திருவாளர் EVKS இளங்கோவனின் இளமைக்காலம் பற்றி …..!!!

.

.

அரசியல்வாதிகள் ஒவ்வொருவரைப் பற்றியும் நாம் ஒவ்வொரு விதத்தில் எடை போட்டு வைத்திருப்போம். அவை அனேகமாக, அவரது கடந்தகால, நிகழ்கால – பொதுவாழ்வு மற்றும் செயல்பாடுகளை அடிப்படையாக கொண்டே அமைந்திருக்கும்.

பெரும்பாலான தலைவர்களின் இளமைக்கால, சொந்த
தனிப்பட்ட வாழ்க்கை பற்றி
நமக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை…

ஓரளவு மரியாதையான பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர் –
ஒரு தமிழ் திரைப்படத்தில் சொல்வாரே –
“நான் சாதா போலீஸ் அல்ல – பொறுக்கி போலீஸ்” என்று …

அதுமாதிரி –
நான் இன்று தான் இப்படி என்றில்லை –
அன்றே இப்படித்தான்
என்று ஒரு அரசியல் கட்சியின்
தலைவர் சுயவாக்குமூலம் கொடுத்தால் –
அது சுவையாகத்தானே இருக்கும்….?

நான் படிக்க நேர்ந்ததை நீங்களும் படிக்க –
கீழே பதிப்பித்திருக்கிறேன்…..

evks-final-1

evks - final-2

evks-3

evks -4

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to திருவாளர் EVKS இளங்கோவனின் இளமைக்காலம் பற்றி …..!!!

 1. LVISS சொல்கிறார்:

  Mr EVKS Elangovan is different from many politicians — He is quite frank — I remember reading some time back that he was a fan of American singer Elvis Presley —

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  இரு நடிகை களுக்கு நடுவில் அமர்ந்து தான் அவர் பேட்டி கொடுக்கிறார். இன்னும், இரு நடிகைகளை கட்சியில் இணைத்து விடவும் முயற்சிப்பதாக ஒரு செய்தி படித்தேன். அப்படி எனில், மேடையில் இவர்கள் ஐவர் மட்டும் தான் இருப்பார்கள் என எண்ணுகிறேன். இரு பக்கமும் இருவர். EVKS அரசியலே தனி தான்.

 3. paamaran சொல்கிறார்:

  திருவாளர் EVKS இளங்கோவனின் இளமைக்காலம் பற்றி …..!!! நன்றாக தெரிந்து கொண்ட நண்பர்களின் பார்வைக்கு —– திரு சுப்ரமணியசுவாமி அவர்களை பற்றி — ஒரு சுவாரஸ்யமான ஒரு செய்தி : —- // ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » இந்தியா சு.சுவாமி ட்விட்டரில் பயன்படுத்தும் vk, buddhu, pc, bc, elis, dd, porkis.. இதற்கான அர்த்தம் இதுதான்! Posted by: Mathi Updated: Monday, November 23, 2015, 13:20 [IST] …… டெல்லி: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமியின் பேட்டிகள்தான் சர்ச்சைக்குரியது என்பதல்ல…அவரது ட்விட்டர் பக்கமும் படு சர்ச்சைக்குரியது… அதுவும் அவரது விமர்சனங்களில் நேரடியாக பெயரைக் குறிப்பிடாமல் elis, dd, porkis.. என ‘கோட் வேர்டு’களைத்தான் பயன்படுத்துகிறார்.. சுப்பிரமணியன் சுவாமியின் இத்தகைய “கோட் வேர்டு’களுக்கு அர்த்தம் கண்டுபிடிக்க அலையாய் அலைய வேண்டும்… இதனால் அவரது தனி டிக்சனரியே இப்போது போடப்படும் நிலைமை உருவாகிவிட்டது… சுப்பிரமணியன் சுவாமியின் கோட்வேர்டுகளும் அவற்றுக்கான விளக்கங்களும்…. vk- vishkanya – விஷகன்னி … = காங்கிரஸ் தலைவர் சோனியா சோனியா காந்தி TDK – TaDaKka – அரக்கி தடாகை = சோனியா காந்தி Buddhu – இந்தியில் முட்டாள் = ராகுல் காந்தி RaGa= ராகுல் காந்தி Booze / Bottle- மது அடிமை = பிரியங்கா காந்தி Robber / Robber Damad – திருட்டு மருமகன் = ராபர்ட் வதேரா Shree 420 – மிஸ்டர் மோசடிபேர்வழி = அரவிந்த் கேஜ்ரிவால் Aaptards = குருட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் CRT – Congi Reptile Tweeple = காங்கிரஸ் ஜந்துகள் PT = Patriotic Tweeple = தேசபக்தர்கள் Fibral = A liberal who fibs = பொய் புரட்டர்கள் PC = Papa Chor / Pucca Chor / Pakka Chor = திருட்டு தந்தை= முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் BC = Baby Chor = குட்டி திருடன் = ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் Rascal- காங். செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா MMS – மன்மோகன்சிங் JJ – ஜெயலலிதா MK – கருணாநிதி DD/ DDs- Dravidian Draculas – திராவிட டிராகுலாஸ் = திராவிட கட்சிகள்/ திராவிடர் இயக்கங்கள் Porki/ Porkis= Porukki = பொறுக்கிகள் = பொறுக்கிகள் = திராவிட இயக்கத்தினர், தமிழ் உணர்வாளர்கள்…Eli/ Elis = எலிகள்= தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் //
  Read more at: http://tamil.oneindia.com/news/india/subramanian-swamy-s-abbreviations-used-twitter-240498.html …. படித்து தெரிந்து கொண்டுவிட்டிர்களா …?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன்,

   இந்த அனுபவத்தை வைத்துக் கொண்டு –
   நமது வலைத்தளத்தில் பயன்படுத்துவதற்கு,
   சு.சுவாமிக்கு பொருத்தமாக ஒரு பெயர் கூறுங்களேன்….
   நம் நண்பர்கள் அனைவருக்கும் உபயோகமாக இருக்கும்…!!!
   ( இரண்டு மூன்று option கொடுங்கள்…
   அதிலிருந்து எதாவதொன்றை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்…)

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • paamaran சொல்கிறார்:

    அய்யா …. ! எனக்கு தெரிந்தவரையில் சு.சுவாமிக்கு … பொருந்தினால் ஏற்றுகொள்ளுங்கள் : 1 . Jag .J .Ki . = ஜகஜால கில்லாடி { JAGAJAALA KILLAADI } … 2 . M . V . = மிரட்டல்வாதி { MIRRATTAL VAADHI } .. 3 . V . P . M . = வழக்கு போடும் மன்னன் { VAZHAKKU PODUM MANNAN } ஒத்துவரவில்லை என்றால் தாங்களோ மற்ற நண்பர்களோ — நல்ல பெயரை தெரிவியுங்கள் …. !!!

    • இளங்கோ சொல்கிறார்:

     சார், நானும் சேர்ந்து கொள்ளலாமா ?
     போக்கிரிசாமி, கப்சாராஜா,
     ப்ளாக் மெயில் மன்னன் ?

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      எனக்குத் தோன்றிய இரண்டு –

      பொர்க்கிசாமி, ( மூலம் – porkis ….! )

      திகம்பர சாமியார் ….!!!

      ————–
      பல வருடங்களுக்கு முன்னர்
      ( 65-70 ஆண்டுகளாவது ஆகியிருக்கும் ..) வடுவூர் துரைசாமி
      அய்யங்கார் அவர்கள் நாவலாக எழுதி, பின்னர்
      எம்.என்.நம்பியார் நடித்து வெளிவந்த படம்
      திகம்பர சாமியார் ( அல்லது கும்பகோணம் வக்கீல் ).
      எம்.என்.நம்பியார் அதில் பல வேடங்களில் வருவார்…!!!

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 4. Nithya சொல்கிறார்:

  Ayyaa.. neenga appadiyee JJ voda ilamai kaalam..MGR kaalam..Sasikala Kaalamnu 91 -96 (best administration period) 2001-2006( the best administration) 2011-2016- SUPER POWER administration patthi eluthungaa…engalukku udaviyaa irukkum.

 5. paamaran சொல்கிறார்:

  ஐயோ …. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பற்றிய மேலே உள்ள செய்தி திரு. கா.மை. அவர்கள் எழுதியது இல்லை …. அவர் படித்ததுதான் …… ! மற்றவர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ” குமுதம் ” பத்திரிக்கையின் “கடற்கரய் ” அவர்களை தொடர்பு கொண்டால் — அவர் கண்டிப்பாக எழுதி பிரசுரம் செய்யாமலா — இருக்க போகிறார் …?

 6. Nithya சொல்கிறார்:

  paamaran sir..namellorum paamaraththanam irukkurathanaalathaan KM aiyaa eluthikittey irukkaru..then safer-aa ithu kumudamla pottathnu solla vaikiraaru..MODI pathi ill KD pathi vimarisanam panravaru ..pothu veliyil..avaru saarntha ADMK ku ethiraa pesuravanga pathrikkai kurippa mattum poduvaaru.. Anantha vikatan kattruai patthi ketta atha KD vaangittaanganuvaaru..BJP ministers sari illanuvaaru..aanaa JJ vaakala perumakkaleynu flood vantha idaththula pesinatha pathi solla maattaru..BJP ministers flightla vanthathu arasanga selavunu kanneer vadipparuu.. aana athikarigal kodai nadukkum, siruthavoorukkum,bangalorekkum alanthathai patthi kannerr vidamaattaru..athu sari avarukku pidichatha avaru solluraaru…aana enna ivar ADMKla sernthuttu innum nalla pesalaam…inimey intha site pakkam varavey maaten oru manasaatchiye illatha site padikirathukku ….athu sari yaar unnai padikka sonnathunu neenga thitturathu ketkuthu…

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் நித்யா,

   நான் கடந்த 5 ஆண்டுகளாக இந்த வலைத்தளத்தில்
   எழுதி வருகிறேன்.

   கலைஞர்/ஸ்டாலின் பக்தர்களுக்கு பிடிக்கவில்லை
   என்பதற்காக என் போக்கை மாற்றிக் கொள்ள முடியாது.
   என் மனதில் சரியென்று தோன்றுவதைத்தான் நான் எழுதுவேன்.
   என் எழுத்தை கடந்த 5 வருடங்களாகப் படித்து வருபவர்களுக்கு
   என்னைப் பற்றி நன்றாகவே புரியும். புதிதாக நேற்று வந்த உங்கள் சர்டிபிகேட் அவர்களுக்கு தேவை இல்லை.

   உங்களை இங்கே வாருங்கள் என்று யாரும்
   “வெற்றிலை பாக்கு” வைத்து அழைக்கவில்லை.
   அதே போல் இனி வர மாட்டேன் என்று சொன்னாலும்
   யாரும் கவலைப்படப்போவதில்லை.

   போய் வாருங்கள் …. All the Best…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • இளங்கோ சொல்கிறார்:

    கே.எம்.சார்,
    நீங்கள் எடுத்திருக்கும் நிலை மிகச்சரியானது.
    நீங்கள் விரும்பி அதிமுகவை ஆதரிக்கவில்லை என்பதை
    உணற முடிகிறது.
    தமிழருவி மணியன் அவர்கள் கூறியது போல்
    திமுக, அதிமுக இரண்டின் பிடியிலிருந்தும் தமிழ் நாட்டை
    விடுவிக்க வேண்டும். முதலில் திமுகவை ஒழித்தால் தான்
    வேறு எதாவது ஒரு புதிய சக்தி அந்த இடத்திற்கு வரும்.
    அதன் பிறகு அதிமுகவை வீழ்த்துவது சுலபம்.
    திமுகவை அழிக்க ஜெ.யால் மட்டுமே முடியும்.
    எனவே இப்போதைக்கு திமுகவை ஒழிக்க என்ன செய்ய வேண்டுமோ
    அதைத்தான் செய்ய வேண்டும். உங்கள் கருத்துக்களுக்கு எப்போதுமே
    என் ஆதரவு உண்டு. நன்றி.

 7. ஆவி சொல்கிறார்:

  நித்தியா அவர்கள் தமிழில் எழுதினால் புரிந்து கொள்வது சுலபமாக இருக்கும்.
  புரிந்து கொண்டது…..//அவரு சார்ந்த ADMK கு எதிரா பேசுறவங்க பத்திரிக்கை குறிப்பா மட்டும் போடுவாரு………….ஆனா JJ வாகள பெருமக்கலேய்னு flood வந்த இடத்துல பேசினத பத்தி சொல்ல மாட்டரு ..BJP ministers flightla வந்தது அரசாங்க செலவுன்னு கண்ணீர் வடிப்பரூ .. ஆனா அதிகாரிகள் கோடை நடுக்கும் (கொடா நாட்டுக்கும்?) , சிருதவூருக்கும் ,பங்கலோறேக்கும் (பெங்களூருக்கும்) அளந்ததை பத்தி கண்ணீரர் விடமாட்டாரு ..அது சரி அவருக்கு பிடிச்சத அவரு சொல்லுறாரு …ஆனா என்ன இவர் ADMKla சேர்ந்துட்டு இன்னும் நல்ல பேசலாம் …இனிமே இந்த site பக்கம் வரவே மாட்டேன் ஒரு மனசாட்சியே இல்லாத சைட் படிக்கிறதுக்கு ….அது சரி யார் உன்னை படிக்க சொன்னதுன்னு நீங்க திட்டுறது கேட்குது //…………………..

  ஒன்னு புரியலை…………..நித்தியா அவர்களே! நீங்கள் யாரைத் திட்டுகிறீர்கள்? பாமரனையா அல்லது காமை யா?

  நீங்கள் திட்டினாலும் சரி,வாழ்த்தினாலும் சரி.இது என்னுடைய கருத்து…………..

  குறிப்பிட்ட பிரபலங்களைப் பற்றி மட்டும் எழுதினால் விமர்சனம் கட்சி சார்பாகி விடலாம். நடப்பு பிரச்சனகளை விமர்சனம் செய்தால் படிப்போருக்கு ஓரளவாவது போய் சேரலாம்.
  இப்போது இருக்கும் சிலரில் ஓரளவு சிறப்பு ஜேக்கு உண்டே தவிர, SUPER POWER administration என்று சொல்லும் அளவிற்கு ஜே அவர்கள் இல்லை.
  அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சனம் எழுத ஆரம்பித்தால் நல்லதையும் கெட்டதையும் எழுதினால் தான் நடுநிலையுடன் எழுதியதாகும். ஜேயின் SUPER POWER administration இல் கழுவி ஊற்றப் பல உண்டு. சகித்துக் கொள்வார்களா அதிமுக வினர்?

 8. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எழுதின கட்டுரை இ.வி.கே. பற்றியது. குமுதத்தில் வந்தது. அதனை ரசித்து கா.மை அவர்கள் தந்துள்ளார்கள். உடனே, அவரை எழுதவில்லை, இவரை எழுதவில்லை என்றால் என்ன பண்ணுவார்? நிற்க…

  இ.வி.கே அவர்கள் தடாலடி. கொஞ்சம் யோசித்துச் செய்தாரென்றால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஆனால், செத்த பாம்பைக் கையில் எடுத்து, உயிரோடு இருக்கிறமாதிரி வைத்திருக்கும் திறமை உடையவர் அவர். வாசன் அவர்கள் வெளியேறியபோது, காங்கிரஸ் அவ்வளவுதான் என்று எல்லோரும் எள்ளி நகையாடினார்கள். ஆனால், இன்றைக்கு, வெறும் 3 சதவிதம் மட்டும்தான் ஆதரவு இருக்கிறது என்று கூறப்பட்ட காங்கிரஸ், பெரும்பாலான நாட்களில் பத்திரிகைச் செய்தியில் இருக்குமாறு உயிர்ப்போடு வைத்துள்ளவர் இளங்கோவன் அவர்கள்தான். அவர் மற்றவர்களைப்பற்றிக் கடுமையாகப் பேசுவது எரிச்சலாக இருக்கும். ஆனாலும், அரசியலில் (அதுவும் இப்போது) அப்படித்தான் செய்யவேண்டியிருக்கிறது. இவர், ப.சிக்கும், தங்கபாலுக்கும் மற்றவர்களுக்கும் எவ்வளவோ மேல்.

  இவர் (தலைமை ஒரு நிலை எடுக்காதவரை) திமுக அதிமுக இரண்டையும் விமர்சிப்பதால் கடுமையான எதிர்ப்புக்களைச் சந்திக்கிறார். காங்கிரஸில் உள்ள திமுக அல்லைக்கைகள், அதிமுக அல்லக்கைகள் என்று ஒருசேர நிறைய பேரின் விமரிசனத்திற்கு ஆளாகிறார்.

  இவரைத் தலைவராக்கியது, சோனியா செய்த சரியான செயல்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.