ஆனாலும் பி.எம். வேலை ரொம்ப கஷ்டம் சார் ….!

.

.

பிரதமர் வெளிநாடுகளில் டூர் போனால் ஜாலியா இருக்கார்னு நிறைய பேர் நெனைச்சுக்கிட்டிருக்காங்க…
அவர் படற அவஸ்தை அவருக்கில்ல தெரியும்…

என்னென்ன பண்ண வேண்டியிருக்குன்னு பார்த்தால் தான்
உங்களுக்கும் புரியும்.

க்ரூப் போட்டோவுக்கு நிக்கறதுக்குள்ளயே தாவு தீர்ந்துடும்….

with all heads of nations at malaysia-1

கண்ட ட்ரெஸ்ஸை எல்லாம் மாட்டிக்கச் சொல்லி சங்கடப்படுத்துவாங்க …

heads of states in traditional dress-2

கையை முறுக்கி எல்லாம் சுளுக்கு வராம பத்திரமா
போஸ் கொடுக்கணும் ….

joining hands-3

பாக்கற மத்த நாட்டு பிஎம் கூட எல்லாம்
மறக்காம செல்பி எடுக்கணும் ….

selfie with sing.pm-4

என்ன வரப்போகுதுன்னு தெரியாம வெயிட் பண்ணணும்….

waiting in k.vilas-5

இது ஒண்ணு தான் திருப்தியான வேலை ….

eating time-6

தட்டு நெறைய எதிரே வெச்சிருந்தாலும்,
ஒண்ணு தான் சாப்பிடணும்….

k.vilas -vada-7

தமிழர்களின் பெருமை –

Singapore: Prime Minister Narendra Modi with his Singaporean counterpart Lee Hsien Loong leaves , at Komala Vilas Restaurant, Little India, Singapore on Monday. PTI Photo(PTI11_23_2015_000309B)

Singapore: Prime Minister Narendra Modi with his Singaporean counterpart Lee Hsien Loong leaves , at Komala Vilas Restaurant, Little India, Singapore on Monday. PTI Photo(PTI11_23_2015_000309B)

பின் குறிப்பு –

நகைச்சுவையாக போடப்பட்ட இடுகை இது.
பாஜக நண்பர்கள் இதை ஸ்போர்டிவ்-வாக
எடுத்துக் கொள்ள வேண்டும்.

உண்மையில் நான் இந்த புகைப்படங்களை எல்லாம்
நான் மிகவும் ரசித்தேன்….
முதல் தடவையாக, தமிழர்கள் அதிகம் இருக்கும்
வெளிநாடுகளுக்குச் சென்று தமிழர்களின் முக்கியத்துவத்தை
பற்றியும் மோடிஜி அவர்கள் உணற ஒரு சந்தர்ப்பம் உண்டு
பண்ணியதற்காக, இந்த பயணத்தை நான் மிகவும்
ரசிக்கவே செய்தேன்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

17 Responses to ஆனாலும் பி.எம். வேலை ரொம்ப கஷ்டம் சார் ….!

 1. theInformedDoodle சொல்கிறார்:

  கடந்த 15 நாட்களாக தமிழகத்தைக் குலைக்கும் மழையினால் ஆன உயிர் சேதம் பற்றியும் மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் பற்றியும் வாயே திறக்காமல் இருக்கிறாரே நமது பிரதமர்!

 2. mageswari சொல்கிறார்:

  நல்லா தான் சொன்னீங்க….. வாழ்த்துக்கள்.
  நன்றி.

 3. paamaran சொல்கிறார்:

  // மலேசியாவில் நின்று கொண்டு தமிழகத்தைப் பாராட்டிய மோடி… இந்தியாவுக்கு உதவுமா?முதலில் குறிப்பிட்ட வார்த்தை. வணக்கம் என்று சொல்லி பின் … இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்கு மகத்தானது, பெரிதானது….. மேலும் மோடியின் இந்தப் பாராட்டுக்கு மலேசிய தமிழர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கைத்தட்டல் காதைப் பிளந்தது. மலேசியத் தமிழர்களைக் குறி வைத்து மோடி தனது பேச்சை தொடர்ந்தார். இடையே திருவள்ளுவரையும், திருக்குறளையும் தனது பேச்சின் ஊடாக செருகி தமிழர்களை சென்டிமென்ட்டாக டச் செய்தார் மோடி….. ! // இந்த செய்தியோடு — மோடிஜியை ஒரு “சேல்ஸ் ரெப்” போல பேசி வருகிறார் … என்று கொச்சைபடுத்தி செய்தி வெளியிட்ட ” ஒன் இந்தியா தமிழ் ” பத்திரிக்கையை எதில் சேர்ப்பது என்பதை — நண்பர்கள் புரிந்து கொண்டால் நல்லது …. !
  Read more at: http://tamil.oneindia.com/news/india/will-modi-lure-the-malaysian-investors-india-240496.html ….. கோமள விலாஸ் வடை —- இந்தியாவின் வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு — திருவள்ளுவர் —திருக்குறள் — என்று தமிழில் பேசி அசத்தியதையும் பார்க்கும்போது …… வெள்ள நிவாரணம் கணிசமாக கிடைக்க வாய்ப்பு …. இருக்குமோ ….?

 4. KuMaR சொல்கிறார்:

  Super KM Sir

 5. ஆவி சொல்கிறார்:

  நல்ல அரசியல்வாதிகள் வாழ்ந்த மண்ணில் இன்று நரிகள் வாழ்கிறார்கள். நாம் அவர்கள் வாய்வீச்சில் (வாள் வீச்சாக எண்ணி) ஏமாறுகிறோம்,அவ்வளவுதான்.
  வள்ளுவனுக்கு பூனூல் போட்டு அழகு பார்த்த ஆர்.எஸ்.எஸ். தருண் விஜயின் கபடத்தனத்தையும் பார்க்கிறோம்.
  பலரும் நம்பிக்கை வைத்த வைகோ மாறி விட்டதையும் பார்க்கிறோம்.
  இன்றைய அரசியல்வாதிகள்………………எப்படி சொல்ல…………..?

  “தொழுதகை உள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
  அழுத கண் நீரும் அனைத்து”

  • ravi சொல்கிறார்:

   தமிழ் நாட்டிற்கும் பூனூலுக்கும் என்ன பிரச்சனையோ !!
   பூணுல் போட்ட திருவள்ளுவர் , போடாதவர், சைவர், பௌத்த திருவள்ளுவர் , சமண திருவள்ளுவர்(முக்குடையுடன் ) .. இப்படி பல உருவங்கள் உள்ளன ..
   திருக்குறளுக்கு சைவம் சார்ந்த உரை உள்ளது .. அருணை வடிவேல் முதலியார் எழுதியது …
   இன்று நாம் பார்க்கும் திருவள்ளுவர் படம் அரசாங்கத்தால் (மஞ்ச துண்டு உபயம்) செய்தது .

   எப்படியும் நாம் திருக்குறள் , சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் , பாரதி ,பாரதிதாசன் (கழகங்கள் ஓரளவுக்கு இவரை கண்டு கொண்டன ) போன்றவற்றை மறந்து கொண்டு இருக்கிறோம் .. .தருண் விஜய் யாவது இவரை கண்டு கொள்ளட்டும்.

   இன்று தெய்வநாயகம் , திருவள்ளுவர் கிறிஸ்தவர் என்கிறார் !!!

   மயிலை திருவள்ளுவர் ஆலயம் பழமையானது .. அங்கு உள்ள சிலை பூணுல் /உத்தரியம் இவற்றோடு உள்ளது ..
   அந்த சிலையை என்ன செய்வது !!!

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  வெளிநாட்டுக்கு போய் ” இந்திய தேசம் பன்முக தன்மை கொண்டது” என்பார்கள், இங்கு வந்தால் அதெல்லாம் ஒரு சொல் வராது.

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ‘நீங்கள் வஞ்சப் புகழ்சியாக எழுதியிருந்தாலும், தலைவர்கள் வேலை படு கஷ்டமானதுதான். சமயத்தில் அவர்களை வழி’நடத்துவது (அழுத்தம் கொடுப்பது) வியாபாரப் பெருந்தலைகள்தான். கருணானிதி அவர்களும் எத்தனை முறை, தலைமைப் பதவி என்பது ரொம்ப கஷ்டமானது என்று குறைப் பட்டிருக்கிறார். அதில் அதிசயம், அத்தனை கஷ்டமான பதவிக்குப் போராடுவதுதான்.

  இந்தப் பச்சைக்கலர் ஜிங்குச்சாவெல்லாம் யார் தேர்ந்தெடுப்பார்கள்? நல்ல ரசனை (தலைவர்களை ராமராஜன் டிரெஸில் பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட.

 8. LVISS சொல்கிறார்:

  But the heading does not suggest even remotely that it is written in jest–When our PMs visits other states within the country he is made to wear the traditional dress of that state — In the photo not only he but also the Japans PM and another leader is wearing the coloured dress– The link below will give an idea about PMs food habits and few other things –He is known to be a minimal eater —-

  http://zeenews.india.com/news/general-elections-2014/the-secret-of-narendra-modis-fitness_932343.html

 9. LVISS சொல்கிறார்:

  Our PM is the most misunderstood politician -Those who meet him personally come out with a different opinion about him –Sajjad Lone who features in this news in now a minister in the Jammu and Kashmir cabinet

  http://indianexpress.com/article/india/india-others/former-separatist-leader-sajjad-lone-floored-after-meeting-pm-modi/

 10. paamaran சொல்கிறார்:

  தினமணி செய்தித்தாள் தலையங்கம்
  ஆமிர்கானும் சகிப்புத்தன்மையும்!
  By ஆசிரியர்
  First Published : 26 November 2015 03:49 AM IST ….. இதில் ” இப்போது இந்தியாவை ஏன் சகிப்புத்தன்மை இல்லாத நாடாக மாற்றிவிடும் முயற்சியில் அறிவுஜீவிகளும் கலைஜீவிகளும் இறங்கியிருக்கிறார்கள் என்ற கேள்விக்கு நேரடியான பதில் இல்லாவிட்டாலும், அறிவுஜீவிகள், கலைஜீவிகள் கோரிக்கைகளை மோடி அரசு ஏற்க மறுத்ததுதான் இதற்கு அடிப்படைக் காரணம் என்பதை ஊகமாகப் புரிந்துகொள்ள முடிகிறது “….. என்று ஆசிரியர் குறிப்பிட்டு அதற்கான சில காரணங்களையும் கூறியுள்ளது …. பற்றி …. ? அறிவுஜீவிகளும் — கலைஜீவிகளும் இவ்வாறு செய்ய கூடியவர்களா …. ? இந்தியாவில் ” சகிப்புத்தன்மையின் ” …. அளவுகோல் ஏதாவது இருக்கிறதா …? அய்யா …. உங்கள் பார்வையில் …. ?

  • LVISS சொல்கிறார்:

   Mr Pamaran This so called intolerance is a nonsense –In Tamil you can say “sutha pethal” Aamir Khan thought that when he says this people will come running to him and beg him not to leave this country -Sensing that he is only dividing the Bollywood on this issue he retracted his statement —
   As a side news it is reported that many people removed the app that had Aamir Khan as ambassador —
   Yes how to measure “sahipputhanmai” —

   • paamaran சொல்கிறார்:

    நான் பேத்தவில்லை — தினமணி பத்திரிக்கை ஆசிரியரின் பேத்தலை தான் எடுத்து போட்டு — அதன் அடிப்படையில் என்னுடைய இரண்டு கேள்விகளை திரு .கா .மை. அவர்களிடம் கேட்டு இருந்தேன் …. எப்போதுமே குதிரைக்கு முகத்தில் பட்டி போட்டு ஒரே பார்வையில் — பக்க பார்வை தெரியாமல் ஓட்டுவார்கள் … அதை போல ஒரு முகபட்டியை { முகபடாம் }மாட்டிகொண்டு ஒரு தலை பட்சமாக எப்போதுமே கருத்து தெரிவிப்பது — முட்டாள்களின் செயல் … ! நீங்கள் தலையங்கத்தை முழுமையாக படித்து பார்க்காமல் — நான் என் சொந்த கருத்தை எழுதியாக நினைத்து மறுமொழி கூறியுள்ளது ” நான் சென்ஸை” விட கேவலமானது …. நீங்கள் அமீர்கானை பற்றியோ — உங்களின் சகிப்புத்தன்மை பற்றியோ — இந்த செய்திக்கு ஏதாவது கேள்விகேட்டு அல்லது கருத்து சொல்லவேண்டும் என்றால் அதை தினமணி ஆசிரிடம் தெரிவிப்பது தான் புத்திசாலி தனம் — ஏனென்றால் நான்குறிப்பிட்டு உள்ளது அவர் எழுதியது என்பதால் …. ! உங்களின் மறுமொழி எனக்கு தேவையில்லை …. நன்றி .!

    • LVISS சொல்கிறார்:

     Pr Pamaran I think I got misunderstood here — I also read that news and I was not in anyway referring to you –I generally said what I think about this current debate —Sorry if I have offended you in any way —

 11. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  ஆமிர் கானின் தற்போதைய மனைவியான கிரன் ராவ்-ன் பயத்தை வெளிப்படுத்தியதால் இவ்வளவு பொங்கும் நாம், ஒரு படத்துக்கு செனசார் சான்றிதழ் கொடுக்காத காரணத்தை கூறி நாட்டை விட்டு வெளியேறுவேன் என்ற “உலக நாய் காண் ” கமலுக்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை?

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.