இப்போது மோடிஜியையும் கடிக்கிறார் -சு.சுவாமி…!!!

 

 

 

modi_jaitley_swamy

 

மோடிஜியின் கோட்டையான குஜராத்
அஹமதாபாதில் போய் நேற்றைய தினம் திருவாளர் சு.சுவாமி கூறி இருப்பது –

120 லட்சம் கோடி ( நூற்றிருபது லட்சம் கோடி ……..!!!!!!!!! ) ரூபாய் கருப்புப் பணம் இன்னும் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இதை மீட்டுக் கொண்டு வர நிதியமைச்சர் அருண் ஜெட்லி உருப்படியாக எதையும்
செய்யவில்லை. அவர் ஏற்கெனவே கொண்டு வந்திருக்கும்
திட்டங்கள் எதற்கும் உதவாது….!!!

வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை எப்படி மீட்டுக் கொண்டு வருவது என்பதைப்பற்றி
விவரமாக விளக்கி, ஆறு அம்ச திட்டம் ஒன்றை நான்
மோடிஜிக்கு எழுத்து வடிவில் தந்தேன்.
அதன் மீது
எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அருண் ஜெட்லி
காரணமாக மோடிஜி என் யோசனைகளை நடைமுறைப்
படுத்தவில்லை.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வருமான வரியாக
வசூலிக்கப்படும் பணத்தைப் போல் 60 (அறுபது) மடங்கு
பணம் இது.

நான் சொல்வதை நிதியமைச்சர் அருண் ஜெட்லி
கேட்கத்தயாரில்லை.. என் யோசனைகள் குப்பைக் கூடைக்கு அனுப்பப்பட்டு விட்டன….

நான் சொல்வதை கேட்காமல், அருண் ஜெட்லி வழியிலேயே
போகிற வரையில் மோடிஜி இந்த விஷயத்தில்
எதையும் சாதிக்கப்போவதில்லை.

—————

பாஜக அன்பர்களிடம் நான் கேட்க விரும்புவது –

திருவாளர் சு.சுவாமி கொடுத்துள்ள திட்டத்தை
மோடிஜி நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன் ….?

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள கருப்புப் பணத்தை
மீட்டுக் கொண்டு வருவதே தனது முதல் லட்சியம்
என்று சொன்னவர்கள் – அதற்கான வழிகள் கிடைக்கும்போது,
செயல்பட மறுப்பதேன்….?

ஒரு வேளை சு.சுவாமி சொல்லும் யோசனைகள்
நடைமுறை சாத்தியமற்றவை என்றால் – எதனால்,
எந்த விதத்தில் அவை சாத்தியமில்லை என்பதை
விளக்கலாமே…?

இந்த விஷயத்தில் சு.சுவாமி மட்டுமல்ல –
இந்த நாட்டுமக்களில் பெரும்பாலானோர் மோடிஜி அரசின்
முன்வைக்கும் கேள்வி இது –

ஆட்சிக்கு வந்த கடந்த 17 மாதங்களில்,
எத்தனை கோடி ரூபாய்
கருப்புப் பணம் மீட்கப்பட்டது….?
சு.சுவாமி சொல்லும் வழிகள் தான் என்ன …?
அவற்றை அரசு நடைமுறைப்படுத்த மோடிஜி அரசு
ஏன் முன்வரவில்லை …?

அல்லது மோடிஜி விரும்பியும் கூட, அருண் ஜெட்லி
ஒத்துழைக்க மறுக்கிறாரா ? அருண் ஜெட்லியை
மோடிஜியால் கட்டுப்படுத்த முடியவில்லையா …?

சு.சுவாமி – தன் திட்டத்தை நிறைவேற்றினால் அடுத்த
15 ஆண்டுகளுக்கு இந்த நாட்டில் வருமான வரியையே
ரத்து செய்து விடலாமென்று சொல்லும்போது,

யாருடைய நலன் கருதி இந்த யோசனைகள்
புறக்கணிக்கப்படுகின்றன …?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

23 Responses to இப்போது மோடிஜியையும் கடிக்கிறார் -சு.சுவாமி…!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  தங்களது விமர்சன முக்கிய நபர் இருவருக்குமிடையேயான எதிர்பார்ப்பு & செயல்பாடு விபரங்களின் தொடர்நிகழ்வுகளுக்கு காத்திருப்போம். This is between one he is pretending to be Omnipotent & other in the same but insulating him by silence often.

 2. paamaran சொல்கிறார்:

  அரசு — மற்றும் மோடிஜிக்கு எதிராக குரல் கொடுப்பது போல் —- சு.சுவாமி வாய் திறப்பது எல்லாம் மக்கள் இவ்வாறன கேள்விகளை கேட்டுவிட கூடாது என்பதற்கான முன்னேற்பாடாக இருக்குமோ — என்னவோ …! அப்படியே ” உண்மையில் ” சு.சுவாமி கேள்விகளை எழுப்பும்போதெல்லாம் — உடனே அவருக்கு ஏதாவது ஒரு பதவியை கொடுப்பதுபோல கூறியோ — நேரில் அழைத்து ஒரு பொன்னாடையை போர்த்தியோ — அவரது ” வாயை அடைக்கும் ” வித்தை தான் கைவசம் இருக்கிறதே … அதனால் இதெல்லாம் — ” அன்பு கடி ” ஆமாம் — பேய்க்கும் — பேய்க்கும் சண்டை அளவுக்கு …. வருமா ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   பேய்க்கும் பேய்க்கும் சண்டை …..

   வரும் …. ஆனால் (இப்போதைக்கு) வராது….!!!

   இப்போதைக்கு இவர் குடுமி அவர் கையிலும்,
   அவர் குடுமி இவர் கையிலும் இருக்கிறது.

   காஞ்சனா பார்ட்-3 வருவதற்குள்ளாகவாவது
   வருகிறதா -பார்ப்போம்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. LVISS சொல்கிறார்:

  The link below (dated 13 May 2015 ) ie one year after the NDA came to power and constituted the SIT gives an idea about the black money hunt- Ram Jethmalani also says he has some ideas — When black money within the country is not that easy to recover how can we recover black money in foreign lands — The money doesnt stay in one place and need to be tracked from one place to another —Moreover the foreign govts also should cooperate –The amount of black money in foreign countries can only be guessed —

  http://indianexpress.com/article/india/india-others/black-money-adds-up-to-rs-6400-cr-sit-tells-sc/

 4. LVISS சொல்கிறார்:

  Under The Black Money (Undisclosed Foreign Income and Assets)and Imposition of Tax Act 2915 passed by NDA with a 90 days compliance period 638 declarations were received totalling Rs 4147 crores — This is much less than expected though –

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் LVISS,

  நீங்கள் எங்கெல்லாமோ படித்ததை எல்லாம் இங்கு link
  கொடுக்கிறீர்களே தவிர, இடுகையில் உள்ள கேள்விகளுக்கு
  உங்கள் விளக்கம் என்று எதையும் தரவில்லையே…?

  சு.சுவாமி கொடுத்திருக்கும் யோசனைகளை, திரு நரேந்திர மோடி
  அவர்களின் தலைமையிலான பாஜக அரசு ஏற்றுக் கொண்டு
  நிறைவேற்றாதது ஏன் …?

  ஒன்று சு.சுவாமியின் யோசனைகளை இயன்ற அளவிற்கு
  நிறைவேற்ற வேண்டும்….

  அல்லது சு.சுவாமியின் ஆலோசனைகள் கவைக்கு உதவாதவை
  என்றால் – அதை வெளிப்படையாக, இன்னின்ன காரணங்களால்
  இந்த யோசனைகளை செயல்படுத்த முடியாது என்று
  விளக்க வேண்டும்.

  இரண்டையும் விட்டு விட்டு, வழக்கம்போல் மௌனியாக
  இருந்தால் என்ன அர்த்தம் …?

  “தில்” இருந்தால் ஒன்று சு.சுவாமியிடம் – ஆளும் கட்சியில்
  இருந்து கொண்டு அரசுக்கு விரோதமாகப் பேசாதீர்கள்
  என்று சொல்லி கண்டிக்க வேண்டும்…

  மீறியும் பேசினால் – கட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும்…

  இது எதையும் செய்யத் தெம்பில்லையென்றால் என்ன அர்த்தம் ?
  இவர்கள் குடுமி ஏதோ ஒரு விதத்தில் சு.சுவாமி கையில்
  மாட்டிக் கொண்டு இருக்கிறது என்று தானே அர்த்தம் …?

  இவர்களை அவர் ப்ளாக்மெயில் செய்கிறார் என்று தானே அர்த்தம் ?

  பாஜக அரசின் நிதியமைச்சரை, அந்த கட்சியின் மூத்த தலைவரே
  உதவாக்கரை, இவரால் ஒன்றும் செய்ய முடியாது என்றெல்லம்
  பேசும்போது – ஸ்ரீமான் நரேந்திர மோடிஜி வாய்மூடி மௌனமாக
  பார்த்துக் கொண்டிருப்பது ஏன் …?

  சொல்லுங்கள் பார்ப்போம்…!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • LVISS சொல்கிறார்:

   Mr K M / Frankly I dont know why the govt is not taking action on the steps suggested by Dr Swamy — step 3 relating to Participatory notes was already in the air for a long time –it appears to be the easiest but why no action –there must be some reason —
   Coming to the black mail part –We have seen how calmly the govt dealt with the FTTI students agitation and OROP issue –What came of them, students are back to classes Did they succeed in removing Mr Chauhan —As for OROP notification has been issued as promised and the govt clarified that any issues will be addressed by the Commission set up for the purpose -So I dont think the govt can be hurried in any way –The fact that the govt is still taking time to act on Dr Swamy’s advise shows that they cannot be pushed into doing some thing -This is my reading of the govt going by how they have been addressing issues till now — I may be wrong but thats how I see it —
   I post links because if I merely reproduce the contents no one may believe it -I hope you will bear with me for that —

 6. paamaran சொல்கிறார்:

  சுவாமி சிங்கமும், மோடி சிங்கமும் மோதுமா ….?
  Posted on மார்ச் 4, 2015 by vimarisanam – காவிரிமைந்தன் …. இந்த இடுக்கை யையும் நண்பர்கள் மீண்டும் ஒருமுறை படித்தால் — பல விஷயங்கள் — விளங்கும் — எட்டு மாதங்களாகியும் ஒன்றும் நடக்கவில்லை …. சு.சுவாமி மீண்டும் — மீண்டும் கூறுவதில் — அய்யா கூறியுள்ளதை போல நடைமுறைபடுத்த ஏன் தயக்கம் என்பதை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் — என்று எல்லோரும் நினைப்பதில் என்ன … தவறு … ? இதை போலவே சு,சுவாமி ” ரபேல் விமானம் ” வாங்குவது குறித்தும் — முதலில் மிரட்டி — இரண்டாவதாக பின்வாங்கியதையும் ஒரு இடுக்கையில் விவரமாக எழுதி ” சுவாமிக்கு ” கட்சியிலும் — அரசிலும் உள்ள நிலைமை வெட்ட வெளிச்சமாக வெளியிட்டு இருந்திர்கள் — இதையெல்லாம் பார்க்கும்போது — சுவாமி ….. பாவமாகத்தானே … தோன்றுகிறார் ….?

  • ஆவி சொல்கிறார்:

   காமையும் நீங்களும் ஒன்றும் தெரியாமல் எழுதுகிறீர்கள். மோடி இந்தியாவின் பிரதமர் அல்ல. அவர் உலக நாடுகளின் பிரதமர். இங்கே நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கோ, அப்பாவிகள் கொல்லப்படுவதற்கோ அவர் ஏன் பதில் தர வேண்டும்?
   அவரின் பதில் வெளி நாடுகளில் மட்டுமே கிடைக்கும். அங்கே சென்று கேட்டால் பதில் கிடைக்கலாம்????
   உடனே மலேசியா-சீனா செல்லவும்.

 7. today.and.me சொல்கிறார்:

  இதை யாராவது கமண்ட் பண்ணமாட்டீர்களா? என்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்,
  மூக்குத் துடைக்கவும் மூஞ்சி துடைக்கவும் உதவும் துணியை எப்படித் தொங்கவிட்டால் என்ன?

  வெறுப்பேற்றும் தேசப(க்)தர்கள்…

  சாதாரண மனிதர்கள் இதுபோல் செய்துவிட்டால் என்ன சட்டம் இவர்கள் மேல் பாயும்?????

 8. எழில் சொல்கிறார்:

  நான் விளங்கி கொள்வது இது தான். பாஜக க்கு சட்டங்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் இரு சபைகளிலும் பெரும் பான்மை வரும் வரை கருப்பு பணம் குறித்து எதுவும் நடக்காது.

  சில நாட்களுக்கு முன் ஜெயிட்லி, ராகுலை சந்தித்து GST க்கு ஆதரவு தருமாறு கேட்டதாக செய்திகள் வருகின்றன. கருப்பு பணம் குறித்து ஜெயிட்லி சுவாமி கூறுவது போல் நடவடிக்கை எடுத்திருந்தால் மேல் கூறியது சாத்தியமாகி இருக்குமா?

  சுவாமியின் அவசரத்திற்கு காரணம், ஜெயிட்லி GST யை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டால் அவரை பின் அசைக்க முடியாது. அதற்குள் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் சண்டை மூட்டி விட்டால் GST நிறைவேறாது. அப்படி சண்டை மூட்ட எடுத்த ஆயுதம் தான் ராகுலின் UK குடியுரிமை. இருப்பினும் சுவாமிக்கு இம்முறையும் ஏமாற்றமே. 🙂

  • ravi சொல்கிறார்:

   good one ezhil.. perfect point!!

  • LVISS சொல்கிறார்:

   Mr Ezhil You are spot on –The Rajya sabha factor stands in the way of getting new bills passed —
   It is learnt that Mr Jaitley went to meet Mr Rahul to invite him for his daughter’s marriage — -I do not think BJP gives that much importance to Rahul –They would , if at all required , talk with Sonia Gandhi — Even that may not happen -There is the Natonal Herald case and now the citizenship issue —The political rivalry has reached a stage where both parties will never come together —
   As you say once the GST is passed, which the BJP says confidently that they would do ,,, the NDA can breathe free and go about their reform measures —They may also be having an alternative ways up their sleeves to push reforms —

 9. ravi சொல்கிறார்:

  மனை , தங்கம், கட்டிடம், பத்திர பதிவு . இந்த நாலு விஷயத்தில் ஏதாவது புதுமையான சட்டம் வராத வரையில் கருப்பு பணம் என்பது கானல் நீர் தான்

 10. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கருப்புப் பணத்தை மீட்பதைவிட, எல்லா டிரஸ்டுகளையும் அரசுடைமை ஆக்கிவிட்டால், பல லட்சம் கோடிகள் இந்திய அரசுக்கு வருமானமாகக் கிடைக்கும். அதைக்கொண்டு ஏகப்பட்ட திட்டங்கள் செய்யலாமே.

  இன்றைக்கு, குப்பன்/சுப்பன் தவிர எல்லோரும் பணத்தைப் பதுக்குவதற்கு டிரஸ்ட் வைத்துள்ளார்கள். அதில் பல்லாயிரக்கணக்கான கோடிகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளன. கணக்கிற்கு, வருடத்திற்கு 3 லட்சரூபாய் உதவி கொடுத்துவிட்டு, 3 கோடிக்குக் கணக்கு எழுதுகிறார்கள். இதைக் கேட்பதற்கு நாட்டில் ஆள் இல்லை. ஏனென்றால், எல்லோரிடமும் டிரஸ்ட் இருக்கிறது. அதற்குள் கருப்புப்பணம் இருக்கிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.