டாக்டர் சு.சுவாமி பொன்னாடை கொண்டு ( தற்காலிகமாக …! ) வாயடைக்கப்பட்டார்….!!!

.

.

நாலைந்து நாட்களுக்கு முன்னர் ( அக்டோபர் 11 ) “லோக்நாயக்”
ஜெயபிரகாஷ் நாராயண் அவர்களின் 113வது பிறந்த நாள் விழா
கொண்டாட்டங்கள் டெல்லியில் நடைபெற்றன.

இதற்கு முன்னரும் இத்தகைய விழாக்கள் நடைபெற்றிருக்கின்றன
என்றாலும், இந்த தடவை – ஜே.பி. பீஹாரைச் சேர்ந்தவர்
என்பதாலும், பீஹாரில் சட்டமன்ற தேர்தல்கள் நடந்து
கொண்டிருப்பதாலும், மோடிஜி இந்த சந்தர்ப்பத்தை பாஜக அரசுக்கு
சாதகமான ஒரு அரங்கமாக மாற்றிக் கொண்டார்.

பிரம்மாண்டமான அளவில் ஜே.பி. அவர்களை நினைவுகொள்ளும்
வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் –
“எமெர்ஜென்சி” யை எதிர்த்து “ஜனநாயக”த்தை காக்க, பணியாற்றிய பதினாறு தலைவர்களை கௌரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. அத்வானிஜி உட்பட 16 பேர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால், பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் நமது ஹீரோ – டாக்டர் சுப்ரமணியன் சுவாமியும் உண்டு என்று சொல்லவும் வேண்டுமோ …. !

நீண்ட நாட்களாகவே மத்திய அமைச்சர் பதவியை எதிர்பார்த்து
காத்திருக்கும் சு.சுவாமி அவர்கள் அண்மைக் காலங்களில்
பொறுமை இழந்து “revolt ” செய்ய ஆரம்பித்திருப்பது
மோடிஜியை கொஞ்சம் கவலை கொள்ளவே செய்திருக்கிறது.
“உள்ளே” சேர்த்துக் கொள்ளவும் முடியவில்லை….
“ஒதுக்கி” வைக்கவும் முடியவில்லை…
சு.சுவாமி விஷயத்தில் மோடிஜி தர்மசங்கடத்தில் இருக்கிறார்.

எனவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு,
சு.சுவாமியின் சூட்டைக் குறைக்க –
சு.சுவாமிக்கு பிரதமரே பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு
சில வார்த்தைகள் பாராட்டுதலாகவும் பேசி இருக்கிறார்.
” உங்களுக்காகவே ஒரு பதவி தயாராகிக் கொண்டிருக்கிறது.
இன்னும் கொஞ்சம் பொறுமை காக்கவும் ” என்று மோடிஜியே
சு.சுவாமியிடம் தனிப்பட கூறி இருப்பதாகவும் தெரிகிறது.
ஆக, தற்போதைக்கு சு.சுவாமியின் வாய் பொன்னாடையால்
மூடப்பட்டிருக்கிறது….! இன்னும் கொஞ்ச நாளைக்கு குறைகூறல்கள் குறைந்திருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

இந்த இடுகையை நான் எழுத முற்பட வேறோரு காரணமும் இருக்கிறது.
அண்மையில், என் நண்பர் ஒருவர் மூலம்
மூன்றாவது மனிதர் ஒருவர் புதிதாக எனக்கு அறிமுகமானார்.
( துபாய், சிங்கப்பூர், மலேசியா, நேபாள், டெல்லி என்று
சுற்றிக்கொண்டே இருப்பவர் அவர்…. )
டெல்லியிலும், ஆந்திராவிலும், உள்ள பல அரசியல்
தலைவர்களுடன் ( தமிழகத்தை சேர்ந்த சில
டெல்லி அரசியல்வாதிகளுடன் கூட )
அவருக்கு நேரடி தொடர்பு உண்டு. அவர்களுக்காக –
அவர்களால் நேரடியாகச் செய்ய முடியாத –
பல காரியங்களை இவர் செய்து கொடுக்கிறார்….!!!

அவரை அறிமுகப்படுத்தி விட்டு என் நண்பர் ஒதுங்கி விட்டார்…
குறைந்த நேரமே ( 5-6 மணி நேரங்கள் …) நான் அவரிடம்
பேசிக்கொண்டிருந்தேன். என் வயதும், தோற்றமும் அவரை
தயக்கமின்றி என்னிடம் பேசத்தூண்டி இருக்க வேண்டும்….

ஆனால் – அந்த அவகாசத்தில் எக்கச்சக்கமான தகவல்கள்
எனக்கு கிடைத்தன …..அவற்றில் சு.சு. வைப்பற்றியவையும் உண்டு. நீங்கள் சொல்வது நம்புவதற்கு கடினமாக இருக்கிறதே என்றே அவரிடம் நான் சொன்னேன்…

அவரது ப்ளாக் பெர்ரியை எடுத்து அவரது தொடர்புகளையும்,
அவர்களுடன் இவர் சேர்ந்திருக்கும் படங்களையும், சில குறு
வீடியோக்களையும் கூட காட்டி என்னை பிரமிக்க வைத்தார்….

அவர் மூலம் எனக்கு தெரிய வந்த பெரும்பாலான தகவல்களை
நான் இங்கு பகிர்ந்து கொள்ள முடியாது…. காரணம் இந்த
அந்த செய்திகளுக்கான ஆதாரம் என்று எதையும் காட்ட இயலாது…..

ஆனால், என்னைப் பொருத்த வரையில் அவை உண்மை என்று நம்ப தகுந்த பின்னணி இருக்கிறது….

பார்ப்போம் … எப்போதாவது ஆதாரம் எதாவது கிடைத்தால்,
அவற்றில் சிலவற்றை உங்கள் முன் வைக்கிறேன்…
ஆனால், தற்போதைக்கு எதையும் எழுத முடியாது.
இயன்றால் – சமயம் வாய்க்கும்போது என் எழுத்துக்களில்
மறைமுகமாக சில விஷயங்களை சொல்ல முடியும்போது
சொல்கிறேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to டாக்டர் சு.சுவாமி பொன்னாடை கொண்டு ( தற்காலிகமாக …! ) வாயடைக்கப்பட்டார்….!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  அந்தக்கால திண்டுக்கல் இரும்புபெட்டியை விபரமான பேர்வழி அதில் சூட்சமமான இடத்தில் உள்ள சிறிய துவாரத்தில் ஒரு தட்டுதட்டி திறப்பார். ஊரையே மிரட்டும் ( ஓரளவு உண்மை என்றாலும்) ஒருவரின் முகமூடி கலைவதை எதிர்பார்க்கிறோம்.

 2. paamaran சொல்கிறார்:

  பேய்க்கும் … பேய்க்கும் …. சண்டை தற்காலிகமா ஒத்திவைப்பு ….? எழுத்தாளர்கள் ” சாகித்ய அகாடமி விருது ” திருப்பி ஒப்படைப்பது குறித்தும் … அரசின் போக்கு பற்றி …. ?

  • ravi சொல்கிறார்:

   காவிரி பிரச்னை, முல்லை பெரியாறு ,இந்த பிரச்சனைக்காக யாராவது விருதை திருப்பி கொடுப்பார்கள் என்று பார்த்தால் ஒருத்தரும் வாயை திறக்க மாட்டேன் என்கிறார்கள் !!

 3. knvijayan சொல்கிறார்:

  நெருக்கடி நிலையின்போது சுப்ரமணிய சுவாமியின் சாகசங்களை அறியாமல் உங்கள் அரசியல் அபிலாசைகளை உளறி கொட்டுகிறீர்கள்.

  • P.CHELLAMUTHU சொல்கிறார்:

   unmai

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர்கள் கே.என்.விஜயன் மற்றும் பி.செல்லமுத்து –

    டாக்டர் சு.சுவாமியை அவருடைய எமெர்ஜென்சி ரோல் உட்பட
    பல பணிகளுக்காக நான் நீண்ட நாட்களுக்கு முன்னரே பாராட்டி
    இதே வலைத்தளத்தில் எழுதி இருக்கிறேன்.

    அதை அறியாமல் பின்னூட்டம் போடும் உங்களை நான் என்ன சொல்வது ….?

    நான் யாருக்கும், எந்த தலைவருக்கும் அடிமை அல்ல.
    நல்ல விஷயங்களுக்கு பாராட்டுகிறேன்.
    நல்லன அல்லாதவற்றிற்கு விமரிசனம் செய்கிறேன்.

    உங்கள் பின்னூட்டங்கள் – ஒன்று நீங்கள் சு.சுவாமியை சரியாக
    உணராதவர்கள் அல்லது தெரிந்தும் அவரை விரும்பும்
    அவரது பக்தர்கள் என்பதையே காட்டுகிறது. இரண்டில் எது சரி …?

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • paamaran சொல்கிறார்:

     சாமிகளின் — சாகசங்கள் என்கிற தலைப்பில் மொத்தம் 12– பகுதிகளை வெளியிட்டு நீங்கள் அசத்திய அசத்தல் பற்றி அறியாதவர்களை பற்றி என்ன கூறுவது …? இதே தலைப்பை கொஞ்சம் மாற்றி நண்பர் ” சுவாமியின் சாகசங்கள் ” …!! என்று ஒரு சுவாமி பற்றி தான் கேட்டுள்ளார் …! நீங்கள் எழுதிய இடுக்கை களில் ” இரண்டு சாமிகள் ” வருவது பற்றி தெரியாதவர்கள் … நம் நண்பர்கள் ….!!!

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப பாமரன்,

      நமது வலைத்தளத்திற்கு புதிதாக நிறைய நண்பர்கள் வருகிறார்கள். அவர்களுக்கு “சாமிகளின் சாகசங்கள்” பற்றி எல்லாம் இங்கு
      எழுதப்பட்டது தெரியவில்லை…

      பழைய இடுகைகளின் எண்ணிக்கை 1300-ஐயும் தாண்டி விட்டது. எனக்கே சிலவற்றை தேடி எடுப்பது சிரமமாக இருக்கிறது…..

      சாமிகளின் சாகசங்கள் –
      மிகப்பெரிய உழைப்பை பெற்று –

      துவக்கத்தில் நானே எதிர்பார்க்காத அளவிற்கு –
      ஒரு த்ரில்லர் மாதிரி பிரமாதமாக உருவெடுத்தது….
      தற்போது அந்த தொடரின் வில்லன்களெல்லாம் மக்கள் நடுவே ஹீரோவாக – தோற்றமளிக்க முயற்சித்துக் கொண்டிருப்பதால் – அதை ஏற்கெனவே படிக்காதவர்கள் இப்போது அவசியம் படிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

      அந்த தொகுப்பை தனியே மின்னூலாக போடலாமா என்று கூட
      யோசித்தேன். கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருக்கும்….
      ஆனால், இப்போதெல்லாம் பெரும்பாலானோர் விஷயம்
      பெரிதாக இருந்தால், தொடர்ச்சியாக உட்கார்ந்து படிக்க
      பொறுமை இல்லாமல், கடந்து சென்று விடுகிறார்கள்.

      ஒரு புத்தகத்தை ஒரே நாளில் முடிக்கும் புத்தகப் பிரியர்கள்
      காலம் எல்லாம் கிட்டத்தட்ட முடிவிற்கு வந்து விட்டது.

      தொடராக – இடைவெளி விட்டு -பகுதி பகுதியாக வெளி வந்தால் அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பதை என் வலைத்தள
      அனுபவத்தில் அறிகிறேன்.

      இடைப்பட்ட காலத்தில், “சாமி”யைப்பற்றி வேறு சில தகவல்களும் கிடைத்தன. முடிந்தால், விமரிசனம் தளத்திலேயே மீண்டும் ஒருமுறை அந்த தொடரை, இடைவெளிகளுடன்
      ( சிறிது புதிய கூட்டல்களுடன்….! )
      பதிவிடலாமா என்று ஒரு யோசனை …. பார்ப்போம்….!
      ( இது குறித்து நண்பர்கள் என்ன நினைக்கிறீர்கள் ….? )

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 4. today.and.me சொல்கிறார்:

  பிரம்மபுத்திரா நதியில் சீனா நீர்மின் நிலையம் அமைத்துள்ள செய்தி
  இந்திய அரசின் அலட்சியத்தின் ஆரம்பம்..??

 5. paamaran சொல்கிறார்:

  வழக்கறிஞர்கள் போராட்டம் – நீதிபதி சந்துரு அவர்கள் கூறுவது சரியா …?
  Posted on செப்ரெம்பர் 26, 2015 by vimarisanam – kavirimainthan…….. ? என்று ஒரு கேள்வியுடன் தங்களின் இடுக்கையில் விவரமாக எழுதியிருந்திர்கள் …..! இன்றைய தினமணி செய்தியில் : — வழக்குரைஞர்களின் அத்துமீறல்களைத் தடுக்க நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு … !! நீதிக்கு தலைவணங்கும் மக்கள் …!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   இப்போது நான் நினைப்பதைச் சொன்னால் அது அவமதிப்பாகி விடும் ….

   எனவே இப்போதைக்கு …. 😦 😦

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  There are so many people like your friend’s friend…… In fact SuSa was earlier one among them negotiating or lobbying international deals, but between governments…….. I feel another thing should also be noted…… he was an youngster during emergency…….even in that age his, connections, courage and navigation through various leaders/parties/governments etc are all really admirable and should be taught in B-schools……to me he is an excellent manager…… but what is he managing, who is he reporting to are all questions beyond a normal citizen’s democratic knowledge…….

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Sanmath,

   You are absolutely right. You could have noticed –
   I have never doubted about the intelligence of Mr. S.S.
   in any of my writings.

   But there is a clear difference between

   being INTELLIGENT and CROOK…..!!!

   I hope you agree.

   with all best wishes,
   Kavirimainthan

 7. paamaran சொல்கிறார்:

  அய்யா …! ” சாமிகளின் சாகசங்களை ” விரைவில் பதிவிடுங்கள் …. ஆவலோடு காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் … 12– பகுதிகளும் ஒரே இடத்தில் என்று நண்பர் ” டு டே அண்ட் மி ” கூரியுள்ளதையாவது அதிலிருந்து மற்றவர்கள் படிக்க வேண்டும் … !! ” பாரதியார் போன்றவர்களின் பாடல்கள் — சாண்டில்யன் — ஜெயகாந்தன் — கண்ணதாசன் போன்றவர்களின் நூல்கள் — பிடித்த திரைப்பட பாடல்கள் ” மற்றும் மனதுக்கு பிடித்ததை திரும்ப — திரும்ப படிப்பது போலவும்– கேட்பதை போலவும் — மீண்டும் “தக்க சமயமான ” தற்போது நீங்கள் பதிவிட்டால் : பலரின் சந்தேகங்களை தீர்க்கவும் — சிலரின் உண்மை நிலையை அறியவும் — வேடதாரிகளின் முகமூடிகளை அகற்றவும் — நண்பர்கள் புரிந்துகொள்ளவும் ஏதுவாக இருக்கும் என்பதால் வரவேற்கும் பலரில் நானும் ஒருத்தன் ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.