மார்கரெட் தாட்சரிடம் சந்திராசாமியின் சித்துவேலைகள்….!!! (பகுதி- 2- மோசடி மன்னர் ….!)

HarryHoudini1899

Houdini_performing_Water_Torture_Cell

இப்போது நடந்துகொடிருப்பது சந்திரா காண்டம் ….!!!

அண்மையில், History Channel-ல்
சென்ற நூற்றாண்டில் உலகப்புகழ் பெற்றிருந்த மாயாஜால
வித்தைக்காரர் ஹௌடினி பற்றி ஒரு சீரியல் வந்திருந்தது….
(Harry Houdini – born Erik Weisz,
later Ehrich Weiss or Harry Weiss;
March 24, 1874 – October 31, 1926)
சந்தர்ப்பம் கிடைத்தால் பாருங்கள்… பிரமிக்க வைக்கும் மனிதர்…! அதைப்பார்க்கும்போது எனக்கு சந்திராசாமியின் நினைவு தான் வந்தது….

அந்த அளவிற்கு புகழ்பெறாவிட்டாலும், தன் சித்துவேலைகளை வைத்துக் கொண்டு, பல அரசியல்வாதிகளை தன் வலையில் வீழச்செய்தவர் சந்திராசாமி…..

இந்த சம்பவங்கள் நடக்கும் காலத்தில் சந்திராசாமிக்கு
இந்தியைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது…..
( பிற்காலத்தில், தொழில் தேவைக்காக ஆங்கிலம் கற்றுக்கொண்டார்…) எனவே இந்த சந்திப்பின் போது, மொழி பெயர்ப்பாளர் வேலையையும் நட்வர்சிங்கே மேற்கொண்டிருக்கிறார்.

அப்போது, முப்பது வயது கூட நிரம்பாதவராக இருந்தார் சந்திராசாமி. கடனே என்று அவரை அழைத்துக் கொண்டு, சொன்ன நேரத்திற்கு நட்வர்சிங் மார்கரெட் தாட்சரை சந்திக்க அவரது இல்லத்திற்கு சென்றிருக்கிறார்.

margaret-thatcherchandraswamy-natwarsingh-cartoon

மார்கரெட் தாட்சரின் உதவியாளர் ஒருவர்,
இவர்களை ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் சென்று
உட்கார வைத்து விட்டு, எதற்காக தன்னைச் சந்திக்க சந்திராசாமி விரும்புகிறார் என்று தாட்சர் தெரிந்து கொள்ள விரும்புகிறார் என்று கேட்டிருக்கிறார்.. அதற்கு “மேடம் சற்று நேரத்தில் தானாகவே தெரிந்து கொள்வார்” என்று திமிராக பதில் சொல்லி இருக்கிறார் சந்திராசாமி.

சில நிமிடங்கள் கழித்து இவர்களை சந்தித்த தாட்சரிடம்,
நட்வர்சிங்கின் மனைவியிடம் செய்தது போலவே,
ஒரு வெள்ளை காகிதம் கொண்டுவரச்செய்து, அதை கோடிட்டு, 5 பகுதிகளாக்கி, சந்திராசாமி – தாட்சரிடம்
” நீங்கள் உங்களுக்குத் தோன்றும் கேள்விகளை
இவற்றில் எழுதி வையுங்கள்”
என்றாராம்.

அதே போல் தாட்சரும் செய்ய, முதல் தாளில் தாட்சர் எழுதி இருந்த விஷயத்தை காகிதத்தைப் பார்க்காமலே சொன்னாராம். பின்னர் தாட்சரை காகிதத்தை பிரித்து சரி பார்த்துக் கொள்ளச் சொன்னாராம்.
இதைப் போலவே, இரண்டு, மூன்று, நான்கு என்று 5 காகிதங்களையும் கரெக்டாகச் சொன்னாராம் ச.சாமி. அசந்து போன மார்கரெட் தாட்சர் –

“உங்களிடம் மேலும் சில கேள்விகள் கேட்கட்டுமா” என்று
கேட்க, சந்திராசாமி சரியாக பதில் சொல்லிகொண்டே வர,
நட்வர்சிங் மாற்றி மாற்றி மொழி பெயர்த்து சொல்ல
நேரம் ஓடிக்கொண்டே இருந்ததாம்.

ஒரு குறிப்பிட்ட கேள்வியுடன் “சன் செட்” ( சூரிய மறைவு ) ஆகி விட்டது. கேள்விகள் போதும் இனி வேண்டாம் என்று சந்திராசாமி முடித்துக்கொண்டாராம்.

ஆரம்பத்தில் 10 நிமிடம் தான் தருவேன் என்ற தாட்சர்,
நேரம் காலம் பற்றி எல்லாம் நினைக்கும் நிலையிலேயே
இல்லையாம். அந்த அளவிற்கு பேச்சு தொடர்ந்து கொண்டே
இருந்ததாம். நட்வர்சிங்க்குக்கு ஒன்றும் புரியவில்லையாம்.

நாம் சந்திராசாமியை மிகச் சிறியவராக எடைபோட்டோமே,
இங்கு மார்கரெட் தாட்சரே இவருக்கு கீழ் படிந்து விட்டாரே –
என மலைப்பு எய்த, தாட்சர் “மறுபடியும் உங்களை சந்திக்க
முடியுமா?” எனக் கேட்க நட்வர்சிங் மொழிபெயர்ப்பு செய்வதற்குள்
சந்திராவே முந்திக்கொண்டு “ட்யூஸ்டே ஈவ்னிங் – 5 ஓ க்ளாக்
அட் நட்வர்சிங் ரெசிடன்ஸ்”
(செவ்வாய் மாலை 5 மணிக்கு நட்வர்சிங் இல்லத்தில் ) என்று உடைசல் ஆங்கிலத்தில் சொல்லி விட்டாராம்…!!!

அதை விட ஆச்சரியமான ஒன்று – சந்திராசாமி, தாட்சரின்
அலுவலகத்திற்குள் வரும்போதே கையில் இருந்த திருநீறை
இறைத்தபடி, தெளித்தபடி வந்தாராம். ஏய், இங்கெல்லாம்,
இதெல்லாம் இப்படி செய்யக் கூடாது என்று நட்வர்சிங்
எச்சரித்தாராம்.

கையில் திருநீறு, கழுத்தில் ருத்திராட்சக் கொட்டையுடன் இருந்த
சந்திராசாமி ஒரு தாயத்தை எடுத்து தாட்சரின் இடதுகையில்
கட்டிக் கொள்ளச் சொன்னாராம்.

அதை நட்வர் சிங்க் மொழிபெயர்க்க மறுக்க – அந்த அம்மா
தானாகவே “என்ன இது ..?” என்று விளக்கம் கேட்டு,வாங்கி
கட்டிக் கொண்டாராம். அடுத்த அதிர்ச்சியாக சந்திரா, இந்த அம்மாவை செவ்வாய் கிழமை வரும்போது சிவப்பு வண்ண ஆடை அணிந்து வரச் சொல்லுங்கள் என்றாராம்.

நட்வர்சிங் கோபம் அடைந்தாராம். இங்கிலாந்தின்
இரும்புப் பெண்மணி என கூறப்படும், எதிர்கட்சித் தலைவராய்
இருக்கும் ஒருவரிடம் நாம் எப்படி சிவப்பு ஆடை அணிய வேண்டும்
எனச் சொல்வது , இதெல்லாம் அதிகமாகத் தெரியலையா உனக்கு
என சந்திராவை திட்ட ஆரம்பிக்கும்போது –

தாட்சரே அது என்ன என நட்வர்சிங்கிடம் கேட்டு தெரிந்து
கொண்டாராம். பிறகு அப்படியே ஆகட்டும் என்றாராம்.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு சிவப்பு ஆடையுடன்
கையில் கட்டிய தாயத்துடன்
மார்கரெட் தாட்சர் சரியாக
நட்வர்சிங்க் இல்லம் வந்து விட்டார்.

பேசும்போது – சந்திரா சாமியிடம், நான் இங்கிலாந்தின்
பிரதமர் ஆவேனா? எப்போது ? என்று கேட்டிருக்கிறார் தாட்சர்…

அதற்கு சந்திராசாமி இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில்
நீங்கள் பிரதமர் ஆவீர்கள். குறைந்தது 9,11,அல்லது 13 ஆண்டுகள்
நீங்கள் இந்த இங்கிலாந்தை பிரதமராக ஆள்வீர்கள்
என்றாராம்,

இது நடந்தது 1975ல். அதன்பிறகு 1979ல் ஜாம்பியாவில்
காமன்வெல்த் சம்மிட் நடைபெறும்போது இங்கிலாந்தின் பிரதமராக
மார்கரெட் தாட்சரை வரவேற்கும் பொறுப்பில் நட்வர்சிங்
இருந்திருக்கிறார். ஜாம்பியாவுக்கு இந்திய தூதராக 1977ல் நட்வர்
சிங்அனுப்பப்பட்டு அதுமுதல் அங்கே பொறுப்பில் இருந்தாராம்.

நட்வர்சிங் மற்றும் மிஸஸ் நட்வர்சிங் இருவரும் இங்கிலாந்தின்
பிரதமர் மார்கரெட் தாட்சரை விமானத்தில் இருந்து
இறங்கும்போது வரவேற்க நின்று கொண்டிருக்கும் போது
தாட்சர் விமானத்திலிருந்து இறங்கி வர,

“சந்திராசாமி சொன்னது அப்படியே பலித்துவிட்டது
போலிருக்கிறதே”
என்று மனைவியிடம் மெதுவாக
சொன்னாராம் நட்வர்சிங். அருகில் அதைக்கேட்டுக் கொண்டே வந்த
மார்கரெட் தாட்சர் –

நட்வரை தனியாக அழைத்து , “அதைப்பற்றி எல்லாம் இனி
வெளியே பேசிக் கொண்டிருக்காதீர்கள்”
என்றாராம்.
அதற்கு நட்வர்சிங்கும் , “சொல்ல மாட்டேன், ஒருபோதும்
சொல்ல மாட்டேன்” என்றாராம்.

-சந்திராசாமி கூறியதை உறுதிப்படுத்தும் வண்ணம் –
பின்னர் 1979 முதல் இங்கிலாந்தின் பிரதமராக 11 ஆண்டுகள்
6 மாதங்கள் பதவி வகித்தார் தாட்சர்.

ஆச்சரியமாக இல்லை ….?
இந்தியாவின் உச்சத்தில் இருந்த அரசியல்வாதிகள் பலர்
இவருக்கு அடிமையானதன் பின்னணி சந்திராசாமியின்
இந்த சாமர்த்தியம் தான் – இந்த செப்படி வித்தை தான்…!

இப்பேற்பட்ட அசகாய சூரர்களான சாமிகள் இருவரும்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணம் நிகழ்ந்த
1991ஆம் ஆண்டு – மே-21 ந்தேதி அன்று சென்னையில்
இருந்தார்கள் என்பது இங்கு ஒரு முக்கியமான செய்தி.

இந்த செய்தியை உறுதி செய்பவர் யார் ….?
பின்னர் இது பற்றி விசாரணை நிகழ்ந்தபோது –
ஜெயின் கமிஷன் முன்பாக திரு.சுப்ரமணியன் சுவாமியிடம்
இது குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது –
அவரது “ரீ-ஆக்-ஷன் ” என்ன ….?

(தொடர்கிறது -பகுதி-3-ல்)

முந்திய பகுதிக்குச் செல்ல –

மோசடி மன்னர் ….! ஆனால் தேசிய தலைவர் ….!!! (பகுதி-1)

அடுத்து பகுதி -3-ல் தொடர –

மோசடி மன்னர் ….! ஆனால் தேசிய தலைவர் – பகுதி-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

5 Responses to மார்கரெட் தாட்சரிடம் சந்திராசாமியின் சித்துவேலைகள்….!!! (பகுதி- 2- மோசடி மன்னர் ….!)

 1. KuMaR சொல்கிறார்:

  மர்ம நாவலை படிப்பது போன்ற ஒரு உணர்வு.
  தொடருங்கள் நண்பரே…
  பகிர்வுக்கு நன்றிகள்..

 2. அநங்கன் சொல்கிறார்:

  ம்ம்ம்ம்.. நம்புங்கள் நாராயணன் என்று ஒருவர் இருந்தார். அவர் இம்மாதிரி எல்லாம் செய்யக் கூடியவர். இது எப்படி உங்களால் சாத்தியமாகிறது என்று கேட்டதற்கு ஈ.எஸ்.பி. பவர் என்று சொன்னார்.

  பால் பிரண்டனுக்கு இந்தியாவில் இம்மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. A Search in Secret India வில் அதை நீங்கள் வாசிக்கலாம்.

 3. அநங்கன் சொல்கிறார்:

  A Search in Secret Indiaவின் அந்தக் குறிப்பிட்ட அத்தியாயத்திலிருந்து…

  (I = பால் ப்ரண்டன்; He என்பது மந்திரவாதி)

  ” Is it true that you possess these magical powers?” I question him, pointedly.

  Calmly and confidently, he says: “Yes! Allah, the All Powerful, has granted me such powers.”

  I hesitate. His dark grey eyes gaze fixedly at me.

  “You would like me to demonstrate them, I believe?” he asks, suddenly.

  He has correctly gauged my desire. I nod assent.

  ” Very well. Have you a pencil and some paper?”

  I hastily feel in a pocket for my notebook, tear out a page,and then produce a pencil.

  “Good,” he remarks. “Now please write some question on the paper.” With that he withdraws and sits at a small table in the window recess. He half turns his back upon me and looks down into the street below. Several feet of space now separate us.

  “What kind of question?” I query.

  “Anything you wish,” he replies promptly.

  My brain plays with a few thoughts. Finally, I write down a brief question. It is: “Where did I live four years ago?”

  “Now fold the paper repeatedly until it forms a tiny square,”

  he instructs me. “Let it be the smallest possible fold.”

  I obey him. Thereupon he draws his chair back to my table and faces me once again.

  “Please clench the piece of paper, together with the pencil,in the palm of your right hand.”

  I hold the articles tightly clutched. The Egyptian closes his eyes. He appears to fall into a profound concentration.

  Then the heavy lids open once more, the grey eyes look steadily at me, and he quietly says:”The question which you asked – was it not, ‘Where did I live four years ago?’

  “You are correct,” I reply, astonished. This is a case of mind reading extraordinary!

  “Now, please unfold the piece of paper in your hand,” his voice breaks in.

  I place the tiny scrap upon the surface of the table and slowly open out its many folds until the paper lies flat, extended to its original size.

  “Examine i t ! ” commands the other man. I do so and make a surprising discovery. For some unseen hand has written in pencil the name of the town where I lived four years ago. The answer has been placed immediately beneath the written question. Mahmoud Bey smiles triumphantly.

  “There is the answer. Is it correct?” he demands. I give a wondering assent, for I am baffled. The feat hardly seems credible. As a test, I ask him to repeat it. He readily agrees and moves away to the window while I write down a further question. Thus he avoids any possible accusation of being close enough to read my writing. Besides, I watch him carefully and note that his eyes are set upon the colourful scene in the street below.

  Once again I fold the paper and clutch it tightly against the pencil which is in my hand. He returns to the table and plunges again into close concentration, his eyes fast shut.

  Then come the words : “Your second question – ‘What journal did I edit two years ago?’

  He has given my query quite accurately. Thought-reading again, I presume.

  Once more he requests me to unfold the tiny scrap in my right hand. I place it flat on the table and it reveals to my astounded gaze the name of the journal in question, clumsily written in pencil!Conjuring? I dismiss the suggestion as absurd. The paper and pencil were supplied from my own pockets, the questions were unpremeditated, while Mahmoud Bey has scrupulously put several feet between us at each writing. Moreover, the entire feat has been performed in the morning daylight.Hypnotism? I have studied the subject and know well when any attempt at undue influence is being made. I know equally how to guard against it. And the mysteriously added words still remain on the paper.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் அநங்கன்…..

   இத்தனை நாட்களாக நீங்கள் எங்கே இருந்தீர்கள்….?
   ஏன் இந்த வலைப்பக்கம் வரவில்லை ….?

   உங்கள் சேவை எங்களுக்கு அவசியம் தேவை.
   இனிமேலாவது தொடர்ந்து வாருங்கள்… உங்கள் பங்களிப்பையும் தாருங்கள்.

   உங்கள் முதல் பின்னூட்டத்தை படித்து விட்டு நான் எங்கே போய் –
   A Search in Secret India -வை தேடுவது என்று நினைத்துக் கொண்டே
   அடுத்த பதிலுக்கு போனால் – ஆச்சரியம்.

   வாசகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • KuMaR சொல்கிறார்:

   Tq so much sir..
   Fantastic Info..
   If u possible means kindly posted lyk dis intestng
   Articles..
   _/\_

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.