மோசடி மன்னர் ….! ஆனால் தேசிய தலைவர் ….!!! (பகுதி-1)

TheGuide

மிக நீண்ட நாட்களுக்கு முன்னர் புகழ்பெற்ற எழுத்தாளர்
ஆர்.கே.நாராயண் அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினார். “the guide” என்பது அதன் பெயர்.
( பின்னால் -தேவ் ஆனந்த், வஹீதா ரெஹ்மான் நடித்து புகழ்பெற்ற ஹிந்தி படமாகவும் அது உருவெடுத்தது…)

மோசடியான, ஜெயிலுக்கு சென்று திரும்பிய ஒரு உதவாக்கரை
ஆசாமியை, அவன் பின்னணி தெரியாத ஊர் மக்கள் –
சந்தர்ப்பவசத்தால் மிகவும் சக்திவாய்ந்த ஒரு சாமியார் என்று நம்பி
கொண்டாடுவார்கள்…. எந்த அளவிற்கு அந்த கிராமத்து மக்கள்
அப்பாவிகளாக இருந்தனர் என்பதை பார்க்கும்போது நமக்கு மிகவும்
வியப்பாக இருக்கும்..
( இந்த கதையில் நமக்கு இதுவரை போதும்… )

இந்த எழுதப்பட்ட கதையை விட ஆயிரம் மடங்கு அதிசயமான உண்மைக்கதைகள் இந்த நாட்டில் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன. நம் தேசத்தில், பெரும்பாலான மக்கள் அப்பாவிகள்….

கடைந்தெடுத்த அயோக்கியர்களை கூட – மிக நல்லவர்கள்
என்று நம் மக்கள் மிக எளிதில் நம்பி விடுவார்கள்.

படித்தவன் பொய் சொல்ல மாட்டான்….
வெள்ளைத் தோல் -உயர்ந்தது…. தவறாக இருக்காது…இப்படி….!!!

அரசியலிலும் பெரும்பாலும் ஏமாற்றுபவர்களே ஜெயிக்கிறார்கள்… செல்வாக்கு பெறுகிறார்கள்…. பதவிக்கு வருகிறார்கள்…
செல்வராகவன் – தனுஷின் – “கொக்கி குமார்” நினைவிற்கு வருகிறாரா..? நம் நாட்டு அரசியலில் பாதிக்கு மேல் “கொக்கி குமார்”கள் தானே….!

முன்னுரை போதும் –
மீதியை இடையிடையே வைத்துக் கொள்வோம்…
ஏற்கெனவே இந்த தளத்தில் வந்த ஒரு தொடர் – சிறிது
மாறுதல்களுடன் மீண்டும் இங்கு பதிவு பெறுகிறது.

அயோக்கியர்களை –
தகுதியற்றவர்களை –
சிறையில் கம்பி எண்ணிக்கொண்டு இருக்க வேண்டியவர்களை –
மிக உயர்ந்த தேசிய தலைவர்கள் என்று நம் நாட்டில்
மெத்தப் படித்தவர்கள் கூட கொண்டாடுவதை பார்க்கும்போது –
இப்போது – இந்த இடுகைத் தொடருக்கான தேவை
அவசியம் என்றே உணறப்படுகிறது…..

கதைக்குள் போவோமா …?

—————–

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலை குறித்து –
எத்தனையோ கமிஷன்கள் நியமிக்கப்பட்டன….
எவ்வளவோ விசாரணைகள் நடந்தன….
எத்தனையோ ரிப்போர்ட்டுகள் அளிக்கப்பட்டன ….

ஆனால் ஒரு முக்கியமான,
மிக மிக முக்கியமான கேள்வி –
– ராஜீவ் கொலை நிகழ்ந்த நேரத்தில் இரண்டு (ஆ) சாமிகள்
எங்கே இருந்தார்கள் ….?

-இதற்கான விடை இன்று வரை காணப்படவே இல்லை
என்பதே உண்மை. இதற்கான விடையை கண்டுபிடிக்கும்
முயற்சியிலும், இதுவரை எந்த அரசும் தீவிரமாக ஈடுபடவில்லை
என்பதும் உண்மை ….. ஏன் …?

இந்த கேள்விக்கான சரியான விடை கடைசி வரை
கண்டுபிடிக்கப்படாமலே போகக்கூடும்..

ஏன் அப்படி ….?

சம்பந்தப்பட்டவர்களின் கையில் சிக்கி இருக்கும் ரகசியங்கள்…!

தீவிரமாக விடை காணும் முயற்சியில் எந்த அரசு
இறங்கினாலும், அதை ஒரே வாரத்தில் கவிழ்ப்பதற்கான
ரகசியங்கள் ஒருவரின் கைவசம் இருக்கிறது என்பதில் ……
எவ்வளவு தூரம் உண்மை இருக்குமோ எனக்குத் தெரியாது…!

ஆனால், சில சமயங்களில் உண்மை –
கற்பனையை விட அதிசயமாக இருக்கும் என்பதும் நிஜம் தானே …?

இரண்டு பேரில் – முதல் சாமியை அவரது இன்றைய வடிவத்தில் – பலருக்கும் தெரியும். ஆனால், அவரது முன் கதை அநேகமாக – இன்றைய பலருக்குத் தெரிந்திருக்காது. இரண்டாவது ஆசாமியை – அனேகமாக எல்லாரும் மறந்தே போயிருப்பார்கள்.

இரண்டாவது ஆசாமியைப் பற்றி முதலில் சில செய்திகள்.

chandraswami- photo-1

இவரை தாந்த்ரீக் ( மந்திரவாதி …..?) என்று சொல்வாகள் .
முன்னாள் பிரதமர்கள் சந்திரசேகர்,
பி.வி.நரசிம்மராவ் இரண்டு பேருக்கும் இவர் “ராஜகுரு”….
நமது முதல் சாமிக்கு “ஜிக்ரி தோஸ்த்” – அதாவது,
“என்னுயிர்த் தோழன் “

இந்திரா காந்திக்கும் வேண்டியவர் ( இந்திராவுக்கு மிகவும்
வேண்டப்பட்டவர் வேறோரு மந்திரவாதி – அவர் பெயர்
திரேந்திர பிரம்மச்சாரி )

நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்.
ஆனால் – இதைச் சொல்லி இருப்பவர் முன்னாள்
வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங் என்பதால் நம்பலாம்.
இப்போது தான், அண்மையில் தான் சொன்னார் என்றாலும்,
நம்பிக்கை குறையும்.
ஆனால் 09/04/2013 – அன்று – பிரிட்டனின் முன்னாள் பிரதமர்
மார்கரெட் தாட்சர் அவர்கள் இறந்த மறுநாள் ‘இந்து’ ஆங்கில
செய்தித்தாளில் வெளிவந்த கட்டுரை இது – எனவே நம்பலாம் தானே –

—————
சந்திராசாமியுடனான ஒரு அனுபவம் பற்றி நட்வர் சிங்
சொல்வதை, அவரது வழியிலேயே படிக்கலாம் –
( from K. Natwar Singh’s book
“Walking with Lions -Tales from a Diplomatic Past”)

chandraswami –

நட்வர்சிங் இங்கிலாந்தில் படித்தவர்.

படிக்கும்போது, இங்கிலாந்தில் இந்திய தூதரகத்தின் வனப்பை
பார்த்து வியந்தவர். பின்னாளில் தமது படிப்பை முடித்தபிறகு
indian foreign service -ல் தேர்வு செய்யப்பட்டு,
ஒரு நாள் அதே இங்கிலாந்தின் இந்திய தூதரகத்திற்கே
துணை உயர் ஆணையர் (டெபுடி ஹை கமிஷனராக) ஆகிறார்.

அடிக்கடி, இந்தியாவில் இருந்து வரும் நண்பர்கள்
அவரைப் பார்க்கவேண்டும், இவரைப் பார்க்க வேண்டும்
ஏற்பாடு செய்ய முடியுமா என்று
தொல்லை கொடுப்பது வழக்கம் என்றும் அதற்கு தாம் வளைந்து
கொடுத்ததில்லை என்றும் தன் புத்தகத்தில் கூறுகிறார்…..

அப்படி இருந்த காலக் கட்டத்தில், 1975ல் ஒரு நாள்
சந்திராசாமி என்பவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு :
“நான் இங்கிலாந்து வந்திருக்கிறேன். யஷ்பால்கபூர் உங்களை
சந்திக்கச் சொன்னார். (நீங்கள்…! ) வந்து சந்திக்க முடியுமா”
என்று.

“நான் எல்லாம் உங்களை வந்து சந்திக்க முடியாது.
நீங்கள் வேண்டுமானால் வந்து என்னை இந்தியத் தூதரக
அலுவலகத்தில் அல்லது என் இருப்பிடத்தில் சந்திக்கவும்”
என்று சொல்லிவிட்டேன்.

அடுத்த நாள் சந்திராசாமி இவரை வந்து சந்தித்தது மட்டும்
இல்லாமல் அவரது இருப்பிடத்திற்கு விருந்துக்கு வருமாறு அழைத்து பிரமாதமான விருந்தொன்றும் அளித்திருக்கிறார்.

விருந்துக்குப் போன இடத்தில்,
சந்திராசாமி, நட்வர்சிங்கின் மனைவியை அழைத்து –
ஒரு வெள்ளைத் தாளில் 5 கோடுகளை கிழித்து
அதை 5 ஆகப் பிரித்து கிழித்து ஒவ்வொன்றிலும்
ஒரு கேள்வி எழுதவைத்து அவற்றை ஒரு சதுரங்க
பலகையில் வைத்து அதிலிருந்து எதை வேண்டுமானாலும்
எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அந்த சுருட்டப்பட்ட காகிதத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது
என்று பார்க்காமலேயே சொல்லிவிட்டு –
மிஸஸ் நட்வர்சிங்கை அந்த சுருட்டப்பட்ட காகிதத்தை
பிரித்துப் பார்க்கச் சொல்ல, அந்த கேள்வி அந்த காகித துண்டில்
அப்படியே இருந்தது கண்டு சந்திராசாமி விஷேச சக்தி பெற்றவர்
என வியந்தாராம் நட்வர்சிங்கின் மனைவி.

இதெல்லாம் நட்வர்சிங்குக்கு அறவே
பிடிக்கவில்லை என்றாலும் வேண்டாவெறுப்பாக
பார்த்துக் கொண்டிருந்தாராம்.

08 Feb 1975, Eastbourne, East Sussex, England, UK --- Conservative Party leader Margaret Thatcher listens during a 1975 national conference of conservative youth in Eastbourne. Thatcher, a pro-Europe politician, co-chaired the conference with Willie Whitelaw. --- Image by © Selwyn Tait/Sygma/Corbis

அடுத்ததாக சந்திராசாமி, இங்கிலாந்தில் மௌண்ட்பேட்டன் மற்றும் மார்கரெட் தாட்சர் ஆகியோரைச் சந்திக்கவேண்டும்
ஏற்பாடு பண்ண முடியுமா
என்று கேட்டிருக்கிறார்…..

New Conservative Leader Margaret Thatcher

வேறு வழியின்றி முயற்சித்திருக்கிறார் நட்வர் சிங்.
நல்ல வேளையாக மௌன்ட் பேட்டனுக்கு வெளியூர்
செல்ல வேண்டியிருந்ததால் தப்பித்தார்.

மார்கரெட் தாட்சர் கன்சர்வேடிவ் கட்சியின் சீனியர் தலைவர்.
அப்போதைய – பார்லிமெண்டில் எதிர்க்கட்சித் தலைவர்…
நம்பிக்கையின்றியே, நட்வர் சிங், மார்கரெட் தாட்சரிடம்
முயற்சி செய்தபோது, அவர் கூலாக, “பார்க்கலாம் – ஆனால் 10 நிமிடம் தான் ஒதுக்க முடியும்…. ஆமாம் எதற்காக சந்திராசாமி
என்னைச் சந்திக்க விரும்புகிறார்” என்று கேட்டாராம்..!

 

(தொடர்கிறது – பகுதி-2-ல் )

பின் குறிப்பு –
இந்த தொடர் 10-12 பகுதிகள் வரை போகும் என்பதால்,
இடையிடையே. வேறு முக்கிய விஷயங்கள் வரும்போது –
அதற்கு வழி விட்டு விட்டு, பிறகு மீண்டும் தொடரும்….!!!

————————————–

அடுத்து பகுதி-2-ல் தொடர –

மோசடி மன்னர் ….! ஆனால் தேசிய தலைவர் – பகுதி-2

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to மோசடி மன்னர் ….! ஆனால் தேசிய தலைவர் ….!!! (பகுதி-1)

 1. புது வசந்தம் சொல்கிறார்:

  ஆரம்பமே அமர்க்களம்….

 2. thiruvengadam சொல்கிறார்:

  ஒரளவு வேறு வலைப்பங்களில் கண்ட நினைவு. மீண்டும் தெரிந்துகொள்ள உங்களால் வாய்ப்பு. தொடருங்கள். அவர்களுக்கும் நம் முகமூடியை திறக்க முயற்சி நடக்கிறது என்ற அச்ச உணர்வாவது ஏற்படும்.

 3. drkgp சொல்கிறார்:

  இதுவே முக்கிய விஷயமாக தெரிகிறது .ஆகவே இதனை முடித்துவிட்டு பிறகு நாட்டில்
  சர்வகாலமும் நடக்கும் பிற அக்கிரமங்களை தொடர்ந்தால் நண்பர்கள் அனைவருக்கும்
  ஒரு த்ரில் நாவல் படித்த அனுபவம் கிடைக்கும்.

 4. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  ஏற்கெனவே நீங்கள் தோலுரித்த விதயங்கள்தாம் எனினும், ‘சிறிது மாறுதல்களுடன்’ என்கிற வார்த்தைகளை முதன்மையானவையாகக் கருதுகிறேன்!

  சரியான நேரத்தில்தான் மீண்டும் வந்திருக்கிறேன் போலிருக்கிறது.

 5. paamaran சொல்கிறார்:

  சூப்பர் ” தலைப்பு ” — மேட்டரும் அசத்தல் — முன்னதைவிட …! ” கொக்கி குமாரு — கத்திகுத்து ரவி — வெல்டிங் குமார் — நாய் சேகர் ” போன்ற கதாபாத்திரங்களும் — வருமா … அய்யா …. ? ஆமா … சந்திராசாமி டேபிளில் இருப்பது ” தங்க மான் ” … தானே …?

 6. நெல்லைத்தமிழன் சொல்கிறார்:

  நான் மிக விரிவாக இதனைப் படித்திருக்கிறேன். சர்வதேச ஆயுதக் கடத்தல் மாஃபியா சம்பந்தப்பட்டது. இதனை யாராலும் ஆராய முடியாது. அதனால் தான் ஒரு நிலைக்குமேல் ராஜீவ் வழக்கு ஆராயப்படவில்லை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.