காங்கிரஸ் + மாடு = மோடிஜி சர்க்கார்…..!!! “அருண் ஷோரி” க்கு பைத்தியம் பிடித்து விட்டது…..!!!

arun-shourie-

நேற்றிரவே இந்த தலைப்பை எழுதி வைத்து விட்டு, பாஜக தலைகள் எதாவது சொல்கின்றனவா என்று பார்க்க இதுவரை காத்திருந்தேன்….

பிரமாதமாகப் பேசி இருக்கிறார் அருண் ஷோரி…
பல நாட்களாக நாம் இந்த தளத்தில் பேசி வருவதை –
மிக அழகாகவும், சுருக்கமாகவும், நச்சென்று பதியும்படியும்
பேசி இருக்கிறார் அருண் ஷோரி … என்ன இருந்தாலும்
பிறவி பத்திரிக்கையாளர் அல்லவா …!!!

நமது வலைத்தள நண்பர் டுடேஅண்ட்மீ அடிக்கடி கூறும் வார்த்தை- ” காங்கிரஸ் பினாமி – பாஜக சுனாமி ”

அதையே தான் நேற்று அருண் ஷோரி சொல்கிறார் –
“காங்கிரஸ் வேறு – பாஜக வேறல்ல….
காங்கிரஸ் + மாடு = பாஜக ” என்று.

arun-shourie -book launching

புத்தக வெளியீட்டு விழாவொன்றில் நேற்று பேசிய
மூத்த பாஜக தலைவர் (ஆமாம் இன்னும் பாஜகவில் தான் இருக்கிறார்… இதுவரை வெளியேறவில்லை – வெளியேற்றப்படவும் இல்லை …)
அருண் ஷோரி மோடிஜி அரசு பற்றி கூறியவை சுருக்கமாக கீழே –

– பொருளாதார முன்னேற்றம் என்பது –
தலைப்புச் செய்திகளில் வந்து விட்டால் போதும் ….
உண்மையிலேயே நடைமுறையில் கொண்டுவரவேண்டும் என்பது
அவசியமில்லை என்று மோடிஜி அரசு நினைக்கிறது.

– அரசின் செயல்பாடுகள் – ” மன்மோகன் சிங்கே
தேவலையே ” என்று மக்களை நினைக்கத் தூண்டுகிறது….
( வேடிக்கை என்னவென்றால் -இந்த விழாவிற்கு,
டாக்டர் மன்மோகன் சிங்கும் வந்திருந்தார் – அருண் ஷோரியின்
பேச்சை அவரும் ரசித்துக் கொண்டிருந்தார்…! )

-பாஜக அரசையும், காங்கிரசையும் – கொள்கையளவில்
ஒப்பிட்டு பார்க்க வேண்டுமென்று சொன்னால் –
பாஜக என்பது காங்கிரஸ் கட்சி + பசுமாடு என்று
சொல்லி விட்டால் சுலபமாகப் புரிந்து போகும்….!

– இப்போது இருப்பதைப் போன்ற
மிக பலவீனமான, செயல்பாடே இல்லாத
ஒரு பிரதமரின் அலுவலகம் இதுவரை இருந்ததில்லை…

– இந்த அரசில் செயல்பாட்டை விட,
பேச்சு தான் அதிகமாக இருக்கிறது….

– எதை வேண்டுமானாலும் உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளலாம் –

– வரி விதிப்பு முறைகள் – ஒரு மாற்றமும் இல்லை…!!!

– வங்கி நடைமுறைகள் சீரமைப்பு – ஒன்றரை ஆண்டுகள் கடந்து
விட்டன. எந்தவித காரணமும் இல்லாமலே – தாமதப்பட்டுக்
கொண்டு போகிறது…..

– ஆமைவேகம் என்று கூட சொல்ல முடியவில்லை.
இந்த ஆமை தூங்கிக் கொண்டே இருக்கிறதே….!

– திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் உள்ள ஆர்வம் –
அவற்றை செயல்படுத்துவதில் இல்லை….

– தொழிலதிபர்கள் அரசுக்கு எதிராக – பேச பயப்படுகிறார்கள்….
பிரதமரை சந்திக்கும் தொழிலதிபர்கள் கூட அவரிடம் உண்மை
நிலையை கூறுவதில்லை. என்னதான் நடக்கிறது என்றே
அவர்களுக்கும் புரியவில்லை. “தயவுசெய்து எதாவது செய்யுங்கள்”
என்று மட்டும் தான் அவர்கள் பிரதமரிடம் கூறுகிறார்கள்.
ஆனால் – வெளியே ஊடகங்களை சந்திக்கும்போது மட்டும் –
அரசுக்கு பத்துக்கு ஒன்பது மதிப்பெண் கொடுத்து விடுகிறார்கள்…

– பாராளுமன்றம் என்பது எந்த செயலும் நடைபெறவில்லை
என்பதை உணர்த்தும் சாட்சியமாக நின்று கொண்டிருக்கிறது….

– மோடிஜி ஒவ்வொரு மாநிலத்துடனும் பிரச்சினைகளை தான்
வளர்த்துக் கொண்டிருக்கிறார். டெல்லியிலிருந்து மும்பைக்கு ஒரு தொழில் காரிடர் அமைப்பது என்றால் கூட –
குறைந்த பட்சம் ஐந்து முதலமைச்சர்களின் ஒத்துழைப்பு
வேண்டும் என்பதை அவர் புரிந்து செயல்பட வேண்டும்.

————————-

பாஜக தலைகளிடமிருந்து என்ன ரீ-ஆக்ஷன் வரும்
என்பது யூகிக்ககூடிய விஷயமே….

” தோற்றுப் போனவர்களிடமிருந்து நாங்கள் எந்தவித
சர்டிபிகேட்டையும் எதிர்பார்க்கவில்லை. இப்போதைக்கு
பிஎம்ஓ-வில் வேலை எதுவும் காலி இல்லை ”

– இது திருவாளர் முக்தர் அப்பாஸ் நக்வி.

” மோடிஜி அரசு அற்புதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மோடிஜியின் புகழைக்கண்டு பொறாமை கொள்பவர்கள் தான் அவரை குறை கூறுகிறார்கள் …”

– இது திருவாளர் வெங்கையா நாயுடு.

நான் இதற்கு மேலும் எதிர்பார்த்தேன்….

” மந்திரி பதவி கிடைக்காததால் அருண் ஷோரிக்கு
பைத்தியம் பிடித்து விட்டது”

– அநேகமாக டிவி டிபேட் எதாவது வந்தால், அதில்
மூத்த பாஜக செய்தி தொடர்பாளர்கள் யாராவது கூறக்கூடும்….!

அல்லது – இந்த இடுகையின் பின்னூட்டங்களில்-
பாஜக அன்பர்கள் யாராவது எழுதக்கூடும்….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to காங்கிரஸ் + மாடு = மோடிஜி சர்க்கார்…..!!! “அருண் ஷோரி” க்கு பைத்தியம் பிடித்து விட்டது…..!!!

 1. ravi சொல்கிறார்:

  இப்போது இருப்பதைப் போன்ற மிக பலவீனமான, செயல்பாடே இல்லாத ஒரு பிரதமரின் அலுவலகம் இதுவரை இருந்ததில்லை //
  பத்திரிக்கைகள் , வேறு மாதிரி எழுதுகின்றன .. பிரதமரின் அலுவலகம் அனைத்து அதிகாரங்களையும் தங்கள் கையில் வைத்து இருப்பதாக கூறுகின்றன …
  பைத்தியம் நமக்கு பிடிக்காமல் இருந்தால் சரி …

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரவி,

   குழப்பம் இல்லை நண்பரே.

   தன்னை சூப்பர் பி.எம். என்று நினைத்துக் கொண்டு,
   சகல அதிகாரங்களையும் பி.எம்.ஓ.வில் குவித்துக் கொண்டு விட்டார்.
   ஆனால், அந்த அதிகாரங்களை செயல்படுத்த
   தேவையான திறமையோ, கொள்கைத் தெளிவோ இல்லை.

   விளைவு – ஆமை – தூங்கிக் கிடக்கிறது.

   தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே கடந்த 16 மாதங்களில் குறைந்த பட்சம்
   நூறு கடிதங்களாவது போயிருக்கின்றன. எல்லாமே one way traffic….

   எதாவது ஒன்றுக்காவது பதில் வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா …?
   ஒன்று முடியும் என்று சொல்லி செய்ய வேண்டும்…
   இல்லை – இன்ன காரணங்களால் இயலாது என்று சொல்லி
   விளக்கமாவது கொடுக்க வேண்டும்.

   சுண்டைக்காய் ஸ்ரீலங்கா மந்திரி சவால் விடுகிறார்…
   வயதும், உடலில் வலிவும் இருந்தால் –
   நானே நேரில் போய் சண்டை போடத்தோன்றுகிறது.
   மத்திய அரசு இப்படி சொரணையே இல்லாமல் இருக்கிறதே…

   கிணற்றில் போட்ட கல் மாதிரி – இன்னும் கொஞ்சம் கடுமையாகவே
   சொல்கிறேனே – எருமை மாட்டின் மீது எண்ணை மழை பெய்தது மாதிரி –
   எந்தவித ரீ-ஆக்ஷனும் இல்லாமல் இருந்தால் –
   அதை என்னவென்று சொல்வீர்கள்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    கே.எம், நீங்கள் சொல்வது உண்மைதான் .
    தமிழ்நாட்டில் எங்கள் ஊரில் கிட்ட தட்ட 4 வருடங்களாக ஒரு பாலத்தை கட்டி கொண்டு இருக்கிறார்கள் ..சிறிய பாலம் .. அடுத்த தேர்தல் வர போகிறது . நாங்களும் போராட்டம் ,மகஜர் , என்று எல்லாம் பார்த்து விட்டோம் .. நீங்கள் கூறுவது போல கிணற்றில் போட்ட கல் .. சரி , நம் மாநில அரசு தான் இந்த லட்சணம் என்றால் , மதிய அரசும் இப்படிதான் உள்ளது… சரி , நாங்கள் எங்களை தேற்றி கொண்டு விட்டோம் …. வேறு வழியில்லை

  • LVISS சொல்கிறார்:

   This is enough to show that people are totally ignorant about how the PMO functioons now–Ministers have more powers to clear projects Now they can, without referring to PMO or PM clear projects upto 1000 crore(earlier it was 300 crore) — This is just one exapmple –Today the EAM heads a meeting of the African Summit without the presence of the PM –She went to Russia alone to talk to the Russian leaders –Read as many newspapers available in the net -You will see both criticisms and praise —

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  வந்து விட்டார் நம்ம நண்பர்….இன்னமும் தேர்தல் பிரசாரம்தான். ஆரம்பத்தில்…நூறு நாள் திட்டம், வேலைகள் சுறுசுறுப்பாக நடக்கின்றன…அடேயப்பா…என்னா ஸ்பீடு…அடி கொடுத்த கைப்பிள்ளை தான் நினைவிற்கு வருகிறது….

 3. paamaran சொல்கிறார்:

  தினமணி இன்றைய செய்தி :—– // மந்திரங்களைப் போட்டு மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து விட முடியுமா? பிகாரில் மோடி பிரசாரம் ….. அப்போது அவர் பேசுகையில், 16 மாதங்களாக ஓய்வின்றி உழைத்து வருகிறேன். ……. 16 மாதங்களில் பாஜக அரசு செய்துள்ள சாதனைகளை மக்கள் நன்கு அறிவர் …… ஜனநாயகம் வேண்டுமா? மந்திரங்கள் வேண்டுமா? என்பதை மக்களே முடிவு செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்….. // பாவம் ” அருண் ஷோரி ” அவர்களுக்கு ” மோடிஜியின் மயக்கும் பேச்சுக்களைபற்றியும் மந்திரங்களை பற்றியும் ஒன்றுமே தெரியவில்லை ….. அப்படி தானே ….!!!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   பீகாரில் பிரதமர் பதவிக்குரிய அத்தனை கௌரவங்களும்
   காற்றில் பறக்கின்றன. ஒரு பிரதமர், ஒரு மாநிலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட
   முதல்வரை – கேவலமான வார்த்தைகளில் ஏசுகிறார்…
   ரவுடி, குண்டர் ஆட்சி நடத்துபவர், மந்திரவாதி, தந்திரவாதி,
   இன்னும் என்னென்னவோ…. இந்தி மொழி தெரிந்தால், ஒரு தேர்தல் பிரச்சாரத்தை
   பாருங்கள்… உங்களுக்கே புரியும்.

   பேச வேண்டிய விஷயங்கள் எதைப்பற்றியும் கருத்தே சொல்வதில்லை.
   நாட்டில் தலைபோகும் பிரச்சினைகளைப்பற்றி பிரதமர் என்ன நினைக்கிறார்
   என்று எத்தனை தடவை கேட்டாலும் பதிலே வருவதில்லை.
   பாராளுமன்றத்திலேயே பேசுவதில்லை…

   இவர் வாயைத்திறக்கிறார் என்றால் ஒன்று அது எந்த மாநிலத்திலாவது
   ஒரு தேர்தல் பேரணியாக இருக்க வேண்டும்….
   இல்லையேல், வெளிநாடுகளில் – ராம் மாதவ் ஏற்பாடு செய்த
   NRI-க்களின் கூட்டமாக இருக்க வேண்டும்.

   மூன்றாவது option-உம் உண்டு. யாரும் கேள்வி கேட்க முடியாத
   “மன் கி பாத்” ரேடியோ உரையாக இருக்க வேண்டும்…

   “பேச்சுத்திறமையையும், நடிப்பையும், ஊடகங்களின் ஊடே நிகழ்த்திய
   மாயைகளையும் நம்பி இந்த நாட்டு மக்கள் ஏமாந்து போய் விட்டார்கள்.
   தங்கள் தவறைத் திருத்திக் கொள்ள இப்போதைக்கு அவர்களுக்கு
   வாய்ப்பு இல்லை…. ”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    All of us know that state elections are never fought on issues that dont directly concern them–So no point talking about issues other than those concerning the state – It wont serve any purpose –
    Unfortunately the campaign in Bihar has somewhat descended to personal attacks –Those who follow this campaign will know that Lalu Prasad when he said some thing like ‘devil entered his entered my house’ —
    Mr Modi does not go to Bihar as PM but purely as a campaigner and he wears his party’e symbol on his shirt –And he is not the only campaigner .almost all the big hots of the party have been assigned the duty of campaigning —
    This Mann Ki Baat programme is aired through the radio for the benefit of villagers who do not have TVs though others also listen to it — What would be of interest to these villagers if they are told about national issues like GDP etc with which the rest of us bury our heads with –Either the people have not understood the purpose of the programme or are pretending —

   • ravi சொல்கிறார்:

    கே.எம், நீங்கள் தமிழ்நாட்டில் உள்ளவர் தானே .. திமுக வும் ,அதிமுக வும் மேடையில் பேசியதை பார்த்து இருப்பீர்கள் … காது கொடுத்து கேட்க முடியாது …
    நீங்கள் குறிப்பிட பேச்சுகளை கேட்டேன் .. நம் ஊர் பேச்சு முன்னால் இதெல்லாம் சாதாரணம் ..
    தமிழ் நாட்டில் ஒரு தொகுதியின் இடை தேர்தலுக்கு , எல்லா அமைச்சர்கள் , எம்.பி கள் அந்த தொகுதியில் குமியும் போது, இதெல்லாம் ஒன்றுமே இல்லை .. ..

    லாலுவும் . மோடியும் என்ன சமரச சன்மார்க்க தலைவர்களா ?? அரசியல்வாதிகள் தானே .. லாலு மோடியை திருடன் என்கிறார், அன்னை சோனியா கொலைகாரன் என்கிறார்.. மோடியும் மக்களால் தேர்ந்து எடுக்க பட்டவர் தானே .. நன்றாக திருப்பி கொடுக்கிறார். .லாலு அப்பட்டமாக சாதிய அரசியல் பேசுகிறார் .. நிதிஷ் கண்டும் காணமல் போகிறார்..15 வருடமாக எதிரும் புதிரும் ஆக இருந்த லாலுவும் நிதிசும் எதற்கு ஒன்று சேர்ந்தார்கள் … அதிகாரத்திற்காக தானே ..மோடியும் அதே அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார் ..அவ்வளவே ..

    சார், வட நாடு அரசியல் வாதிகள் திட்டி கொண்டாலும் , அவசியம் என்றால் ஒன்று சேர்வார்கள் ..முலாயம் வீடு திருமணத்தில் மோடி, லாலு, முலாயம் எப்படி ஒட்டி கொண்டு போஸ் கொடுத்தார்கள் .. தமிழ் நாட்டில் கண்டிப்பாக இது நடக்காது ..

    • LVISS சொல்கிறார்:

     Mr Ravi — The last paragraph says it all -In spite of political differences Modi was invited and he attended the function –Now I am wondering whether this is what Lalu refers to as devil entered my house – –In the heat of the election campaign and in their anxiety to win at cost so many things are being said by political parties –But the beauty of it is that people listen to this but vote as they please — Sometimes the parties join with their rivals to form the govt ( see what happened in J and K ) and people are left wondering –=
     If the culture of burying political differences and coming together for social causes comes to our state it will be welcome —

 4. LVISS சொல்கிறார்:

  The BJP has clarified today that Arun Shourie has not renewed his membership after six years as per party rule , so he is no more a party member –That is it- So his opinion is that of any opposition party and not surpising — Every body knows why Arun Shourie criticises the gocernment –This is not the first time he is doing it — When you get the angry with one party you praise the opposite party — This is what everyone deos and Shourie is no exception — In any case the NDA doesnt need his advise —

  • ravi சொல்கிறார்:

   when suresh prabhu,who was not even a member of bjp he was made a minister in a single day,then what is the actual meaning of membership.

   so, there is no point in blaming shourie, saying he is not a member

   • LVISS சொல்கிறார்:

    I think he became a member before he was given the post —

    • ravi சொல்கிறார்:

     let them bring who ever they want, but bjp is not a holy cow…
     //I think he became a member before he was given the post —//
     all happened in a single day.. he would have been intimated when he was in shivsena..
     so all this membership stuff is plain nonsesne…

     • LVISS சொல்கிறார்:

      I think the previous NDA govt headed by Mr Vajpayee wanted him as a minister –Now Mr Modi felt that Mr Prabhu would be capable of heading the railway ministry –Yes I think all happened in a single day –I am not sure whether Arun Shorie was a member of BJP when he was made a minister in the NDA 1 govt —

 5. LVISS சொல்கிறார்:

  Something of interest to us in Tamil Nadu in the following link

  http://mlife.mtsindia.in/nd/?pid=736882

  Two states are regularly affected by this one is Tamil nadu and the other mostly Gujarat and some nearby states — Just like Srilanka navy Pakistan arrests fishermen from Gujarat and others near Gujarat coast — Though some were released recently (,we also released some of their prisoners), there are still many in Pakistan jails –Why this happens ? Because the innocent fishermen cannot know where our maritime border ends and where the other country”s begin– Unlike in land it is impossible to demarcate the border in water –This problem I am afraid is going to be a perennial irritant for us — The only solution seems to be to release the prisoners by exchange —

 6. LVISS சொல்கிறார்:

  This talk of snail paced govt
  This is the same snail paced govt
  1) Which , in coordination with Myanmar govt entered into their borders and killed all the terrorists who laid ambush to our army convoy and killed our soldiers in north east -2) which working in tandem with the Australian and Indonesian govts nabbed Chota Rajan recently3) which by an order combined two categories of Indians living abroad into one and made their visa a life time visa for all NRIs -3) which evacuated about 7000 people from India and some other foreign countries from war zone in Syria to a place of safety in a matter two hours 4) which made the world see our country as the only fast economy growing in the world at present –5) which is slowly making it easy for the people to approach the govt depts from home and get things done on line —
  Modi became the PM with administrative experience of 15 years as CM to back him –To compare him with others , well, what to say —

 7. Neruupu Siva சொல்கிறார்:

  மந்திரி பதவி கிடைக்காததால் அருண் ஷோரிக்கு
  பைத்தியம் பிடித்து விட்டது

 8. LVISS சொல்கிறார்:

  For those of us who think that the govt doesnt function This link date May 2015 is for us

  http://timesofindia.indiatimes.com/india/Modiversary-No-more-lobbying-in-lobbies-of-governance/articleshow/47392262.cms

 9. V.g.chandrasekaran சொல்கிறார்:

  தேர்தலுக்கு முன் மோடி உருவாக்கியிருந்த பிம்பம்,பத்து ஆண்டுகால செயல்படாத முந்தைய அரசின் தோல்வி மக்களிடம் உருவாக்கியிருந்த எதிர்பார்ப்பு இவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால் மோடி மட்டும் உழைத்தால் போதாது அதிகார வர்கம் அவருக்கு இனையாக ஓட வேண்டும் இது புரியாதவர்களா இன்றைய அறிவு ஜீவிகள். மேலும் இங்கு மோடி எதை பேசினாலும் சர்ச்சை கிளப்ப என்றே அறிவுலக,அரசியலுலக,கலையுலக வல்லுநர்கள் ஆங்கில காட்சி ஊடகங்களில் தயாராய் உள்ளனர்.
  மோடியை சுற்றிலும் அவரது கட்சியிலேயே அவரது வளர்சியை ஏற்றுக்கொள்ளாத சகித்துக்கொள்ள முடியாத இயலாமை கூட்டம் ஒன்று இருப்பதும் அவர்களின் திட்டமிட்ட பேச்சுகளே இன்றைய தாத்ரி,ஹரியானாவில் தலித்துகள் படுகொலை,மாட்டு இறைச்சி விவகாரம் என்று நீண்டு கொண்டே இருப்பது.நாடாளுமன்றம் செயல்படாததற்கு மோடி மட்டுமே கரணமா,கடந்த ஆட்சியில் நாடாளுமன்றத்தை நீங்கள் முடக்கியது போல் நாங்கள் இருக்க மாட்டோம் ஆரோக்கியமான விவாதம்,ஆக்கபூர்வமான விமர்சனம் என்று தங்களின் கடமையை நிறைவேற்றுவதிலிருந்து இன்றைய எதிர் கட்சிகளை தடுப்பது எது. மத்தியில் எந்த அரசு அமைந்தாலும் மாநில நிலைபாடுகளுக்கேற்பவே முடிவுகள் எடுப்பது என்பது ஒன்றும் மக்களுக்கு புதிதல்லவே, சமத்துவம் சகோதரத்துவம் என்று முழங்கும் கம்யூனிஸ்டுகளே முல்லை பெரியார் விவகாரத்தை எவ்வாறு கையாண்டனர் என்பதும் கச்சதீவு விவகாரத்தில் நேருவும் இந்திராவும் எடுத்த முடிவுகளே இன்றைய சிக்கல்களுக்கு அடிப்படை என்பதும்,ஜிஎஸ்டி அமலுக்கு வருவதில் உள்ள சிக்கலில் வருவாய் இழப்பு என்பதை விட பாஜக அல்லாத மாநில முதல்வர்களின் இகோ பெரும்பங்கு வகிப்பதும் அருன் சோரி போன்ற பிறவி பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாதா.
  மோடி ஒன்றும் அவர் கட்டமைத்தது போல் சூப்பர் மேன் கிடையாது என்பதும் வெறும் ஐந்து வருட ஆட்சியில் பாலும் தேனும் ஓடாது என்பதும் நிதர்சனமான உண்மை அதே நேரம் அறுபது வருடங்களில் தவறவிட்ட வளர்சி,முன்னேற்றம்,சீர்திருத்தம் போன்றவற்றை வெறும் ஒன்னரை வருடங்களில் எதிர்பார்ப்பது நகைமுரனாக தெரியவில்லையா அருன் சோரி போன்ற மூத்த பத்திரிக்கையாளர்களுக்கு.

 10. gopalasamy சொல்கிறார்:

  If somebody praises Modi. it is total lie.
  If somebody criticize Modi, there is absolute truth.

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  சில நண்பர்கள் பாஜகவையோ, மோடிஜியையோ
  குறைகூறி நான் இடுகை எழுதினால், எங்கே இருந்தாலும்
  உடனே இங்கே சமாளிக்க வந்து விடுகிறார்கள்….

  அவர்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன்…!
  நியாயமான, நேர்மையான – வாதங்களை நான் வரவேற்கிறேன்.
  படிப்பவர்கள் தீர்மானித்துக் கொள்வார்கள் எது சரி -எது தவறு
  என்பதை….!!!

  இன்னமும் கீழ்க்கண்ட விஷயங்கள் பாஜக அன்பர்களால்
  எதிர்கொள்ளப்படாமலே இருக்கின்றன என்று நினைக்கிறேன் –

  ————–

  – வரி விதிப்பு முறைகள் – ஒரு மாற்றமும் இல்லை…!!!

  — வங்கி நடைமுறைகள் சீரமைப்பு – ஒன்றரை ஆண்டுகள் கடந்து
  விட்டன. எந்தவித காரணமும் இல்லாமலே – தாமதப்பட்டுக்
  கொண்டு போகிறது…..

  — திட்டங்களை விளம்பரப்படுத்துவதில் உள்ள ஆர்வம் –
  அவற்றை செயல்படுத்துவதில் இல்லை….

  — தமிழ் நாட்டிலிருந்து மட்டுமே கடந்த 16 மாதங்களில் குறைந்த பட்சம்
  நூறு கடிதங்களாவது போயிருக்கின்றன. எல்லாமே one way traffic….
  எதாவது ஒன்றுக்காவது பதில் வந்ததாக கேள்விப்பட்டிருக்கிறீர்களா …?

  – சுண்டைக்காய் ஸ்ரீலங்கா மந்திரி சவால் விடுகிறார்…
  மத்திய அரசு இப்படி சொரணையே இல்லாமல் இருக்கிறதே…

  -பேச வேண்டிய விஷயங்கள் எதைப்பற்றியும் கருத்தே சொல்வதில்லை.
  நாட்டில் தலைபோகும் பிரச்சினைகளைப்பற்றி பிரதமர் என்ன நினைக்கிறார்
  என்று எத்தனை தடவை கேட்டாலும் பதிலே வருவதில்லை.
  பாராளுமன்றத்திலேயே பேசுவதில்லை…

  –இவர் வாயைத்திறக்கிறார் என்றால் ஒன்று அது எந்த மாநிலத்திலாவது
  ஒரு தேர்தல் பேரணியாக இருக்க வேண்டும்….
  இல்லையேல், வெளிநாடுகளில் – ராம் மாதவ் ஏற்பாடு செய்த
  NRI-க்களின் கூட்டமாக இருக்க வேண்டும்.

  ———

  Friends are welcome to defend these points also …

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • ravi சொல்கிறார்:

   வரி விதிப்பு முறைகள் – ஒரு மாற்றமும் இல்லை…!!!

   வங்கி நடைமுறைகள் சீரமைப்பு – ஒன்றரை ஆண்டுகள் கடந்து
   விட்டன. எந்தவித காரணமும் இல்லாமலே – தாமதப்பட்டுக்
   கொண்டு போகிறது…..

   eagerly awaiting…..

 12. Muttal Indian சொல்கிறார்:

  Defenders of BJP come here and say that he is not a super man and things will not change within blah blah blah…then Mr. Modi should not have tom tommed his “56 inch chest” , “Decisive leaderership” and “Give us 60 months only and we will change the country”, “Acche din” etc..He still thinks he is in campaign mode – just opening his mouth only during election rallies and other meetings where he will have a monologue only.

  People like Modi and Kejriwal are good to be in the opposition where they raise questions. But they are like frogs in a well who can only croak and not do anything concrete.

  Mr.Modi criticised Dr.Singh as Mr.Maunmohan..atleast Dr.Singh was consistently silent on all matters whereas Mr.(selectively) Maunendra Modi will not talk on matters which the nation expects him to…but will only open his mouth when he knows there is a 100% chance of a monologue only. All air and no substance..

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.