சு.சுவாமிக்கு எதிரான இந்த கிரிமினல் வழக்கில் விரைவாக தீர்ப்பு கிடைத்தால் – நாடு கொஞ்சமாவது உருப்படும்…

ss - matter

.

திருவாளர் சு.சுவாமி மீது இந்துக்கள்- முஸ்லிம்கள் இடையே வெறுப்பைத் தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி, மும்பை, அஸ்ஸாம், மொகாலி மற்றும் திருவனந்தபுரம் நீதிமன்றங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் அஸ்ஸாம் நீதிமன்றம் சுப்பிரமணியன் சுவாமிக்கு பிடிவாரண்ட் கூட பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு”க்கு தண்டனை வழங்கக் கூடிய ஐ.பி.சி. சட்டப் பிரிவுகளுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில் தாம் 2007ஆம் ஆண்டு எழுதிய பயங்கரவாதம் தொடர்பான
புத்தகத்துக்கு எதிரான வழக்குகளுக்கும் அவர் தடை கோரியிருந்தார்.
அரசியல் சாசனம் Article 19(2) கீழ் தனக்கு முழுமையான
பேச்சு சுதந்திரம் இருப்பதாகவும் –

– தான் மீறியிருப்பதாக கூறப்படும் ஐ.பி.சி. பிரிவுகள் தான்
அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்றும் அந்த பிரிவுகள்
ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் வாதித்திருந்தார்….
(அதாவது, இவர் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க மாட்டார்….. சட்டம் தான் இவரது நடப்பிற்கேற்ப மாற்றப்பட வேண்டும்…!!! )

இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று
வந்தததால் சு.சுவாமியும் இது வரை அனைத்து கைது நடவடிக்கைகளில் இருந்தும் தற்காலிகமாக தப்பித்து வந்தார்.

குறிப்பிட்ட ஐபிசி சட்டப்பிரிவுகளை நீக்குவது குறித்த
சுப்பிரமணியன் சுவாமி மனு மீது பதிலளிக்குமாறு உள்துறை அமைச்சகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இதை ஏற்று உள்துறை அமைச்சகம் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

அதில் மத்திய அரசு –
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெறுப்பைத் தூண்டும்
பேச்சுகளை ஒருபோதும் அனுமதிக்கவே முடியாது.
இத்தகைய பேச்சுகளுக்கு தண்டனை வழங்கக்கூடிய
ஐ.பி.சி. சட்டப் பிரிவுகள் மிகவும் சரியானவையே. இந்தியாவின்
குடிமக்களிடையே வெறுப்பைத் தூண்டும் பேச்சுகளை
நாம் அனுமதித்தால் அது மிகவும் மோசமான நாசத்தையே ஏற்படுத்தும்.

இதனால் கலவரங்கள் ஏற்படும். சமூக அமைதியைப் பாதிக்கும் வகையில் நல்லிணக்கம் மிகவும் சீர்குலைந்து போய்விடும்.

பல்வேறு ஜாதி, மதங்களைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும்
ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதையே நமது அரசியல்
சாசனம் வலியுறுத்துகிறது. அமைதியை நிலைநாட்டவும் சமூக
நல்லிணக்கத்தை கடைபிடிக்கவும் நமது அரசியல் சாசனம் விதித்துள்ள நியாயமான சில கட்டுப்பாடுகளையும்
சட்டப்பிரிவுகளையும் கேள்விக்குள்ளாக முடியாது.
வெறுப்பு பேச்சுகளை பேசுவோருக்கு சட்டப்படி உரிய தண்டனை
வழங்க வேண்டும்.

– மேலும் சுப்பிரமணியன் சுவாமி 2007ஆம் ஆண்டு பயங்கரவாதம் தொடர்பாக எழுதியுள்ள புத்தகம் ( “Terrorism in India” ) முழுவதும் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பகைமையை ஏற்படுத்தும் வகையில்தான் அமைந்துள்ளது.

இந்த நூலை எழுதிய சுப்பிரமணியன் சுவாமி சட்டத்தை
முழுவதுமாக மீறியுள்ளார். ஆகையால் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அவர் மீதான வழக்கில் விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் –
என்று மத்திய உள்துறை அமைச்சகம் தமது பிரமாணப் பத்திரத்தில்
தெரிவித்திருக்கிறது..

மத்திய அரசின் பதில் பிரமாணபத்திரத்தால் அதிர்ச்சியடைந்த சு.சுவாமி நேற்று மீண்டும் சவடாலாக –
கட்சியில் தனக்கு வேண்டாத ஒருவர் யாராவது –
ஒரு அண்டர் செக்ரட்டரியை பிடித்து இத்தகைய பதிலை
சமர்ப்பிக்க ஏற்பாடு செய்திருப்பார் என்றும்,

– இது சட்ட அமைச்சகத்தை கலந்து ஆலோசித்தது போலவே
தெரியவில்லை என்றும், தான் விரைவில் உள்துறை ராஜ்நாத்
சிங்கை சென்று பார்ப்பதாகவும், அதன் பின் மத்திய அரசின்
பிரமாண பத்திரம் வாபஸ் வாங்கப்படும் என்று நம்புவதாகவும்
சொல்லி இருக்கிறார்.

செய்தியாளர்கள் எல்லாரையும் எலிமெண்டரி ஸ்கூல் சிறுவர்களாக நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார் சு.சுவாமி.

உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும்,
பல பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கியமான
பிரமாண பத்திரத்தை உள்துறை அமைச்சரின் பார்வைக்கு
கொன்டு போகாமலே, தாக்கல் செய்யுமா….?

குப்புற விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற
கதையாக, சமாளிக்கப் பார்க்கிறார் சுப்ரமணியன் சு.சுவாமி.

இன்று நாட்டில் ஏற்படும் பெரும்பாலான குழப்பங்களுக்கும்,
கலவரங்களுக்கும், சண்டை-சச்சரவுகளுக்கும் அடிப்படை காரணமே
ஜாதி-மத வெறியைத் தூண்டும் விதமாக,
எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல்,
யாருக்கும் அடங்காமல் – இவரைப்போல் செயல்படும்
சில தீயசக்திகள் தான். சு.சுவாமி, (ஹைதராபாத்) ஒவைசி போன்ற அத்தகைய சக்திகள் இரு தரப்பிலும் இருக்கின்றனர்.

குண்டு வைப்பவர்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றல்ல.
தங்களது வெறியூட்டும் பேச்சுக்களாலும், எழுத்துக்களாலும்
வெவ்வேறு சமூகத்தினரிடையே நிம்மதியின்மையையும் –
அதன் விளைவாக கலவரங்களையும் – உண்டு பண்ணக்கூடிய
ஒவ்வொருவருமே -அவர் எந்த சமூகத்தை சேர்ந்தவராக
இருந்தாலும் சரி – தீவிரவாதி தான்.

இத்தகைய ஆசாமிகளை ஐந்து வருடங்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் “உள்ளே” அடைத்து வைத்தாலே போதும் –
வளர்ச்சி ஏற்படுகிறதோ இல்லையோ – குறைந்த பட்சம்,
நாட்டில் நிம்மதியும், அமைதியும், மத நல்லிணக்கமும்
தன்னாலே வந்து விடும்.

துணிச்சலும், உண்மையிலேயே நாட்டின் மீது அக்கரையும்
உள்ள தேசியத் தலைவரின் நிர்வாகத்தில் அரசு இருந்தால் –
அரசே இதைச் செய்யலாம்.
அப்படி இல்லையேல், நீதிமன்றமாவது குறுக்கிட்டு எதாவது
செய்தால் தான் உண்டு.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to சு.சுவாமிக்கு எதிரான இந்த கிரிமினல் வழக்கில் விரைவாக தீர்ப்பு கிடைத்தால் – நாடு கொஞ்சமாவது உருப்படும்…

 1. எழில் சொல்கிறார்:

  எனக்கு என்னவோ இந்த தென்னை மரத்தில்
  http://www.nytimes.com/aponline/2015/10/31/world/asia/ap-as-india-intolerance.html
  தேள் கொட்டியபடியால் தான் இங்கு நெறி கட்டியிருக்கிறது போல் தோன்றுகிறது.

  நமது மன்னர்களுக்கு நாட்டு மக்கள் சொன்னால் புரியாது. வெளிநாட்டில் துவைத்து காய போடுகிறார்கள் என்றவுடன் ரோஷம் பொத்துக்கொண்டு வரும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக எழில் ( நீண்ட நாட்களுக்குப் பிறகு…! ).

   நீங்கள் எழுதி இருப்பது போல் வெளிநாடுகளில் பெயர்
   கெடுகிறது என்பதும் மத்திய அரசின் இப்போதைய
   நடவடிக்கைகளுக்கு, நிச்சயமாக ஒரு முக்கிய காரணம் தான்.

   ஆனால், இதைக்கூட மத்திய அரசு sincere ஆக மனமுவந்து
   செய்திருக்கும் என்று தோன்றவில்லை……!
   personal meet-க்கு பிறகு இது நீர்த்துப் போகிற மாதிரி
   கூடவே எதாவது வேலை நடக்கும்….!

   சு.சுவாமியின் காலை வாரி விட பாஜக
   பெருந்தலைகள் ரெடி தான். ஆனால், அவர் ஒரு சநி மாதிரி..
   முதலில் அவரை முறைத்துக் கொள்கிறவர்களுக்கு
   ஆபத்து…. செமத்தியாக மாட்டிக் கொள்வார்கள்…

   எனவே, யாராவது துவக்கி விட்டால் –
   பின்னர் தர்ம அடி போட எல்லாருமே வெறியுடன்
   காத்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது….

   முதல் அடி போட யார் முன்வருகிறார்கள் பார்ப்போம்…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    ஏன் சார்.. இந்த அமைப்புகள் மோடியை அமெரிக்காவிற்கு உள்ளே விட மாட்டேன் என்றார்கள் .. இப்போது பிரதமர் ஆனவுடனே , சிவப்பு கம்பளம் விரிக்கிறார்கள் .. ஆக, வியாபாரம் என்றால் எல்லா பயலும் ஒன்றுதான் .. நாளையே சகிப்புத்தன்மையின் சிகரம் என்றால் மோடி என்று புகழாரம் செய்தாலும் ஆச்சரியம் இல்லை …

    • Sharron சொல்கிறார்:

     No never. All western countries are intently watching Modi’s Government. Most of the issues are coming in Foreign news.

     • ravi சொல்கிறார்:

      so,whats the point..for any country ,its business which is critical. they will complain in academic circles , but they will shake hands with even the worst dictatorship like china for their business interest ..
      The americans complaining !! come on.. its like butcher crying for sheep.
      The USA was even engaging with military dictatorship in pakistan.. All the G7/8 countries have all kind of nonsense dealings in africa..
      its plain business interest..if it suits them , they will go to any extent to please you..

 2. paamaran சொல்கிறார்:

  “மசூதி என்பது பிரார்த்தனை கூடம் தான், அதை ஒரு கட்டிடமாகவே தான் பார்க்க வேண்டும். புனித ஆலயம் போல அதை பார்ப்பது தவறு. சவுதி அரேபியாவில் கூட சாலைகள் அமைக்க மசூதிகள் இடிக்கப்பட தான் செய்யப்படுகின்றன” என சுப்ரமணியன் சுவாமி கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் பேசியுள்ளார்……… .இதைத் தொடர்ந்து தான் அவர் மீது அஸ்ஸாம் மாநிலத்தின் கரிம்கஞ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 153, 153ஏ, 295, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது…… இது இதன் தொடர் …. அவர் பா.ஜ.க.வில் சேர்ந்ததற்கு முக்கிய காரணமே ” அவரை பார்த்து பயங்கொள்ளும் பேர்வழிகள் ” அதிகம் இருப்பதால் தான் என்பதும் இந்த 2007 — மற்றும் அஸ்ஸாம் வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் கூட இருக்கலாம் என்கிற சந்தேகம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதல்லவா …? ஆமா … நம்ம ” செல்பி மோக பிரதமருக்கு ” தேவையான ஒரு செய்தி — இன்றைய தினமணியில் வந்துள்ளது : —- // செல்ஃபி புகைப்பட அடிமையா? வருகிறது ஆன்டி செல்ஃபி மாத்திரை // …. சாப்பிடுவாரா … பிரதமர் …?
  By dn
  First Published : 05 November 2015 01:29 PM IST

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   மோடிஜிக்கும், சுவாமிஜிக்கும் ஒரு முக்கியமான
   வித்தியாசம் இருக்கிறது – கவனித்திருக்கிறீர்களா ..?

   மோடிஜிக்கு – பெரும் கூட்டத்தை கண்டால் தான்
   பேச்சே வரும்… அதுவும் எதிர்க்கேள்விகள்
   வர வாய்ப்பில்லாத இடமாக இருக்க வேண்டும்…
   பிச்சு ஒதறுவார்…!

   ஆனால் சுவாமிஜிக்கு – சிறிய கூட்டமாக, அதுவும்
   safe- ஆக எதாவது ஹாலுக்குள் இருந்தால் தான்
   பேச முடியும். ஆனால், இவர், தயக்கமே இல்லாமல்,
   எந்த கேள்வியையும் எதிர்கொள்ளத்தயாராக இருப்பார்.

   ஆனால் மொத்தத்தில் இருவருமே ……

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • LVISS சொல்கிறார்:

    MrK M The P M gave two interviews on completion of one year of N D A This did not get the coverage it deserved. The interview covered many subjects. The interviews in channeis are repetetive. You will recall that all ministers addressed press conferences after completion of one year .The P M has advised the ministers to answer queries relating to their ministers. He is not averse to interviews Watch the interviews in channeis and you will know why politicians don’t like to give interviews It is just an ego trip. .

    • Sampathkumar, K. சொல்கிறார்:

     Mr.LVIS,

     You satisfy yourself from what has been told
     in this interview:

     //”Suit boot is definitely more acceptable
     than suitcase.”//

     ( so he has no regret about suit-buit
     or 13.5 lakh coat.)

     //his Cabinet decided today to promulgate the Land Acquisition Ordinance for the third time, Prime Minister Narendra Modi has said that the legislation is not “a matter of life or death for me” //

     (If he is not that serious, why an Ordinance should
     be brought for a third successive time instead of
     either getting it passed in the parliament or
     dropping it in the first stage itself on seeing the protest.?)

     // “We are committed to OROP, but we are in
     consultation with defence personnel regarding the definition of OROP.//

     (consultation for how many months ? years ?
     A govt. that supposed to be against the red tapism,
     could not take a decision even after 17 months .?

     • ravi சொல்கிறார்:

      True Sir..
      //A govt. that supposed to be against the red tapism,
      could not take a decision even after 17 months .//
      in my place ,a over bridge is being built by our state government for 4 years !! no completion in sight !!

     • LVISS சொல்கிறார்:

      Mr Sampathkumar Where did you get the price of the suit from — The man who gave it denied such an amount was incurred —Why this misinformation is being persisted with -And you know what happened to it and where the money from the auction of the coat Rs 4/ crores went –For your information Mr Modi gave Rs 21 lacs from personal savings for the education of govt staff children before he came to Delhi to assume charge as PM–

      http://www.ndtv.com/elections-news/narendra-modis-parting-gift-rs-21-lakh-for-educating-gujarat-staffs-daughters-563633
      I leave it to you to beleive it or not —
      The states approached the centre to amend the Land Act of 2013 –Now the states have been given the freedom to enact their own laws – Rajasthan and Gujarat I understand have finalised land bills –Definitely other states will follow suit—
      OROP has been hanging fire since 1970s –The Defence MInister has now announced that OROP notification will be made before Deepavali –The Bihar elections stood in the way of implementation –What was pending for 40 yrs is seeing a progress in 17 months —

    • Sampathkumar, K. சொல்கிறார்:

     Mr.LVISS,

     // NITI Aayog Vice-Chairman Arvind Panagariya has advised states to follow Tamil Nadu model for framing land acqisition laws as per their needs, while terming the existing 2013 Act as a “bit draconian”.

     “Tamil Nadu has a different Act or an amended Act in place since January 5, 2015. It has been almost 7-8 months, very few people knew about it. Tamil Nadu has, in fact, amended the 2013 Act (Land Act) and it applies to their state,” Panagariya said in an interview to CNBC TV18.

     He also said that the Act got the Presidential assent and “other states could follow the same strategy”.//

     Why this has not occured to the central govt.
     earlier when it brought the Ordinance 3 times
     repeatedly inspite of the nation wide opposition.?

     modiji govt. must have declared in the beginning
     itself that states can have their own amended
     version of 2013 act.

     This is a late realisation – after understanding the
     mood of the nation that the Land Law from bjp
     govt. is not going to be passed.

     Mr.LVISS, a suggesion to you. Please stop
     writing in this blog supporting your bjp masters.
     Readers of this blog are well informed and
     you need not try to educate them.

 3. ரிஷி சொல்கிறார்:

  நீண்ட நாட்களுக்குப் பிறகு பின்னூட்டமிடுகிறேன். முதற்கண் மன்னிக்க 🙂

  மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடகர் கோவன் கைது பற்றிய உங்கள் விமர்சனத்தைக் காண விரும்புகிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ரிஷி,

   என்னை தர்மசங்கடத்தில் சிக்க வைக்க முடியுமா என்று
   காத்திருந்து, பார்த்திருந்து – நிதானமாக வந்திருக்கிறீர்கள்
   என்று நினைக்கிறேன்.

   கருத்து சுதந்திரத்திற்கு நான் எப்போதுமே ஆதரவானவன்
   இதை நீங்கள் ஏற்பீர்கள் என்றே நம்புகிறேன்.

   எவ்வளவு கோபமாக எழுதினாலும்,
   ஆபாசத்திற்கும், அசிங்கத்திற்கும்
   இந்த தளத்திலேயே
   நான் எப்போதும் இடம் கொடுப்பதில்லை….
   இவ்வளவு நாட்களாக
   இந்த வலைத்தளத்திற்கு வருகை தரும் உங்களுக்கு
   அதுவும் தெரியும்.

   பாடல் வரிகளில் பெரிதாக பிரச்சினை இல்லை….
   நீங்கள் வீடியோவை நிச்சயம் பார்த்திருப்பீர்கள்…
   அந்த ஆபாச காட்சிகளை, புகைப்பட இணைப்புகளை –
   நீங்கள் ஏற்கிறீர்களா …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ரிஷி சொல்கிறார்:

    நான் தினந்தோறும் இங்கே வருகிறேன் ஐயா. பின்னூட்டம் தான் இடுவதில்லை. அவதானிப்பை மட்டுமே நிகழ்த்தி வருகிறேன் அனைத்துத் தளங்களிலும். நீங்கள் விமரிசித்திருந்தாலும் என்னிடமிருந்து பதில் வந்திருக்காது. அவதானிப்பு மட்டுமே இருந்திருக்கும். விமர்சனம் இல்லாததால் அதை வாய்விட்டுக் கேட்டேன். அவ்வளவே.

    //அந்த ஆபாச காட்சிகளை, புகைப்பட இணைப்புகளை –
    நீங்கள் ஏற்கிறீர்களா …?//

    பிரச்சினையை இப்படி சுருக்கிப் பார்ப்பதை நான் விரும்புவதில்லை. விமரிசனம் அப்படி சுருங்கக்கூடாது என விரும்புகிறேன்.

   • LVISS சொல்கிறார்:

    Mr K M the govt is doing many good things for the poor people –Why you are not writing about them —

    • Sampathkumar, K. சொல்கிறார்:

     Mr.LVISS,

     the bjp govt. is indulging in many bad activities that destoy the
     federal structure of this nation, disturbs the social harmony and
     creating enemity and hatred within various social groups/communities,
     withdrawing many of the facilities/concessions
     which people are already enjoying for years.
     Has Mr.Modi even uttered a single word about the
     plight of tamil fishermen or kaaviri problem, ?
     Is Tamils are untouchables for him because bjp has no place here ?
     Mr.LVIS, why don’t you accept any of these things
     and simply putting jalra to bjp govt. ? Are you a hardcore member
     or office bearer of bjp ?

     • ravi சொல்கிறார்:

      Mr.Sampath…
      //
      withdrawing many of the facilities/concessions
      which people are already enjoying for years.
      //
      facilities and concessions are need based ..its not a blank pay cheque…
      //
      corporates were enjoying free coal mines .. now it is through auctions .. even they are crying hoarse !!
      ///
      the bjp govt. is indulging in many bad activities that destoy the federal structure of this nation, disturbs the social harmony and creating enemity and hatred within various social groups/communities,
      ///
      far more nonsense is being committed by our state governments ……when mu.ka made a comment – rama is a drunkard ..

      Kaveri problem – my doubt is , whether Tamil nadu government is caring about kaveri .. with rampant sand mining in kaveri bed .. and disposing municipal waste and sewage in kaveri by bulk of towns near kaveri river … State government has virtually washed off its hands
      Sir, when there can be admk / dmk jalras , even pappu has good no of jalras.. let LVIS be bjp jalra… when terrorists/murderers/rapists go scot free in this nation !! whats the big fuss in LVIS being BJP jalra !!!!

      The only valid argument is “plight of tamil fishermen” – True , Nothing is happening…we need to collectively raise our voice …

     • LVISS சொல்கிறார்:

      Mr Sampath I will touch upon two issues here — The Kaveri issue may not find an amicable solution in the near future because of its complexity —
      Now about those Indians in foreign jails – About 6000 including fishermen are in various foreign jails in 72 countries — Will give you some figures from the list I have which are of interest to us –Bangladesh 223. Pakistan 352 Srilanka 73 Those who are in Pakistan,from Gujarat mostly , and Srilanka,from T Nadu and in Bangladesh are mostly fishermen —

 4. kalakarthik சொல்கிறார்:

  நான் தினந்தோறும் இங்கே வருகிறேன் ஐயா. பின்னூட்டம் தான் இடுவதில்லை.
  i too.
  kalakarthik

 5. today.and.me சொல்கிறார்:

  நண்பர்கள் அப்படியே

  ‘மக்கள் கலை இலக்கியக் கழகம்’ த்தின் தலைவர் கைதுசெய்யப்பட்ட செய்தி 24 மணிநேரங்களுக்குள்ளாகவே பாகிஸ்தான் செய்தி ஊடகங்களில் பாடகர் கைது என்று தலைப்புசெய்திகளுக்குள் இடம்பெற்றது எப்படி என்பது குறித்தும்

  அதற்கான பொருளாதார-மற்ற உதவிகள்- தொடர்புகள் குறித்தும்

  அவர் எதற்காகக் கைதுசெய்யப்பட்டாரோ அதைத் திரித்து
  டாஸ்மாக் எதிர்ப்பு பாடல் பாடிய கோவன் என்று அடையாளங்காண உதவிய பாடலை, அவர் அதைப் பாடினார் என்பதற்காக கைதுசெய்யப்பட்டார் என்று சென்ஷேசனல் நியூஸ் ஆக ஒளிபரப்பிய அனைத்து விபசார ஊடகங்களுக்கும் இந்தச் செய்தியால் என்ன லாபம் என்பது குறித்தும்

  அதே பாடலை திரும்பவும் விதண்டாவாதத்திற்காக பாடிய வைகோவை – பாடிய குற்றத்திற்காக ஏன் கைதுசெய்யமுடியவில்லை என்பதைக் குறித்தும்

  கருத்து சுதந்திரத்தை எதிர்த்தெல்லாம் யாரும் யாரையும் கைது செய்யமுடியாது என்பதையும்

  கொஞ்சம் யோசித்தால் தேவலை.

  ஏன்? ‘வக்கீல் மகனுக்கு’ எது குற்றமாகக் கருதப்படலாம் என்று தெரியாதா? அல்லது வக்கீலுக்கு படிக்கவைத்த ‘தெருப்பாடகத் தகப்பனுக்கு’ தெரியாதா? இது குற்றம் என்று.

  பாடகர் சென்றமாதம் கோவையில் நடந்த ஒரு சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய மனிதர். இப்போது வெளியில் வந்ததால் அரெஸ்ட் அவ்வளவுதான்.

  வெறும் பாடகர் என்றால் யாருக்கு அதனால் என்ன லாபம்?

  இப்படி இப்படி அடையாளப்படுத்தினால்தான் மற்ற கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக்காள்ள முடியும்………… அவ்வளவுதான் இந்தப் பிரச்சினை.

  அரசியல், அரசாங்கம், சட்டம், நீதித்துறை குறித்தெல்லாம் கொஞ்சம் படியுங்கள் என்றால் மக்கள் கேட்கமாட்டேன் என்கிறார்கள்…

  ஆனால் உணர்ச்சிப் பொங்கல் மட்டும் வைப்பேன் என்கிறார்கள்.

  பரவாயில்லை. இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் மாறும் என்ற நம்பிக்கை தானே வாழ்க்கை.

 6. paamaran சொல்கிறார்:

  மக்களின் கடைசி நம்பிக்கை ..? என்று பரவலாக பேசபடுகின்ற இடம் தற்போது பல வினோதமான உத்திரவுகளை போடுவதும் — முக்கய குற்றங்களுக்கு கூட தடை கொடுப்பதும் … தேவையில்லாமல் எதற்க்கெடுத்தாலும் ” சாலைமறியல் ” என்று பொதுமக்களுக்கு இடஞ்சல் ஏற்படுத்துவதை கண்டு கொள்ளாமல் இருப்பதும் சரியா ..? …. சிகிச்சை பலனின்றி மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழைப்புக்கு … மருத்துவர்களை தாக்குவதும் … அரசை குறை கூறுவதும் ….. சடலத்தை வாங்காமல் போராட்டம் செய்வதும் அதற்கு அரசியல் கட்சிகள் ஆதரவாக குரல் கொடுப்பதும் …இன்னும் பலவும் தினமும் நடப்பது ஏன் … அய்யா …. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரே காரணம் தான் –

   இன்னும் ஐந்து மாதங்களில் வரவிருக்கும் தேர்தல்…!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.