துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் கருத்து – மழை-வெள்ளம், அரசு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து …..!!!

.

.

இன்று வெளியாகி இருக்கும் “துக்ளக்” வார இதழில் மழை-
வெள்ளத்தில் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ்நாட்டின்
நிலை குறித்தும், அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள்
குறித்தும் “துக்ளக்” ஆசிரியர் “சோ” அவர்கள் தலையங்கத்தின்
மூலம் தனது கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்.

ஆசிரியர் “சோ” மருத்துவமனையில் இருக்கிறாரே – அவரால் தலையங்கம் எழுத முடிகிறதா ? என்று ஆச்சரியப்படுகிறீர்களா ? நிச்சயமாக இது அவர் எழுதியது தான்….

இது குறித்து – தலையங்கத்தின் இறுதிப்பகுதியில்
கூறப்பட்டிருப்பது போல் இன்னொரு முக்கிய விஷயமும்
இருக்கிறது. அதை இப்போதே சொல்வதை விட, நாம்
கொஞ்சமாவது விவாதித்த பிறகு சொல்வது விவாதத்தில்
சுவையை கூட்டும் என்று நினைக்கிறேன்.
எனவே, அந்த செய்தியை – நாளை வெளியிடுகிறேன்.
அதற்கு முன்னதாக விவாதங்கள் நடக்கலாமே…!

thug.1

thug.edit-2

.
பின் குறிப்பு – ஒரு வேளை நண்பர்கள் யாராவது இந்த
தலையங்கத்தை ஏற்கெனவே படித்து விட்டீர்கள் என்றால் –
தயவு செய்து அந்த suspense -ஐ பின்னூட்டத்தின் மூலம்
வெளியிட வேண்டாம் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்
.

—————————————–

25/11/2015 –

தலையங்கத்தின் இறுதியில் கூறப்பட்டிருந்த
முக்கிய செய்தி இது தான் –

thug.edit-3

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to துக்ளக் ஆசிரியர் “சோ” அவர்களின் கருத்து – மழை-வெள்ளம், அரசு, எதிர்க்கட்சிகளின் செயல்பாடு குறித்து …..!!!

 1. paamaran சொல்கிறார்:

  இதே பாணியில் இன்றைய தினமணி பதிப்பின் : — தலையங்கம்
  அரசியல் நடத்துவது அழகல்ல!
  By ஆசிரியர்
  First Published : 24 November 2015 01:17 AM IST …. இந்த ” தினமணி ” செய்திதாளின் தலையங்கத்தையும் அனைவரும் படித்தால் நடப்பை புரிந்துகொள்ள ஏதுவாக — இருக்கும் …. ! அதிலிருந்து ஒரு சில பகுதிகள் :— // மத்திய அரசு 939.63 கோடியை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பித்துள்ளது….. இந்த நிவாரணம் முதல் கட்டம்தான். தமிழக முதல்வர் ஏற்கெனவே ரூ.500 கோடியை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக விடுவித்துள்ளார். தற்போது மத்திய அரசு வழங்கும் நிதியும் கிடைத்துள்ளதால் நிவாரணப் பணி கள் முடுக்கிவிடப்படும். தமிழக முதல்வர் கோரியுள்ள முழு அளவு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு கணிசமாக வழங்கும் என எதிர்பார்க்கலாம்…… நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை மற்றும் பேட்டிகள் அளித்து வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வருவதும், வீடுகளை இழந்தவர்களுக்கு தாற்காலிக முகாம் அமைத்துத் தருவதும்தான் முதல் கட்டப் பணி. அதனை தமிழக அரசு செய்து வருகிறது. இன்னமும் மழை நீர் வடியவில்லை என்பதை அரசின் மீதும் குற்றச்சாட்டாகச் சொல்ல முடியாது.
  சாதாரண சுரங்கப் பாதையில் தேங்கும் நீரைப் போன்று, ஒவ்வொரு புறநகர்ப் பகுதியிலும் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்றுவது சாத்தியமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உறைவிடம் ஆகியவற்றைத் தடையற வழங்குவதும், போக்குவரத்துக்கு வழி செய்வதும்தான் இப்போதைக்கு உடனடியாக இயலக்கூடியவை. மின் இணைப்புகளைச் சீர்செய்தல், பாதைகளைச் சரிசெய்தல் எல்லாமும் மழை நின்ற பிறகே மேற்கொள்ள வேண்டிய பணிகள். மழை வெள்ளச் சேதங்களை வைத்து அரசியல் நடத்துவது அழகல்ல ……ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த ஏழைகளுக்கு மீண்டும் வீடு கட்டவும், பயிர் இழப்பீட்டை தாமதமின்றி மதிப்பீடு செய்யவும் தொழில்கருவிகள் வழங்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
  மழைநீர் வடிகால்களையும், கழிவுநீர் வடிகால்களையும் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அரசு போதிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் இல்லை. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, 2012-13இல் ரூ.136.05 கோடி, 2013-14இல் ரூ.215 கோடி, 2014-15இல் ரூ.450 கோடி என்று ஒதுக்கீடு பெற்றிருக்கிறது. மழைநீர் வடிகால் குழாய்கள் வழியாக வடிந்ததெல்லாம் மக்களின் வரிப் பணம்தானே தவிர, தண்ணீர் அல்ல என்பதை வெள்ளம் தேங்கிக் கிடக்கும் சாலைகள் வெளிச்சம் போடுகின்றன.//. …. என்று தொடர்கிறது … !!! காலத்திற்கு ஏற்ற நடுநிலையான தலையங்கம் …. தானே ….?

 2. Ganpat சொல்கிறார்:

  திரு சோவிடம் இந்த தலையங்கத்தை பத்திரப்படுத்தி வைத்துக்கொள்ள சொல்லுங்கள்.2025 ஆம் ஆண்டு தேவைப்படும்

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சார்…கட்டுரையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே இது தோன்றிவிட்டது. இது மட்டுமல்ல. இதுபோல் இன்னும் பல வருடங்களுக்கும் மீள்பதிவு செய்தாலும் தெரியாத அளவு, அன்றைய நிலைக்குப் பொருந்துவதுபோல் ஆயிரம் கட்டுரைகளாவது சோ எழுதியிருப்பார். இதை எண்ணி வெட்கப்பட வேண்டியவர்கள், நம்மை ஆளுபவர்களும், அவர்களைத் தெரிந்தெடுத்த நாமும்தான்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.