மோடிஜியின் – 2989 கோடி, 597 அடி உயர சர்தார் படேல் சிலையை – தயாரிப்பது சீனா – வாழ்க ” மேக் இன் இந்தியா ” திட்டம்…!!!

.

.

மோடிஜியின் கனவுத்திட்டம் –
கிழக்கு குஜராத்தில்,
சர்தார் சரோவர் அணையை ஒட்டி –
நர்மதா நதியின் குறுக்கே,
ஒருமித்த இந்தியாவை உருவாக்கிய இரும்புத் தலைவர்
சர்தார் படேல் அவர்களுக்கு –
597 அடி (182 மீட்டர் ) அடி உயரத்தில் ஒரு சிலை அமைப்பது….!

நிறுவப்பட்ட பிறகு, உலகிலேயே மிக உயரமான சிலை
என்கிற பெருமையை இந்த படேல் சிலை பெறப்போகிறது.
( அடுத்து இதை விட ஒரு அடி உயரமாக வேறு எந்த
சர்வாதிகாரியாவது ஒரு சிலையை அமைக்கும் வரையில் ….!!!)

ஆனால், உலகின் மிக உயரமான சிலையை உருவாக்கிய
பெருமையை பெறப்போவது – இந்தியா அல்ல….
இந்திய தொழிலாளிகளும் அல்ல…

அதற்கான தொழில் திறனும், தொழிலாளிகளும் இந்தியாவில்
இருந்தாலும் –

2019 தேர்தலுக்கு முன்னதாக, இந்த சிலையை
தயாரித்து முடிக்க இந்தியாவால் முடியாது என்பதால் –
ஏப்ரல் 2018-ல் சிலையை தயாரித்துத் தர ஒப்புக்கொண்டிருக்கும்
ஒரு சீன நிறுவனத்திற்கு இந்த 2989 கோடி ரூபாய் திட்டத்தின்
முக்கிய பகுதியான சிலையை உருவாக்கும் பொறுப்பு
கொடுக்கப்பட்டிருக்கிறது.

jiangxi_statue making company in china

குஜராத்தின், அஹமதாபாத் நகரத்திலிருந்து 6132 கிலோமீட்டர்
தொலைவில் – கிழக்கு சீனாவில் நாஞ்சாங்க் மாநிலத்தில்
அமைந்துள்ள Jiangxi Tongqing Metal Handicrafts Company –
யின் 700 சீனத் தொழிலாளர்கள் தான் உலகிலேயே உயரமானதாக
அமையப்போகும் இந்த சிலையை தயாரிக்கும் பெருமையை
கின்னஸ் புத்தகத்தில் பதிந்து இடம் பெறப்போகிறார்கள்.

குஜராத் அரசின் இந்த 2989 கோடி ரூபாய் மெகா ப்ராஜெக்டை
நிறைவேற்றித்தரும் பொறுப்பு லார்சன் அண்ட் டப்ரோ
( Larsen & Toubro ) நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சிலையின் மாதிரி வடிவம், டெல்லியில் இருக்கும்
திரு ராம் வி.சுதர் என்கிற புகழ்பெற்ற வடிவமைப்பாளரால்
ஏற்கெனவே உருவாக்கப்பட்டு விட்டது.
( புகைப்படம் கீழே )

Maker’s hand Ram V. Sutar, with his prototype of the Sardar Patel statue

இந்த சிலை வடிவமைப்பாளர் – முதலில் 30 அடி உயர
சர்தார் படேலின் மாடல் வெண்கலச்சிலை ஒன்று தங்களால், தங்கள் ஸ்டுடியோவில் உருவாக்கப்படும் என்றும் –
பின்னர் சீன கம்பெனி, இதே மாடலை அடிப்படையாக
வைத்துக்கொண்டு, 597 அடி உயர வெண்கலச்சிலையாக தங்கள்
தொழிற்சாலையில் தயாரிக்கும். அது பல பாகங்களாக உருவாக்கப்பட்டு, இந்தியா கொண்டு வரப்பட்டு, பின் ஒன்று சேர்க்கப்படும் –
என்று கூறுகிறார்.

சரித்திரப் புகழ் பெறப்போகும் இந்த சிலையை இந்தியாவில்
தயாரிக்காமல், வெளிநாடு ஒன்றில் தயாரிப்பது குறித்து
லார்சன் அண்ட் டப்ரோ கம்பெனியிடம் கேட்கப்பட்டிருக்கிறது.

இந்த சிலையை எங்கு வேண்டுமானாலும் உருவாக்க
ஒப்பந்தப்படி தங்களுக்கு முழு உரிமையை
குஜராத் அரசு கொடுத்திருக்கிறது என்றும்,
சில வேலைகள் (…? ) வேறு இடங்களில் நடந்தாலும் –

இறுதியாக சிலையை நிறுவும் பொறுப்பை –
(அசெம்பிளி செய்யும் பொறுப்பு ….? )

அதை நிலை நிறுத்தப்போகும் நர்மதை அணையை ஒட்டிய
“சாது பெட்” என்கிற இடத்தில் அமைகின்ற ஒரு
தொழிற்சாலையில் தான் செய்யப்போகிறோம் என்று –
அந்த நிறுவனம் பதிலளிக்கிறது.

இது குறித்த வேறு தகவல்கள் எதையும் தங்களால்
வெளியிட முடியாது என்றும், குஜராத் அரசுடனான ஒப்பந்தப்படி,
சிலை தயாரிப்பு சம்பந்தமான தகவல்கள் அனைத்தும்
“classified” என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகவும்
லர்சன் அண்ட் டப்ரோ நிறுவனம் சொல்கிறது.

அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக –
ஏப்ரல் 2018- லேயே இதை நிறுவியாக வேண்டும் என்று
அந்த நிறுவனத்திடமும், குஜராத் அரசிடமும் –
அதன் முன்னாள் முதல்வர் (….! )
கண்டிப்பாக வலியுறுத்திச் சொல்லி இருக்கிறாராம்.

வாழ்க ” மேக் இன் இந்தியா….”

பின் குறிப்பு –

இந்த சர்தார் படேல் சிலை இந்தியாவில் உள்ள அனைத்து
கிராமங்களிலிருந்தும் பெறப்படும் இரும்புத்துண்டுகளை
வைத்து உருவாக்கப்படும் என்று மோடிஜி சொல்லி இருந்தாரே
அது என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா ….?

அதெல்லாம் இன்னமுமா ஞாபகம் இருக்கிறது உங்களுக்கு….?
இந்தியக் குடிமகனாக இருக்கவே நீங்கள் ” லாயக்கு ” இல்லை
போலிருக்கிறதே…..!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to மோடிஜியின் – 2989 கோடி, 597 அடி உயர சர்தார் படேல் சிலையை – தயாரிப்பது சீனா – வாழ்க ” மேக் இன் இந்தியா ” திட்டம்…!!!

 1. today.and.me சொல்கிறார்:

  போங்க சார்.
  போய்
  ஞாபக சக்திக்கு
  வல்லாரை லேகியமும்
  எல்லாத்தையும் செரிக்க
  தீபாவளி லேகியமும் சாப்பிடுங்க…..

 2. today.and.me சொல்கிறார்:

  //Make in Akhand Bharath.//
  Dr. Subramanian Swamy Rocks – as usual.
  😀

 3. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  காமை சார்
  ஒரே பதிவு இரண்டு URL-ல் தனித்தனியாக இருக்கிறது.
  ஏதாவது ஒன்றை டெலீட் செய்யுங்கள்!

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நன்றி அஜீஸ்.

  இடுகையை தமிழ்மணத்தில் பதிவு செய்தபோது ஏற்பட்ட குழப்பம் இது.
  இரண்டிலும் பின்னூட்டங்கள் இருப்பதால் –
  ஒன்றை டெலீட் செய்தால், அதனுடன் இணைந்திருக்கும்
  பின்னூட்டங்களும் போய் விடுகின்றன.
  அதனால் தான் அப்படியே விட்டு விட்டேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 5. today.and.me சொல்கிறார்:

  setting up the capital of Andrapradesh-Amaravati
  Goes to
  Singapore.

  ———Make in India.

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  “இது கேள்விப்படாத செய்தியாக இருக்கிறதே… உண்மையாகவா… இந்த வயதிலா?” – அரசியல்வாதிகள் சொல்வதை இவ்வளவு ஞாபகம் வைத்துக்கொள்கிறீர்களா? எரிச்சல், வெறுப்பு போன்றவற்றால் பிரஷர் ஏறிவிடப்போகிறது…. நிற்க…

  இந்தியாவில் இந்தச் சிலையைச் செய்யச் சொன்னால், அரசியல்காரணங்களுக்காக வேலை மெதுவாக நடந்தால், சர்வக்ஞர், திருவள்ளுவர் சிலைபோல் தூங்கவேண்டியதுதான். இப்போதெல்லாம், இந்திய நிறுவனங்களும், லாபத்தை எதிர்பார்த்து எங்கே செய்தால் விலை குறைவோ, அங்கே செய்கின்றனர். ஒரு சிலரைத் தவிர, இந்தியர்கள் செய்யும் பணி என்ன மெச்சும்படியாகவா இருக்கிறது? சென்னை விமான நிலையத்தில் ஒவ்வொரு முறை பயணிகள் வரும்போதும் எப்போது தலையில் கண்ணாடி விழப்போகிறது என்று பயந்துகொண்டே வருகின்றனர். அங்கே வைத்திருக்கும் கரோசல் (பயணிகள் பெட்டிகள் வரும்பகுதி) மிக மோசமாக இருக்கிறது. விமான நிலையமே… சந்தைக்கடை போல் இருக்கிறது. இதில், 8 வருடங்களாக புதுப்பகுதியைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். இதனைத் தனியாரிடம் விடுவதற்கு பலத்த எதிர்ப்பு.. இப்படி இருந்தால், எதைத்தான் இந்தியாவில், இந்தியர்களின் உழைப்பில் செய்வது?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நெல்லைத்தமிழன்,

   முடியும் நண்பரே. நம்மாலும் நிச்சயம் செய்ய முடியும்…
   என்ன – இது இதற்கு இவர் தான் பொறுப்பு என்று
   பொறுப்பை தீர்மானிக்க வேண்டும்.

   இதில் வெற்றி கிடைத்தால் – பாராட்டும், பணமும் உனக்கு.
   தோல்வி கிடைத்தால் – தண்டனையும் இகழும் உனக்குத்தான் –
   என்று தீர்மானமாகச் சொல்லி, தகுந்த ஆசாமியைத் தேடி,
   பொறுப்பை கொடுத்தால் – காரியம் நிச்சயம் செவ்வனே நடக்கும்…..
   என்பது என் நம்பிக்கை …. 40 ஆண்டுக்கால அரசு ஊழிய அனுபவம்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.