மத்தியில் இருப்பவர்கள் அமைச்சர்களா அல்லது தமிழ்நாட்டின் வில்லன்களா …?

c-1

c-2

c-3

c-4

c-5

நேற்றைய இடுகையின் பின்னூட்டத்தில் நண்பர் பாமரன்
எழுதியுள்ளவை கீழே –

———–

paamaran சொல்கிறார்:
5:40 முப இல் நவம்பர் 22, 2015

தினமலர் முதல் பக்கம் அரசியல் செய்தி
பதிவு செய்த நாள் : நவம்பர் 22,2015,00:00

// சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட
பகுதிகளை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன்,
பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
‘இந்த விவகாரத்தில், மத்திய அரசிடம் இருந்து உதவி
பெறுவதில் தமிழக அரசு அலட்சியமாக உள்ளது’ என, அவர்கள் புகார் தெரிவித்தனர்.// ……..

இந்த மத்திய இணை அமைச்சர்களின் பேட்டியும் —
புகாரும் ஏற்கத்தக்கதா ….? ஜெயலலிதா மதிய அரசிடம்
வைத்த கோரிக்கை ” வெள்ள சேதங்களை பார்வையிட்டு —
மதிப்பீடு செய்ய மத்திய நிபுணர் குழுவை ” அனுப்ப சொல்லி —-

ஆனால் நிபுணர் குழுவுக்கு பதிலாக இணை அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு —- இங்கே உள்ள
அதிகாரிகளையும் — நிதியையும் வைத்து செய்து முடித்த —

செய்துகொண்டு இருக்கின்ற செயல்களை குறை கூறி
பேட்டியை தமிழக அரசின் மீது புகார் போல கூறுவது —
அரசியல் ஆதாயம் தேடத்தானே …. ?

பிணங்களின் மீதும் நின்றுகொண்டு வோட்டு பொறுக்க
நினைக்கும் … இவர்களை பற்றி …?

சில நாட்களுக்கு முன் இதே ” பொன்.ரா. ” தமிழக அரசு
சிறப்பாக நிவாரண பணிகளை செய்து வருகிறது என்று
சொன்ன வார்த்தை — தமிழிசை அருகில் இருக்கும் போது
மாறி ஒலிப்பதின்….. மர்மம் என்ன …. ?

முன்பு மத்திய காங்கிரஸ் அரசு எப்படி பழிவாங்கியதோ — அதைவிட தற்போதைய பா.ஜ.க அரசு ஒருபடி மேலே சென்று
தமிழகத்தை பழிவாங்கி என்ன சாதிக்க நினைக்கிறார்கள் ….?
இதுவரை நாட்டுக்கே பிரதம மந்திரியானவர் —
” ஒரே ஒரு அறிக்கை தமிழக வெள்ளம் பற்றி ” வெளியாடதது ஏன் …. ?

—————————-

இந்த வெள்ளத்தையும், மக்களின் வேதனையையும் வைத்து,
ஒவ்வொரு கட்சியும் அரசியல் செய்கிறது என்பதில் எந்தவித
சந்தேகமும் இல்லை… வெகு விரைவில் தேர்தல் வருகிறது
என்கிற காரணம் எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாக
இருக்கிறது.

மற்ற கட்சிகள் ஒரு புறம் இருக்கட்டும். பாஜக வின்
மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து அடிக்கும் கூத்தை
மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

இங்கு சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன் –

–திருமதி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசும்போது,
தான் செவ்வாயன்று ராஜ்நாத் சிங் அவர்களிடம் பேசியபோது, தமிழ்நாட்டிலிருந்து உதவிகேட்டு இன்னும் அறிக்கை வரவில்லை என்று சொன்னதாகச் சொல்கிறார்.

–இவர் இதைச் சொல்வது சனிக்கிழமை மாலையில் –
செய்தியாளர் சந்திப்பில்..
சனிக்கிழமை பேசும்போது, வெள்ளிக்கிழமை உள்ள நிலவரத்தை
கூறாமல், செவ்வாய்க்கிழமை நிலவரத்தை கூறுவானேன்…?
அதன் உள்நோக்கம் என்ன …?

— ( இதற்கு இடையில் தமிழக முதலமைச்சர், உள்துறை அமைச்சரிடம் விவரமாகப் பேசி, சேதங்கள் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொண்டிருக்கின்றன என்றும் –

முழு விவரங்கள் அடங்கிய அறிக்கை, ( திங்கட்கிழமை )
23-ந்தேதி அவரிடம் அளிக்கப்படும் என்றும், இயன்ற அளவு விரைவாக மத்திய அதிகாரிகளின் குழுவை,
சேத மதிப்பீடுகளை பரிசீலனை செய்ய அனுப்பும்படியும்
கேட்டுக் கொண்டிருக்கிறார். உள்துறை அமைச்சரும் அதனை
ஏற்றுக் கொண்டு, குழுவை அனுப்புவதாகக் கூறி இருக்கிறார்…
இந்த தகவலை வேண்டுமென்றே, முற்றிலுமாக மறைத்திருக்கிறார்
அமைச்சர்…. ஏன் …? )

— முடிச்சூர் பகுதியில் பாஜக குழுவினர் பார்வையிடும்போது,
அங்கு இருந்த காஞ்சி மாவட்ட பெண் கலெக்டரை (ஆட்சியாளர்) பொது மக்கள், மற்றும் கட்சிக்காரர்களின் எதிரிலேயே கண்டிக்கிறார்….

தமிழக மாவட்ட கலெக்டர்கள் யாரும் மத்திய
மந்திரியின் கீழ் பணி புரியவில்லை என்பது அவருக்கு
தெரியாதா …? எதிரே இருப்பவர் பதில் சொல்ல முடியாத
நிலையில் இருந்தால், மந்திரி எப்படி வேண்டுமானாலும்
நடந்து கொள்ளலாமா…? இவருக்கு எதாவது கூற வேண்டுமானால் – அவரை தனியே அழைத்து கூறுவது தானே முறை …?

— அமைச்சர் வந்தது முழுக்க முழுக்க கட்சி சம்பந்தப்பட்ட
பயணமாகத் தான். இவர்கள் வெள்ள நிலவரத்தை பார்வையிட்டு,
பாஜக தலைவர் திரு அமீத் ஷா அவர்களிடம் ரிப்போர்ட்
சமர்ப்பிக்க இருக்கிறார்கள்… மத்திய அரசின் அதிகாரபூர்வ
பிரதிநிதியாக இவர்கள் வரவில்லை…. அனுப்பப்படவும் இல்லை.

அப்படி இருக்கையில் தமிழக வேண்டுகோள் வந்ததும்
ஏதோ – இவர்கள் ரிப்போர்ட்டைப் பார்த்து, கட்சித்தலைமை
தான் உதவி செய்யப்போவது போல்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுவது எப்படி …?

— இன்னொரு மிகவும் முக்கியமான கேள்வி –

அமைச்சருக்கான விமான டிக்கெட், வாகனங்கள் – எதையும் கட்சி ஏற்பாடு செய்ததாகத் தெரியவில்லை. கட்சி வேலைக்காக வந்தவர், அரசாங்க செலவில் வருவது,
வசதிகளை பயன்படுத்துவது என்பதெல்லாம் முறைகேடுகள்
இல்லையா…? கட்சிக்கு ரிப்போர்ட் அளிக்க இவர்கள் எப்படி
அரசு செலவில் பயணிக்கலாம் …?

துரதிருஷ்டவசமாக, தமிழ்நாட்டில் செய்தியாளர்கள் என்றால் –
மற்றவர்கள் சொல்வதை கேட்டுக் கொண்டு வந்து அப்படியே
வெளியிடுவதோடு தங்கள் பொறுப்பு தீர்ந்தது என்று
நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

– நாம் இங்கு எழுப்பும் சந்தேகங்கள் எந்த செய்தியாளருக்கும்
தோன்றவில்லையா …? யாரும் ஏன் விளக்கம் பெற முயற்சி
செய்வதில்லை….?

– இறுதியாக – மத்திய அரசு என்பது எங்கேயாவது ஆகாயத்தில் – அண்டவெளியில் மிதந்து கொண்டு இருக்கிறதா …?
நாட்டின் எந்த பகுதியிலும் நடக்கும் விஷயங்கள் அதற்கு
தெரிந்து தானே இருக்கின்றன…?

c-last

— நேபாளத்தில் பூகம்பம் வந்தபோது, நேபாள பிரதமருக்கே நான் தான் முதலில் செய்தி சொன்னேன் என்று சொன்ன அதி-ஸ்மார்ட் பிரதமருக்கு – இங்கு ஏற்பட்டுள்ள சேதங்கள், உயிரிழப்புகள் குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்ல செய்தி எதுவும் இல்லையா …?

இருநூறுக்கும் அதிகமாக உயிர்கள் பலியானது அவருக்கு செய்தியாகவே தெரியவில்லையா ?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

16 Responses to மத்தியில் இருப்பவர்கள் அமைச்சர்களா அல்லது தமிழ்நாட்டின் வில்லன்களா …?

 1. 'நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  நிர்மலா சீதாராமனுக்கும் மற்றவர்களுக்கும், எரிகிற வீட்டில் பிடிங்கியது லாபம் என்று, அதிமுகாவின் எதிர்ப்பு ஓட்டுக்களைக் குறி வைக்கிறார்கள். இவர்களுக்கும், தி.மு.காவின் அழுத்தத்தால் உதவாமல் இருந்த காங்கிரஸுக்கும் எந்தவித வித்யாசமும் தெரியவில்லை. இந்த நிலையில், அதிமுகவிடம் 50 எம்பிக்கள் இல்லாதிருந்தால் என்னவாகியிருக்கும்?

  என்ன குட்டிக்கரணம் அடித்தாலும் பாஜாவுக்கு தமிழ்’நாட்டில் ஓட்டு சதவிகிதம் அதிகப்படும் என்று தோன்றவில்லை. தமிழிசைக்கும், அவர் அப்பாவின் அருகாமையால், காங்கிரஸ் மாதிரி செயல்படுகிறார்.

  • varadharajan சொல்கிறார்:

   this is the problem faced by our govt first.. could u pls list hw many interview given by the tngovt and ministers speak.. kindly mind.. oru statekku pathukapu nadavedikkai edukka therialiya… ask everything frm your central.. why do u people support them…. dmk r admk not saving our life… they can face their problems more than this……… k
   still we expect more from our cm, she can do it very simply.. thats true..

 2. Seetharaman சொல்கிறார்:

  Dear Mr KM
  TN govt miserably failed before floods and after relief. Everyone knows this fact. Though BJP attitude is wrong that’s why no one object due to State government failure. Please point out problems in State as well as Center on this issue.

 3. Rajasekar சொல்கிறார்:

  Dear Mr.KM
  I have been reading your blog for quite some time. Good indeed.
  I would like to see at least one article really critisizing JJ. I have not seen one so far in your website. You have been writing about everybody else, except JJ. What is your opinion about Vikatan’s article this week?
  For me, it only seems that you do not want to do.

  Regards
  Raj

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear Rajasekar,

   I have written earlier in these columns very clearly about my preferences.
   If you have not come across those comments now I repeat again –
   Whatever may be her minus points – She is the Best Administrator
   among all the political leaders in the field as on today.
   This is my opinion and I donot impose it on anyone.
   I hope you will agree that I am entitled
   to have my own opinion….!!!

   -with all best wishes,
   Kavirimainthan

   • paamaran சொல்கிறார்:

    // மோடி நாடு திரும்பிய பிறகுதான் தமிழகத்திற்கு மத்திய குழு வருமாம்.. சொல்கிறார் ராவ்!…….பிரதமர் மோடி இந்தியா திரும்பிய பின், தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை, மத்திய குழு ஆய்வு செய்வது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றார்…….. முரளிதர ராவ் …… மோடி நாடு திரும்பியதும் மறக்காமல் தமிழகத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டது, பார்த்து ஏதாவது செய்யுங்கள் என்று யாராவது நினைவூட்டினால் நல்லது..! // —— என்று ” கடைசி இரண்டு சொரனையான வரிகளில் குறிப்பிட்டு ” ஒன் இந்தியா தமிழ் பத்திரிக்கையின் செய்தி … !
    Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/central-team-tn-only-after-modi-returned-india-says-muralithara-rao-240447.html …… இது ரொம்பவும் தமிழக மக்களின் மீது பா.ஜ.க. வுக்கு உள்ள அபிரிதமான அக்கறையின் — வெளிப்பாடு …. அப்படி தானே ….. ? இவ்வாறான நல்ல செய்திகளை பற்றி ” பாராட்டி ” நீங்கள் எழுதாமல் இருக்கலாமா …. திரு .கா.மை … அய்யா … அவர்களே …. ?

   • LVISS சொல்கிறார்:

    Mr KM Apart from our C M Nitish Kumar Shivraj Chauhan Chandra Babu Naidu Vasundhara Raje and our P M are all good administers .Akilesh Yadav will become one in due course. Tripura C M is also good administrator

 4. ஆவி சொல்கிறார்:

  ராஜசேகர் ஐயா, காமை உட்பட யாரும் ஜேஜே நல்லவர்,வல்லவர்,சிறந்தவர் எனக் கூறியதில்லை. காய்கறிக் கடைக்கு சென்றால் இருப்பதில் நல்ல வெண்டைக்காய் எது என்று பார்த்து வாங்குவது போல், இன்றைய தமிழக அரசியலில் ஜே ஐ விட ஓரளவிற்காவது சிறந்தவர் இன்றைய நிலையில் யாரும் இல்லை. இருக்கும் ஒரு சில நல்லவர்கள் ஆடசிக்கு வரும் வாய்ப்பு இல்லாத நிலையில், இருப்பதில் சிறந்ததை தெரிவு செய்வதைத் தவிர வேறு வழி மக்களுக்கு இல்லை..

  ஜே தன் வழியை மீள் பரிசீலணை செய்து தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது.

  ஆனால்…………… மேலே மனிதாபிமானத்துடன் எழுதப்பட்ட கட்டுரை பற்றி கருத்தை வைப்பது நலம். மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல் அனாதையாய் நிற்கும் மக்கள் நிலை புரிந்து அரசியல் செய்யாது உதவுவதே மனிதாபிமானம்.

  ஜே கேட்டது நடுநிலையுடன் செயற்படும் குழு ஒன்று வந்து ஆய்வு நடத்தும்படிதான். பிணத்தின் மேல் நின்று அரசியல் செய்யும் விபச்சாரம் அல்ல.

  ஜே பற்றி விமர்சனம் வைத்த விகடன்,ஜூ.வி. பிரதிகளை திமுக வினர் இலவசமாக மக்களுக்கு விநியோகம் செய்கின்றனரே! அறியவில்லையா?அந்த விகடன் பற்றி விமர்சனம் எப்படி செய்ய முடியும். அது இன்று கட்சி சார்புப் பத்திரிகை என்பதை மறந்தது ஏனோ?

  தயவு செய்து யார் மீதும் கட்சி சாயம் பூசாதீர்கள். ரவி என்பவர் நடு நிலையுடன் கருத்து சொல்லியதைக் கூட சிலர் கட்சி சாயம் பூசி கொச்சைப் படுத்தியதை ஏற்கனவே இங்கே கண்டோம்.

  • ravi சொல்கிறார்:

   ஆவி , நன்றி .. ஆனால் சில சந்தேகங்கள் ..

   அம்மா சிறந்த நிர்வாகி — > தமிழக அளவில் என்று நினைக்கிறன் .. இந்திய அளவில் என்றால் — மன்னிக்கவும் ..

   அம்மாவுக்கு பதிலாக மோடி , தமிழகம் பதிலாக இந்தியா என்று போட்டு கொள்ளுங்கள் – > இதை தான் LVIS இங்கே கூறுகிறார்.

   பிணங்களின் மீது அரசியல் — ஒரு மாற்று கருத்தும் கிடையாது ..
   ஆனால், இங்கே அம்மாவுக்கு பதிலாக மஞ்ச துண்டு , எதிர் கட்சி அம்மா என்று வைத்து கொள்ளுங்கள்.. இதே வேலையை தான் அம்மாவும் செய்வார்…

   வேறு சில சந்தேகங்கள் ->
   2011 தானே புயல் – பாதிப்பு கடலூர் . 2015 – திரும்பவும் கடலூர் … 4 வருடம் என்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது …??? மாநில அரசு + உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் ஆளுங் கட்சி …

   சென்னை புறநகர் எடுத்து கொள்ளுங்கள் -> பாதி பகுதிகள் இன்னும் நகராட்சி, மாநகராட்சி ஆகவில்லை ..ஆனால் வளர்ச்சி மிக அதிகம் .. வசதிகள் ???
   50 சதவீத ஏரிகள் காணவில்லை … பாலாறு , வேகவதி ஆறில் வெள்ளம்,கொள்ளிடத்தில் வெள்ளம் .. எப்படி பார்த்தாலும் 10-15 டி.எம்.சி தண்ணீர் வீண் ..வீராணத்தில்,மதுராந்தகத்தில் தண்ணீர் திறப்பு ..

   தலைகீழ நின்றாலும் நம்மால் அணையோ, புதிய ஏரியோ கட்ட முடியாது .. இருப்பதை யாவது பத்திரமாக வைத்து கொள்ளலாமே சார்..

   வீராணம் எரி மாநில அரசின் கட்டுபாட்டில் வருகிறது .. இந்த ஏரிக்கு ஏதாவது பிரச்னை வந்தால் , கடலூர் , சிதம்பரம் பகுதியில் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும் .. இப்போதாவது ஏதாவது செய்வார்களா ?? இல்லை வழக்கம் போல மத்திய அரசு ஒன்றும் செய்யவில்லை என்று பிலாக்கணம் பாடுவார்களா !!!

   இன்று 940 கோடி கொடுப்பதாக கூறி உள்ளது மத்திய அரசு …
   நம் ஊரில் வீட்டுக்கு 5000 கொடுப்பார்கள் . 2016/17/18/19 – அடுத்த புயல் — திரும்பவும் மத்திய நிதி !!!
   இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை …

   கொசுறு — மத்திய அரசு சரியான பாதையில் செல்கிறது – திரு அத்வானி

 5. paamaran சொல்கிறார்:

  வில்லன்களாவது மனம் மாறி திருந்துவார்கள் …. ஆனால் இவர்கள் — ? அதைவிட வேறு ஏதாவது டைட்டில் இருந்தாலாவது அதற்காவது பொருந்துவார்களா என்பதே சந்தேகம் தான் …. பெரும்பாலும் ” விதண்டாவாத – விவாதங்களை ” தவிர்ப்பது — நமது நிலைக்கு நல்லது என்று நினைப்பவர்கள் பலர் … ! வேண்டுமென்றே மற்றவர்களின் கருத்துக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல் — அவர்களை ஏதோ ஒரு வளையத்துக்குள் அடைக்க நினைத்து — அற்ப சந்தோஷம் அடைய நினைப்பவர்கள் சிலர் …. !! இந்த மாதிரியான ஆட்களுக்கு சொந்த விருப்பமே பெரிதாக இருக்குமே தவிர — நாட்டின் — மக்களின் — நலனில் எந்தவித அக்கறையும் இருக்காது … முக்கிய நிகழ்ச்சியில் ” தேசிய கொடி ” தலை கீழாக இருந்தால் — எல்லோரும் சிரசானம் செய்து பார்த்து கொள்ளுங்கள் – நேராக தெரியும் என்று வியாக்கியானம் செய்யும் ” அறிவுஜீவிகள் — யோகாசன வல்லுனர்கள் ” …. !!! யாரை சொல்லி என்ன லாபம் — என்று விட்டத்தை பார்த்து புலம்ப வேண்டியது தான் … நம்முடைய இன்றைய நிலைமையாக இருக்க வேண்டுமா …. ?

 6. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  மலேஷியா போய் அங்கு தமிழில் பேசி, இந்திய வளர்ச்சிக்கு தமிழகத்தின் பங்கு சிறப்பாக உள்ளது என்று மோடி மாமா சொன்னதை எல்லோரும் மறந்ததை நான் கண்டிக்கிறேன்

 7. ஆவி சொல்கிறார்:

  மருத்துவரிடம் போகிறோம். உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவருக்கு முன்னுரிமை தரப்படுகிறது. திருப்பதி போல் நடிகர்களுக்கு முன்னுரிமை தரப்படுவதில்லை.
  தமிழ் நாட்டில்-இந்தியாவில் பிரச்சனைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை வெளிக் கொணருகிறார்கள். ஜே யின் தலையை கழுவ ஆரம்பித்தால்,தமிழ் நாட்டில் பலரின் தலையை மட்டுமல்ல உடலையும் கழுவி ஊற்ற வேண்டி ஏற்படலாம். வேண்டாம் இந்த விபரீத ஆசை. முக்கிய பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

  யாரை சிறுபான்மையினர் என்கிறார் என்று தெரியவில்லை. Secularism என்பதற்கு முதலில் சரியான பொருளை புரிந்து கொள்ளலாமே!
  //இடதுசாரிகளைப் போல மோடியும் செக்யூலரிஸ்ட்தானே. பாராட்டுங்கள் பாமரன்.// காமெடி ஒன்றும் பண்ணலையே!

  பாமரன் மீது போர் தொடுக்காமல் சொல்லப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்தால் வாதம் ஆரோக்கியமாக செல்லும். உண்மைகளும் வெளியே வரும்.

 8. paamaran சொல்கிறார்:

  நண்பர்களே …. ! நான் சென்னைவாசி என்றும் — மூன்று மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள சேதத்தை உலகத்திற்கே வந்து விட்டதா ..? என்றும் ….. என்னென்னவோ கூறி மறுமொழிகள் பல வந்து கொண்டு இருக்கின்றன ….. நல்லது …. !! என்னுடைய பெரும்பாலான பின்னூட்டங்களின் கடைசியாக ” ஒரு கேள்வி குறியோடு ” முடித்திருப்பேன் ….. அந்த கேள்வியானது —- மிகவும் அனுபவம் வாய்ந்த — நாட்டு நடப்புகளை விரல் நுனியில் வைத்துள்ள திரு.கா.மை.. அவர்களை நோக்கியே அன்றி —- மற்றவர்களை நோக்கி அல்ல ….. நான் நவம்பர் மாதம் 13 — ம். தேதியிட்ட பின்னூட்டத்திற்கு அய்யா கா.மை அவர்கள் கொஞ்சம் இளம் சூடாகாவே பின்வரும் மறுமொழியை இட்டு இருந்தார்கள் ….. // anyway – என் கருத்தை நான் சொல்லி விட்டேன்…
  உங்கள் எண்ணம் எதுவாக இருந்தாலும் சரி –
  அது உங்கள் உரிமை…

  இதற்கு மேல் தொடர எனக்கு விருப்பமில்லை. நன்றி….

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன் // என்று …… ” தற்போது நானும் அதே பாணியில் நன்றியுடன் ” …… !!!

 9. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  It t is surprising to note that Minister Nirmala seetharaman has become a seasoned politician.

 10. LVISS சொல்கிறார்:

  The Central Govt has announced aid of Rs939 crores today.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.