ஒருவழியாக சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் தவிக்கும் மக்களுக்கு விடிவு பிறந்தது……

dog biting-4

dog biting-3

dog biting-2

dog biting-1

பொறுப்பில்லாத சில இயக்கங்களின் அர்த்தமற்ற பிடிவாதம், ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மை காரணமாக
பல வருடங்களாக பொதுமக்கள், குறிப்பாக சிறுவர், சிறுமிகள்
அனுபவித்து வந்த கொடிய தொல்லைகளிலிருந்து உச்சநீதிமன்றம்
மிகப்பெரிய விடிவைக் கொடுத்திருக்கிறது.

திருவனந்தபுரத்தில், பொதுமக்களின் தொடர்ந்த வலியுறுத்தல் காரணமாக – மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த தெரு நாய்களை பிடித்து அழிப்பது என்று மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து செயலிலும் இறங்கியது.

மேலும், கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சிகளும்
பங்கேற்ற கூட்டத்தில், சுமார் 2.5 லட்சம் தெருநாய்களை
அப்புறப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதை எதிர்த்து சில உதவாக்கரை, பொழுதுபோகாத மனிதர்களின் அமைப்புகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.

வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், சட்டத்துக்குட்பட்டு,
நாய்களை கொலை செய்யலாம் என தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து மீண்டும் சிலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தொடர்ந்தனர். இந்திய விலங்குகள் நல வாரியமும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும்
நீதிபதி சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு, நேற்றைய தினம் மக்கள் ஆண்டுக்கணக்கில் பட்ட அவஸ்தையிலிருந்து விடுதலை கொடுத்திருக்கிறது. தெருநாய்களை விட மனித உயிர்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று தீர்ப்பளித்திருக்கிறது.

உள்ளாட்சி அமைப்புகள் ( 2001 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விலங்குகள் வதை தடுப்பு சட்டம் மற்றும் பிறப்பு கட்டுபாடு விதிகளின் கீழ், ) சட்டப்படியே மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெருநாய்கள், ராபீஸ் தாக்குதலுக்குள்ளான மற்றும் நோய்வாய்ப்பட்ட நாய்களை கொலை செய்யலாம் என்று தீர்ப்பளித்திருக்கிறது.

மேலும், நாட்டில் உள்ள அனைத்து உயர் நீதிமன்றங்களும் 1960 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான விதிகள் குறித்து (இதற்கு மாற்றாக …? ) எவ்வித உத்தரவும் வழங்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறது…

இனியாவது நமது குழந்தைகள் தெருக்களில் அச்சமின்றி
நடமாடட்டும்…!

இத்தகைய ஒரு நடவடிக்கையை வலியுறுத்தி நாம் இதே
வலைத்தளத்தில் பலமுறை எழுதி இருக்கிறோம்

பின் குறிப்பு –

நான் நாய் வளர்ப்புக்கு எதிரானவன் அல்ல.
எந்தவித பொறுப்பையும் ஏற்கத்தயாராக இல்லாதவர்கள் –
இந்த விஷயத்தில் வக்காலத்து வாங்குவதை தான் எதிர்க்கிறேன்.

நாய் வளர்க்க விரும்புவோர், அதற்கான உரிய அனுமதியை பெற்று –
அந்த நாய்களை தங்கள் சொந்த பொறுப்பில்/செலவில்
உரிய காலங்களில் தடுப்பூசிகளைப் போட்டு, மற்றவர்களுக்கு
தொல்லை இல்லாத விதத்தில் வளர்க்க வேண்டும்.

எந்த காரணம் கொண்டும், தெருக்களில் – உரிமையாளர்
துணையின்றி பிறருக்கு அச்சுருத்தலாக நாய்கள் அலையக்கூடாது.
நான் வலியுறுத்துவது அவ்வளவே.

தெருநாய்கள் அழிக்கப்படக்கூடாது என்று
விரும்புவோர், தாராளமாக அவற்றை தத்து எடுத்துக்கொண்டு –
தங்கள் இல்லத்தில் வளர்த்துக் கொள்ளலாமே…!!!

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

ஒருவழியாக சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பால் தவிக்கும் மக்களுக்கு விடிவு பிறந்தது…… க்கு 4 பதில்கள்

 1. ssk சொல்கிறார்:

  நாய்களை விட மனிதர்கள் முக்கியம் என்று மனிதன் நினைப்பதில் தவறில்லை.
  இங்கு எல்லா மனிதர்களும் சமம் எனும் நிலையும் வர வேண்டும். சிலர் மட்டும் உயர்வு எனும் எண்ணம் ஒழிய வேண்டும்.

  • 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   இந்த எண்ணம் இந்த ‘நூற்றாண்டில் சாத்தியமில்லை. மனிதர்கள் இருக்கும் வரை, உயர்வு தாழ்வு என்ற எண்ணம் இருக்கும். அது பிறப்பினால் இருக்காமல் பார்த்துக்கொள்வது, நம் (மக்களின்) கையில்தான் இருக்கிறது. ஆட்டோவில் நின்றுகொண்டு ஸ்டாலின் போனால் அதை வரவேற்பதற்கு ஆட்கள் இருக்கின்றனர். அப்போ அவர், பொதுமக்களைவிட மேலானவரா? இது எல்லா அரசியல்வியாதிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் பொருந்தும்.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  நல்ல தீர்ப்பு, நடவடிக்கை எடுத்தால் நல்லது….

 3. M. Syed சொல்கிறார்:

  வரவேற்கவேண்டிய நல்ல தீர்ப்பு. இன்னும் ஒருபடி மேலேபோயி விலங்கின் உயிரைவிட மனித உயிர் மேலானது என்று இருந்திருக்கவேண்டும். அப்போதுதான் சில மரமண்டைகளுக்கு புரியும்.

  நன்றிM. செய்யது
  துபாய்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.