தாய்லாந்து தான் என்று
நினைக்கிறேன்..ஒரு வேளை ஜப்பானோ….?
உறுதி செய்ய முடியவில்லை….
துவக்கத்தில் டைட்டிலில் இருப்பதை வைத்து நண்பர்கள்
யாராவது கண்டு பிடிக்க முடிந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்….

நடன இயக்குனராம் – இந்த பொடியன் –
எட்டு வயது சுட்டிப்பயல்….
எவ்வளவு தன்னம்பிக்கையுடன் ஆடுகிறான்,
ஆட்டுவிக்கிறான் – பாருங்களேன்….

இது நம்ம ஊர் ….
தில்லானா மோகனாம்பாள் படப்பிடிப்பின்போது
1968-ல் தமிழ்நாட்டுக்கு வந்த அமெரிக்கர் ஒருவர் இதை எடுத்திருக்கிறார்…..

பல வருடங்களுக்குப் பிறகு இப்போது தான்
இந்த வீடியோ வெளியாகி இருக்கிறது….

எப்பேற்பட்ட கலைஞர்கள் – சிவாஜி, பத்மினி, ஏ.பி.நாகராஜன்…..!!!

பின் குறிப்பு –

என்னுடைய இந்த யோசனை குறித்து, நீங்கள் எதாவது
கருத்து /மேற்கொண்டு யோசனைகள் கூற விரும்பினால்,
அதை பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to வித்தியாசமான விஷயங்கள் – ( பகுதி…..1 )

 1. நல்லதொரு விடயத்தை ஆரம்பித்து இருக்கின்றீர்கள் ஐயா என்னால் முடிந்தவை அனுப்பி வைக்கின்றேன் நன்றி தொடர்கிறேன்… காணொளி காண முடியாது பிறகு கண்டு எழுதுகிறேன்
  – கில்லர்ஜி

 2. Sidarth abhimanyu சொல்கிறார்:

  Mr.K.M.

  Very good idea.
  Please go ahead ; We shall join with you in this effort.

 3. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Very rarest of rare videos. Excellent. I find no words to say. I think almost all of the artists who
  acted in Thiiiana Mohanambal are gone to GOD’s feet. Very sad. Let their souls rest in peace.

 4. M. Syed சொல்கிறார்:

  நானும் வரவேற்கிறேன். வாழ்த்துக்கள் .

  M. செய்யது
  Dubai

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  தில்லானா மோகனாம்பாள் – படப்பிடிப்புத் தளத்தில் எடுத்த காணொளி, மிக அருமை. வெறும்ன, ஏபிஎன், பாலசந்தர், ஸ்ரீதர் போன்றோர் மிகத் திறமை பெற்றோர் என்று புத்தகத்தில் படிப்பதற்கும், அவர்கள் வேலைபார்க்கும்போது எடுக்கும் காணொளிக்கும் மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. லெஜண்ட்ஸைக் காணும்போது மனது நெகிழ்கிறது. சிவாஜி எத்தனை பெரிய கலைஞன்… அவருடன் இந்தப் படத்தில் எத்தனை ஜாம்பவான்-கள் பணியாற்றியிருக்கின்றனர். அது வெத்தலைப் பெட்டியாகட்டும், மத்தளம் தட்டுபவராகட்டும்… வாவ்….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத் தமிழன்,

   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
   இந்த காட்சியை (வீடியோவை ) நான் பல முறை பார்த்தேன்.
   மீண்டும் மீண்டும் மனதில் சொல்ல முடியாத நெகிழ்வை
   உண்டு பண்ணுகிறது.
   ஒவ்வொரு கலைஞரிடமும் எவ்வளவு sincerity…!
   அதெல்லாம் ஒரு பொற்காலம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. paamaran சொல்கிறார்:

  வித்தியாசமான விஷயங்கள் – ( பகுதி…..1 )……. க்கு ” ஊடாக ” இரண்டு வினோதமான நபர்களை பற்றி வந்த செய்திகள் : // 1. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சைக்கு ஜாதிய முத்திரை குத்தி அவமதிக்கும் சு.சுவாமி!!
  இந்த செய்தியை தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “கூகுள் தலைமை பொறுப்புகளில் 3 தமிழ் பிராமணர்கள்” என ஜாதிய முத்திரை குத்தி இருக்கிறார். அவரது இந்த ஜாதி பதிவு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/top-3-google-tamil-brahmins-says-swamy-237589.html?utm_source=vuukle&utm_medium=referral 2. நீதிபதிகள் மீது விமர்சனம்: கவிஞர் வைரமுத்து மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஏற்றது ஹைகோர்ட்!
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/madras-hc-admits-contempt-plea-against-kavingar-vairamuthu-237616.html // …… இந்த செய்திகளை வைத்து : இந்த இரண்டு நபர்களின் ” தரம் ” பற்றி ….. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப பாமரன்,

   நான் பலமுறை இந்த தளத்திலேயே கூறி இருக்கிறேன்.
   ஜாதியை முன்னிறுத்தி செய்யப்படும் எந்த வித
   விவாதங்களையும் நான் முற்றிலுமாக வெறுக்கிறேன்.
   சு.சுவாமி அரசியலில், அவரது கட்சியிலேயே மதிப்பிழந்த
   நிலையில் இருப்பதால், ஜாதியையும், மதத்தையும்
   மையப்பொருளாக்கி முக்கியத்துவம் பெறப்பார்க்கிறார்…
   அதற்காகவே விராட் இந்துஸ்தான் அமைப்பையும் உருவாக்கினார்.

   பொல்லாத மனிதர்களை …. இயற்கை பார்த்துக் கொள்ளும்.
   அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்…

   இந்த இரண்டு “பெரிய” மனிதர்களின் “தரத்” தையும்
   நாம் ஏற்கெனவே இங்கு பல இடுகைகளில் அலசி இருக்கிறோம்…
   தேவைப்படும்போது இன்னமும் அலசலாம்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

    “பொல்லாத மனிதர்களை …. இயற்கை பார்த்துக் கொள்ளும்.
    அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” அருமை.. இது ஜாதி, மதம் போன்ற குறுகிய எண்ணங்களை முன்னிறுத்திச் செய்யும் எல்லா மக்களுக்கும் பொருந்தும். திடுமென்று, ‘மாட்டுக்கறி சாப்பிடாதே’, ‘காதலர்தினத்தைத் தடை செய்’. ‘விஸ்வரூபத்தைத் திரையிடாதே’ என்று கூவுபவர்களைக் காணும்போது, வெறுப்பு வருகிறது. இது ஹெச். ராஜா போன்ற படித்தவர்கள் செய்யும்போது, நாராசமாக இருக்கிறது.

 7. காணொளி கண்டேன் ஐயா தில்லானா மோகனாம்பாள் உண்மையிலேயே பொக்கிஷமானதே

 8. sivam சொல்கிறார்:

  I always wondered at your satire about politics .in this blog audio is not there.pl continue yr fantastic blogs. Sivam

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear sivam,

   Thanks for your words.
   But audio is provided and functioning in all these 3 videos…
   Please check up – there could be some problem at your end.

   -with all best wishes,
   Kavirimainthan

 9. today.and.me சொல்கிறார்:

  நாம தரையில கோலம் போடுவோம்..
  இவங்க என்னடான்னா, காபியில போட்றாங்க.

  L A T T E A R T

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்ப டுடேஅண்ட்மீ.

   கற்பனைக்கும்,கலைத்திறமைக்கும் எல்லையே கிடையாது
   என்பதற்கு இது ஒரு சாட்சி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 10. gopalasamy சொல்கிறார்:

  மூன்றுமே நன்றாக இருந்தன. அந்த தாய்லாந்து (?) பெண்களின் நடனம் அருமை. இசை, ஒஹ் மேரே ஷாஹி குபா பாட்டை நினைவுக்கு கொண்டு வந்தது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.