இங்கு சுகி சிவம் அவர்கள் சொல்வது – செல்ப் ஹிப்னாடிசம் வகை … நிச்சயம் பலன் கொடுக்கிறது…!!!

.

.

முதலில் கீழே பதிந்திருக்கும் திரு.சுகி சிவம் அவர்களின்
ஒன்பது நிமிட காணொலியை ( வீடியோவை ) பாருங்களேன்.
அதைப்பற்றிய விளக்கத்தை அதன் பின்னர் தருகிறேன்.

திரு.சுகி சிவம் அவர்களின் இந்த வீடியோவை நான்
இரண்டு நாட்கள் முன்னதாகத்தான் பார்த்தேன்.

ஆனால் – கிட்டத்தட்ட அவர் கூறுவது போன்ற ஒரு முறையை நான் ஏற்கெனவே சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடித்து வருகிறேன்.

25 ஆண்டுகளுக்கும் முன்னர் நான் ஹிப்னாடிசம் பற்றி தெரிந்து
கொள்ள விரும்பி சில ஆங்கில கட்டுரைகள், புத்தகங்களை படித்தேன். படித்த பிறகு, self hypnotism பயில வேண்டுமென்ற அவா பிறந்தது.

மற்றவர்களின் மீது ஹிப்னாடிச முறைகளை பயன்படுத்த
அதிக பயிற்சியும், திறமையும் வேண்டும். மேலும் அதில் நிபுணத்துவம் பெற்றவர்களிடம் சில காலம் தொடர்ந்து
நேரடியாக பயிற்சி பெற வேண்டியிருக்கும்.
அத்தகைய வசதிகள், சூழ்நிலை எல்லாம் எனக்கு இல்லாததால்,
self hypnotism முயற்சி பண்ணலாமே என்று கொஞ்சம்
கொஞ்சமாக நானாகவே பயிற்சி செய்யத் துவங்கினேன்.

சின்ன சின்ன உடல் பிரச்சினைகளுக்காக நான் டாக்டரிடம்
செல்வதை தவிர்க்கத் துவங்கினேன்…. மனதளவிலேயே
மருத்துவம் செய்து கொள்ளத் துவங்கினேன்.
இறைவன் அருளால், இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது….!

( ஆனால் – இதயம், நுரையீரல் தொடர்பான
சில பெரிய விஷயங்களுக்கு மருத்துவரிடம் போயே
ஆக வேண்டியிருந்தது ….)

இந்த வீடியோவை எதேச்சையாக பார்க்க நேர்ந்தபோது –
இதைப்பற்றிய என் அனுபவத்தையும் எழுதினால்
மற்றவர்களுக்கும் இதில் நம்பிக்கையும் ஈடுபாடும் பெற
உதவியாக இருக்கலாம் என்று தோன்றியது.

அதன் விளைவே இந்த இடுகை.

இதில் பெரிய மந்திரம் மாயம் ஏதும் இல்லை.
முற்றிலும் விஞ்ஞான முறைப்படி நிரூபிக்கப்பட்ட விஷயம் தான்.

முதலில், நம் தேவைக்கேற்ற சிந்தனையில்
மனதை செலுத்தப் பழக்க வேண்டும்-
பின்னர், மனம் சொல்வதை கேட்கும்படி
உடலைப் பழக்கப் படுத்த வேண்டும்…!!!

இதில் மிகவும் முக்கியமான விஷயம் – நம்பிக்கை…
ஆம் – நாம் நினைப்பது நிச்சயம் நடக்கும் என்கிற
முழு நம்பிக்கையோடு முயற்சி செய்தால் தான் –
சில கால பயிற்சிகளுக்குப் பின்னர் இந்த முறை
பலன் கொடுக்கும்….!!

இது ரெடிமேட் நிவாரணம் அல்ல….
நம்பிக்கையும் பொறுமையும் அவசியம் தேவை…
ஆனால் பலன் நிச்சயம் உண்டு.
ஆர்வம் உள்ளவர்கள் முயன்று பாருங்களேன்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to இங்கு சுகி சிவம் அவர்கள் சொல்வது – செல்ப் ஹிப்னாடிசம் வகை … நிச்சயம் பலன் கொடுக்கிறது…!!!

 1. ssk சொல்கிறார்:

  சிறப்பான அறிமுகம். நன்றி

 2. Ganesan சொல்கிறார்:

  Thanks for the article/video

 3. paamaran சொல்கிறார்:

  சிறு — சிறு கட்டளைகளாக நமக்கு நாமே { இது வேற } தினமும் 21– முறை சொற்கள் மாறாமல் — நாக்கை அசைக்காமல் மனதிற்குள் சில நாட்களுக்கு கூறினாலே நிறைவேறும் — என்பது என் அனுபவ நம்பிக்கை …! நல்ல பலன் கிடைத்துள்ளது .. !!

 4. புது வசந்தம் சொல்கிறார்:

  மிக நல்ல பதிவு.

 5. மணிச்சிரல் சொல்கிறார்:

  வித்தியாசமான பதிவு. மிகச்சிறந்த விசயத்தை மிக எளிதாக விளக்கிவிட்டார் மிகச்சிறந்த மனிதர். தாங்களும் இதில் கைதேர்ந்தவர் என்பதை படிக்கும் போது பிரமிக்க வைக்கிறது. தொடருங்கள். நன்றி.

 6. மணிச்சிரல் சொல்கிறார்:

  Reblog பண்ணலாமா சிறு திருத்தங்களுடன்?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் மணிச்சிரல்,

   என்னை இதை எழுதத்தூண்டியது திரு.சுகி சிவம் அவர்களின்
   வீடியோ தான். எனவே பாராட்டுக்கள் அவருக்கே போய்ச்சேர வேண்டும்.

   தாராளமாக, சந்தோஷமாக reblog செய்யலாம்…
   நல்ல செய்தி இன்னும் நாலு பேருக்கு போய்ச்சேர்ந்தால் நல்லது தானே…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • மணிச்சிரல் சொல்கிறார்:

    திரு. சுதாகர் கஸ்தூரி தன்னுடைய நாவல்களில் அறிவியல் மார்க்கமாக அணுகியிருப்பார். என். கணேசன் மற்றும் பலர் ஆன்மீக மார்க்கமாக அணுகியிருக்கிறார்கள் அறிந்தவரையில். ஆழ்மனம் சக்தி வாய்ந்தது என படிப்பவர்களை உணர வைத்து விட்டீர்கள். நன்றி.

 7. kanagaraj சொல்கிறார்:

  அய்யா தங்களது தளத்தை சில மாதங்களாக பார்த்து வருகிறேன்.இருந்தாலும் கருத்து கூறும் அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது.ஆனால் நீங்கள் குறிப்பிட்டுள்ள இந்த முறைகளை நான் ஜோசப் மர்பியின் ஆழ்மனதின் அற்புத சக்திகள் எனும் நூலில் படித்துள்ளேன்..தமிழில் நாகலட்சுமி சண்முகம் என்பவர் மொழிபெயர்த்துள்ளார்.முடிந்தால் முழுவதுமாக படித்து பாருங்கள்

 8. nparamasivam1951 சொல்கிறார்:

  அருமையான பதிவு. நன்றிகள் பல.

 9. dhanpani சொல்கிறார்:

  நல்ல விடயம்

 10. Selvadurai சொல்கிறார்:

  மனிதன் தன்னுடைய வார்த்தையின் மூலம் தனக்கு எதிரான மலை போன்ற பிரச்சினைகளைக் கூட தீர்க்க முடியும் என்று பைபிள் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. இதற்கான அப்பியாசம் மட்டும் நமக்கு வேண்டும். கீழே உள்ள பைபிள் வாசகங்களைப் பாருங்கள்.

  ”எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.”
  மாற்கு 11:23

  திரு சுகி சிவம் குறிப்பிடும் மருத்துவரின் கண்டுபிடிப்பு கூட மனிதன் தனது வார்த்தையின் மூலம் (மூளைக்கு ஆணை பிறப்பித்ததல்) தனது உடல் நிலையில் மாற்றத்தைக்கொண்டு வர முடியும் என்பதையே உறுதிப்படுத்துகின்றது.

 11. கோ.மீ. அபுபக்கர் சொல்கிறார்:

  அய்யா வணக்கம்.
  பதிவு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது. நான் இது வரை தெரிந்திராத ஒரு விசயத்தைப் பற்றியதாக உள்ளது.
  முழுமையாக புரிந்த்து கொள்ளாவிட்டாலும் , முயற்சி செய்து பார்க்கிறேன் .
  பதிவர்கள்/வாசகர்களின் கருத்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
  நன்றி.

  கோ.மீ. அபுபக்கர்
  கல்லிடைக்குறிச்சி 627416

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.