தென்னைமரத்தில் சீனி ‘க்கு தேள் கொட்டினால் – பனைமரத்தில் சாமி ‘க்கு – நெரி கட்டுவதேன்….?

b.m.no.1

கிரிக்கெட் சூதாட்டம் காரணமாக,
நீதிமன்றம் சீனியின் கிரிக்கெட் டீமை
இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்தது. அது தொடர்பாக சீனியும்
சாமியும் நேற்று சந்தித்துப் பேசினர். வெளியே வந்த
ஆ-சாமி கூறுகிறார் …

கிரிக்கெட் டீமை தடை செய்த பின்னணியில் தாவூத் இப்ராஹீம்
சதி இருக்கிறது….

லலித் மோடியின் சூது இருக்கிறது….

நீதிபதி தவறாக தீர்ப்பளித்து விட்டார்….

இந்த தீர்ப்பு செல்லாது….!!

“தவறான தடை”க்கு எதிராக ஏற்கெனவே
“பொது நல வழக்கு” மூலம் நான் நீதிமன்றத்தை
அணுகி இருக்கிறேன்.
விரைவில் தடையை
உடைப்பதில் வெற்றி பெறுவேன். நவம்பர் 16ந்தேதி வரை
காத்திருங்கள்… அதிர்ச்சி தரும் ரகசியங்களை வெளியிடுவேன்….”

————————

சில கேள்விகள் எழுகின்றன….
யாரிடம் போய் விளக்கம் கேட்பது …?
இந்தியாவின் நம்பர் ஒன் ப்ளாக் மெயிலரிடமா …? பதில் சொல்ல அவரால் முடியுமா …? சொல்வாரா …?

————————–

கிரிக்கெட் சூதாட்ட தடைக்கும் –
இந்த அரசியல் cum மதவாதிக்கும் என்ன சம்பந்தம்…?

இவர் விளையாட்டு ஆர்வலர் கூட இல்லையே…?
கிரிக்கெட் எப்படி ஆடுவார்கள் என்று கூட
இவருக்கு தெரியுமா என்பது சந்தேகமே ….!!!

அப்படியிருக்க, இவர் தடையை எதிர்த்து
வழக்கு போடுவது ஏன்…?

இவருக்கு வரவேண்டிய “லாபத்தில்”
பங்கு கிடைக்காமல் போவதாலா …?

சீனியும் இவரும் பங்குதாரர்களா …?
எதில் …? சூதாட்ட கிரிக்கெட்டிலா …?
அல்லது வேறு ” எதாவது ” விதத்தில் நஷ்டமா …?

ஏன் வேண்டும் பொது நல வழக்கு …?

பொது நலன் கருதி “பொதுநலவழக்கு” போட –
இதில் என்ன பின்னணி இருக்கிறது…?
இதனால் எந்த பொதுமக்கள்
இவரிடம் வந்து தங்கள் நலன்
கெட்டு விட்டது என்று சொன்னார்கள்…?

கிரிக்கெட் ஆர்வலர்களை பொருத்த வரையில் –
இந்த டீம் தடை செய்யப்பட்டால்,
புதிய பெயரில் இன்னொரு டீம் உருவாக்கப்பட இருக்கிறது.
இதே தோனியும் மற்ற ஆட்டக்காரர்களும் அதில்
விளையாடப்போகிறார்கள். எனவே விளையாட்டு ரசிகர்களுக்கு
எந்த விதத்திலும் இழப்பு இல்லை….

நஷ்டம் முதலாளிக்கும், பங்குதாரர்களுக்கும்
சூதாடிகளுக்கும், ப்ளாக் மெயிலர்களுக்கும் தான்…!

தடைசெய்யப்பட்ட கிரிக்கெட் அணியின் சொந்தக்காரர் –
ஏற்கெனவே 2ஜி அலைக்கற்றை வழக்கில் தொடர்புடையவர்….
கலைஞர் டிவி-க்கு “வாங்கி” ய கடன் 200 கோடி ரூபாயை “திரும்பக் கொடுக்க 60 கோடி கொடுத்து உதவி செய்தவர் இவர்.

அது குறித்த விவரங்கள் –
குற்றப்பத்திரிகையிலும் இருக்கிறது.
சஸ்பென்ஷனில் இருக்கும் காவல்துறை உயர் அதிகாரியின்
“டேப்” பிலும் இருக்கிறது….

2 ஜி அலைக்கற்றை வழக்கை “பொது நலன்” கருதியும்,
ஊழலை எதிர்ப்பதற்காகவும் தொடர்ந்ததாகக் கூறியவர்
அதே வழக்கு சம்பந்தப்பட்ட இன்னொருவரை காப்பாற்ற
கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் நுழைவது ஏன்…???

இந்தியாவின் நம்பர் ஒன் ப்ளாக் மெயிலரிடம் –
செய்தியாளர்கள் யாராவது ….. ” பொது நலன் கருதி ”
இந்த கேள்விகளை கேட்பார்களா….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

9 Responses to தென்னைமரத்தில் சீனி ‘க்கு தேள் கொட்டினால் – பனைமரத்தில் சாமி ‘க்கு – நெரி கட்டுவதேன்….?

 1. thiruvengadam சொல்கிறார்:

  எந்த கெட்டநேரமோ சு சாமி எதிலாவது மாட்டி முகத்திரை விலக்கப்பட்டால் முதலில் மகிழ்ச்சி அடைபவர் ?

 2. Sundar சொல்கிறார்:

  Thayiru Thayiru

 3. புது வசந்தம் சொல்கிறார்:

  மிக நல்ல கேள்விகள் …இன்றைய விகடனில் இந்த செய்தியை பார்த்தேன்..
  இந்த தேசம் எங்கு செல்கிறது….
  http://www.vikatan.com/news/article.php?aid=54169
  எதிர்காலம் என்னவாக இருக்கும் ?

  • ravi சொல்கிறார்:

   பதிவில் நீட்டி முழக்கிய அந்த இலக்கிய வாதியை பற்றி உங்கள் கருத்து என்ன ???

   • புது வசந்தம் சொல்கிறார்:

    ஒரு தேச நலன் குறித்து பார்க்க வேண்டுகிறேன், நீங்கள் தனி மனிதரை பார்கின்றீர்கள். இது மாதிரி ஒரு நிகழ்வை வேறு யாரும் செய்தால் என்ன நடக்கும் ?

    • ravi சொல்கிறார்:

     கேரளாவில் பாபுலர் பிரண்ட் அமைப்புகள், ஹைதிராபாத் ஒவாசி , சமீபத்தில் ஆம்பூரில் நடந்தவை இதை விட பல மடங்கு மோசமானவை …அனைவரும் வெளியே தான் உள்ளனர் .. ஒன்றும் ஆகவில்லை …

 4. ravi சொல்கிறார்:

  சில தினங்களுக்கு முன் , தென் அப்பிரிக்கா மோடியின் மீது வழக்கு பதிவு செய்ததாக ஒரு செய்தி விகடனில் வந்தது .. இப்போது அந்த செய்தியை எடுத்து விட்டார்கள் .. காரணம் , அப்படி ஒரு வழக்கு தாக்கல் செய்ய பட வில்லை .. செய்தி பொய்..ஆனால் , வழக்கு செய்தியை விகடன் அதை முதல் பக்கத்தில் வெளியிட்டார்கள் ..செய்தி பொய் என்று தெரிந்தவுடன் , அதை அவர்கள் தெரிவிக்கவில்லை …. ஏன்?? . அவ்வளவே அவர்கள் நேர்மை …

  • ravi சொல்கிறார்:

   நீங்கள் மணிரத்தினம் படம் அதிகமாக பார்ப்பீர்கள் போல தெரிகிறது ..////
   நீங்கள் விகடனை மட்டும் படிப்பீர்கள் போலிருக்கிறது … (அதில் இந்த விஷயங்கள் .. கேரளாவில் பாபுலர் பிரண்ட் அமைப்புகள், ஹைதிராபாத் ஒவாசி .. கண்டிப்பாக வராது )

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.