வித்தியாசமான விஷயங்கள் -( பகுதி-2 )

.

.

இந்த வார வித்தியாசமான விஷயங்கள் கீழே –

மனதை உருக்கிய ஒரு 7 நிமிட வீடியோ ..
ஆதரவற்ற இரண்டு சிறுவர்கள்….
அதில் ஒரு சிறுவனுக்கு பார்வையும் இல்லை..
தாயைத் தேடிச்செல்லும் அவர்கள் கதையை பாருங்கள்…..

18-வது /19-வது நூற்றாண்டில் சென்னை எப்படி இருந்தது
என்று பார்க்க ஆசையாக இருக்கிறது தானே …?

அதற்கென்ன உடனே பார்த்து விடுங்களேன்.
சில புகைப்படங்கள் அடங்கிய 2 நிமிட வீடியோ கீழே –
( இதனையும், இதற்கு அடுத்த வீடியோவின் லிங்க்-கையும்
அனுப்பி உதவிய கொடையாளி நண்பர்
திரு. செல்வராஜன் சிங்காரம் அவர்களுக்கு நன்றி….)

பொய்க்கால் குதிரை நடனம், தெருக்கூத்து, ஜல்லிக்கட்டு என்று 1940-களில் தமிழ்நாட்டு கிராம வாழ்வை படமாக எடுத்துள்ளார் –
அந்த காலத்தில் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரான
எல்லிஸ் டங்கன்…. அமெரிக்கரான இவர் சில தமிழ்ப்படங்களை
இயக்கினார் என்பது தான் விசேஷம் ….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to வித்தியாசமான விஷயங்கள் -( பகுதி-2 )

  1. B.V.Venkatasubramanian சொல்கிறார்:

    nice selections.

  2. paamaran சொல்கிறார்:

    அய்யா … ! விடியற்காலை —பெண்களின் வாசல் தெளித்து கோலமிடுவதும்– நீர்நிலைகளில் இருந்து நீர் எடுத்து செல்வதும் — விவசாயியின் ஏர் – கலப்பையினுடனான நடையும் — வண்டிகளின் அணிவகுப்பும் — கிராம தொழில்களும் — பள்ளிகளும் — கிராமிய விளையாட்டுகளும் — குடு-குடுப்பைகாரரின் நல்ல சேதியும் — எண்ணெய் ஆடும் செக்கும் — ஏற்றம் இறைப்பதும் — கைகுத்தல் உரலையும் — பொழுது போக்குக்கு நாடகம் போன்றவையும் — கதிர் அறுத்து களம் காணுவதும் — அடடா… நான் நேரில் கண்டு வாழ்ந்து அனுபவித்த என் கிராமம் ” காணாமல் ” போனது எங்கே … எப்படி … யாரால் …. ? பசுமையான நினைவுகள் தானே … ? மீண்டும் காண — வாழ ஆசை — கிடைக்குமா …? இன்றைய தலைமுறை இவ்வாறான வாழ்க்கையை தொலைத்தது சாபக்கேடா …? பொய்க் “கால் ” குதிரை என்றால் இரண்டு குதிகாலிலும் தரையிலிருந்து சற்றே உயரமாக கட்டைகளை கட்டிக்கொண்டு ஆடும்போது — நிஜ குதிரையின் குளம்படி சத்தம் போலவே இருக்கும் …. அவ்வாறு கட்டிக்கொண்டு நடப்பதே சிரமம் — பயிற்சி … மற்றும் கலையில் இருந்த ஆர்வத்தினால் நம்நாட்டில் இது கிராமிய கலையாக இருந்தது … இப்போது ஏதோ அங்கொன்றும் — இங்கொன்றுமாக கோயில் திருவிழாக்களில் நடந்தாலும் — கட்டை இல்லாமல் வெறும் காலுடன் தான் ஆடுகிறார்கள் …. அந்த குளம்படி சத்தத்துடன் கூடிய ” லயம் ” மற்ற கலாசாரங்கள் காணாமல் போனதைபோல — பொய்க்கால் குதிரை ஆட்டத்தில் — பொய்க்”கால்” போய் — நிஜ கால் வந்துவிட்டதா … ? கிராம வாழ்க்கையே தொலைந்து விட்டபின் — இது எம்மாத்திரம் ….!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.