ஏ குருவி – குருவிக் குருவி – சிட்டுக் குருவி…!!!

.

.

முதலில் சிவாஜி வாயால் நாலு வரியில் ஒரு பாட்டு – பிறகு இடுகை….!

பல வருடங்கள் ஆகி விட்டன. கடைசியாக எப்போது பார்த்தேன் என்றே நினைவில் இல்லை. நான் குடியிருப்பது சென்னையில் ஒரு அடுக்கு மாடி கட்டிடத்தில்….

மாடியில் புறாக்கள் நிறைய வரும்…
அணில்கள் கூட வரும்….இங்கும் அங்கும் ஓடி விளையாடும்….
ஆனால் …. குருவி …? உம் ஹூம்…!
எத்தனை நாளாச்சு …?

மறைந்து கொண்டிருக்கும் சிட்டுக்குருவி இனத்தைக் காப்பாற்ற
வேண்டும் என்று நாம் அனவருமே விரும்பும் இந்த நேரத்தில் –

விசேஷ அக்கரை எடுத்துக் கொண்டு குருவிகளை
வளர்த்தெடுக்க அற்புதமான முயற்சிகளை மேற்கொண்டு,
இதே பணியில் தனக்கு பல சீடர்களையும் தயார் செய்து
கொண்டிருக்கும் இளைஞர் ஒருவரைப் பற்றி படித்தேன்.
அந்த செய்தியை அவசியம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள
வேண்டுமென்று தோன்றியது. செய்திக் கட்டுரை கீழே –

k-2

k-1

k-3

ka-1
ka-2
ka-3

இத்தகைய மனிதர்கள் பெரிதும் ஊக்குவிக்கப்பட வேண்டியவர்கள்.
இந்த மாதிரி செய்திகள் பலருக்கும் சென்றடையச் செய்ய வேண்டும்.

கிராமங்களைப் பற்றி கவலை இல்லை..
நிறைய கார்த்திகேயன்கள் இருப்பார்கள். தானாகவே நடக்கும்.
சிறு ஊர்களிலும், சிறு நகரங்களிலும் முயற்சித்துப் பார்க்கலாம்.
பள்ளிக்கூடங்கள் தான் இதற்கான சிறந்த இடங்கள்.
ஒவ்வொரு பள்ளியிலும் இதுபோன்ற project-ஐ எடுத்து செய்யலாம்.

பள்ளி ஆசிரியர் திரு. கார்த்திகேயனுக்கு நமது உள்ளம் நிறைந்த
வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். இந்த செய்தி கட்டுரையை தந்த திரு.வீ.மாணிக்கவாசகம் மற்றும் புகைப்படங்களுக்காக திரு.க.சத்தியமூர்த்தி ஆகியோருக்கும் நமது பாராட்டுகள்.

தமிழகத்தின் பள்ளிகளில் கார்த்திகேயன் போன்ற இன்னும் பல அக்கரையுள்ள ஆசிரியர்கள் உருவாக வேண்டும் என்று
வேண்டுவோம் …!!!

————-

இடுகைக்கும் இதற்கும் தொடர்பில்லை….
இருந்தாலும் மேலே யூட்யூபில் முதல் மரியாதை வரை வந்து விட்டு அப்படியே போக மனசு வரவில்லை….

எனவே ….எனக்குப் பிடித்த, உங்களுக்கும் பிடிக்கும் –
பூங்காற்று திரும்புமா …..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to ஏ குருவி – குருவிக் குருவி – சிட்டுக் குருவி…!!!

 1. B.V.Venkatasubramanian சொல்கிறார்:

  k.m.sir,

  beautiful selection.
  உங்கள் ரசனை எனக்கு மிகவும் பிடிக்கிறது.

 2. Sampathkumar.K. சொல்கிறார்:

  payanulla katturai.

  Songs – unforgettable !

 3. paamaran சொல்கிறார்:

  சிட்டுக்குருவிகளின் சுறுசுறுப்பைப் பார்த்திருக்கீறீர்களா? அருகில் ரசித்திருந்தால் அதன் அருமைப் புரியும்.
  ஆம். எங்கள் வீட்டில் கூட சிட்டுக்குருவிகளின் கீச்சுக் குரல்கள் எங்கும் கேட்டுக்கொண்டிருக்கும்.. குருவி கூட்டை அழித்தால் பெரும் பாவம் வந்து சேரும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வந்ததன் அர்த்தம் இப்போது விளங்குகிறது.. இப்படி எதையாவது சொல்லி அவற்றின் இனங்களை அழியாமல் பாதுகாத்து வந்தனர்.
  அதிலிருந்து இன்று வரையும் கூட்டைக் கலைத்தால் பாவம் என்ற அர்த்தம் மட்டும் மனதில் நன்கு பதிந்து விட்டிருக்கிறது…….’சிட்டுக்குருவி, சிட்டுக்குருவி சேதி தெரியுமா’…, ‘சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு’… என்ற பாடல்களை கூட அதிகம் கேட்க முடிவதில்லை ….. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 — ம் நாள் சிட்டுக்குருவிகள் தினம் என்று அரசு அறிவித்துள்ள அன்றாவது ” சிட்டுக்குருவிகளை ” நினைவு கூர்ந்து ஒரே ஒரு கூடு அமைக்க முயலுங்கள் …. சிட்டுக்குருவிகளுக்கு ” வீட்டுக் குருவிகள், அடைக்கலக் குருவிகள், ஊர்க் குருவிகள் ” என்கின்ற வேறு பெயர்களும் நம் தமிழ்நாட்டில் உண்டு …. மீண்டும் ” கீச், கீச் என்ற இனிமையான ” சத்தம் கேட்க வேண்டுமல்லவா ….?

 4. drkgp சொல்கிறார்:

  வீணர்களின் அல்ப சாகசங்களை படித்து அலுத்துபோன மனதுக்கு சிட்டுகுருவிலேகியம் இதமானதுதானே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.