ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ…. ஆனால் நிஜ வாழ்வில் ??? !!!

aamir khan ....

ராம்நாத் கோயங்கா நினைவு விழாவில் இந்தி திரைப்பட
நடிகர் ஆமீர்கான் பேசியது நாடெங்கும்
விவாதத்தை கிளப்பி விட்டுள்ளது.
அப்படி என்ன கூறினார் திருவாளர் ஆமீர் கான்..?

இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைந்து விட்டது
என்று கூறும்போது தன் வீட்டில் நடந்ததை விளக்குகிறார்.

வீட்டில் தன் மனைவியுடன் (திருமதி கிரண் )
பேசிக்கொண்டிருந்தபோது –

முதல் தடவையாக அவர் –

” நாம் இந்தியாவை விட்டு வெளியேறி விடலாமா ”

என்று கேட்டாராம். அவர் தனது குழந்தைக்காக பயப்படுகிறார்.
அவர் தினமும் செய்தித்தாளை பிரிப்பதற்கே பயப்படுகிறார்.
அது பெருகி வரும் அமைதியின்மையை காட்டுகிறது.
மன அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதெல்லாம் ஏன்
நடக்கிறது …?

அந்த எண்ணம் (அச்ச உணர்வு..? ) என்னிடமும் இருக்கிறது….”

கடந்த 7-8 மாதங்களாக நாட்டில் ஒரு நிம்மதியின்மை,
பாதுகாப்பு இன்மை, அச்ச உணர்வு நிலவுகிறது….
என்று மேற்கொண்டு விவரிக்கிறார் ஆமீர் கான்.

ஆமீர் கான் யார்….?
ஒரு நல்ல திரைப்பட நடிகர்,
இந்தி திரைப்படங்களில் – கதாநாயகன்,
தயாரிப்பாளர், டைரக்டர்…
ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதி.
இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை
மணந்து கொண்டிருக்கிறார்.

இதைத்தவிர….?

அவ்வப்போது சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார்.
சென்ற வருடம் “சத்யமேவ ஜெயதே” நிகழ்ச்சியை
தொலைக்காட்சிகளில் தயாரித்து அளித்தபோது –
அது பல சமூக அவலங்களைச் சொல்வதாக இருந்தது.

துவக்கத்தில் நான் கூட நினைத்தேன்….
பரவாயில்லையே – நடிகராக இருந்தாலும் கூட
இவருக்கு சமுதாயத்தின் மீது
இந்த அளவிற்கு அக்கரை இருக்கிறதே என்று….

ஆனால் – அம்பானியிடம், ஒவ்வொரு எபிசோடுக்கும்
மூன்று கோடி ரூபாய் சம்பளம் பெற்றுக் கொண்டு அதில்
அவர் “நடிக்கிறார்” என்பது தெரிய வந்ததும் –
அந்த எண்ணம் அற்பாயுளில் போய் விட்டது…!!!

ஆமீர்கானைப் போல் இந்த நாட்டில் இன்னும் கிட்டத்தட்ட
பதினேழரை கோடி இஸ்லாமியர்கள் வாழ்கிறார்கள்.
இந்த நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட
15 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள்.

பிரச்சினை ஆமீர்கானுக்கு மட்டுமல்ல.
இந்த நாட்டில் வாழும் இஸ்லாமியர்களுக்கு மட்டும் கூட அல்ல…

பிரச்சினை – இந்தியாவில் அனைவரும்
நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும்
என்று விரும்பும் அத்தனை இந்தியக் குடிமக்களுக்கும்
சேர்த்தே தான்.. என் பக்கத்து வீட்டுக்காரர் அமைதியை இழந்து
தவிக்கும்போது – என்னால் நிம்மதியாக இருக்க முடியாது…

சமுதாயத்தில் அமைதியின்மையோ, பாதுகாப்பின்மையோ
உணரப்பட்டால் – ஒரு உண்மையான குடிமகன்
என்ன செய்ய வேண்டும்….? அந்த அவலத்தைப் போக்க,
நிலைமையை மாற்ற தன்னால் இயன்ற அனைத்தையும்
செய்ய வேண்டும்.

எங்கே தவறு, ஏன் தவறு என்று
ஆராய வேண்டும்… அதைக்களைய முயற்சிக்க வேண்டும்….
அவசியமானால் – தெருவில் இறங்கிப்
போராடவும் தயாராக வேண்டும்…

தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் என்றில்லாமல் –
தன்னைப்போன்ற – பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்காகவும்
போராடுவோருக்கு துணை நிற்க வேண்டும்.
அனைவருக்காகவும்
சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்.

அதை விட்டு விட்டு, ” என் மனைவி பயப்படுகிறார்…
நாட்டை விட்டே வெளியேறி வேறு எங்காவது குடியேறி
விடுவோமா என்று கேட்கிறார்….”
-என்று ஒரு பொது மேடையில் ஒருவர் பேசுவது –
மகா கோழைத்தனம்…. நூறு சதவீதம் சுயநலம்…

இவரிடம் ஆயிரம் கோடி ரூபாய் பணம் இருக்கிறது…
உலகில் எந்த நாட்டில் வேண்டுமானாலும் போய் குடியேறலாம்… வசதியாக வாழ்ந்து கொள்ளலாம்….

பாதிக்கப்பட்டதால் பேசவில்லை இவர்….
பாதிக்கப்பட்டு விடுவோமோ என்கிற
பயத்திலேயே பேசுகிறார்…

ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களுக்காக இவர் என்ன செய்தார்…?

தாத்ரா சம்பவம் நடந்தபோது,
காஷ்மீர் சம்பவம் நடந்தபோது –
உடனடியாக இவர் ஏன் எதிர்க்குரல் கொடுக்கவில்லை ..?

தெருவில் பழவண்டியில் வியாபாரம் செய்வோர்,
செருப்பு கடை வைத்திருப்போர்,
துணிக்கடை வைத்திருப்போர், என்று
பல்வேறு வகைகளில் அன்றாடம் உழைத்துப் பிழைப்பவர் –
இந்த நாட்டில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்…!
அவர்கள் எந்த நாட்டுக்கு, எப்படி குடி போவார்கள்…?
இந்த நாட்டிலுள்ள பதினேழரை கோடி இஸ்லாமியர்களும்
இவரைப்போல் அஞ்சி ஓடி விட முடியுமா …?
அது நடைமுறை சாத்தியமா …?
மேலும் – எதற்காக போக வேண்டும் …?

உண்மையான ஹீரோக்கள் இத்தகைய தருணத்தில் என்ன
செய்வார்கள்…? தன்னை வருத்திக் கொண்டாவது
மற்றவர்களை துன்பத்திலிருந்து, துயரத்திலிருந்து –
மீட்க போராடுவார்கள்.

ஆனால் இவர் …?
தன் குடும்பத்தை பற்றி மட்டும் தானே
இவர் கவலைப்படுகிறார்…?

தான் சினிமாவில் மட்டும் தான் ஹீரோ –
நிஜ வாழ்வில் அல்ல என்பதை வெளிப்படுத்துகிறார் –
உறுதிப்படுத்துகிறார் ஆமீர்கான்.

இந்த நாடு ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்திருக்கிறது…
இந்த நாட்டின் மக்கள் எத்தனையோ வித
இன்னல்களை சந்தித்திருக்கிறார்கள்…

அந்நிய படையெடுப்புகளை தொடர்ந்து சந்தித்திருக்கிறார்கள்.
முதலில் மொகலாயர்,
பின்னர் போர்ச்சுக்கீசியர்,
டச்சுக்காரர்கள்,
பிரெஞ்சு நாட்டினர்,
ஆங்கிலேயர் –

பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தாலும்,
படையெடுப்புகளால் பல விதங்களில் பாதிக்கப்பட்டாலும் –
பண்பாட்டில், கலாச்சாரத்தில் மாறுபட்டவர்களையும்
சகோதரர்களாக நினைத்து ஒன்றிணைந்து வாழ்பவர்கள் தான்
இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள்.

ஏன் – இங்கேயே பிறந்து, இங்கேயே வளர்ந்து,
இங்கேயே தொழில் புரிந்து, இங்கேயே சூப்பர் ஸ்டார்
ஆனவர் தானே ஆமீர்கான். இவர் வைத்திருக்கும்
ஆயிரம் கோடி ரூபாய் சொத்தை எங்கே சம்பாதித்தார்…?
இஸ்லாமியர் என்பதற்காக இந்த நாட்டு மக்களால்
இவர் ஏற்றுக் கொள்ளப்படாமல் போனாரா …?

இவரே சொல்கிறார் அல்லவா –
கடந்த 7 – 8 மாதங்களாகத்தான் பாதுகாப்பற்ற தன்மையை
உணர்கிறேன் என்று.

அப்படியானால், அதற்கு முன்னால் – அவர் 50 ஆண்டுகள்
இங்கு சந்தோஷமாகத்தானே வாழ்ந்தார்.
இதே மக்களிடையே தானே வாழ்ந்தார்…?
நூற்றுக்கு 98 பேர் இங்கு அமைதியை விரும்புவர்கள் தான்.
சக மனிதர்களுடன் நல்லுறவை விரும்புபவர்கள் தான்.

பின் நிலைமை எப்படி மாறியது….? ஏன் மாறியது…?

துரதிருஷ்டவசமாக இங்கு அகில இந்திய அளவிலான
இரண்டு கட்சிகளுமே – மதவாதத்தை பயன்படுத்தியே
ஆட்சியைப் பிடிக்க முயல்கின்றன.

ஒரு கட்சி மெஜாரிடி மதத்தினரின் உணர்ச்சியைத்
தூண்டி விட்டு, polarisation மூலம் அவர்களது
ஆதரவை திரட்ட முயல்கிறது.
பொறுப்பற்று நடந்து கொள்ளும் மதவெறியர்களை
கண்டு கொள்ளாமல் விடுவதன் மூலம்
சிறுபான்மையிரிடையே அச்சத்தை உண்டு பண்ணுகிறது…

மற்றொரு கட்சியோ – மதச் சிறுபான்மையினரின்
அச்ச உணர்வையும், பாதுகாப்பற்ற உணர்வையும் பெரிதுபடுத்தி –
அதனைப் பயன்படுத்திக் கொண்டு –
அவர்களுக்கு தாங்கள் தான் விமோசனம் என்ற நிலையை
உண்டு பண்ணி வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறது.

எப்போது தான் விமோசனம் இதிலிருந்து …?
எல்லா கட்சிகளிலும் உள்ள, எல்லா மதங்களிலும் உள்ள –
அயோக்கிய அரசியல்வாதிகளையும், மதவெறியர்களையும்,
சுயநலவாதிகளையும் மக்கள் அடையாளம் காண வேண்டும்.

பொது மக்கள் எப்போது மதவேறுபாடின்றி –
இத்தகைய சக்திகளை
அடையாளம் கண்டுகொண்டு –
அடக்கி வைக்கிறார்களோ –
ஒதுக்கி வைக்கிறார்களோ –
அதுவரை இந்த துன்பம் தொடரவே செய்யும்…

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

18 Responses to ஆமீர் கான் – சினிமாவில் ஹீரோ…. ஆனால் நிஜ வாழ்வில் ??? !!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  All super/supreme stars r like him only.

 2. புது வசந்தம் சொல்கிறார்:

  முகநூல் நண்பரின் பதிவு இது,

  ஏ.ஆர். ரஹ்மான்,
  அமீர்கான் இப்படி யாரிடம்
  வேண்டுமானாலும் முட்டிக்கொள்ளுங்கள்.
  நாங்கள் சகித்துக்கொள்கிறோம்.
  அவர்களால் பாகிஸ்தானுக்கும்
  அமெரிக்காவின் பாஸ்டனுக்கும்
  தினமும் கூட போய் வரமுடியும்.

  ஆனால் கடைத்தெருவின் ஓரமாக
  நாலு சக்கரமும் மடித்து காற்றிழந்து
  இத்துப்போன நீல தட்டுவண்டியில்
  பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தில்
  இடுங்கிய கண்களுடனும்
  கூன் விழுந்து ஒற்றிய வயிற்றுடன்
  நடுங்கும் அய்யுபுவிடம்
  ‘நீ குடைகள் பழுதுப்பார்ப்பதால்தான்
  அக்கிரமம் செய்கிறது மழை’
  என்று உக்கிரம் காட்டாதீர்கள்.

  அவரால் அரசாங்க பேரூந்தில்
  அடுத்த டவுனுக்கு கூட போகமுடியாது.

  -வலங்கைமான் நூர்தீன்

 3. Ganpat சொல்கிறார்:

  கா.மை ஜி ,
  சமீப காலத்தில் நான் படித்த மிக சிறந்த பதிவுகளில் ஒன்று இது .மிக அருமையாக நாம் படும் கஷ்டங்களை வெளிக்கொணர்ந்து இருக்கிறீர்கள்.உங்களை வணங்கி மகிழ்கிறேன்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி கண்பத்.

   உங்கள் பாராட்டை
   நான் மிகவும் மதிப்புள்ளதாக கருதுகிறேன்.

   அநேகமாக, மனதில் பதிந்திருக்கும் உண்மையான
   எண்ணங்களை வெளிக்கொண்டு வரும்போது
   அது சரியாகவே போய்ச்சேருகிறது என்று தோன்றுகிறது.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. shiva சொல்கிறார்:

  There is lot of bogus talk on intolerance. The following post by a Muslim lady is a tight slap on the ungrateful people like the Khans

  Amidst a fake atmosphere of Intolerance being created in India, in the last 1 month, I owe my version of what I, a Muslim lady, living and working in India feel like. This has been due from me since sometime. Now, I feel the water has gone above the head and I too need to share my views. So, here it is.

  I am a Muslim lady, a practicing dermatologist by profession and I run my own high- end laser skin clinic, in Bangalore. I was brought up in Kuwait and at the age of 18, came to India to pursue medical education. I decided to stay back in India while almost all my friends left India for greener pastures. Not even once did I consider that being a Muslim could create a problem for me, as my sense of nationalism held me back to my roots and so here I am, serving my country since the last 20 years.

  I studied in Manipal, Karnataka. I lived alone like all students do. While I was in college, all my professors were Hindus and almost all the people who I would interact with were Hindus as well. There is not a single incident when anyone showed partiality towards me based on my gender or religion. Every single one of them was kind and in fact sometimes, I felt as though they made an extra effort to make feel like I was one of them. I am ever so grateful to all of them for making my life in Manipal as comfortable as it could get.

  After leaving Manipal, I relocated to Bangalore with my husband. By then I had been married and so we decided to make our life in Bangalore. There is a reason, why we chose Bangalore and here is where I will talk about my husband. He is a Muslim too, with a very typical first name, Iqbal. He is an aerospace engineer with MTech from IIT-Chennai and PhD from Germany. His profession takes him to the most highly secured organizations of India, like DRDO, NAL, HAL, GTRE, ISRO, IISc, BHEL; you name it and be assured that he has visited all of them without any hassles. Not even once he has been stripped off or asked for special security clearance or any such bias has been shown towards him. And NO, things have not changed even after Modi gov came into power. Things are in fact more disciplined and streamlined even at government organizations, from what I hear from my husband. As a matter of fact, Iqbal has been completely stripped each time he traveled to US and was under secret surveillance while he was doing his PhD in Germany, after the 9/11 attacks on US. We literally received a letter from the German government that he has been cleared and is not anymore under suspicion. Talk about Muslim paranoia! Its very understandable too due to the current situations in the world. My husband is highly respected and loved by the people he works with, and all of them happen to be Hindus. None of this has changed even in recent times, so Intolerance is just a word for us on a practical basis.

  I opened my clinic last year, just before Modi gov came into power. I am a law-abiding citizen and I file my taxes like service tax on a monthly basis. I have never indulged in any activities, which could put me into any kind of trouble. I am comfortably running my clinic, which is doing very well, thanks to all my patients and clients, who all happen to be Hindus. A handful of my patients are from other communities. My entire staff is Hindu, and believe me when I say that they take better care of my clinic than I could any day! I interact with bankers, government officers and with so many people on a daily basis. Not even once in the last 20 years, did I have the need to even think of leaving India! My entire family lives abroad and all that I need to do is just decide that I don’t want to stay here. I have open offers of opening clinic in Kuwait, which would fetch me huge amount of revenue and yet why should I stay in India, if I am not happy and if I am facing any kind of bias?

  In Kuwait, we are considered as NOBODY. Yes, despite being in Kuwait for the last 40 years or so, my family is still considered as expatriates, with no rights. We need to renew our resident permit periodically and the laws there constantly keep changing, making the life of expatriates only harder. We have to strictly comply with their rules and laws, which is fine but we are openly discriminated. They consider Asians as third grade people, while giving preference to their citizens, Arabs and Whites. We are not unhappy there but we have no sense of belonging either. At least, I never had and never have even when I visit Kuwait now. We are Muslims in a Muslim country, and yet we are considered as Indians with no special regards. I figured long back ago, that India is the only country, where I will have a sense of belonging. You are an Indian-American in US, Indian-Canadian in Canada, Indian-British in UK and so on but only in India you are an Indian. Period. Rest can say whatever they want and defend their choices but this is a fact. You can only feel at home, in your own home. I have lived in different places and everywhere I stand out but in India. No body in India asks me, ‘Are you an Indian?’, and this is what makes all the difference.

  So, what are these celebrities ranting about? An ordinary citizen like my husband and I are not facing any such issues, then what have they faced? Why is Amir Khan’s wife, Kiran Rao feeling so afraid? They are prominent people, living in posh localities, their children study in the best of schools and they have personal security escorting them at all times. I travel alone everyday and yet don’t feel afraid. I want to know as a responsible citizen, from Amir Khan and Shahrukh Khan as well, why did they make such irresponsible statements and spoil the image of the 13 crores of Muslims in India? Who the hell are they to make public statements based on their personal perception? Who gave them the liberty to tarnish the image of my country on an International level, that Muslims are not safe in India? How dare Pakistan invites them to stay in Pakistan? I feel hurt when I read the statements of my Hindu friends on Muslims. I feel afraid that they are being pushed to the limit and the tolerance and acceptance that I have enjoyed all these years, might just vanish! I feel afraid that my own people might shun me and I may get alienated in my own country, because of a handful of ungrateful bunch of fools! How long can I expect majority of Hindus to tolerate this nuisance? It’s high time that Muslims understand the value of the freedom and acceptance that we enjoy in India and if not, I pray that my Hindu fellow citizens continue to keep their patience.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஷிவா,

   என்னைப் பொருத்தவரையில்,
   எனக்கு பாஜக வா அல்லது காங்கிரசா என்பது முக்கியமல்ல.
   “மனிதாபிமானம்” தான் முக்கியம்.

   நான் வசிக்கும் அபார்ட்மெண்டில், எனக்கு நேர் மாடியில்
   ஒரு இஸ்லாமியர் குடும்பம் வசிக்கிறது.
   அந்த குடும்பம் வேதனைப்பட்டால் –
   என்னால் நிச்சயம் நிம்மதியாக உண்ண, உறங்க – முடியாது.

   பெரும்பாலான அரசியல்வாதிகள்,
   நடிகர்கள் எல்லாருமே “போலி”கள்.
   மனசாட்சியே இல்லாத சுயநலவாதிகள்.

   என் மனதில் அவர்கள் மேல் கடுகளவு கூட மரியாதை இல்லை.

   சாதாரண மனிதர்கள் இவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள்.
   நீங்கள் பதிவு செய்திருக்கும் அனுபவம் அதைத்தான் விவரிக்கிறது.

   சரியான கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • Arun சொல்கிறார்:

   “I feel hurt when I read the statements of my Hindu friends on Muslims. I feel afraid that they are being pushed to the limit and the tolerance and acceptance that I have enjoyed all these years, might just vanish! I feel afraid that my own people might shun me and I may get alienated in my own country, because of a handful of ungrateful bunch of fools! How long can I expect majority of Hindus to tolerate this nuisance? It’s high time that Muslims understand the value of the freedom and acceptance that we enjoy in India and if not, I pray that my Hindu fellow citizens continue to keep their patience.”

   You are saying you are afraid that the tolerance is vanishing. That is what these people are calling intolerance. You say it is because these ungrateful actors are making such statements. Others are giving different reasons.

   “How long can I expect majority of Hindus to tolerate this nuisance? It’s high time that Muslims understand the value of the freedom and acceptance that we enjoy in India”

   Why do you assume muslims dont understand the value of freedom and acceptance? Because two Khans spoke wrong?
   You have spoken about only your personal experience. He reacted to media reports of intolerance. He reacted to what people in Dadri, or other places where the tension is high, are facing. His statement means he is afraid whether it is going to spread. It is the same fear that you have expressed.

   And I am afraid that this intolerance conversation is being hijacked by the hindu-muslim line of thinking. A couple of writers were killed. They were not muslims. Some who criticised a government was arrested on sedition charge instead of a defamation case. These are all intolerance. Don’t narrow it down to religion.
   Other than these points your post is an excellent answer to the fears of some people. It might help change those insecure feelings. All the best.

 5. Arun சொல்கிறார்:

  He himself said in the same interview that it is a disastrous statement for his wife to make. Everyone has ignored that. Because it is convenient to build a narrative that we are all more patriotic than them.
  Some people say “Despite being a muslim he is a star. That shows we are tolerant”. What does being a muslim has to do with becoming a star? Is someone being a muslim itself is something to be tolerated? When we say “despite being a muslim” that itself shows that we treat them differently. His religion is nowhere related to his profession. We watched his movies for entertainment and his acting and we made him a star.
  He did not say only minorities face problems from majorities. In the same interview he spoke about a soldier who was killed and that it has received less coverage than the Dadri lynching. He has said that a muslim being killed has been sensationalised but not the soldier’s killing. He has criticised the media for that.
  He answered only when he was asked about it. It was not a speech he gave on his own. He spoke openly in front of many people from the ruling party. If he is as selfish and scared, he could have just posted something on facebook and created this issue. Media picks up every actor’s facebook and twitter posts.
  Actors and politicians are also from among us. They are as corrupt and selfish as we are. We can only grow if we discuss their views. We can criticise his view. We can say he is being paranoid, he is hyping up the situation. But to immediately attribute political motives, call him unpatriotic, call him selfish and asking him to move to pakistan (few people did) shows what intolerance he is talking about.

  • சுரேஷ் சொல்கிறார்:

   அருண் அவர்களுடைய பின்னூட்டத்திற்கு காவிரி மைந்தன் பதில் தருவாரா?

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்பர் சுரேஷ்,

    நண்பர் அருண் நேரடியாக விஷயத்திற்கு வராமல்,
    சுற்றி வளைத்து ஏதோ சொல்ல வருகிறார்….

    நான் சுருக்கமாக என் கருத்தை விளக்கி விடுகிறேன் –

    1)சினிமா ஹீரோக்கள் – நிஜ வாழ்வில் ஹீரோக்கள் அல்ல.
    அவர்கள் செயல்படுவது அனைத்தும் சுயநலத்தின் அடிப்படையில்….

    2) இந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் – மத வேறுபாடு
    பார்ப்பதில்லை. ஒற்றுமையாகத்தான் வாழ்கிறார்கள்.

    3) மதத்தை பயன்படுத்தி, மக்களுக்கு மதவெறி என்னும்
    போதையை ஊட்டி, அதை தங்களுக்கு சாதகமான ஓட்டு வங்கியாக
    மாற்றுவதிலேயே நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும்
    குறியாக இருக்கின்றன.

    4) மக்கள் இதைப் புரிந்து கொண்டு –
    இவர்களை ஒதுக்கி விட வேண்டும் –
    தீர்மானமாக – மதத்தின் அடிப்படையில் செயல்படவோ,
    உணர்ச்சி வசப்படவோ, வாக்களிக்கவோ – மறுக்க வேண்டும்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • ravi சொல்கிறார்:

     மதத்தின் அடிப்படையில் செயல்படவோ,
     உணர்ச்சி வசப்படவோ, வாக்களிக்கவோ – மறுக்க வேண்டும்./////

     இதையும் சேர்த்து கொள்ளவும் …
     சாதி , மொழி வெறி ..
     ஏனென்றால் , இந்தியாவில் மதம் பிற்போக்கு ( இந்து மதம் மட்டும்) , சாதி முற்போக்கு …

 6. LVISS சொல்கிறார்:

  Generally in Bollywood the three khans have more fans and enjoy patronage than others –I dont know why Aamir said this –He was saying Incredible India and was doing very useful things — Since he has retracted allow it to rest —

 7. ravi சொல்கிறார்:

  ஆமிர் ஜி ..
  வரலாறு ரொம்ப முக்கியம் ..
  90 களில் , குல்ஷன் குமார், நடு ரோட்டில் சுட்டு கொல்லபட்டார் – தாவூத் கும்பலால், சினிமாகாரர் வேறு .. நீங்கள் எல்லாம் பம்மி கொண்டு இருந்தீர்கள் (மந்தாகினி தாவூத் மறந்து விட்டர்கள் போல் இருக்கிறது ) .. .. மும்பை குண்டு வெடிப்பு, கலவரம், 26/11 ..
  போங்க ஜி.. இதெயெல்லாம் நாங்கள் தாண்டி வந்து விட்டோம் …
  கலைஞர்களுக்கு மரியாதை எப்போது என்றால் , அரசியல் சார்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே.. இல்லை என்றால் இப்படிதான் ..

  • ravi சொல்கிறார்:

   அப்புறம் ஜி.. பிகார் தேர்தல் முடிந்து விட்டது ..அடுத்து , உத்திர பிரதேசம் தேர்தலில் பார்த்து கொள்ளலாம்

 8. theInformedDoodle சொல்கிறார்:

  நமது கையில் இருக்கும் வரை ஒரு பொருளின் மதிப்பு நமக்குத் தெரிவதில்லை. இந்தியாவில் இருக்கும் வரை பலருக்கும் (நான் உள்பட) மதிப்பு. வெளிநாட்டில் வசிக்க நேரிடும்போது தான் இந்தியாவின் அருமை தெரியும். அதற்காக மற்ற நாடுகளை குறை சொல்லவில்லை. சில விஷயங்களில் இந்தியாவை கண்டிப்பாக மிஸ் பண்ணுவோம். அதில் நமக்கு இருக்கும் சுதந்திரம் தலையாய ஒன்று. வெளிநாட்டில் இருக்கும்போது எப்போதும் கூட இருக்கும் ஒரு இறுக்கம் இந்தியாவில் மறைந்து விடுவதை அனுபவித்திருக்கிறேன்.

  சகிப்புத் தன்மை பற்றி இந்தியாவை குறை கூறும் பலரும் அதற்கு மாற்றாக எந்த நாட்டை சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். அரபு நாடுகளை சொல்ல மாட்டார்கள். யுரோப் பற்றி சொல்ல முடியும் என்றாலும் அங்கு பற்பல நாட்டினரும் தனித் தனி தீவாகவே இருப்பதாக கேள்விப் பட்டிருக்கிறேன். ஆஸ்திரேலியாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். சிங்கப்பூரும் அமெரிக்காவும் ஒரே ரகம். சென்று பார்த்து வருவது சுகம். வாழ்வது கடினம்.
  எல்லாமே என் தனிப் பட்ட கருத்துதான். மாற்றுக் கருத்து கண்டிப்பாக இருக்கும் மற்றவர்களிடம்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.