பெருச்சாளி கவர்னர்…..

daulatram-contitutent-appending-signatures-jairamdas-constitution-rajkumari_f1385c06-93ee-11e5-a684-0cefba74d473

இந்திய அரசியல் சட்டத்தின் முதல் பிரதி அதை உருவாக்கியவர்களால் கையெழுத்திடப்படும் காட்சி

ஒரு மிகப்பெரிய ஊழல் பெருச்சாளி கவர்னர் உருவத்தில்
வெளிப்பட்டிருக்கிறது…..

கர்நாடகா கவர்னர் வஜுபாய் வாலா –

இவருக்கு ஆகும் செலவின வகைகள் கீழே –


– மசாஜ் செய்ய நியமிக்கப்பட்டுள்ள ஐந்து பேருக்கு,
மாதந்தோறும் 72,750 ரூபாய் வழங்கப்படுகிறது.

– மசாஜ் செய்வதற்கு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்க, மாதம், ஒரு லட்சம் ரூபாய் செலவழிக்கப்படுகிறது….!!!

– கவர்னர் மாளிகையில், 161 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்;
அவர்களுக்கு மாதந்தோறும், 30 லட்சம் ரூபாய் வரை ஊதியம்
வழங்கப்படுகிறது.

– கவர்னரின் உடல்நலத்தை கவனிக்க, ஒரு டாக்டர்,
மூன்று நர்ஸ்கள், ஒரு பார்மாசிஸ்ட் ஆகியோர் பணி
அமர்த்தப்பட்டுள்ளனர். ( 8 மணி நேரத்திற்கு ஒரு நர்ஸ்……,
தனியே ஒரு 24 மணி நேர டாக்டர், கம்பவுண்டர் – )

– அவர்களுக்காகும் சம்பளம் உள்ளிட்ட
செலவுகள் எவ்வளவு என்பது தெரியவில்லை….

– கவர்னர் மாளிகை சமையல் அறை
ஊழியர்களுக்காக, மாதந்தோறும், 2.94 லட்சம் ரூபாயும்,
( எத்தனை சமையல்காரர்களோ – 76 வயதான இவர்
அப்படி என்ன தான் சாப்பிடுவாரோ..! )

– ஏழு சலவை தொழிலாளர்களுக்கு, 1.01 லட்சம் ரூபாயும் ஊதியம்
வழங்கப்படுகிறது. (இவர் ஒருத்தர் துணியை ஏழு பேர் துவைக்கின்றனராம்….!!!)

முந்தைய காலத்தில் பாத்திரங்களை பயன்படுத்தும்போது,
‘ஈயம்’ பூசுவது வழக்கம். அந்த பணியை கவர்னர் மாளிகையில்
செய்வதற்கு, எட்டு ஊழியர்களுக்கு, மாதந்தோறும்,
1.16 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது….!!!
( இன்னமும் ஈயப்பாத்திரங்கள் – எந்த உலகில் இருக்கின்றன…? )

– கவர்னர் மாளிகை நுழைவாயிலில் இருந்து பத்திரிகைகள்,
கடிதங்கள் ஆகியவற்றை சேகரித்து, கவர்னர் அலுவலகத்தில்
சேர்க்கும் ஊழியருக்கு, மாதந்தோறும், 21 ஆயிரம் ரூபாய் சம்பளம்…..
( பங்களாவிற்குள் ஒரு ரூமிலிருந்து இன்னொரு ரூமிற்கு
கடிதங்களை கொண்டு போய் கொடுக்க ….!!!)

– கர்நாடகாவில் தற்போது கவர்னராக இருக்கும் வஜூபாய் வாலா பாஜக வைச் சேர்ந்தவர். செப்டம்பர் 2014 முதல் அவர் இந்த
பதவியில் இருக்கிறார். இதற்கு முன்னர் மோடிஜி
குஜராத் முதலமைச்சராக இருந்த காலத்தில் இவர் குஜராத்
சட்டமன்றத்தின் சபாநாயகராக ஜனவரி 2012 முதல்
ஆகஸ்ட் 2014 வரை பதவி வகித்திருக்கிறார்….!!!
( ஆக இவர் மோடிஜியின் நேரடி பார்வையில் வளர்ந்தவர்….!!!
)

சரி – இந்த பெருச்சாளியின் செலவின சமாச்சாரங்கள்
இப்போது எப்படி திடீரென்று வெளிவந்தன….?

-கர்நாடகாவில் கவர்னர் மாளிகை யில் எவ்வளவு ஊழியர்கள் உள்ளனர்?
அவர்களின் பணிகள் என்னென்ன?
எவ்வளவு ஊதியம் வழங்கப்படுகிறது?’ என,
ஹலசூருவைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர், ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார்.

கவர்னரின் செயலர் கல்பனா தகவல் கொடுக்க மறுத்ததால்,

நரசிம்மமூர்த்தி, கர்நாடகா தகவல் கமிஷனிடம்
புகார் செய்தார். கல்பனாவுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்த
கமிஷன், உடனடியாக தகவலளிக்க உத்தரவிட்டது.
( கர்நாடகாவில் கவர்னர்- பாஜக….
முதலமைச்சரும், ஆளும் கட்சியும் – காங்கிரஸ்….!!!
எனவே கமிஷனின் உடனடி உத்திரவில்
அதிசயம் ஏதுமில்லையே….? )

அபராதத்தை செலுத்திய பின், கல்பனா கொடுத்த
பதில் மூலம் தான் மேற்கண்ட அதிசயங்கள்
வெளியாகி இருக்கின்றன…!!

உடனே – பார் பாஜக கவர்னரை
என்று காங்கிரஸ்காரர்கள் யாரும் குதிக்க முடியாது…!!!

காரணம் இதற்கு சற்றும் குறைகாண முடியாத
மத்திய பிரதேச “வியாபம்” ஊழல் புகழ் கவர்னர்
ராம் நரேஷ் யாதவை அவர்கள் பக்கம் வைத்துக் கொண்டு,
காங்கிரஸ்காரர்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ள முடியாது…!!!

கவர்னர் பதவிக்கு இந்திய அரசியல் சட்டம் மிகுந்த
முக்கியத்துவத்தை கொடுத்திருக்கிறது. இன்று அரசியல் சட்டம்
உருவானதை கொண்டாடும் நாள்….
பார்லிமெண்ட் … தனக்கே உரிய விதத்தில்
இதை கொண்டாடிக் கொண்டிருக்கிறது…!!!

ஆனால், நடைமுறையில் இந்த கவர்னர் பதவி
எதற்கு, எப்படி, எத்தகையோரைக் கொண்டு நிரப்பப்படுகிறது…?

—- —

தேர்தலில் நின்று ஜெயித்து தீவிர அரசியலில்
ஈடுபட முடியாத நிலையில் உள்ள
வயதான ரிடையர்டு அரசியல்வாதிகள் …

எதாவது பதவியை கொடுத்து வாயை அடைத்தால் தான்
கட்சித் தலைமைக்கு நிம்மதி என்கிற நிலையில் உள்ள
வக்கிர அரசியல்வாதிகள்….

மாநில அரசியலிலிருந்து அகற்றப்பட்டே ஆக வேண்டும்
என்கிற நிலையிலுள்ள, ஆனால் ஓரளவு செல்வாக்குள்ள
அரசியல்வாதிகள் –

அதிகாரத்தில் இருக்கும்போது, ஆட்சியாளர்களுக்கு
சகல அத்துமீறல்களிலும் மிகவும் உதவியாகவும்,
அனுசரணையாகவும் இருந்த –
ஓய்வுபெற்ற உயர்பதவி அதிகாரிகள் -முன்னாள் நீதிபதிகள்…!!!

————

இன்று பெரும்பாலான கவர்னர்கள் இதே ரகம் தான் ….!
( விதிவிலக்காக, சில அருமையான
real பெரிய மனிதர்களும் உண்டு தான்…)

எனவே – வாருங்கள் நண்பர்களே –
இந்த பெருச்சாளி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து
நாமும் நமது ஜனநாயகத்தை கொண்டாடுவோம்…
இந்திய அரசியல் சட்டத்தை போற்றி மகிழ்வோம்…!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to பெருச்சாளி கவர்னர்…..

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  இந்த சென்னை பெருச்சாளிகளின் அட்டூழியங்களையும் உறக்கச்சொல்வோமே ஐயா!

  கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் சென்னையில் நடந்த சம்பவம். மதுரவாயல் – வானகரம் சாலை பூகம்பம் வந்தது மாதிரி சிதைந்துக் கிடந்தது. அப்பகுதி மக்கள் தமிழக அரசிடம் போனால் தேசிய நெடுஞ்சாலைத்துறையை நோக்கி கையை காட்டுவார்கள். அவர்கள் மாநில அரசுதான் ரோடு போட வேண்டும் என்று பந்தாடுவார்கள். பறக்கும் சாலை திட்டமும் வரவில்லை. அந்த திட்டத்துக்காக அமைக்கப்பட்ட தூண்களின் கட்டுமானப் பணியால் சாலைகளும் படுமோசம். வேறு வழியில்லாமல் பொதுமக்கள் தாங்களே சாலை போட களமிறங்கினர். உள்ளூர் அதிமுக அடிமைகளுக்கு இது கவுரவப் பிரச்சினையாக மாறிவிட்டது. சாலை அப்படியே இருந்து நாலு பேர் விழுந்து செத்தாலும் பரவாயில்லை. பொதுமக்களாக தங்கள் சாலையை தாங்களே சீர்படுத்திக் கொள்ளக்கூடாது என்று காவல்துறையை ஏவிவிட்டனர். சாலை போட்டுக் கொண்டிருந்த பொதுமக்களை பயங்கரவாதிகளை ஹேண்டில் செய்வது மாதிரி முரட்டுத்தனமாக கையாண்டனர் காவல்துறையினர். நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதாகினர். சாலை அப்படியே கிடந்தது. By யுவ கிருஷ்ணன்

  தற்போது அம்மாவின் ஆணையால் பெய்த பெருமழையில் சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லை. ஒவ்வொரு நாளும் இச்சாலையில் போக்குவரத்தை சீர் செய்வது காவல்துறைக்கு பிரம்மப் பிரயத்தனம் ஆயிற்று. வேறு வழியில்லாமல் முன்பு சாலை போட்ட பொதுமக்களிடமே சரணடைந்தனர். நேற்று போலிஸ் பாதுகாப்போடு கம்பீரமாக தங்கள் சாலையை சீர் செய்தனர் மதுரவாயல் மக்கள். அரசு என்கிற ஒன்று இங்கே இல்லவே இல்லை என்பதற்கு இந்நிகழ்வு நல்ல சான்று.

  ஆலந்தூரில் தன் பகுதியில் வெள்ளப் பாதிப்புகளை சீர்செய்த கவுன்சிலரை அப்பகுதி அதிமுக அடிமைகள் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். இடைத்தேர்தலில் ஜெயித்த எம்.எல்.ஏ. என்ன ஆனார் என்றே இதுவரை ஆலந்தூர் மக்களுக்கு தெரியாது. அப்படியிருக்கையில் “இதெல்லாம் எங்க எம்.எல்.ஏ.தான் செய்யணும், நீ ஏன் செய்யுறே?” என்று கேட்டே அடித்திருக்கிறார்கள். அடுத்த தேர்தலுக்கு வாக்கு கேட்டு வரும்போது கட்டை, துடைப்பம் சகிதம் இவர்களை வரவேற்க ஆலந்தூர் பொதுமக்கள் தயாராக இருக்கிறார்கள்.

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   அதிமுக அடிமைகள் என்று சொல்லியிருப்பது கொஞ்சம் அதிகம்தான். தமிழ்’நாட்டில் ஒரு கட்சியில் இருக்கவேண்டுமானால், அதற்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும். விதிவிலக்குகள் கட்சியைவிட்டுத் தூக்கப்படுவார்கள். இரண்டாவது, இவர்களைத் தேர்ந்தெடுத்தது பொதுமக்கள்தான். அவர்கள்தான் இதற்கு எதிர்வினை புரியவேண்டும். சென்னைமா’நகரத்தில் உள்ள எல்லா கவுன்சிலர்களும் (விதிவிலக்குகளைத் தவிர, எனிவே.. விதிவிலக்குகள் மக்களால் திரும்பத் தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள். ஏனெனில் மக்களுக்கு நல்லவர்கள் தம்மை ஆள்வதென்றால் அலர்ஜி. அவர்கள் ஜாதி, மதம், இனம் இவைகளால் நன்’கு வார்க்கப்பட்டவர்கள்) பொதுமக்கள் நலனுக்கு எதிரிகள்தான். இது இரு பெரும் கட்சிகளுக்கு மட்டுமல்ல மற்ற கட்சியினருக்கும் பொருந்தும்.

 2. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கவர்னர்கள் என்பவர்கள் ஒரு மானிலத்துக்கு மிகவும் அவசியம் (‘நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க). இப்போது தகுதியான ஆட்கள் யாரும் இந்தியாவில் இருப்பதுபோல் தெரியவில்லை. இருக்கின்ற சிலபேரும், தங்கள் தங்கள் கட்சியின் அடிமைகள். அதனால், கட்சிகள், ‘நாய்க்குக் கொடுக்கும் பிஸ்கட்’ போன்றும், அரசியலிலிருந்து அப்புறப்படுத்தவும், தங்கள் ரகசியங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும், அதற்கு ஏற்றவாறு ஆட்களை நியமிக்கின்றனர். உ.பியைச் சேர்ந்த திவாரி, பஞ்சாப் பர்னாலா, சென்னாரெட்டி, ‘நாராயணன் என்று யாரும் விதிவிலக்கல்ல. அவர்களும் நன்றாக தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கிறார்கள். நம் அரசியல் மக்களால் சீரழிந்ததன் காரணமே இந்த கவர்னர்கள் மற்றும் ஆட்சியாளர்கள். மக்கள்தான் தங்கள் தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும்.

 3. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  Strong political will to take strigent action expected from
  the HIGH COMMAND.

 4. paamaran சொல்கிறார்:

  இதையெல்லாம் ” சகித்துக்கொண்டு ” வாழ பழகிவிட்ட எம்மக்களே … ! // எனவே – வாருங்கள் நண்பர்களே –
  இந்த பெருச்சாளி அரசியல்வாதிகளுடன் சேர்ந்து
  நாமும் நமது ஜனநாயகத்தை கொண்டாடுவோம்…
  இந்திய அரசியல் சட்டத்தை போற்றி மகிழ்வோம்…!!! //

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.