தொண்டு உள்ளங்களே எங்கே போனீர்கள்…? கிளம்புங்கள் செயல்படுவோம்….!

imd map

தமிழகத்தில் தொண்டு உள்ளங்களுக்கு பஞ்சமே இல்லை…
ஆனால், என்னவோ தெரியவில்லை இந்த தடவை மட்டும்
இன்னமும் செயல்படத்துவங்காமல் இருக்கின்றன.
அரசியல்வாதிகளை எண்ணி அச்சம் கொண்டு விலகி
இருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தின் ஒரு வருடத்திற்கான சராசரி மழையான
சுமார் 440 மி.மீ. அளவு மழையை கடந்த ஒரே வாரத்தில்
தொடர்ந்து பொழிந்து, வானமும் – இயற்கையும்
தமிழக மக்களின் மீதான தங்களின் கருணையைத்
தெரிவித்து விட்டன.

அடைமழைக்காக யாரும் வருத்தமோ, கவலையோ
கொள்ளாமல், இதை இயற்கையின் கருணையாக எடுத்துக் கொண்டு positive approach- உடன் செயல்பட வேண்டியது அவசியம்.

( பாதிப்புக்கு உள்ளான மக்கள் வருத்தத்தில் தான் இருப்பார்கள்
– அதை தவிர்க்க இயலாது….)

அரசியல்வாதிகள், எந்த கட்சியாக இருந்தாலும் சரி,
இன்னும் ஐந்து மாதத்தில் வரவிருக்கும்
தேர்தலை குறிவைத்தே செயல்படுகிறார்கள். அவர்கள் யாராலும்
மக்களுக்கு எந்தவித பிரயோஜனமும் கிடையாது. ஆனால்,
மக்களின் துன்பத்தை தங்களுக்கு எந்த விதத்தில் சாதகமாக
பயன்படுத்திக் கொள்வது என்பதிலேயே அவர்களது
முழு கவனமும், செயல்பாடும் அமைந்துள்ளது.

ஆனால், அதிகம் பாதிப்பிற்கு உள்ளாகாத மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் ஒருங்கிணைந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முன்வரவேண்டும்.

துன்பத்தில் இருக்கும் சக மனிதர்களுக்கு உதவுபவர்களைத்தான் இறைவன் நேசிக்கிறான். வள்ளலாரின் போதனைகளை நினைவிற்கு கொண்டு வாருங்கள்….
தவித்துக் கொண்டிருக்கும் மக்களின் பசியைத் தீர்ப்பதை விட
உயர்ந்த நற்பணி உலகில் வேறு எதுவுமே இல்லை.

லயன்ஸ் க்ளப், ரோட்டரி க்ளப், ராமகிருஷ்ணா மடம்,
சத்யசாய் சேவா மன்றங்கள் – இன்னும் இப்படி எத்தனையோ
சேவை மன்றங்கள் இருக்கின்றன. அமைப்பு ரீதியாக
செயல்படாமல் பலர் தனியாகக்கூட குழுவாகச் சேர்ந்து
செயல்பட முடியும்.

நான் உடலில் தெம்பு இருந்த வரையிலும், இந்த மாதிரி
சூழ்நிலைகளில், என்னால் சேர்க்க முடிந்த அளவு நண்பர்களை
துணை சேர்த்துக் கொண்டு செயல்படுவது வழக்கம்.
பெரிய நிறுவனங்களில், நல்ல வேலைகளில் இருக்கும்
நிறைய இளைஞர்கள் தங்களுக்குள்ளாக பத்து இருபது பேராக
குழுவாக சேர்ந்து கொண்டு செயல்பட முடியும்.

தமிழகம் முழுவதும், பெரும்பாலும், கடற்கரை ஓர ஊர்களில் தான் பாதிப்பு அதிகம் ஏற்பட்டிருக்கிறது.
தங்கள் அலுவலகத்திலிருந்து இரண்டு மூன்று தினங்களுக்கு
விடுமுறை எடுத்துக் கொண்டு இவர்கள் ஒவ்வொரு ஏரியாவிலும்
இருக்கும் ஒன்றிரண்டு, குறைந்த செலவு பிடிக்கக்கூடிய
திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துக் கொண்டு,
4-5 சமையல்கலைஞர்களை வைத்துக் கொண்டு ஒவ்வொரு
வேளையும் – பத்தாயிரம், இருபதாயிரம் பேருக்கு தேவையான
உணவை தயாரிக்கலாம்.

குடிசை வாசிகளில் அனைவருமே அரசு அமைக்கும் பள்ளி
முகாம்களுக்கு வந்து விடுவதில்லை. பாதுகாப்பு காரணமாகவும்,
வேறு சில காரணங்களுக்காகவும் முகாமில் போய் தங்காமல்
தங்கள் குடிசை/ஓட்டு இல்லங்களிலேயே இருந்து கொண்டு
தவிக்கும் மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அன்றாடம்
வேலைக்கு போய் சம்பாதிக்கும் இவர்களுக்கு – இந்த நாட்களில்
வேலைக்குப் போய் சம்பாதிக்கவும் இயலாது.

இந்த தொண்டு குழுவினர், சமைத்த உணவை வண்டிகளில்
ஏற்றுக் கொண்டு பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் இடங்களுக்கே
சென்று குடிசை குடிசையாக, வீடு வீடாக, கொடுக்கலாம்.
கூடவே சிறிது குடிநீரும் எடுத்துச் செல்வது நல்லது.
என்ன – மிஞ்சி மிஞ்சி போனால் – இன்னும் மூன்று நாட்கள்… நம்மால் சமாளிக்க முடியாதா என்ன …?

கிளம்புங்கள் நண்பர்களே – தவிப்பவர்களுக்கு உதவிட…

( நானும், என்னால் முடிந்தவர்களுடன் தொடர்பு கொண்டு,
இயன்றதைச் செய்ய முயன்று கொண்டு இருக்கிறேன்…
இடையில் – இதை எழுதுவதன் மூலம் இன்னும் சில
உள்ளங்களையும் செயல்பட உற்சாகப்படுத்த முடியும் என்று
தோன்றியதால் – இதில் ஈடுபட்டேன்…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

7 Responses to தொண்டு உள்ளங்களே எங்கே போனீர்கள்…? கிளம்புங்கள் செயல்படுவோம்….!

 1. Sampathkumar.K. சொல்கிறார்:

  Timely article.
  Nice Sir.

 2. paamaran சொல்கிறார்:

  ” வாழ்க்கை முழுதும் படிப்பவர்கள் பலபேர். ஆனால் வாழ்க்கையையே படிப்பவர்கள் மிகச் சிலர் ” என்பதற்கு இணங்க உள்ளது ” இந்த இடுக்கை ” — நல்ல மன { ங்கள் } ம் …. வாழ்க … !

 3. gopalasamy சொல்கிறார்:

  Thanks. A timely article. Why politicians did not do this?

 4. LVISS சொல்கிறார்:

  All the big capital cities like Bangalore,Chenai Mumbai, Kolkatta fail in this test –Why nothing is not done during summer time to prevent these things during rains from happening nobody knows — Every year people ,particularly those who are very poor, suffer when rains hit them — They lose their every thing – –

 5. Thanavanam சொல்கிறார்:

  ஆடு நழையுதுனு ஓநாய் அழுவுது போல்|

  • எழில் சொல்கிறார்:

   ஐயா,

   மேலே கா.மை. அவர்களின் பதிவு வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் படியான அறிவுறுத்தல், வேண்டுதல். உங்களுக்கு தெரிந்த ஒரு பழ மொழி கூறுங்கள் என்பதல்ல.

   இரண்டாவது, இரண்டு வரி திருகுறளுக்கே எம் போன்றோருக்கு விளக்கம் தேவை படும் போது ஒரு வரியில் கருத்து எழுதினால் எப்படி புரிந்து கொள்வது. ஒன்று விளக்கமாக எழுதுங்கள் இல்லை நேரத்தை அதில் வீணடிக்காதீர்கள்.

   நன்றி

   வணக்கம்.

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  காலத்திற்கு ஏற்ற அவசியமான பதிவு, அருமை.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.