நூறு ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பல்பு – நாமே தயாரிக்கலாம்….!!!

.

.

சாதாரணமாக – மனிதன் தன் மூளையின் சக்தியில்
பத்து சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகிறான் என்று
சொல்வது வழக்கம்.
இது முழுவதுமாக உண்மை இல்லை என்றாலும்,

சிந்தனைத்திறனை சாணை தீட்டினால் –
மனிதன் வாழ்க்கையில் இயற்கையின் துணையுடனேயே
பல அற்புதங்களை நிகழ்த்தி அன்றாட வாழ்க்கையை
சௌகரியமானதாக செய்து கொள்ளலாம் என்பதை
நிரூபிக்கின்றன இந்த இடுகையில் கொடுக்கப்பட்டிருக்கும்
சில செய்திகள்….

நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் ஒரு அற்புதமான,
மிகவும் பயனுள்ள link-ஐ கொடுத்தார்.
அதனை பிடித்துக் கொண்டு தொடர்ந்து பயணம்
செய்ததில் பல செய்திகள் கிடைத்தன.
முதலில் நண்பர் அஜீஸ் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

——–
கீழே உள்ளவற்றில் –

முதல் வீடியோ, பகல் நேரத்தில் –
சூரிய சக்தியை பயன்படுத்தி, சாதாரண பிளாஸ்டிக் தண்ணீர்
பாட்டிலை அடிப்படையாக வைத்துக் கொண்டு இயங்கும்
பல்பு தயாரிக்கும் விதத்தை விளக்குகிறது.

இரண்டாவது வீடியோ – அதே பிளாஸ்டிக் பாட்டில் பல்பை
தொழில் முறையில் சுலபமாக தயாரிப்பது எப்படி என்பதை
விளக்குகிறது. இந்த முறையில் ஒரு பல்பை நூறு ரூபாய்க்குள்
தயாரித்து விடலாம். இதை குடிசைத்தொழிலாக மேற்கொண்டு,
பலர் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளலாம்
என்பதோடு, மின்சாரத்திற்காக பத்து பைசா கூட செலவழிக்காமல்
வெளிச்சத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

மூன்றாவது வீடியோ – இதே பல்பை சூரிய சக்தி பேனல்
ஒன்றை சுலபமான் முறையில் தயாரித்து இணைப்பதன்
மூலம் இரவு நேரங்களில் விளக்கு வெளிச்சம் பெறும்
விதத்தை சொல்லிக் கொடுக்கிறது…

இதனை கண்டு பிடித்தவர்கள் மிக எளிய சூழ்நிலையிலிருந்து
வந்தவர்கள் என்பதை வீடியோவை பார்த்தாலே புரிந்து
கொள்ளலாம்.

ஒரிஜினல் கண்டுபிடிப்பாளர்களுக்கும்,
வீடியோ மூலம் அதை தெளிவாக விளக்குபவர்களுக்கும்
நமது மனமார்ந்த பாராட்டுகள்….

நம் ஊர்களில் நிச்சயம் இதனை குடிசைத்தொழிலாக
மேற்கொள்ளலாம். இந்த செய்தியை முடிந்த அளவு
அதிக மக்களிடம் எடுத்துச் செல்லுமாறு நண்பர்களை
கேட்டுக் கொள்கிறேன்.

solar bottle bulb – first stage –

improvised solar bottle bulb –
(video demonstration )

night light with solar panel-
(video demonstration )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

3 Responses to நூறு ரூபாய் செலவில் சூரிய வெளிச்சத்தில் இயங்கும் பல்பு – நாமே தயாரிக்கலாம்….!!!

 1. K. Senthil Kumar சொல்கிறார்:

  What a great innovation. Congratulations for the inventor who made this. From the video I think it was made at Thailand?

 2. Sampathkumar. K. சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  டெக்னாலஜி மிகவும் பிராக்டிகலாக இருக்கிறது.
  சுலபமாக செய்ய முடியும்.
  நீங்கள் சொன்னது போல், இங்கு பாபுலர் ஆனால் –
  கடைத்தெருவில் ஈசியாக 150 ரூபாய்க்கு விற்று நல்ல லாபம்
  சம்பாதிக்க முடியும். சிறு தொழிலாக யார் வேண்டுமானாலும்
  இதை செய்யலாம். one time investment – தனிப்பட்டவர்களுக்கும்
  லாபகரமானது. மின் தேவையும் கொஞ்சமாவது குறையும்.
  நம் மக்களுக்கு இன்னும் இது குறித்து
  தெரியவில்லை என்று நினைக்கிறேன். எதாவது தினசரி பத்திரிகையில்
  இந்த செய்தியை எடுத்துப்போட்டால் பரவலாகத் எல்லாருக்கும் தெரியும்.
  உங்கள் பகிர்ந்து கொள்ளலுக்கு நன்றி.

 3. ரிஷி சொல்கிறார்:

  பகிர்தலுக்கு மிக்க நன்றி சைதை அஜீஸ் மற்றும் கா.மை அவர்களுக்கு. நான் இன்னும் வீடியோ பார்க்கவில்லை. பதிவு இதை செய்து பார்க்கத் தூண்டுகிறது. முயற்சித்துவிட்டு கருத்துகளைப் பகிர்கிறேன்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.