மோடிஜிக்கு எதிராக வெகுண்டெழுந்த அட்வானிஜி ……..!

.

advaniji and modiji

பீஹார் தேர்தல் அணுகுமுறைகளை, செயல்பாடுகளை –
பாஜக சார்பில் முன்னின்று வழி வகுத்தவர்கள் நடத்தியவர்கள்
யார் யார்…?

பாஜக தலைவர் அமீத் ஷா,
திருவாளர் மோடி,
திருவாளர் அருண் ஜெட்லி,
ஆர்.எஸ்.எஸ்-லிருந்து பாஜக வுக்கு அனுப்பப்பட்டுள்ள
ராம் மாதவ் ஆகியோரே.

கூட்டணி முடிவுகள், வேட்பாளர்கள் தேர்வு, பிரச்சாரயுத்திகள் –
அத்தனையையும் இவர்களே தீர்மானம் செய்தனர்.

பாஜகவுக்கு – வாஜ்பாய்-அத்வானி காலத்திலிருந்த
மதிப்பு, மரியாதை, நற்பெயர் அத்தனையும் இவர்களது
கேவலமான அணுகுமுறையால் நாசமானது.

வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார்கள் –
ஒரு மாநிலத்தின் முதல்வரை, பிரதமராகப்பட்டவர்
அந்த மாநிலத்திற்கே சென்று கண்டபடி ஏசினார்…
மந்திரவாதி, காட்டாட்சி, ரவுடிகள் …..

தேவையே இல்லாமல் –
மாட்டிறைச்சி,
இடஒதுக்கீடு,
தீவிர மதவாதம்,
மோடியை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாம்
பாகிஸ்தான் ஆதரவாளர்கள் – இன்னும் எவ்வளவோ
பேச்சுக்கள், செயல்கள் …!!

எனவே, பீஹார் தேர்தலின் முடிவுகளுக்கும்
இதே நபர்கள் தான் பொறுப்பு என்பதில் என்ன சந்தேகம் ..?
சாதாரணமாக தேர்தல் முடிவுகள் மிக மோசமாக
இருந்தால், தலைமைப்பொறுப்பில் இருப்பவர்கள்
முடிவிற்கு தார்மீக பொறுப்பு ஏற்பது வழக்கம்.
சூடு சொரணை அதிகம் உள்ளவர்கள் ராஜினாமா கூட
செய்வது வழக்கமே…!
மோடிஜியோ, அமீத்ஷாவோ – முடிவுகளுக்கு எந்த
வகையிலும் பொறுப்பேற்கவில்லை. தங்களுக்கும் அதற்கும்
எந்தவித தொடர்பும் இல்லை என்கிற மாதிரி பேசினார்கள்.
பீஹார் மக்கள் வளர்ச்சிக்கான வாக்குறுதிக்கு முன்னுரிமை
கொடுக்கவில்லை என்று உளறினார்கள்….

அத்வானி அற்புதமான காரியத்தைச் செய்தார்….!

– டெல்லி முடிவுகளுக்கு பிறகும் பாஜக தலைமை
பாடம் கற்றுக் கொள்ளவில்லை.
– பீஹார் தேர்தல் தோல்விகளுக்கு
யார் பொறுப்பு ஏற்கப் போகிறார்கள் ? –
என்று கேட்கிறார்….

இதைக் கேட்க -பாரதீய ஜனதா கட்சியின் ஸ்தாபகர்களில்
ஒருவரான அத்வானிக்கு இல்லாத உரிமை பாஜகவில்
வேறு யாருக்கு இருக்கிறது …?

அத்வானியின் நிழலில் ஒண்டி வளர்ந்தவர் தானே மோடிஜியே …?
அமீத் ஷா யார் ?
மோடிஜிக்கு வேண்டப்பட்டவர் –
மோடிஜிக்கு நம்பிக்கையான ஒரு ஆசாமி
என்பதைத்தவிர- கட்சியின் தலைமைப்பதவிக்கு
எந்த விதத்தில் அவர் தகுதி உடையவர்…?

கட்சிக்காக அவர் செய்த தியாகங்கள் என்னென்ன …?
குஜராத்தில் மோடிஜியின் போலீஸ் அமைச்சராக இருந்து
செய்த அடாத காரியங்களைத் தவிர …?

சரியான நேரத்தில், சரியான அடியைக் கொடுத்திருக்கிறார்
அத்வானிஜி. இது ஆட்சியிலோ – கட்சியிலோ உடனடியாக
மிகப்பெரும் மாற்றங்களை கொண்டு வந்து விடாது….

ஆனாலும் –
மோடிஜியின் அணுகுமுறைகள் பிடிக்காமல் இருந்தும்
இதுவரை நேரடியாக எதிர்க்கத் துணிவில்லாமல் இருந்த
இரண்டாம் கட்டத்தலைவர்கள் நாளா வட்டத்தில் – அத்வானியின்
தலைமையில் ஒன்று சேரத்துவங்குவார்கள்…..

ஏற்கெனவே வரிசை துவங்கி விட்டது –
முரளி மனோஹர் ஜோஷி,
யஸ்வந்த் சின்ஹா,
சாந்தகுமார்,
ஷத்ருகன் சின்ஹா,
சந்தன் மித்ரா,
போலா சிங் ……..
(மோடிஜியின் கேபினட்டிற்கு உள்ளேயே இருக்கும் –
சுஷ்மா ஸ்வராஜ், டாக்டர் ஹர்ஷ்வர்த்தன்….. )

தான் நினைத்தபடி எல்லாம் அடாவடியாக கட்சியையும்
ஆட்சியையும் நடத்திச் செல்ல முடியாது என்பதையும்,

அனைத்து தரப்பினரையும்
அனுசரித்து,
அரவணைத்து –
ஆதரித்து நடத்திச் செல்ல வேண்டியது அவசியம்
என்பதை மோடிஜி உணர வேண்டிய அவசியம்
இப்போது உருவாகும்.

ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறையை ஆட்சியிலும்
கொண்டுவருவது தனது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும்
என்பதை மோடிஜி உணர வேண்டிய சூழலை
இது உண்டு பண்ணும்.

“மார்க் தர்ஷக்” ( வழிகாட்டி…) என்று பட்டம் சூட்டி,
ஓய்வு கொடுத்து – மூலையில் உட்கார வைத்ததற்கு –
அந்த பதவியை வைத்தே தகுந்த “வழி”யை
காட்டுகிறார் அத்வானி…..

அத்வானிஜிக்கு வாழ்த்துக்கள்..!!!

——————————————————

அத்வானி தலைமையிலான குழுவால்
வெளியிடப்பட்ட அறிக்கை –

“The results of Bihar elections show that
no lesson has been learnt from the fiasco in Delhi.

To say that everyone is responsible
for the defeat in Bihar is to ensure that
no one is held responsible.

It shows that those who would have appropriated
credit if the party had won are bent on shrugging off

responsibility for disastrous showing in Bihar.

The principal reason for latest defeat is the way
the party has been emasculated in the last year.

A thorough review must be done of the reasons
for the defeat as well as of the way party is
being forced to kow-tow to a handful

and how its consensual character
has been destroyed.

The review must not be done by the
very persons who have managed and have been

responsible for the campaign in Bihar.”

—————————————————

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

25 Responses to மோடிஜிக்கு எதிராக வெகுண்டெழுந்த அட்வானிஜி ……..!

 1. சரியானபடி அலசி இருக்கின்றீர்கள் ஐயா

 2. B.V.Venkatasubramanian சொல்கிறார்:

  A Super Birth Day Gift to the countrymen
  -from Mr.L.K.Advani.

  Thank you Advaniji.

 3. M. Syed சொல்கிறார்:

  நல்ல அலசல்.

  எங்கே சு . சாமி யை காணோம் இவர்கள் மகிழ்ச்சியில் பங்குகொள்ளவில்லையா ???

  M. செய்யது
  துபாய்

 4. ravi சொல்கிறார்:

  பாஜகவுக்கு – வாஜ்பாய்-அத்வானி காலத்திலிருந்த
  மதிப்பு, மரியாதை, நற்பெயர் அத்தனையும் இவர்களது
  கேவலமான அணுகுமுறையால் நாசமானது.////

  நல்ல காமெடி ஜி ..
  மக்களுக்கு மறதி என்பது தொடர்கதை போல ….

  அப்படியே ஜஸ்வந்த் சிங் அத்வானியை நாறடித்த விஷயம் .. உமா பாரதி இதே தலைவர்களை நாரடிதார் …

  அயோத்யா விவகாரத்தில் பி.ஜே.பி கட்சி , அத்வானி இவர்களுக்கு என்ன மரியாதை இருந்தது .. கொஞ்சம் சொல்லுங்களேன் … கரசேவை எல்லாம் பழைய விஷயம் போல … லிப்ர்ஹன் கமிஷனால் குற்றம் சாற்ற பட்டவர்களில் முக்கியமானவர் அத்வானி , ஜோஷி …இப்போது இவர்கள் நல்லவர்கள் ஆகி விட்டார்களா …!!!
  லலித் மோடி விவகாரத்தில் சம்பந்தம் உள்ள சுஷ்மா இப்போது நல்லவர் ஆகி விட்டாரா !!!
  அந்த நல்ல பெயரை வைத்து கொண்டு 2004 ல் , 2009 ல் என்ன செய்தார்கள் ஜி… ஜெயிக்க வேண்டியது தானே !!!.
  மோடி ,சிவராஜ் சிங் , ராமன் சிங் மூவரும் தொடர்ந்து ஜெயிக்க வில்லை என்றால் , பி.ஜே.பி கூடாரம் 2004 இல் காலி ஆகி இருக்கும் …
  சரி ஜி.. அடுத்த உத்திர பிரதேச தேர்தலில் இவர்ளை வைத்து கொண்டு ஜெயித்து காட்ட சொல்லுங்கள் … மோடி , அமித் ஷா முகத்தில் கறியை பூசட்டும் ..

  //ஆர்.எஸ்.எஸ். அணுகுமுறையை ஆட்சியிலும் கொண்டுவருவது தனது ஆட்சிக்கே ஆபத்தாக முடியும்///
  வரலாறை திருத்தினார் என்று ஜோஷியை நாரடிதார்கள் 2000-2004 இல் …
  அதித்யாநாத் , அவைத்யாநாத் எல்லாம் யார் ஜி .. எல்லாம் ஆர்.எஸ்.எஸ் அண்ட் கம்பெனி ஆட்கள் தானே …
  அத்வானி , ஜோஷி எல்லாம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆட்கள் தானே சார்

  யஷ்வந்த் சின்ஹா –அதான் அய்யா பிள்ளையை தான் மந்திரி ஆக்கி விட்டார்களே.. அப்புறம் என்ன சார் வேண்டும் ???
  ஜோஷியும் , சின்காவும் சொந்த தொகுதியில் தோற்று ராஜ்ய சபாவில் அடைக்கலம் ஆனார்கள் …
  உத்திர பிரதேசத்தில் தொடர்ந்து கோட் அடித்தார்களே ..அப்போது யாரை தூக்கினார்கள் ..

  அத்வானி அமைதியாக இருந்தால் ஜனாதிபதி பதவி வாய்ப்பு கிடைத்து இருக்கும் … இப்போது பெப்பே

  • B.V.Venkatasubramanian சொல்கிறார்:

   Mr.Ravi,

   நீங்கள் ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது எழுத வேண்டுமென்று
   பழைய விஷயங்களை எல்லாம் தோண்டி, எழுதுகிறீர்கள் என்று
   தோன்றுகிறது. கே.எம். மோடியின் இன்றைய அணுகுமுறையை பற்றி
   எழுதுகிறார். நீங்கள் 10-15 வருட பழைய அத்வானி கதையை பேசுகிறீர்கள்.
   அப்படியானால், பீஹாரில் மோடி அணுகுமுறை
   குறை சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது; அத்வானி
   குறை சொல்வது தவறு என்பது உங்கள் வாதமா ? அதற்கு நேரடியாகவே
   மோடியை ஆதரித்து எழுதிவிட்டு போக வேண்டியது தானே ?
   அதைத்தானே இன்னும் சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள்.

   • ravi சொல்கிறார்:

    மோடியை ஆதரிப்பதற்கு தான் திரு LVIS இருக்கிறார் .. மோடியையோ , அம்மாவையோ, தாத்தாவையோ, பி.ஜி.பி கட்சியை ஆதரிப்பது என் வேலை கிடையாது …
    B.V.வேங்கடசுப்ரமணியன் –> உங்களக்கு மோடி பிடிக்கும் போல இருக்கிறது .. அதனால் தான் கவலை படுகிறீர்கள் போல் இருக்கிறது !!!
    மோடி ஒன்றும் கர்மவீரர் காமராஜரோ , அத்வானி தியாகி சத்தியமூர்த்தியோ அல்ல.. 100% அரசியல்வாதிகள் ..
    பிகார் மக்களுக்கு நிதிஷ் கூட்டணி பிடித்து இருந்தது ..அவர்கள் ஜெயித்து உள்ளார்கள்…மக்களாட்சியின் பலம் அதுவே ..
    அவசியம் என்றால் மோடியும் கண்டிப்பாக தோர்கடிப்பபடுவார்.. நாம் கவலை படுவதற்கும் ,சந்தோஷ படுவதற்கும் எதுவும் கிடையாது …

    கோத்ரா கலவரம் முடிந்து 15 வருடம் ஆகி விட்டது .. அயோத்யா பிரச்னை கிட்ட தட்ட 25 வருடம்…நாளைக்கு வேறு ஒரு தலைவர் வரும் பொது மோடியும் பின்னுக்கு தள்ள படுவார்.. அவ்வளவே…

    மத அரசியலை முன் எடுத்ததில் அத்வானியின் பங்கு அளப்பரியது.. அதை இன்று மோடி வேறு வகையில் செய்கிறார்… காங்கிரஸ்,முலாயம்,லாலு (ஒசாமா போன்ற ஒருவரை பிரச்சராதில் பயன் படுத்தினார் லாலு ) இவர்கள் தங்கள் சாதி + இஸ்லாமிய மத அரசியல் செய்கிறார்கள்..

    இன்று அத்வானி கவலைப்படுவது கட்சியை பற்றி (இது ஒரு பாதி தான்) + தன் அரசியல் எதிர்காலம் பற்றி மீதி (ஜனாதிபதி பதவி / பிரதமர் பதவி — 2 வது கொஞ்சம் கடினம் )

    ஒரே ஒரு சந்தேகம் — அடுத்த அசாம் தேர்தலில் பி.ஜே.பி ஜெயித்தால் என்ன ஆவது ?? அப்போது அத்வானி என்ன சொல்வார் ??

    • ravi சொல்கிறார்:

     B.V.Venkatasubramanian – –
     என் குடும்ப பெரியவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகள் ..நாங்கள் இழந்தது நிறைய …
     ஆதலால், எனக்கு யாரையும் ஆதரிக்க வேண்டிய நிலை இல்லை.. தேவையும் இல்லை ..

    • B.V.Venkatasubramanian சொல்கிறார்:

     Mr.Ravi,

     கே.எம். சாரின் இந்த நல்லதொரு இடுகையை ரசிக்கத்தெரியாத
     உங்களுடன் வாதம் செய்ய நான் தயாரில்லை.

  • LVISS சொல்கிறார்:

   MR Ravi you are absolutely right –If the general election campaign was run by Mr Advani or one of these veterans BJP would not have got even 50 seats –It was Modi and Amit Shah with their untiring work brought the BJP into power —

 5. paamaran சொல்கிறார்:

  சுப்ரமணியன் சுவாமி நவம்பர் 11,2015 08:02 IST …. ட்விட்டர் — ல்
  ” அனைத்து இந்துக்களும் சமஸ்கிருதம் கற்றால், இந்து மறுமலர்ச்சி ஏற்படும். அது அனைத்து பலவீனவத்தையும் அச்சுறுத்தலையும் விரட்டி அடிக்கும்” …. என்று கூறியிருக்கிறாரே தவிர பீஹார் தேர்தல் முடிவு குறித்து வாய் ஏதும் திறக்கவில்லை போல தெரிகிறது …. ! ஆனால் ப.சிதம்பரம் அவர்கள் :— பிகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும் என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியதை கிண்டலடிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தீபாவளியை முன்னிட்டு பாஜகவுக்குள் முதல் பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதை நாடு காண்கிறது என்று கூறியுள்ளார்……… !! Read more at: http://tamil.oneindia.com/news/india/country-seeing-first-fireworks-p-chidambaram-on-bjp-revolt-239589.html … எது வந்த போதும் பொதுவென்று வைத்து — வாழும் மனிதரை வாழ்த்திடுவோம் …. என்று சப்பை கட்டு கட்டுபவர்களும் இருக்கிறார்கள் …. அப்படிதானே ….. ? ” நாடு — நல்ல நாடு — நம் பாரத நாடு ” தானே …?

 6. LVISS சொல்கிறார்:

  THE DAY HE PRAISED JINNAH ADVANI RAN OUT OF FAVOUR OF RSS — WITHOUT THE SUPPORT OF RSS ADVANI CANNOT DO ANYTHING — HE SHOULD HAVE RETIRED FROM ACTIVE POLITICS —-YOU CANNOT HOLD ONE OR TWO PERSONS FOR ANY ACTION TAKEN BY A PARTY WITH SO MANY PARTICIPATING IN AN EXERCISE –THIS PRACTICE OF RESIGNING ON MORAL GROUNDS IS NO MORE EXISTENT –NOBODY RESIGNS — ELECTIONS HAVE BEEN LOST UNDER ADVANI — AMIT SHAH HAS SCRIPTED VICTORIES IN OTHER STATES —

 7. jramanujam சொல்கிறார்:

  பீகாரில் பா.ஜ. கா தோல்வி! காரணம் பற்றி ஆய்வு!பத்திரிக்கை செய்தி!
  கடந்த மார்சு மாதமே நான் எழுதிய கவிதை இது பிரதமர் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் ……!
  மீள்பதிவுதான்! படித்துப் பாருங்கள்!

  மாண்புமிகு பிரதமருக்கு எதிரி யாக-இங்கே
  மற்றவர்கள் யாருமில்லை உதிரி யாக
  தாண்டவமே ஆடுவது அவரின் கட்சி- நாளும்
  தவறாகப் பேசுவதே அதற்கே சாட்சி!

  முன்னுக்குப் பின்முரணாகக் காரண மின்றி –பலரும்
  முறையற்றுப் பேசுவதும் சாரமே யின்றி!
  என்னவெனக் கேட்கின்றார் நல்லோர் தாமே-பிரதமர்
  ஏற்றாரா? அவரமைதி ! சம்மத மாமே!

  கட்சியிலே கட்டுப்பாடு அணுவு மில்லை –யார்
  காரணமோ? ஆய்வதிலே பயனு மில்லை!
  ஆட்சியிலே அமைச்சருள்ளும் இணைப்பே யில்லை –பிரத
  அமைச்சருக்கு இதனால் ஆமே தொல்லை!

  அடக்குவதே நன்றாகும் பிரதமர் உடனே-நன்கு
  ஆள்வதற்குச் செய்வதவர் உரிய கடனே!
  நடப்பதிலே எதுவுமே தெளிவு, காணோம் – மக்கள்
  நம்பிக்கைக் குறைகிறது தீர்வு வேணும்!

  புலவர் சா இராமாநுசம்

 8. paamaran சொல்கிறார்:

  அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: நிதின் கட்கரி…… !
  First Published : 11 November 2015 06:07 PM IST
  // சர்ச்சை கருத்துகளை வெளியிடும் அத்வானி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதின் கட்கரி கூறியுள்ளார். இவரின் பேச்சால் பாஜகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது……பிகாரில் கூட்டணியால் தான் தோல்வியடைந்ததாக கூறிய அவர் இது தனிப்பட்ட ஒருவரின் தோல்வியல்ல கட்சியின் தோல்வி ஆகும் என்றார்.
  அத்வானி தலைவராக இருந்த போதும் பாஜக தோல்வியை சந்தித்தது என சுட்டிக்காட்டிய அவர், தேவையற்ற சர்ச்சை கருத்துகளை வெளியிடுபவர்கள் மீது கட்சித் தலைவர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.// ………இது இன்றைய தினமணி செய்தியின் ஒரு பகுதி ….!! அத்வானி மீது அமித்ஷா நடவடிக்கை எடுப்பாரா ….. ? மூத்த தலைவர்களுக்கு விரைவில் ஏதாவது ஒரு வழி பிறக்காமல் போகுமா …. ?

  • ravi சொல்கிறார்:

   இல்லை பாமரன்.. இந்த தலைவர்களால் ஒன்றும் பெரிய பாதிப்பு இருக்கும் என்று தோன்ற வில்லை ..
   ஆர்.எஸ்.எஸ் , கட்சி அமைப்பு முழுதும் மோடிக்கு ஆதரவாக உள்ளவை … சிவராஜ் சிங் போன்றவர்களை மோடிக்கு எதிராக திருப்ப முயற்சி செய்யலாம் .. ஆனால் , அவர்களும் ஒதுங்கி விடுவார்கள் .. இவர்களுக்கு பின்னால் வந்து யாரும் தன் பதவியை விட மாட்டார்கள் …

 9. Muttal Indian சொல்கிறார்:

  Sorry Mr.KVM, IMHO both Mr.Advani and Mr.Modi don’t qualify to be referred to as ‘Ji’. One was instrumental in communal polarisation in the lates 80s and early 90s resulting in the Babri Masjid episode while the other despite being the PM spoke like a street thug during his Bihar election rallies when he is expected to behave like a statesman.

  Looking at the trend of Mr.Mukherjee becoming the President (retired Cong. stalwart) I was wondering if it would be Mr.Advani’s term next. This could be a blessing in disguise if the BJP overlooks him – we can’t afford to have a PM and a President with right wing leanings and a tainted past.

 10. gopalasamy சொல்கிறார்:

  It is very clear that Modi is not fit to rule the country or control the party. If the rebellion strength becomes more, within a few months, Modi Govt will be ousted out and elections will be conducted.
  Time and again it is proved, other than Nehru family nobody can give a stable govt in centre. We have to wait for Rahul or Priyanka to take over the reins.

 11. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களே,

  இந்த விஷயத்தில் நிறைய பேர் விதம் விதமான
  கருத்துக்களை கூறி இருக்கிறார்கள்.

  அதன் பேரில் என் கருத்தையும் கூறி விடுகிறேன்….
  இந்த இடுகை அத்வானிஜியை promote செய்வதற்காக
  எழுதப்பட்டதல்ல.

  இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கு பாஜக தான்
  ஆட்சியில் இருக்கும் என்கிற சூழ்நிலை இருப்பதால்,
  இப்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட
  குழுவினரின் மீது ஒரு விதமான கட்டுப்பாடு – checks and
  balances அவசியமாகிறது. அதற்கான ஒரே வாய்ப்பு –
  அத்வானிஜி தலைமையில் ஒரு மிதவாதக் குழு
  பாஜக வுக்கு உள்ளேயே உருவாவது தான்.

  அதிகாரம் எப்படியும் மோடிஜி குழுவினரின் கையை விட்டு
  போகப்போவதில்லை. ஆனால், மிக மோசமான ஒரு நிலைக்கு
  இந்த நாட்டை இட்டுச்செல்லும் ஒரு அடாவடி குழுவிற்கு -ஒரு வேகத்தடை உருவாகும்.

  2014 தேர்தலின்போது -காங்கிரஸ் கூட்டணி ஆட்சி போக
  வேண்டுமென்று தான் நம்மில் பெரும்பாலானோர் விரும்பினோம்.
  ஆனால் அதற்கு பதிலாக, பாஜக தலைமையிலான –
  புதியதொரு கூட்டணி ஆட்சி உருவாகி இருந்தால் –

  அதாவது பாஜக வுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காமல்,
  கூட்டணிஆட்சி கட்டாயம் என்கிற நிலை உருவாகி இருந்தால் –

  ஆட்சியில் இருப்பவர்கள் இன்னும் அடக்கத்துடனும்,
  பொறுப்புடனும் நடந்து கொண்டிருப்பார்கள் –
  இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான அவலங்கள்
  உருவாகி இருக்காது என்பது என் கருத்து.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 12. paamaran சொல்கிறார்:

  // அதாவது பாஜக வுக்கு தனிப்பட்ட மெஜாரிடி கிடைக்காமல்,
  கூட்டணிஆட்சி கட்டாயம் என்கிற நிலை உருவாகி இருந்தால் –

  ஆட்சியில் இருப்பவர்கள் இன்னும் அடக்கத்துடனும்,
  பொறுப்புடனும் நடந்து கொண்டிருப்பார்கள் –
  இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான அவலங்கள்
  உருவாகி இருக்காது என்பது என் கருத்து // ….. உங்களின் நல்லெண்ணம் அடுத்த பாராளுமன்ற தேர்தலிலாவது நிறைவேற விரும்புகிறேன் ….. அய்யா …. ! —– ஐயோ … கொல்றாங்கோ …. கொல்றாங்கோ …. புகழ் தலைவரை எந்த வழக்கும் இல்லாமல் உடனே விடுவிக்க வேண்டும் என்று மாநில அரசை மிரட்டியதும் —- சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ” கோமா ” ஸ்டேஜ் என்ற நிலையில் ஒருவரை “இலாக்கா இல்லாத மந்திரியாகவே ” வைத்து இருந்ததும் — இதே பா.ஜ.க. வாஜ்பாய் தலைமையில் இருந்ந்த கூட்டணி ஆட்சியில் தான் என்பதை எப்படி மறக்க முடியும் …? தற்போதைய மோடிஜியின் ஆட்சி மட்டும் கூட்டணி ஆட்சியாக இருந்து இருந்தால் — இவர்களோடு சேர்ந்து மற்ற கூட்டணி காரர்களும் இந்தியாவை இன்னும் அதிமாக கேலி கூத்தாக ஆக்கியிருப்பார்கள் —- சென்ற ஆட்சியின் பிரதமர் பகிரங்கமாக ” கூட்டணியினரை ஒன்றும் கேட்க முடியாத நிலையில் ” இருக்கிறேன் என்று கூறியதை போல இவர்களும் புலம்புவதை கேட்டு கொண்டு ” இந்தியன் ” வானத்தை பார்த்துகொண்டு தன்னை தானே நொந்து கொண்டு இருப்பான் …. அப்படித்தானே ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் பாமரன்,

   நல்லதும் கெட்டதும் கலந்தே இராத எந்த system
   அரசியலில் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்.

   தனி மெஜாரிடியை வைத்துக் கொண்டு சிறப்பாக
   ஆட்சி நடத்தியவர்களும் உண்டு.
   அதே போல், கூட்டணி ஆட்சியிலும் சிறப்பாக
   நிர்வாகம் செய்தவர்களும் உண்டு.

   தனி மெஜாரிடி கிடைத்ததால், மூர்க்கராக மாறி –
   உண்ணும் உணவிலிருந்து, பேசும் மொழியிலிருந்து,
   கற்கும் கல்வியிலிருந்து, வைக்கும் பெயரிலிருந்து –
   அனைத்திலும் தங்கள் சொந்த சித்தாந்தத்தை வலுக்கட்டாயமாக
   திணிக்கும் நிலை ஏற்படுவதை விட, கூட்டணி ஆட்சியால்
   வரக்கூடிய தீமைகள் பெரியதாகத் தோன்றவில்லை.

   மேலும் – கூட்டணி ஆட்சி என்றாலே ஊழலும்,
   ஒழுங்கீனமும் தான் என்று படிந்துள்ள உங்கள் நினைவில்,
   30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவித ஊழல் புகாரும்
   இல்லாமல் ஆட்சி நடத்திய ஜோதிபாசு அவர்களின் நினைவு
   வராமல் போனது துரதிருஷ்டம் தான்.

   anyway – என் கருத்தை நான் சொல்லி விட்டேன்…
   உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் சரி –
   அது உங்கள் உரிமை…

   இதற்கு மேல் தொடர எனக்கு விருப்பமில்லை. நன்றி….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • ravi சொல்கிறார்:

    Wrong facts .. CPM has the absolute majority .. out of 294 seats in West bengal , CPM wins atleast 150 in each election, which means 50 % majority for CPM alone.
    and who are the rest ! CPI , FBL, RSP which are nothing but the same communist ideology group. its effectively CPM runs the government…

    even the communists dont talk about jyoti basu, as skeletons are tumbling out. now they have shifted to nripen and sarkar .. just search for jyoti basu’s comments on anand margis rape cases.. media treats them with kid gloves..

    Corruption — amount is same ..in west bengal ,there is no difference between party and government.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.