திருவாளர் ஸ்டாலின் ஏன் இப்படி உளறிக் கொட்டுகிறார்… ?

stalin in paddy field

நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர்…
சென்னை மாநகராட்சியின் மேயராக 5 ஆண்டுகள் பதவி வகித்தவர்….
ஊராட்சித் துறை அமைச்சராக பதவி வகித்தவர்…
துணை முதல்வராகவும் பதவி வகித்தவர்.
B.A. வரை படித்தவர்.
எல்லாவற்றிற்கும் மேலாக – கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக
அரசியலைத் தொழிலாக கொண்டவர்…..

தனது ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணத்தின்போது விருத்தாசலம்
மாவட்டத்தில், மகளிர் சுய உதவிக்குழு பெண்களிடம் பேசும்போது கூறுகிறார்…

” மக்கள் பிரதிநிதிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை மக்களை
சந்திக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும். அப்படி
சந்திக்காதவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டும்…..

பின்னர் நேற்று – சிதம்பரம் அருகே
பேசும்போது கூட்டத்தில் கூறுகிறார் ….

” மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்,
கவுன்சிலர் முதல் முதல்வர் வரை யாராக இருந்தாலும்
10 நாட்களுக்கு ஒரு முறை மக்களை நேரில் சென்று
சந்திக்க வேண்டும்.

அப்படிச் செய்யத் தவறுபவர்களை மக்களே பதவியிலிருந்து
நீக்க திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சட்டம் இயற்றப்படும்…!!! ”

4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர், மேயராக இருந்தவர்,
உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர், துணை முதல்வராக
இருந்தவர் – ஒரு அடிப்படை அறிவே இல்லாமல் இப்படிப் பேசுவது வியப்பாக இருக்கிறது.

எம்.எல்.ஏ.க்கள் அரசியல் சாசன விதிகளின்படி,
பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
அவர்களின், தகுதி, பதவிக்காலம், தேர்வு முறை
அனைத்தும் இந்த சட்ட விதிகளின்படியே அமைய முடியும்…
( Article 173 of Indian Constitution, and
Representation of the People Act, 1950 )

அமைச்சர்கள் – முதல் அமைச்சரால் தேர்வு செய்யப்பட்டு,
அவரது பரிந்துரையின்படி, கவர்னரால் நியமனம்
செய்யப்படுகின்றனர்.

– இவை சம்பந்தப்பட்ட விதிமுறைகள் எதிலும் –
மாநில அரசு கைவைக்கவோ, தலையிடவோ முடியாது –

அதற்கான அதிகாரங்கள் எந்த மாநில அரசுக்கும் இல்லை.
இந்த விதிகள் குறித்து மாற்றங்கள் எதுவும் செய்ய நினைத்தால் –
அது மத்திய பாராளுமன்றத்தால் மட்டுமே முடியும் ….

திரு.ஸ்டாலின் அவர்களுக்கு இந்த சட்ட விதிமுறைகள்
தெரியாதா அல்லது
பார்க்கின்ற மக்கள் முன்வக்கின்ற
கோரிக்கைகள் அனைத்தும் திமுக ஆட்சிக்கு வந்தால்
உடனடியாக நிறைவேற்றப்படும் என்று தான் வழக்கமாக
கொடுக்கும் வாக்குறுதிகள் போல் தான் இவையும் என்று
நினைக்கிறாரா …?

” கேழ்வரகில் நெய்வடிகிறது “ என்று – தான் சொன்னால் –

இந்த முட்டாள் ஜனங்கள் “எப்படி..? ” என்று கேள்வி கேட்கவா போகிறார்கள் என்று நினைத்திருப்பாரோ …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to திருவாளர் ஸ்டாலின் ஏன் இப்படி உளறிக் கொட்டுகிறார்… ?

 1. வணக்கம் ஐயா…
  இப்படி முன்னுக்குப்பின் முரணாக பேசுவது எனக்கு சந்தேகமாக இருக்கின்றது எதிர்க்கட்சியினர் ஏதும் பில்லி, சூனியம்… அப்படி…. ஏதாவது… இருக்குமோ ?

 2. V.g.chandrasekaran சொல்கிறார்:

  தளபதி ஆட்சிக்கு வந்து சட்டம் இயற்றி பின்பு மக்களை சந்திப்பது அவ்வாறு சட்டம் இயற்றுவதற்கான உரிமை போன்றவை எல்லாம் ஒருபறம் இருக்கட்டும் இப்போது கிராம சிற்றூராட்சி முதல் நாடாளுமன்ற உறுப்பினர் வரை உள்ள கல(ழ)க கண்மனிகளை மக்களை சந்திக்காமல் இருக்க தடுப்பது எது அவர்களை மக்களை சந்திக்க சொல்லி கட்டாய படுத்தாமல் இருக்க தளபதியை தடுப்பது எது என்பதையும் தெரியப்படுத்தினால் நல்லது. கேட்பவர் கேனையன் என்றால் கேள்வரகில் மட்டுமல்ல கேட்பவர் காதிலும் நெய் வடியும் என்பார்.

 3. chandraa சொல்கிறார்:

  first of all let him explain to public why his party mlas do not follow his sermons pl note tht he is always agitated restless and confusing in his meetings>>as karunanidhi himself admits that stalin does not read much>>>he cannot derive confidence in his actions>>i haveheard senior officers in govt commenting stalins lack of knowledge in many issues There were many occasions when he refused to act as deputy cm when urgent problems came to his knowledge

 4. paamaran சொல்கிறார்:

  நாமக்கலில் ஸ்டாலின்: கோழிகளுக்கு ஹாய்… குழந்தைக்கு முத்தம்… பாட்டிக்கு பரிவு……
  தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்தினால் ஊழலற்ற, கமிஷனற்ற அரசை வழங்குவோம்: மு.க.ஸ்டாலின் …….. திமுக ஆட்சியில் முதல் பட்டதாரிக்கு அரசு வேலை: மு.க. ஸ்டாலின்…
  தி.மு.க. ஆட்சியின் 2வது கையெழுத்து “லோக் ஆயுக்தா” சட்டம் கொண்டு வருவதுதான்… மு.க.ஸ்டாலின் உறுதி ….. இன்னும் பல தினமும் வந்தவண்ணம் இருக்கிறது … !
  நடைமுறைக்கு சாத்தியமாவதை கூறினால் நம்பலாம் .. ! இருந்தாலும் “கப்சா அடிச்சி ” விட்டு பார்க்கிறார் … !!! ஒருவேளை இவரை ” டம்மியாக்க ” இவரது ஹைடெக் டீம் மறைமுகமாக செய்யும் தில்லாலங்கடி வேலையா இருக்குமோ என்கிற சந்தேகம் ஏற்படுவது ” இயற்கைதானே ” ….. விடாமல் தொடர்ந்து ” இவரது கோமாளித்தன –கோணங்கித்தனமான ” செயல்களை —- அழகிரி கூறியததை போல ” டைம் பாஸ் ” — கூத்துகளை பற்றி செய்திகளை போடும் பத்திரிக்கைகலாவது கொஞ்சம் சிந்திக்க வேண்டாமா ….. ? இவர்களை பற்றி மக்கள் என்ன அவ்வளவு ஒன்றும் அறியாதவர்களா …? ஸ்டாலின் எப்படியாவது ஆட்சியில் அமரவேண்டும் என்கிற நினைப்பில் — சிந்திக்கும் திறனை இழந்து விட்டார் என்றே தோன்றுகிறது …. !!!

 5. suryaj சொல்கிறார்:

  வாக்காவது உறுதியாவது? அந்தப் புண்ணாக்கையெல்லாம் ஒரு பொருட்டாகக் கூட மதிக்காத கூட்டமல்லவா இது? “பக்தவச்சலம் அண்ணாச்சி அரிசி விலை என்னாச்சு” என்றுக் கூவிக் கூவியே ஆட்சியைப் பிடித்து விட்டு “ரூபாய்க்கு மூன்று படி லட்சியம் …ஆனால் ரூபாய்க்கு ஒரு படி நிச்சயம் (அதைக் கூட அவர் செய்யவில்லை சரியாக…அது வேற தனிக் கதை)” என்று கூலாகச் சொன்னவரின் சிஷ்யப் பிள்ளைகள்தானே இவர்கள்! ஒரு வேலை மக்கள் மதி மயங்கி இவரிடம் ஆட்சியைக் கொடுத்து விட்டால், ஆட்சிக்கு வந்த பிறகு “article 173 யைத் திருத்த வேண்டி பிரதமருக்குக் கடிதம் எழுதினேன்” என்று தந்தை காட்டிய வழியிலேயே தனயனும் சென்று விடுவார்.

 6. srinivasanmurugesan சொல்கிறார்:

  ஆட்சிக்கு வந்தபின்னர் இவரை நெருங்க கூட முடியாது என்கின்ற தைரியத்தில் பேசுகின்றார்

 7. kalakarthik சொல்கிறார்:

  ஏன் .இப்போது இருக்கும் கௌன்சிலர்களுக்கும் இது பொருந்துமே. இப்போதே தி.மு.க.கவுன்சிலர்கள் இதை செய்கிறார்களா?

 8. Sanmath AK சொல்கிறார்:

  KM Sir,

  Though I have so much to criticize on DMK, still its leader(Mr.Kalaignar) is the only leader who can be accessed by his partymen of any level…… That is the only party where Dist.Sec can have a say which can reflect in party’s decision…… In the meantime, the leader of the ruling party is highly inaccessible even by the top leader of their party….. In such a scenario, Mr.Stalin is gearing up with his present tour….. He tries to project himself as a leader who can mingle with people, who can be accessed by people, who is simple in dealing with people…… But the ultimate aim of this tour is to project himself as a SINGLE leader of DMK, indirectly, to create a glamour for him and to make him the only powerful leader…… By creating an atmosphere that Mr.Stalin is very democratic, at the back side he is building himself to be an autocratic leader….. By opposing present CM in the name of autocracy, he is creating an environment for himself to be an autocratic leader…… Things like your post show that his ambition will not be an easy thing to achieve……

 9. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  அவர் உளறவெல்லாம் இல்லை ஐயா! நீங்களே கடைசி வரியில் குறிப்பிட்டுள்ளது போல, மக்களை மடையர்கள் என நினைத்துத்தான் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.