திரு.ராம், திரு.நாராயணன் – “ஆடு” நனைகிறதே என்று கவலைப்பட்ட “ஓநாய்கள்” கதை எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்….!!!

frontline meeting

வன்முறையில் எமக்கு நம்பிக்கை இல்லை… என்பதை
முதலிலேயே தெளிவுபடுத்தி விடுகிறேன்…..ஏனெனில் –
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்றும்,
“ஊழ்வினை உறுத்து வந்து உருட்டும்” என்றும் ஏற்கெனவே
எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.

கொலைகாரனுக்கு வழிகாட்டியவரும், துணை போனவரும்
இணை சேர்ந்து சென்னையில் கூட்டம் போடுகிறார்கள்…

எதற்கு ..?

இங்கு இன்னமும் அகதிகளாக இருக்கும் இலங்கைத்தமிழர்கள் விரைவில் இலங்கை திரும்ப
இவர்கள் வழி செய்கிறார்களாம் –
வக்காலத்து வாங்குகிறார்களாம்…

கடந்த ஒன்பது மாதங்களாக தமிழ் அகதிகளுடன்,
17 ரவுண்டுகள் பேச்சுவார்த்தை நிகழ்த்தினராம் –
இங்கிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளை
மீண்டும் தாயகம் திரும்பச் செல்லுமாறு அவர்களை
வலியுறுத்தவும்….. எத்தகைய சூழ்நிலையில் அவர்கள்
திரும்பக்கூடும் என்பதை அறியவும்…!!!

குடிஇருக்க தங்களது பழைய இடம், பாதுகாப்பு, கல்வி,
வேலை வாய்ப்பு, பொது மன்னிப்பு, மற்றும் மீண்டும்
தங்களுக்கு இத்தகைய நிலை ஏற்படாமல் இருக்க
இந்திய அரசிடமிருந்து உத்திரவாதம் – இவை உறுதி
செய்யப்பட்டாலன்றி, தாங்கள் திரும்புவதற்கில்லை
என்கிற தங்களது நிலையை அவர்கள் தெளிவுபடுத்தி
விட்டார்கள்.

( இப்போதுள்ள சூழ்நிலையிலேயே
திரும்பப்போக விருப்பம் தெரிவித்த எட்டாயிரத்து
சொச்சம் பேர், ஏற்கெனவே தாயகத்திற்கு திருப்பி
அனுப்பப்பட்டு விட்டனர். ) இப்போது இவர்கள் முயற்சி
செய்வது இன்னமும் இங்கேயே அகதிகள் முகாமில்
இருக்கும் எண்பதாயிரத்து சொச்சம் பேரையும் விரட்ட….!

முதல் கேள்வி – இவர்களுக்கு ஏன் இதில் இவ்வளவு அக்கரை ?
முதலில், இலங்கையில் ஏற்கெனவே உள்ள தமிழர்களுக்கு இருக்க இடம், கல்வி, பாதுகாப்பு, வேலை வாய்ப்பு
ஆகியவை உறுதி செய்யப்பட்டு விட்டனவா …?
அவர்களின் காணியை/ நிலத்தை இன்னமும் ஆக்கிரமித்துக்
கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்தை திரும்பப் போகச்
செய்ய இவர்கள் இதுவரை எதாவது செய்திருக்கிறார்களா ..?

இம்மக்களின் நலனில் அக்கரை உள்ளவர்கள் நியாயமாக
என்ன செய்திருக்க வேண்டும்….? ஒன்று இந்திய அரசுடன்
பேச்சு வார்த்தை நடத்தி, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு
காண முயற்சிக்க வேண்டும்… அல்லது அவர்களில் –
வேண்டுவோர்க்கு, இங்கேயே தற்காலிக/நிரந்தர குடியுரிமை
பெற்றுத்தர முயற்சி செய்திருக்க வேண்டும். இங்கிருக்கும்
அகதிகளுக்கு மேற்கொண்டு வசதிகளை பெற்றுத்தர முயற்சி
செய்திருக்க வேண்டும்.

இவை எதையும் செய்யாமல், லட்சக்கணக்கான தமிழர்களின் படுகொலைக்கு காரணமான – கொலைபாதகச் செயலில் ஈடுபட்ட ராஜபக்சே அரசுக்கு வழிகாட்டியாக இருந்து
துணை புரிந்தவர்களை வைத்து, அவர்களுக்குத் துணைபோய்,
ராஜபக்சே கையால் விருது வாங்கியவர்கள் –
சம்பந்தமே இல்லாமல் சென்னையில் கூட்டம்
நடத்துவது எந்த விதத்தில் பொருந்தும்….?
இது யாரை
ஏமாற்ற …? எஞ்சி இருப்பவர்களை திரும்ப அனுப்ப
இவர்கள் முயற்சிப்பது யார் நலம் கருதி …?

தமிழ் அகதிகள் நலம் கருதியா …?
” ஆடு நனைகிறதே என்று ஓநாய்கள் கவலைப்பட்ட ”
கதை நம் மக்களுக்கு ஏற்கெனவே தெரியும்…
எனவே, இவர்கள் அதை இங்கே அரங்கேற்ற
முயற்சிப்பது அறிவீனம் என்பதை –
இனியாவது புரிந்து கொண்டால் தேவலை ……!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to திரு.ராம், திரு.நாராயணன் – “ஆடு” நனைகிறதே என்று கவலைப்பட்ட “ஓநாய்கள்” கதை எங்களுக்கு ஏற்கெனவே தெரியும்….!!!

 1. paamaran சொல்கிறார்:

  // தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: ராஜபட்ச….
  First Published : 22 May 2009 09:08 PM IST
  கொழும்பு, மே 21: இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பதற்கு உரிய சட்ட திருத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்…….. பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலர் சிவசங்கர் மேனனை இலங்கைக்கு அனுப்பிவைத்தார்………. இலங்கை புறப்படும் முன்பாக, தமிழக முதல்வர் கருணாநிதியை தில்லியில் எம்.கே. நாராயணன் சந்தித்து ஆலோசனை நடத்தினார்…….. விரைவிலேயே நிவாரண முகாம்கள் கலைக்கப்பட்டு அங்குள்ள மக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குத் திரும்ப நடவடிக்கை எடுப்பதாக அதிபர் உறுதியளித்ததாகவும் அவர் கூறினார்….. தில்லி திரும்பும் முன் அதிபர் ராஜபட்சவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியிடம், நாராயணன் விளக்குவார் எனத் தெரிகிறது // …… !!! இது தினமணியில் 2009 — மே மாதம் — 22 — ம் தேதி வந்த செய்தியின் சில பகுதிகள் … இந்த நாராயணன் அப்போது இலங்கை பிரச்சனையில் எதை செய்வதாக இருந்தாலும் ” உண்ணாவிரத நாடக புகழ் ” கருணாநிதியை கேட்காமல் செய்தது இல்லை என்பதும் —- அவ்வப்போது இலங்கைக்கு போவதும் — வருவதுமாக இருந்தார்களே தவிர வேறொன்றையும் கிழிக்கவில்லை ….. பல ‘ ஓநாய்கள் ” ஒன்று கூடி இலங்கையில் இருந்த தமிழர்களின் ரத்தத்தை குடித்துவிட்டன …. இன்னும் தாகம் அடங்காமல் இங்கே ‘ அகதிகளாக உள்ள இலங்கை தமிழர்களின் ” ரத்தத்தை குடிக்க அலைகின்றன …. இதில் வெளியே தெரிகிற ராம் — நாராயணன் தவிர வெளியே தெரியாத பல ஓநாய்கள் அடங்கி இருக்கின்றன —- முதலில் இந்த ஓநாய்களை வைத்து ” ரியாக் ஷன் ” எப்படி என்று தெரிந்துகொள்ள ஒரு முயற்சி யாக கூட இருக்கலாமோ ….? தற்போதைய மத்திய அரசும் இதுவரை அங்கே உள்ளவர்களுக்கும் — இங்கே உள்ள இலங்கை தமிழர்களுக்கும் ஏதாவது செய்து இருக்கிறார்களா …. அவர்கள் சொந்த மண்ணில் வாழ ….?

 2. seshan சொல்கிறார்:

  dear all

  chappel honour to narayanan video if avl. pl share with us……………kana kan kodi vendum….

 3. எழில் சொல்கிறார்:

  ‘செருப்படி’ நாராயணன் பற்றியும், அவர் உட்பட்ட ‘கேரள மாஃபியா’ பற்றியும், விடுதலை புலிகளுக்கு எதிரான அவர் வன்மம் பற்றியும் குறிப்பிடும் விக்கி லீக்ஸ்…
  http://www.ibnlive.com/news/india/wikileaks-narayanan-in-pmos-keralite-mafia-363248.html

  இப்படி பட்ட ஒருவர் இலங்கை தமிழ் அகதிகளின் நலன் கருதியா இப்படி ஒரு காரியத்தில் இறங்கியிருப்பார்?!

  ராம் பற்றி சொல்லவே தேவையில்லை. அவர் ஆசிரியராக இருந்த காலத்தில் ‘இந்து’ பத்திரிகையின் உரிமையாளர் ராஜபக்சேவா என்று ஐயப்படும் வகையில் ராஜபக்சேவுக்கு காவடி தூக்கினார். அதற்காக அவருக்கு வீசப்பட்ட இறைச்சி துண்டு தான் ‘இலங்கை நாட்டுக்காக அதிஉயர் சேவை’க்கான விருது ‘ஸ்ரீ லங்கா ரத்னா’.

  https://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Rathna

  ஆடு நனைகிறதே….

 4. drkgp சொல்கிறார்:

  Can the honour meted out to BJP in Bihar be taken
  as a stern warning or much more than that?

 5. paamaran சொல்கிறார்:

  பீகார் தேர்தல் பிரசாரத்தித்தில் மோடிஜி அவர்கள் ஒரு லட்சத்தி இருபத்தி ஐந்தாயிரம் கோடி வளர்ச்சி நிதி என்றெல்லாம் ” பீலா ” விட்டார் … லாலு — நிதிஷ் போன்றவர்களை கொச்சையாக திட்டி தீர்த்தார் …. இவரை விட ஒருபடி மேலே போய் தேர்தலில் லாலு கூட்டணி வெற்றிபெற்றால் ” பாகிஸ்தானில் வெடி வெடிக்கும் ” என்று பிரிவினை அரசியல் நடத்தி பார்த்தார் அமித் ஷா —- ஆனால் இந்த ” டுபாக்கூர் பருப்பு ” எதுவும் வேகாமல் வந்துள்ள ” பீகார் தேர்தல் ” முடிவுகள் பற்றி …… ?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.