சிவகங்கை வக்கீலின் மனசாட்சி என்றாவது விழித்துக் கொண்டால் – என்ன பதில் சொல்வார்….?

Advocate-s-dress

அரசியல்வாதிகளுக்கும், வக்கீல்களுக்கும் மனசாட்சி ஏது என்று ஒரே வரியில் பின்னூட்டம் எழுதிவிட முடியாத வழக்கு இது…

இதில் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 50,000 பேர். அத்தனை பேரும்
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். சாதாரண, நடுத்தர வர்க்கத்து
மக்கள். ஆண்டுகள் பல ஆகியும் இவர்களின் வயிறு இன்னும்
எரிந்து கொண்டு தான் இருக்கிறது. உழைத்து, பாடுபட்டு
சேர்த்து வைத்த பணம் பறிபோனால் – எரியாமல் என்ன செய்யும்…?

நம் மக்களுக்கு மறதி அதிகம்.. அதை நம்பித் தானே
நம் அரசியல்வாதிகளும் பிழைப்பு நடத்துகிறார்கள்….!
இந்த வழக்கு யார் நினவிலாவது இன்னும் இருந்தால் –
இப்போது மீண்டும் நினைவு படுத்திக் கொள்ளலாம்…..
( paazee forex india private limited …. )

2008-09 ஆண்டு வாக்கில் திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட “பாசி”… நிதி நிறுவனம், அதிக வட்டி
கொடுப்பதாக பொய் சொல்லி, பொதுமக்களிடமிருந்து டெபாசிட்
பெற்றது. கிட்டத்தட்ட 50,000 பேர்களிடமிருந்து – சுமார் ஆயிரம் கோடி அளவிற்கு டெபாசிட் பெற்றதாகத் தெரிகிறது….

வட்டி மட்டுமல்ல முதலுக்கே மோசம் என்பது போல், நிறுவனத்தை நிறுவியவர்கள் திடீரென்று மாயமாக மறைந்து போனார்கள்.

டெபாசிட் செய்தவர்கள் வயிற்றிலும், வாயிலும் அடித்துக் கொள்ள போலீஸ் தீவிரமாக செயலில் இறங்கியது.
economic offences wing இறங்கி செயல்படத்துவங்கியது…
பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தால் இந்த வழக்கு
சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

பின்னர் தான் தெரிய வந்தது…. ஓடிப்போன நிறுவனர்களை
சில போலீஸ் அதிகாரிகளே மடக்கி வைத்துக் கொண்டு,
அவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காமல் பார்த்துக் கொள்வதாக
சொல்லி, பணம் பிடுங்கியது….!

பின்னர், அப்போது கோவையில் ஆயுதப்படை ஐ.ஜி.யாக
பணியாற்றி வந்த திருவாளர் பிரமோத்குமார்
( பீகாரைச் சேர்ந்தவர்- ஐபிஎஸ் அதிகாரி ), ஒரு டிஎஸ்பி, மற்றும்
இரண்டு இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் – கைது செய்யப்பட்டு,
தற்காலிகமாகப் பணி நீக்கமும் செய்யப்பட்டனர்.

இதில் சம்பந்தப்பட்ட ஒரு இன்ஸ்பெக்டர் —
ஐஜி பிரமோத்குமார் அவர்களின்
உத்திரவுப்படியே தாங்கள் செயல்பட்டதாகவும்,
“பாசி” நிறுவனத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகியை
கடத்திச் சென்று தங்கள் கஸ்டடியில் வைத்துக் கொண்டு சுமார்
மூன்று கோடி ரூபாய் அளவிற்கு மிரட்டி பணம் பெற்றதாகவும்
அப்ரூவராக மாறி ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்தார்.
இதில் முழுக்க முழுக்க ஈடுபட்டிருந்தவர் திரு.பிரமோத்குமார் தான்
என்பதையும் அவரது உத்திரவின்படியே தாங்கள் செயல்பட்டதாகவும்
அந்த இன்ஸ்பெக்டர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீதான இந்த வழக்கு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்வந்தபோது, அது இந்த
வழக்கையும் “பாசி” வழக்கை விசாரித்து வரும் சிபிஐ-க்கே
மாற்றம் செய்தது.

தன் மீது தொடுக்கப்பட்ட வழக்கை முறியடிக்க ஐஜி பிரமோத்குமார் எந்தெந்த வழிகளை எல்லாமோ பின்பற்றினார்.

முதலில் – மத்திய அரசின் ஒப்புதல் இன்றி, தன்னை கைது செய்யவோ, வழக்கு தொடுக்கவோ, தற்காலிக பணி நீக்கம் செய்யவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது…

பின்னர், தன்னை கேட்காமல், சிபிஐ-க்கு வழக்கை மாற்றி
உயர்நீதிமன்றம் போட்ட உத்திரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்…
அதையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னர் உயர்நீதிமன்ற ( தள்ளுபடி ) தீர்ப்பை எதிர்த்து,
உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அப்போது அவருக்கு அற்புதமான ஒரு துணை வந்தது ….
ஆபத்பாந்தவர்….. அநாத ரட்சகர் …
2014- தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியால் மந்திரி பதவியை
இழந்த முன்னாள் உள்துறை / நிதி அமைச்சர்…..

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கியபோது,
மீடியா ஏன் என்று கேட்டது… 70-ஐ நெருங்கி விட்டேன்…
இனி மிச்சமிருக்கும் வாழ்க்கையை பிடித்த புத்தகங்களை
படிப்பதிலும், பயணங்களிலும் – செலவிட விரும்புகிறேன்

என்று சொன்னார்….

ஆனால், பிரமோத்குமார் போன்ற அசுரர்களை வளர்த்து விடவும் திட்டமிருக்கிறது என்று ஏனோ சொல்லத்தவறி விட்டார்…

அமைச்சர் பதவி போனபிறகு – மீண்டும் கருப்பு கவுன் மாட்டி
கோர்ட்டுக்கு வந்தவர் – பிரமோத்குமார் வழக்கை எடுத்துக்
கொண்டார்.

புத்திகூர்மையோ, வாதத்திறமையோ, அல்லது பல்லாண்டுக்காலம்
மத்திய அமைச்சராக இருந்த செல்வாக்கோ …..!
இல்லை ஐஜி பிரமோத்குமாரின் அதிருஷ்டமோ ….

தீர்ப்பு ஐஜிக்கு சாதகமாக வந்தது…..
உயர்நீதிமன்றம், ஐஜியின் வழக்கை, சாதா போலீசிடமிருந்து ( ! )
சிபிஐ-போலீசுக்கு மாற்றும் முன்னர், ஐஜி பிரமோத்குமாருக்கு,
தன் தரப்பை எடுத்துச்சொல்ல வாய்ப்பு தரப்படாதது
காரணமாக காட்டப்பட்டது…. உள்துறை அமைச்சக அனுபவம்
இதற்குத்தான் உதவியிருக்கிறது…!

அதாவது ஐயா ஐஜி அவர்களே – உங்கள் வழக்கை சிபிஐ- க்கு மாற்றலாமா….? என்று அவரிடம் கலந்தாலோசனை செய்யாமலே வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டதாம்….. எனவே அந்த தீர்ப்பு செல்லுபடி ஆகாதாம்…!

விளைவு –

சிபிஐ – இந்த ஐஜி மீது நடத்திய விசாரணை,
பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை, வழக்கு –
எல்லாமே செல்லாக்காசு ஆகி விட்டது.

இவர்மீதான வழக்கு இழுத்து மூடப்பட வேண்டும்…

நான்கு நாட்களுக்கு முன்னர் இந்த சடங்கு நிறைவேற்றப்பட்டு, வழக்கு அதிகாரபூர்வமாக முடித்து வைக்கப்பட்டு – சிபிஐ நீதிமன்றத்திலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது…..

அதெப்படி 50 ஆண்டுக்காலமாக பொது வாழ்வில் இருக்கும்
ஒருவர், தன்னுடைய மாநிலத்தையே சேர்ந்த –
50,000 மக்களின் வாழ்வை பாதிக்கும் ஒரு வழக்கில்,
1000 கோடி ரூபாயை கொள்ளையடித்த ஒரு கும்பலை –
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை தெரிந்தே ஏமாற்றிய
அயோக்கியர்களை – தப்பிக்க உதவலாம்..?

யார் வயிறெரிந்தால் என்ன ….
எவர் பணம், எத்தனை கோடி போனால் என்ன….
சட்டத்தில் ஓட்டை இருந்தால்
அதை நிச்சயம் பயன்படுத்திக்கொள்வேன்
என்று சொல்லும் ஒருவர் பொதுவாழ்வில் நீடிக்க
என்ன தார்மீக உரிமை இருக்கிறது…?

கருப்பு கவுனுக்குள் புகுந்து கொண்டிருக்கும் வரையில் –
அரசியல்வாதியாகத் தொடரும் வரையில் –
மனசாட்சி என்று ஒன்று இருக்கும் இடமே தெரியாது…..

ஆனால் வாழ்வின் அந்திமத்தில் – அந்த மனசாட்சியும்
கேள்வி கேட்கும் ஒரு காலம் வரும் –
அப்போது என்ன சமாதானம் சொல்வார்கள் …?

பின் குறிப்பு –

எனக்கு என்ன வருத்தம் என்றால், கடந்த வாரம் –
இந்த நீதிக்கு – சமாதி கட்டும் சடங்கு தமிழ்நாட்டிலேயே
நடந்தபோது கூட, தமிழ்நாட்டின் எந்த ஊடகமும் இதற்கு
எந்தவித முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.
அநேகமாக, இந்த செய்தியே எந்த ஊடகங்களிலும்
வெளிவரவில்லை என்றே சொல்லலாம்.

விஷாலும், ராதாரவியும் – முட்டிக்கொண்டதை எட்டுமுறை
திரும்ப திரும்ப மறுஓளிபரப்பு செய்த ஊடகங்களின் கண்களுக்கு –
மக்களுக்கு நிகழும் இந்த அநியாயங்கள் எல்லாம்
ஏன் படுவதில்லை…..?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to சிவகங்கை வக்கீலின் மனசாட்சி என்றாவது விழித்துக் கொண்டால் – என்ன பதில் சொல்வார்….?

 1. thiruvengadam சொல்கிறார்:

  This matter came in JV, as an article , missed Ur perusal. I myself posted the extract in FB with comment ” PC back in profession” Now the ball is in Amma’s court & let us wait to see in appointing him in a valuable post or not by just as per verdict.

  • B.V.Venkatasubramanian சொல்கிறார்:

   Mr.Thiruvenkatam,

   You miss the main point.

   1) here – the issue is about the behaviour of the lawyer
   and not the client or state govt.

   2) I also saw JV. That short note does not contain these details.
   What the mainstream newspapers, and tvs are doing ?-
   That is the issue.

   • thiruvengadam சொல்கிறார்:

    Mr.B V V , the 3 U referred is to be noted on their survival. Lawyer to save his client, but State has to act according to current status. That is what I mentioned. Mr.K M’s note is correct , i informed what I come across. Moreover this was manytimes came in JV. For ref KM gave details & JV now followed the related matter.

 2. Sundar சொல்கிறார்:

  NO COMMENTS……. I believe if we are thinking like this then we are outdated…… Thuttu!!!Money!!!Panam!!!Kaasu!!! NO COMMENTS Readers.

 3. theInformedDoodle சொல்கிறார்:

  பொதுவாழ்வில் நேர்மை.. தூய்மை.. என்றெல்லாம் வாய் கிழிய பேசுவார் பாருங்கள்.. அட அட.. என்ன ஒரு நேர்மை!

 4. Ganpat சொல்கிறார்:

  என்னால் இப்போ செய்ய கூடியது ஒன்றுதான் .அதையாவது செய்கிறேன்….
  இந்த நேர்மையான,தெளிவான,விவரமான கட்டுரையை எழுதிய உங்கள் கரங்களை சற்றே காண்பியுங்கள்.,கா.மை.ஜி..
  என் இரு கண்களிலும் ஒற்றிக்கொள்கிறேன்.
  _/\_
  இந்நாட்டை இறைவன் காப்பாற்றுவாராக!

 5. srinivasanmurugesan சொல்கிறார்:

  அய்யா….சட்டத்தில் ஓட்டை இருப்பது தெரிந்தும் உயர்நீதிமன்றத்தில் அதனை எப்படி அனுமதித்தார்கள்!!! சிவகங்கையார் தேர்தலில் ஜெய்த்த விதம்தான் அனைவருக்கும் தெரியுமே….. இவருக்கு மனசாட்சி என்பது வக்கீல் கோட் மாதிரி தேவையில்லாத போது கழற்றி ஆனியில் மாட்டி விடுவார்.எனக்கு என்னமோ இந்த கோர்ட் கேஸ் எல்லாமே நாடகம் போல் தெரிகின்றது.

 6. ravi சொல்கிறார்:

  கே.எம்..முக்கிய கட்டுரை… பொருளாதார குற்றங்கள் நிலை அவ்வளவே…எதோ ஒரு வகையில் அனைவரும் அரசியல்வாதிகளுடன் தொடர்பு உடையவர்கள் …
  தமிழர்களுக்கும் இத்தகைய நிறுவனங்களுக்கும் என்ன உறவோ ?? ஏமாறுவதற்கு என்று பிறந்தவர்கள் தமிழர்கள் போல.. 1990-96 பிறகு அடுத்த ரவுண்டு .. ரமேஷ் கார்ஸ், ஈஸ்வரி , தேக்கு மரம் வளர்ப்பு , இமு, நாட்டுகோழி , தேங்காய் வளர்ப்பு ..
  சதுரங்க வேட்டை படம் பார்க்கும் உணர்வு

 7. ravi சொல்கிறார்:

  and then for relaxation… who is the current CM of karnataka !! siddaramaiah …
  NOOOO.. as per dinamalar , its is kumaraswamy..

  ராமேஸ்வரம்,:கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுவதால், தமிழகத்திற்கு
  காவிரியில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு இல்லை என, அம்மாநில முதல்வர்
  குமாரசாமி தெரிவித்தார்

  http://www.dinamalar.com/news_detail.asp?id=1372978

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இது நான் நினைப்பது

  கா.மை ஐயா… ப.சி வீட்டு பாலிடிக்ஸ் உங்களுக்குத் தெரியாமல் போய்விட்டதே… ப.சி இந்த வழக்கை எடுக்கவில்லையெனில், நளினி எடுத்திருப்பார்கள். அரசியல்வியாதிகளுக்கு ஏன் வழக்கு வருகிறது? அவர்களுக்குத் தெரியும் யாரிடம் வழக்கு சென்றால் வெற்றிபெறுவோம் என்று. இந்தமாதிரி ஆட்கள் காசு சேர்த்துவைத்துவிட்டு இறப்பதால் என்ன பெருமை? இன்றைக்கு யாராகிலும் எந்த மந்திரியையாவது நினைவு வைத்துள்ளோமா? கக்கன், காமராசர் போன்றவர்கள் நம் மனதில் ஏன் நினைவுக்கு வருகிறார்கள்?

  ப.சி நினைப்பது கீழே

  வெறும் பேரை வைத்துக்கொண்டு என்ன செய்யமுடியும்? மக்களுக்கு நல்லது செய்த ஒருவரிடமாவது மக்கள் மதிப்போ அன்போ கொண்டிருந்தார்களா? ஜீவாவின் குடும்பம், கக்கன் குடும்பம், காமராசர் குடும்பம் இதைப்பற்றியெல்லாம் தமிழர்கள் கவலைப்பட்டார்களா? வ.வு.சி குடும்பம் என்ன ஆனது? அவர்களின் வாரிசுகள் ஒரு கவுன்சிலராகக் கூட இங்கு வரமுடியாது. இந்த மக்கள், ஜீவாவுக்கோ, கக்கனுக்கோ, காமராசருக்கோ வாக்களித்தார்களா? இருக்கும்போது சிறப்பு செய்யாவிட்டாலும் பரவாயில்லை.. அவரைத் தோற்கடித்து அவமானப்படுத்தினவர்கள்தானே இந்த மக்கள். நான் என் குடும்பத்தையும் வரும் 7 தலைமுறையையும் காப்பாற்ற பணம் சேர்க்கவில்லையானால், இந்த மக்களை நம்பி என் குடும்பத்தை விட்டுச்செல்ல முடியுமா? நேர்மையாவது, நியாயமாவது… இப்போதெல்லாம், “அரசன் எவ்வழி அவ்வழி குடிகள்” கிடையாது.. மக்கள் எவ்வழி அவ்வழி தலைவர்கள்.

 9. Sanmath AK சொல்கிறார்:

  Sorry

  previous one got mistakenly posted while typing…..

  I was trying to say – most of my friends are advocates…… few are so good that they deal with and work with top advocates….. when we speak about conscience and such things, one of my friends(whose hearing fees touch close to a lakh) points out ultimately to people, in a different angle…… in his words “someone comes to me and asks me to do professional service as per law and I charge him fees…… i follow what is there in books……if i am able to get that guy out, i am no way against my conscience…….first thing that had a circumstance to do the mistake…….secondly there are loopholes…….third – the people who frame laws to cover the loopholes are not doing so…….fourth – who select such unqualified people and make them sit at that position to frame laws…….now why are they questioning about our conscience??…..??”

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   சன்மத்,

   இங்கு ஒரு முக்கியமான வித்தியாசத்தை பார்க்க வேண்டும்.

   வெறும் வக்கீலாக மட்டும் இருப்பவர் ஒரு வேளை –
   தர்ம நியாயத்தைப்பற்றி கவலைப்படாமல், தன் தொழிலை
   மட்டும் செய்து கொண்டு போகலாம்.

   ஆனால், ஒரு சமூக சேவகர், ஒரு தலைவர் என்பவர் –
   நாட்டுப்பணியில் மக்களுக்காக தன்னை
   அர்ப்பணித்துக் கொள்கிறார். மந்திரியாக இருக்கும்போது மட்டும்
   தான் மக்களைப்பற்றி கவலைப்படுவேன் – மற்ற சமயங்களில்
   அவர்களது நலன்களைப்பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை
   என்று போய்விட முடியாது. சில சமயங்களில் மக்களுக்கு சேவை
   செய்ய முடியாமல் கூட இருக்கலாம்.
   ஆனால் – மக்கள் விரோத செயல்களில்,
   சமூக விரோத செயல்களில் நிச்சயம் ஈடுபடக்கூடாது.

   சமூக சேவகர், அரசியல் தலைவர் – இவர்கள் எல்லாம்
   நாட்டு மக்களுக்கு தங்கள் மனசாட்சிக்கு விரோதமாக எதுவும்
   செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்பவர்கள்.
   மனசாட்சிக்கு விரோதமாக அவர்கள்
   செயல்பட முடியாது…. அப்படிச் செயல்படுவதாக இருந்தால் –
   பொதுவாழ்வில் ஈடுபடக்கூடாது.

   இவருக்கு தொழில் தான் முக்கியம் என்றால் –
   தாராளமாகச் செய்யட்டும். ஆனால் பொதுவாழ்வுக்கு
   வரக்கூடாது. பொது வாழ்வுக்கு வருவதாக இருந்தால் –
   சில தியாகங்கள் செய்யத் தயாராகத்தான் இருக்க வேண்டும்.

   இந்த வாதத்தை நீங்கள் ஏற்பீர்கள் என்று நம்புகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Sanmath AK சொல்கிறார்:

    KM Sir,

    I accept your stand…….as u might have been seeing for years, people nowadays enter politics not to do any service to the society……. either they enter politics to safe guard their wealth or to guard themselves from criminal cases or to amass enormous wealth……some of them are even groomed by businessmen……. But ultimately you and me are the ones who select that guy who would speak for us in municipal corporation, assembly and parliament( do they really speak for us is another big question here??)……Are we selecting the right guy ??…….

    Sorry……I had deviated from the topic……

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.