வைரமுத்து அவர்களின் வணிகத் திறன்….!!! (தன்) புத்தகம் விற்க புதிய வழி கண்டு பிடித்தார்….!

.

.

செல்போன் கடை ஒன்றை இன்று திறந்து வைக்கிறார் –
கவிஞர் – சிறுகதை எழுத்தாளர் – திரு வைரமுத்து அவர்கள்.

அதன் விளம்பரம் கீழே –

vairamuthu add.

இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா …?

கடையைத் திறந்து வைக்க சம்பளம் வாங்குவாரா இல்லையா –
எவ்வளவு வாங்குவார் போன்ற விவரங்கள் நமக்குத் தெரியாது.

ஆனால் விளம்பரத்திலிருந்து ஒன்று தெரிகிறது.
திரு.வைரமுத்து இன்று திறந்து வைக்கும் கடையில்
செல்போன் வாங்குபவர்கள் அனைவருக்கும் ஒரு புத்தகம்
இலவசம்….
என்ன புத்தகம் என்கிறீர்களா …?

அண்மையில் 40 சிறுகதைகளை தொடர்ச்சியாக எழுதி,
திரு.ஜெயகாந்தன் அவர்களிடம் “சர்டிபிகேட்” வாங்கி,
கலைஞரின் திருக்கரங்களால் வெளியிடப்பட்ட
300 ரூபாய் விலையிடப்பட்டுள்ள
“வைரமுத்து சிறுகதைகள்” புத்தகம் தான்.

இலவசமாக புத்தகம் பெறுவதற்காக
செல்போன் வாங்குவார்களா
அல்லது செல்போன் வாங்குவதால்
புத்தகம் இலவசமாக கிடைக்கிறதா
என்றெல்லாம் அனாவசியமாக நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

நாம் கவனிக்க வேண்டியதும், பாராட்ட வேண்டியதும்
திரு.வைரமுத்து அவர்களின் வணிகத்திறமையைத்தான்.

எவ்வளவு செல்போன் இன்று விற்கிறதோ, அவ்வளவு புத்தகங்களும் விற்பனையாகின்றன.
புத்தகத்தின் விலையை, வாசகர்கள் கொடுப்பதற்கு பதிலாக, கடை உரிமையாளர் கொடுக்கப்போகிறார்.

குறைந்தது ஒரு ஆயிரம் புத்தகமாவது போகாதா என்ன …?

கவிஞர்களுடன் கூடப்பிறந்தது ஏழ்மை என்பது அந்தக்காலம்.
எழுத்தில் திறமை இருக்கிறதோ இல்லையோ,
” மார்கெட்டிங் ” திறமையை வளர்த்துக் கொள்வது அவசியம்
என்பதை இன்றைய எழுத்தாளர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்
திரு.வைரமுத்து அவர்கள்.

முன்னோடியான திரு.வைரமுத்து அவர்களின் இந்த ” திறமையை ” எல்லா எழுத்தாளர்களும் பெற வாழ்த்துவோம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to வைரமுத்து அவர்களின் வணிகத் திறன்….!!! (தன்) புத்தகம் விற்க புதிய வழி கண்டு பிடித்தார்….!

 1. paamaran சொல்கிறார்:

  இவ்வாறான ” சில்லறை தனமான ” வணிகத் திறனில் — இவருக்கே முன்னோடியான ” ஒரு மாபெரும் தலைவர் ” — பிறந்தநாள் விழாவில் புத்தகங்களை விற்பதும் — உண்டியல் வைத்து வசூல் செய்கின்ற கில்லாடியின் — அடிவருடிக்கு இதெல்லாம் இல்லாமல் இருந்தால் தான் — ஆச்சர்யம் … !!! அப்படித்தானே … அய்யா ….?

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நல்ல நடிகர் நாகேஷுக்கும், ‘நடிகை மனோரமாவுக்கும், நிஜமான இசை தேவன் எம்.எஸ்.விக்கும், கிராமிய இசையின் அதாரிட்டியாக விளங்கும் இளையராஜாவுக்கும் எந்த பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டன? விவேக்குக்கும், வைரமுத்துவுக்கும் எதன் அடிப்படையில் பத்ம விருதுகள் கொடுக்கப்பட்டன? கண்ணதாசனுக்கும், வாலிக்கும் இல்லாத திறமை இவர்களிடம் இருப்பது இந்திய அரசுக்குத் தெரிந்துவிட்டது போலும்… நம் நாட்டில் எதிலுமே நேர்மை என்பது லவலேசம் இல்லை. இது சென்சார் போர்டாகட்டும், பத்ம விருது கமிட்டியாகட்டும். இதனால்தான், படேல் மற்றும் பலரின் மாண்புகள் மறைக்கப்பட்டன. ‘நேர்மைக்கு மதிப்பில்லாததால், இவைகள் அரசியல் கட்சிகளால் வளர்த்தெடுக்கப்பட்டு, நேரு காங்கிரசைச் சேர்ந்தவராகவும், படேல் பிஜேபி உறுப்பினராகவும் எண்ணவேண்டிய நிலைக்கு மக்களை அரசியல்கட்சிகள் கொண்டுவந்துசேர்க்கின்றன.

  என்னைக்கேட்டால், வைரமுத்துக்கு பத்ம விருது கொடுத்த முட்டாள்களை நாடு கடத்தவேண்டும். இவர்களுக்கும், காசு வாங்கி மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி கொடுத்தவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

 3. kakkoo சொல்கிறார்:

  சில வருடங்களுக்கு முன்பு பேஸ் புக்கில் இந்த செய்தி வந்தது. கல்லூரி மாணவர்கள்; மானவர்மன்ற இலக்கிய விழாவுக்கு இவரை அழைக்க முயன்று அவரும் அதற்கு கூலியாக அவருடைய புத்தகங்களை விற்றுத்தரவேண்டும் என்று இவர் கண்டிஷன் போட அவர்கள் விட்டால் போதுமென்று ஓட்டமெடுத்த கதையும் நடந்துள்ளது.

  • வணக்கம் நண்பர் திரு. காக்கூ அவர்களே நான் என்ன எழுத வேண்டும் என்று நினைத்தேனோ அதை தாங்கள் எழுதி விட்டீர்கள் மிக்க நன்றி
   நாட்டில் தன்னை தமிழன் என்று கூறிக் கொ”ல்லு”ம் மனிதர்களில் இவரும் ஒருவரே.. இவரை கவிஞர் என்பதைவிட நடிகர் என்பதே சிறந்த வார்த்தை.

   -கில்லர்ஜி

  • THATCHAI KANNAN சொல்கிறார்:

   உண்மை தான் ,,,,,,,நானும் அதை படித்துள்ளேன் ……

 4. thiruvengadam சொல்கிறார்:

  என் பதிவுகள் சற்று மாறுபட்டவையாகவே இருக்கும். இதில் வைரமுத்து மட்டுமே கவனிக்கத்தக்கவராக நான் கருதவில்லை. இப்போழுது அலைபேசிகள் விற்பனை கடைகளின் எண் ணிக்கையும் அவைகளின் அலங்காரங்களையும் ஒப்பிட்டால் புத்தக விலையை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கலாம்.அல்லது நடிகர்கள் ஏரியா உரிமை வாங்குவது போல் ஒப்பந்தம் இருக்கலாம். இதில் இருவரின் வியாபார நோக்கையும் நான் பார்க்கிறேன். வாய்ப்பு கிடைப்பவர் காற்றுள்ளபோது தூற்றிக்கொள்ள ( அள்ள ) முயல்கிறார்.

  • B.V.Venkatasubramanian சொல்கிறார்:

   Mr.Thiruvenkadam,

   // என் பதிவுகள் சற்று மாறுபட்டவையாகவே இருக்கும் //

   மாறுபட்டிருக்கவேண்டும் என்பதற்காகவே நீங்கள் தவறான கருத்தை எழுதலாமா அய்யா ?

   ஒருவர் வியாபாரி. மற்றொருவர் .கவிஞர்.
   வியாபாரி வியாபார நோக்குடன் செயல்படுவது இயற்கை.
   ஆனால் ஒரு கவிஞர் வியாபார நோக்குடன்
   செயல்படுவது பற்றி தான் இங்கு பேசப்படுகிறது. எனவே நீங்கள் இருவரையும் ஒரே நோக்கில் வைத்து பார்ப்பது சரி அல்லவே.

 5. Sundar சொல்கிறார்:

  Another Kalaikoothadi……Dear KM Readers My humble request please ignore such kind of people & their activities related news in general……everything will come in normal mode…..

 6. MANI சொல்கிறார்:

  How he got Padmabushan? some lobbying in newdelhi when DMK was part of central ministry.
  is he greater than kannadasan and vali? legends like MSV AND ilayaraja were ignored
  as they are not friends of Mr karunanidhi. who knows one day kanimozhi will also get padma
  award.

 7. velumani சொல்கிறார்:

  விற்கத்தானே எழுதியது?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.