திருவாளர் கமல் நடித்தால் ரசிக்கலாம் – ஆனால் உளறிக் கொட்டினால் …?

kamal birth day photo

தனது ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் விளம்பரம்
தேடிக்கொள்ள, பரபரப்பாக எதாவது பிரச்சினையை
கிளப்புவது திரு.கமல்ஹாசனுக்கு வாடிக்கையாகி விட்டது….

நாளை அவரது புதிய படம் வெளியாவதால், வழக்கப்படி இப்போது
தனது 61-வது பிறந்தநாள் விழாவில் கன்னாபின்னாவென்று
நிறைய உளறிக்கொட்டி சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறார்…

நேற்று முன்தினம் அவர் தனது ரசிகர் கூட்டத்தில் கொட்டிய முத்துக்களில் –

சில கீழே –

– நான் நாத்திகன் அல்ல – பகுத்தறிவாளன்.
எந்த அரசியலும் என் பகுத்தறிவுக்கு காரணம் அல்ல…

( நம்புங்கள் – அத்தனையும் சொந்தபுத்தி…! )

– நாளையே யாராவது ஒரு சாமியார் அதீத சக்தி படைத்த
ஒரு தெய்வத்தை என் முன் அழைத்து வந்து நிறுத்தினாலும்,
நான் அவரை வணங்கி விட மாட்டேன். வெறுமனே கைகுலுக்கி
வரவேற்பேன்.

– இத்தனை நாளாக நீங்கள் எங்கே இருந்தீர்கள் என்று
அவரிடம் கேட்பேன்… இங்கு “சுனாமி” வந்ததே நீங்கள் ஏன் அதை
தடுக்கவில்லை என்று கேட்பேன். எங்கள் மக்களை ஏன்
ஏழைகளாக வைத்திருக்கிறீர்கள் என்று கேட்பேன்…!!!!!!!!!!!!!!!!!!

ஒரு பெண்மணி எனக்கு கிருஷ்ணர் சிலையை பிறந்த நாள் பரிசாக அளித்தார். கடவுள் சிலையால் என்ன பயன். அதை உருக்கி பணமாக்கினாலாவது எனக்கு பயன்படும்…!!!

– சகிப்புத்தன்மையை பற்றி பேசுகிறார்கள். நான் வாழும் இடத்தை சுற்றிலும் கோயில்களும், மசூதிகளும், சர்ச்சுகளும் இருக்கின்றன.

இத்தனை நாட்களாக இந்த இடங்களிலிருந்து வரும் மந்திர
ஒலிகளையும், ஐயப்பா கோஷங்களையும், மசூதிகளிலிருந்து
வரும் ( தொழுகை அழைப்பு ) ஓசைகளையும் நான் பொறுமையோடு சகித்துக் கொண்டிருப்பதே ஒரு பகுத்தறிவாளனின் சகிப்புத்தன்மைக்கு எடுத்துக் காட்டு.

– என் பிறந்த நாளும், என் தந்தையின் இறந்த நாளும் ஒரே தினத்தில் வருகின்றன. நான் இரண்டையும் கொண்டாடுகிறேன். ( தந்தையின் இறந்த தினத்தை கொண்டாடுகிறாராம்…! )

– நான் முன்னர் எல்லாம் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்தேன்.
இப்போது விட்டு விட்டேன். என்னை விட உருவத்தில் சிறிய மிருகங்களை மட்டும் தான் சாப்பிடுவது என்று வைத்திருக்கிறேன்.

( இறைச்சி சாப்பிடுவதென்றால் – அப்படியே முழுவதுமாக
விழுங்குவது என்று அர்த்தமா என்ன ? துண்டு துண்டாக்கி
சாப்பிடுவதில்லையா ..? பெரியதாக இருந்தாலென்ன –
சிறியதாக இருந்தாலென்ன ? அப்படியானால், ஒட்டக இறைச்சி
சாப்பிடுபவர்கள் எல்லாம் அறிவிலிகளா …? ஒரு வேளை இவர்
இந்த சப்ஜெக்டை விஸ்வரூபம் 2-வது பாகத்திற்காக
துவக்கி வைத்திருப்பாரோ…. ? )

– இன்னும் கொஞ்ச காலம் கழித்து பூச்சிகளை சாப்பிடும் நிலை
வந்தாலும் வரலாம்… நீங்கள் வேண்டுமானால் பொறுத்து பாருங்கள் –
30 வருடம் கழித்து பூச்சி உணவு ஒரு பெரிய இண்டஸ்ட்ரியாக உருவெடுக்கப்போகிறது…!

– எனக்கு கிடைத்த விருதை நான் திருப்பிக் கொடுக்க மாட்டேன். இதை அரசாங்கம் எனக்கு கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் சேர்ந்து எனக்கு கொடுத்திருக்கிறார்கள்.

(12 அறிஞர்கள் இவருக்கு நேரிடையாக எதையும் தூக்கி
கொடுத்து விடவில்லை. அவர்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை மட்டுமே செய்கிறார்கள். அப்போதைய நாளில் எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ, அந்த அரசின் அமைச்சரவை அதை ஏற்று ஒப்புதல் அளித்ததன் பேரில் ஜனாதிபதியால் தான், விருது அளிக்கப்படுகிறது…)

– நான் அரசியலுக்கு வருவேனா என்று கேட்கிறார்கள்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை, (தேர்தலில் ஓட்டு போடும்போது ) என் விரலில் வைக்கப்படும் அந்த கறை ஒன்று போதும்;
வேறு எந்த கறையும் வேண்டாம்.

(நாமெல்லாம் – ஓட்டு போடுவதை நமது உரிமையாகவும்,
அவசியமான கடமையாகவும், பெருமையாகவும் நினைக்கிறோம்.
ஆனால் – இவருக்கு அது “கறை”….!!! )

பேச்சின் இடையே, கடவுள் நம்பிக்கை உடையவர்களை
இவர் இப்படி வர்ணிக்கிறார் –

” நெற்றியில் பொட்டு இருந்தாலும்,
தலையில் தொப்பி இருந்தாலும்,
கழுத்தில் சிலுவை இருந்தாலும்,
வேறு பல குற்ற உணர்வுகள் தொங்கினாலும்…..”

இவர் பேசுவதை எல்லாம் எப்படி வகைப்படுத்துவது …?

அறியாமை என்றா …?
அரை வேக்காடு என்றா….?
தன்னைத்தானே அதிபுத்திசாலி என்று
நினைத்துக் கொண்டிருக்கும் சாமர்த்தியசாலி என்றா..?
அவ்வப்போது சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள
எது தேவையோ – அதை பேசுவது என்கிற வியாபாரி என்றா …?

பேச்சின் இடையே சொல்கிறார் – ” இதையெல்லாம்
நான் ஏன் இந்த பிறந்தநாள் விழாவின்போது பேசுகிறேன்
என்று நினைக்கிறீர்களா…?
என் நேர்மையை பற்றி சிலர் சந்தேகம்
எழுப்புவதால் தான் பேசுகிறேன்.”

திரு.கமல்ஹாசன் அவர்கள் தன் நேர்மையை நிரூபிக்க
இவ்வளவு கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை –

கீழ்க்கண்ட விவரங்களை மட்டும் சொன்னாலே போதுமானது….

1) போதீஸ் விளம்பரத்திற்கு சம்பளமாக 16 கோடி வாங்கினாரா
இல்லையா? இல்லையென்றால் எவ்வளவு வாங்கினார் …?

2) தான் ஏற்கெனவே அறிவித்தது போல் அந்த விளம்பரத்திற்கான
சம்பளப்பணம், நற்பணிக்கு “கொடை”யாக கொடுக்கப்பட்டு
விட்டதா – இல்லையா ? ஆம் என்றால் – எந்த நிறுவனத்திற்கு …?

3) கமல் பங்கு கொண்டு நடத்தும் “பெற்றால் தான் பிள்ளையா”
தொண்டு நிறுவனத்திற்கு செய்திகளில் வெளிவந்தது போல்
கமல் நன்கொடை கொடுத்தாரா இல்லையா ?

4) அந்த செய்தியும், சர்டிபிகேட்டும் “போர்ஜரி” (பொய்) என்றால்,
அதை வெளியிட்டவர் யார் என்று கண்டுபிடிக்கப்பட என்ன
முயற்சி செய்யப்பட்டது ? குறைந்த பட்சம் போலீசில்
புகாராவது கொடுக்கப்பட்டதா …?

இந்த கேள்விளுக்கு விளக்கம் சொன்னாலே போதும்.
திரு.கமல்ஹாசனின் நேர்மையைப்பற்றி யாரும் எந்தவித
சந்தேகமும் எழுப்ப மாட்டார்கள்…!!!

விரைவில் திரு.கமல்ஹாசன் இதற்கான விளக்கங்களை அளித்து, தன்மேலுள்ள அழுக்கைப் போக்கி, தன்னை அப்பழுக்கு அற்றவராக ஆக்கிக் கொள்வாரென்று நம்புகிறோம்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

19 Responses to திருவாளர் கமல் நடித்தால் ரசிக்கலாம் – ஆனால் உளறிக் கொட்டினால் …?

 1. ஆவி சொல்கிறார்:

  தமிழ் நாட்டில் நடிகர்கள் தங்களை கடவுளின் அவதாரம் என எண்ணுகிறார்கள். இது அவர்கள் தவறல்ல. பால் அபிசேகம் செய்யும் அறியாதவர்கள் செய்யும் செயல்கள் காரணம். இது நாள் வரை தத்தி நடந்து வந்த அரைவேக்காட்டை,இன்று நடிகர்சங்கம் குருவாக ஆக்கிய நிலையில் அரைவேக்காட்டின் அட்டகாசம் முழுவேக்காடாக விரைவில் மாறும். சமீப காலங்களில் வட நாட்டு சாமியார்களின் ஆசீர்வாதம் பெற்ற அவர் விரைவில் அரசியலில் வந்தால் ஆச்சரியப்பட முடியாது.

  அடுத்த முதல்வர் வேட்பாளருக்கு வாழ்த்துகள்.

 2. KuMaR சொல்கிறார்:

  அன்பரே. . .
  இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
  வாழ்க வளமுடன்..

 3. Sundar சொல்கிறார்:

  He is the no.1 kalai koothadi….. He doesnt have any education but he is getting everything just like that thatswhy giving a loose talk…………………….In Tamilnadu only if anyone get Mike or Stage they can say anything…….. just ignore…. Kamal means one actor he is acting for the money for he paid for….. Just IGNORE him….Theethum Nandrum pirar thara vaaraaa……..

 4. Ganpat சொல்கிறார்:

  கா.மை ஜி,
  உங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் –

   மற்றும் இந்த வலைத்தளத்து நண்பர்கள் அனைவருக்கும்
   எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

   -காவிரிமைந்தன்

 5. kalakarthik சொல்கிறார்:

  a bundle of contradictions
  kalakarthik
  karthik amma

 6. paamaran சொல்கிறார்:

  கமல் ஹாசன் …. ? எப்போதுமே பல கேள்விகளுக்கு உட்படுத்த வேண்டிய பலே ஆள் … ! இடத்திற்கு தகுந்த மாதிரி கலர் மாற்றி கொள்ளும் அவதாரம் …. திடிரென்று சாமியார்களை சந்திப்பார் … பகுத்தறிவாளன் என்பார் … இவர் படத்துக்கு இடைஞ்சல் என்றால் வெளியாட்டில் குடியேறி விடுவேன் என்பார் .. வைரமுத்துவின் விழாக்களில் வேறு கருத்து கூறுவார் …. ராஜ் தாக்கரை போய் பார்ப்பார் …. அரசியலுக்கு வர மாட்டேன் என்பார் … துடைப்பத்தை கையில் பிடித்து தூய்மை என்பார் … மாட்டுக்கறி சாப்பிடலாம் என்பார் இந்த அய்யர் … இதுபோல் பல தசாதவாரங்களுக்கு மேலேயே … ” அவதாரங்கள் ” எடுப்பார் … அவர் பேசுவது அவருக்கே குழப்பமாக இல்லையா … என்று ராமகோபாலன் கேட்பது சரிதானே …? திடீர் மழையாலும் — அதிக விலையில் பட்டாசுகள் விற்பதாலும் — வெடி வெடிக்க முடியாமல் உள்ள நம் நண்பர்கள் பலரும் ” http //pyrodeal .com /gift ” என்கின்ற லிங்க் கிளிக் செய்து தொட்ட இடமெல்லாம் ” வான வேடிக்கை ” நடத்தி தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட வேண்டுகிறேன் …!!!

 7. நடிகர்கள் எதற்காக அறிக்கை விடுகின்றார்கள் அதை கேட்பதற்க்கு மைக்கைப் பிடித்துக்கொண்டு நான்கு பேர் கூடி நிற்பதால்தானே… ஒருபயல் பக்கத்தில் நிற்கவில்லை என்றால் எந்தப்பயலும் தனியாக பேசிக்கொண்டு நிற்க மாட்டான் நடிகர்களை குறை சொல்வதைவிட அவர்களின் கைத்தடிகளுக்கு துபாய் விசா கொடுத்து கன்ஸ்ட்ரக்சன்ஸ் வேலையில் ஆறு மாதம் நிறுத்தினால் போதும் வாழ்க்கை என்றால் என்ன என்பது விளங்கும்.
  நாடும், வீடும் உருப்படும்.

  தங்களுக்கும், தங்களது குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள் ஐயா.- கில்லர்ஜி

  • today.and.me சொல்கிறார்:

   //கைத்தடிகளுக்கு துபாய் விசா கொடுத்து கன்ஸ்ட்ரக்சன்ஸ் வேலையில் ஆறு மாதம் நிறுத்தினால் போதும் வாழ்க்கை என்றால் என்ன//

   செம்ம…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கில்லர்ஜி.

   உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும்,

   மற்றும் அனைத்து வலைத்தள நண்பர்களுக்கும்,
   என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

 8. drkgp சொல்கிறார்:

  தேவகோட்டை சொல்வதுபோல் கைத்தடிகளை ஒதுக்கி வைத்தாலே போதும்.
  தேவலோகத்தில் சஞ்சரிப்பதாக கற்பனையில் வாழும் இந்த போலி அரிதார அவதாரங்கள்
  நிஜ உலகிற்கு வந்துவிடுவர். அதிமேதாவி என்ற நினைப்பு அழியும். உளறல் நிற்கும்.

 9. Izzath சொல்கிறார்:

  Dear Sir,
  These actors are like JOKERS.
  They are Not Scientist or Nobel Prize winners or Revolutionary Leaders. Acting is their profession let them act and go. I am not clear why they give BIG lectures??Our people should understand this.
  We have to keep them simply as Jokers and we the people need to IGNORE them.
  Thank you for your article and it is Meaningful. I read your pages. PLease continue writing.

  Sorry for writing in English. I have Font issues.
  Regards
  Izzath

 10. புது வசந்தம் சொல்கிறார்:

  அனைத்து நண்பர்களுக்கும், இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

  ஒரு வேண்டுகோள் : கமல், வைரமுத்து போன்றோர் சுய விளம்பர பிரியர்கள்..தங்களின் இருப்பை காட்டிகொள்ள ஏதாவது அவ்வப்போது உளறுவார்கள். இன்றைய விஜய் டிவியில் ஒரு சுய விளம்பரம் பார்த்திருப்பீர்கள்.

 11. jojan Paris சொல்கிறார்:

  //30 வருடம் கழித்து பூச்சி உணவு ஒரு பெரிய இண்டஸ்ட்ரியாக உருவெடுக்கப்போகிறது…!// இவருக்குத் தெரியவில்லையோ ஆனால் ஏற்கனவே இந்தியாவில் கறையான், நத்தை உண்கிறார்கள்.
  உலகில் பலபாகங்களில் பூச்சிகள் பல்லாயிரம் ஆண்டுகளாக உணவாக மனிதன் உண்கிறான். இவை யூரியூப்பில் கொட்டிக்கிடக்கின்றன.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.