சில நல்ல சிந்தனைகள் …..!!!

flowers-1

இன்று ஒரு விடுமுறை நாள்…!!!

செய்தித்தாள்கள் எதுவும் வெளிவரவில்லை…
எனவே, அதைப்படிக்க வழக்கமாக செலவிடும் நேரம் மிச்சம்…

அந்த மிச்ச நேரத்தில் நாலு நல்ல சிந்தனைகளை
மனதில் பதியம் போட்டுக் கொள்வோமே….!

1) மனிதன் பாவச் செயல்களில் ஈடுபடுவதற்கு
அடிப்படையான காரணங்கள் எவை என்று யோசித்தால் –
ஆசையும், கோபமும் தான் முன் வந்து நிற்கின்றன.
எனவே ஆசையையும், கோபத்தையும் கட்டுப்படுத்த
கற்றுக் கொண்டால் – நாம் பாவச்செயல்களில் ஈடுபடுவது
குறைந்து விடும்…

2) கடவுளை நாம் பிரார்த்தனை செய்வதாலோ,
பூஜை செய்வதாலோ – அந்த கடவுளுக்கு எதாவது
பிரயோஜனம் உண்டா….?
நம் எண்ணங்களை சுத்தப்படுத்திக் கொள்ள
பிரார்த்தனையும், பூஜையும்
-நமக்கு தான் பயன்படுகின்றன.

3) நாம் செய்கிற பாவத்திற்கான தண்டனையும் சரி,
புண்ணியத்திற்கான நன்மையும் சரி –
இரண்டுமே என்றாவது ஒரு நாள் நிச்சயம் நம்மை வந்து சேரும்
என்பதை தீவிரமாக நம்பினால் –
பாவச் செயல்கள் குறையும், புண்ணியச் செயல்கள் பெருகும்…!

4) சில விஷயங்களை மற்றவர்களுக்கு நாம்
எடுத்து சொல்வதை விட,
நாமே எடுத்துக் காட்டாக நடந்துகொள்வது –
சிறந்த பலனை அளிக்கும்…! …………..அல்லவா…..?

– அனைவருக்கும் நல் வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to சில நல்ல சிந்தனைகள் …..!!!

 1. srinivasanmurugesan சொல்கிறார்:

  அருமையான கருத்துகள்.தங்களின் நல்ல உள்ளம் வாழ்க.இவற்றுடன் நாவையும் கட்டுப்படுத்தினால் ஆரோக்கியத்துடன் வாழலாம்.

 2. paamaran சொல்கிறார்:

  மொத்தத்தில் இந்த நான்கு நல்ல சிந்தனைகளையும் ” நமக்கு நாமே ” { வேறு எண்ணம் தேவையில்லை } தான் பதியம் போட்டு கொள்ள வேண்டும் என்று நீங்கள் கூறுகிறிர்கள் …. முயற்சியும் — பயிற்சியும் அதிகம் தேவைப்படும் ….. !

 3. appannaswamy சொல்கிறார்:

  சேற்றில் மலர்ந்த செந்தாமரை போல், இரு மாதங்களுக்கொருமுறை அரசியல் சாக்கடைகளின் விமர்சனங்களுக்கு நடுவே இதுபோன்ற மனதைத் தூய்மைப்படுத்திக்கொள்ள உதவும் விமாசனங்கள் மலர்வது ஆனந்தமாக உள்ளது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அப்பண்ணசுவாமி,

   இது போல் நிறைய எழுத வேண்டும் என்பது தான் என் விருப்பமும்….
   ஆனால் ….!!!
   (நண்பர்கள் அவரவர் விருப்பம் போல் பூர்த்தி செய்து கொள்ளலாம்…! )

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. Ramesh சொல்கிறார்:

  ஐயா, நல்ல பதிவு.
  இதனுடன் மற்றொன்றையும் சேர்க்கலாம். (இது என்னுடைய கருத்து)
  பொறாமை – பிறர் ஆக்கம் கண்டு பொறுக்காத தன்மை

  இரமேஷ், சிங்கப்பூர்

 5. D. Chandramouli சொல்கிறார்:

  A good reminder to get back to our basics. Thanks.

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஆசையே துன்பத்திற்குக் காரணம். அதுவே ஏமாற்றத்தின் காரணமாகக் கோபத்தை உருவாக்குகிறது. பிரார்த்தனை நம் மனதைச் சுத்தப்படுத்தி நம்மை மேன்மையுறச் செய்கிறது. இது தெரியாமல், கோவிலில் முண்டியடித்துக்கொண்டும், காசு கொடுத்து விரைவாகக் கடவுளின் முன் நிற்பதில் என்ன பிரயோசனம்? அங்கு பிரசாதம் சாப்பிட்டுவிட்டுக் கோவிலின் தூய்மையக் கெடுக்குமாறு நடந்துகொள்வதில் என்ன உபயோகம்? பாவ புண்ணியத்துக்கான பலன் நமக்கு வந்தே தீரும். பிரார்த்தனைமூலம், நம் கஷ்டத்தை நாம் தாங்குவதற்கான சக்தியை மட்டுமே அவன் தரமுடியும். (ஏனென்றால், அவன் எல்லோருக்கும் பொதுவல்லவா?) கடைசி அறிவுரை, நமக்கு மிகவும் தேவை. குழந்தைகள் நாம் சொல்லுவதைக் கடைபிடிப்பதில்லை (இன்றில்லாவிட்டாலும், அவர்கள் பெரியவர்களாகும்போதாவது). நாம் செய்வதைத் தான் கடைபிடிக்கிறார்கள். சந்தேகம் இருந்தால், நம் குழந்தைகள் செய்வதைக் கவனித்தால் போதும். அவர்கள் நமது அறிவுரைகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். நாம் என்ன செய்கிறோம் என்பதை மட்டும்தான் கவனிப்பார்கள்.

  மாற்றத்திறான இந்த இடுகை, அடிக்கடி செய்தித்தாள்கள் தங்களுக்கு விடுமுறை தரவேண்டும் என்று நினைக்கத் தோன்றுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.