கலைஞருக்கு கட்டாய ஓய்வு கொடுக்க முயலும் – ஸ்டாலின்+சபரீசன்+தயாநிதி மாறன் கூட்டணி …!!!

.

.

எதிர்பார்த்தது தான் என்றாலும், செயல் வடிவில் வரும்போது பலருக்கு அதிர்ச்சியாகவே இருக்கும்….

திருவாளர் ஸ்டாலின் அவர்கள் “நமக்கு நாமே” திட்டத்தோடு
தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது
போடப்பட்ட திட்டத்தின் climax – இறுதிக் கட்டம்
என்பதாக இது இருக்கலாம்…!

இந்த திட்டத்தின் படைப்பாளர்கள்
( creators of this scene and situation ) –
விகடன் குழுமத்தின் பொறுப்பினை ஏற்றிருக்கும் திருவாளர்
தயாநிதி மாறன், திருவாளர் ஸ்டாலின் மற்றும் அவரது
மருமகன் திருவாளர் சபரீசன் ஆகியோர் என்பது புரிகிறது….!!!

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நிகழவிருக்கும் தேர்தல்களின்
விளைவுகள் எப்படி இருக்கும் என்று விகடன் குழுமம்
ஒரு சாம்பிள் சர்வே எடுத்திருக்கிறது. அதன் முடிவுகள்
ஜூ.வி.யின் சென்ற இதழிலும், நடப்பு இதழிலும்
வெளியிடப்பட்டிருக்கின்றன.

மிக மிக முக்கியமாக, திமுக சார்பாக அடுத்த முதலமைச்சராக
ஸ்டாலினா – கலைஞரா என்கிற கேள்வியை முன்வைத்து
நடத்திய சர்வேயின் முடிவில் –

ஸ்டாலினுக்கு ஆதரவான நிலையே அனைத்து மாவட்டங்களிலும்
இருப்பதாகவும், மொத்த வாக்குகளில் –

ஸ்டாலின் – 60.60 சதவீதமும்,
கலைஞர் – 39.40 சதவீதம் மட்டுமேயும்
பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆக, மக்கள் கலைஞரை விட ஸ்டாலின் முதல் அமைச்சராக
வருவதையே அதிகம் விரும்புகிறார்கள் என்று சர்வே விவரம்
கூறுவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

சர்வேக்கள் எப்படி நடத்தப்படுகின்றன –
எந்த அளவிற்கு அவற்றை நம்பலாம் என்கிற கேள்விகளை
ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு –

இந்த சர்வேயின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று பார்த்தால் – ஆறாவது தடவையும் முதலமைச்சராக வேண்டும் என்கிற ஆவலுடன் காத்திருக்கும் –
கலைஞருக்கு கட்டாய ஓய்வு கொடுத்து விட்டு,

ஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக திமுக சார்பில்
முன்னிலைப்படுத்த வேண்டும் என்கிற முயற்சி
வெளிப்படுகிறது.

ஸ்டாலின், சபரீசன், தயாநிதி குழுவினரின் முயற்சிகள்
ஓரளவு ஏற்கெனவே தெரிந்தது தான் என்றாலும், அது இவ்வளவு சீக்கிரம் வெளிப்படையாக உணர்த்தப்படும் என்பது
எதிர்பார்க்காததே.

எப்போதுமே இத்தகைய கருத்துக் கணிப்புகள் பற்றி
உடனுக்குடன் கருத்து தெரிவிக்கும் கலஞர் –
செய்தி வெளியாகி இரண்டு நாட்களாகியும் இதுபற்றி
ஒன்றும் கூறாமல் மௌனம் காத்து வருகிறார்.

அதைவிட, திருவாளர் ஸ்டாலினும் இந்த சர்வே முடிவுகளை ஆமோதிக்கும் விதமாக – மறுப்பு கருத்து எதுவும் வெளியிடாதது நிகழ்வை உறுதிப்படுத்துகிறது….

ஜூ.வி.யின் சர்வே பற்றிய செய்தி-புகைப்படம் கீழே –

dmk survey -jv

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

29 Responses to கலைஞருக்கு கட்டாய ஓய்வு கொடுக்க முயலும் – ஸ்டாலின்+சபரீசன்+தயாநிதி மாறன் கூட்டணி …!!!

 1. drkgp சொல்கிறார்:

  /விகடன்குழுமத்தின் பொறுப்பினை ஏற்றிருக்கும் திருவாளர் ஸ்டாலின்…./
  திரைமறைவில்இருந்தது வெளிச்சத்துக்கு வந்துவிட்டதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   வருக டாக்டர் KGP,

   உரிமையாளர் பற்றிய இப்படி ஒரு தகவல்
   பல தளங்களிலும் வெளி வந்தது.
   சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து, இதுவரை,
   எனக்குத் தெரிந்து இது குறித்து
   எந்தவித மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை.
   அவர்களது செய்கையும், போக்கும்
   அந்த செய்தியை உறுதிப்படுத்தும் வண்ணமே உள்ளது.
   எனவே, அதை உண்மையென்றே நாம்
   எடுத்துக் கொள்வோம்..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 2. arm சொல்கிறார்:

  now one india also supporting dmk

 3. drkgp சொல்கிறார்:

  இலட்சோபதொண்டர்களின் கனவில் உழைப்பில் மலர்ந்த கட்சியை
  திட்டமிட்டு குடும்பசொத்தாக்கிக்கொண்ட இவர்கள் இயற்கையின்
  நீதிக்கு கட்டுப்பட்டு ஆகவேண்டும்.

 4. ஆவி சொல்கிறார்:

  தமிழக அரசியலில் தற்போது பல அசம்பாவிதங்கள்?? நடந்து வருகின்றன. one India இணையத்தளம் தொடர்ந்து திமுக வுக்கு ஆதரவை மறைமுகமாக தெரிவித்து வருகிறது.விகடன்,ஜூ.விகடன் ஆதரவை எல்லாரும் அறிந்துள்ள நிலையில், தந்தி தொலைக்காட்சியை திமுக புறக்கணித்து உள்ளது.

  சென்ற பதிவில் நடிகர்கள் சுயநலவாசிகள் என்ற கருத்து வைக்கப்பட்டிருந்தது. இதில் அரசியல்வாதிகளையும் சாமியார்களையும் சேர்த்துக் கொள்ளலாம். பதவிக்காக கட்சி மாறிய சிலருக்கு பதவிகள் தேடி வருவதையும் காண முடிகிறது.

  எஸ்.வி.சேகர்-பாஜக, நடிகர் நெப்போலியன் தமிழக பாஜக வின் உதவித் தலைவர்.
  அழகிரிக்கு ஏதாவது பதவி தேர்தலுக்கு முன்னர் எங்காவது கிடைக்கும்.
  இதற்கிடையில் காங்கிரசில் உட்கட்சிப் பூசல்- EVKS vs விஜயதாரினி.

  ஆரோக்கியமான அரசியலை தமிழகத்தில் எதிர்பார்க்கலாமா?

 5. paamaran சொல்கிறார்:

  பல தலைப்புகளில் ” ஒன் இந்தியா தமிழ் ” பத்திரிக்கையில் வந்த சில செய்திகள் : — // 1. ஜெ.வின் பாசிச ஆட்சி— விபரீதத்தை விலைகொடுத்து வாங்குகிறார்: “ஆனந்த விகடன்” வழக்குக்கு வைகோ கண்டனம்!! 2. தேமுதிகவுடன் கூட்டணி சேருவதில் எங்களுக்கு பிரச்சினையே கிடையாது.. பாமக டபுள் பல்டி! 3 . அ.தி.மு.க.வின் அடுத்த தலைவர்… ஓ.பி.எஸ்.-க்கு செம ஆதரவு- சசிகலாவுக்கு தகுதி இல்லை- ஜூ.வி. சர்வே …. ! 4 . வெறும் 10% மார்க் வாங்கி பெயில் ஆன விஜயகாந்த்.. ஜூ.வி. சர்வே ….. ! 5 . தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர்… கருணாநிதியைவிட ஸ்டாலினுக்கே அதிக ஆதரவு- ஜூ.வி சர்வே! ….. ” பத்த வச்சிட்டயே பரட்ட… ! ” // —- என்று கவுண்டர் கேட்டதுக்கு :— முன்பு ஸ்டாலின் — அழகிரி கருத்து கணிப்பு வந்த போது — ” பத்திக்கிட்ட மாதிரி இப்போ இல்லையே — கவுண்டரே ” அதுவா அதான் தயாநிதி இப்போ ஸ்டாலின் கூட சேர்ந்து தலைவருக்கே ஆப்பு வைக்கறாங்களே — அதனால் பத்திக்கள …. ! ….. கடைசியாக எல்லாவற்றிற்கும் சேர்த்து ” தமிழக குடிமகன்கள் கூறும் ” கவுண்டரின் பன்ச் டயலக் : ” நீ யாருன்னு எனக்குத் தெரியும், நான் யாருனு உனக்குத் தெரியும்… நாம யாருனு இந்த உலகத்துக்கே தெரியும் …. !!! இன்னும் தேர்தல் வர உள்ள சில மாதங்களில் நிறைய காமடிகளை கண்டு களிக்க நம் மக்கள் தயாராகவே இருக்கின்றார்கள் …. அப்படி தானே ….. ?

 6. R.Gopalakrishnan சொல்கிறார்:

  Mr.Today&me please post your evidence so that we will also know the same.

 7. LVISS சொல்கிறார்:

  Sooner than later the DMK President will be forced to name Stalin as his successor– As of noe Stalin has more of acceptance to party workers –

 8. paamaran சொல்கிறார்:

  இன்றைய // தினமலர் முதல் பக்கம் அரசியல் செய்தி தமிழ்நாடு
  ” ஸ்டாலின் நிகழ்ச்சி: கருணாநிதி மகிழ்ச்சி ” …. ! // இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் மக்கள் யாரும் பாராட்டவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும் — ” மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி ” என்பது கலைஞருக்கு கட்டாய ஓய்வு கொடுக்க முயலுவது தானே …? –—— ” தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி ” என்று உல்டாவாகி —- மகனின் நிகழ்ச்சிக்கு — தந்தை மகிழ்ச்சி — என்று சொல்லும் நிலைக்கு அரசியல் சாணக்கியரை கொண்டுவந்து விட்டதா — இந்த ஸ்டாலின்+சபரீசன்+தயாநிதி மாறன் கூட்டணி …? மக்களின் நிலைப்பாடு எப்படி இருக்கும் ….?

 9. Ganpat சொல்கிறார்:

  இன்றைய நிலையை வைத்து பார்த்தால் கலைஞர் & அம்மாவைத் தவிர வேறு யார் முதலமைச்சர் ஆனாலும் அதை வரவேற்கலாம்.மாநிலத்தை குட்டிச்சுவராக்கியது இவர்கள் இருவரும்தான்.

 10. இளங்கோ சொல்கிறார்:

  Ganpat sir,

  appo vijaykanth/premalatha/sathish – kooda ungalukku Okyaa ?

  • இளங்கோ சொல்கிறார்:

   anbumani ramdoss kooda Okyaa ?

   • இளங்கோ சொல்கிறார்:

    thamizisai akkaa kooda Okayaa ?

    • இளங்கோ சொல்கிறார்:

     Stalin, sabareesan, mahesh poiyamozhi kooda Okayaa ?

     • Ganpat சொல்கிறார்:

      எனக்கு ஒகே..லாஜிக் ரொம்ப simple.இரண்டு குவளைகள் .ஒன்றில் விஷம் என்று 100% உறுதியாகத்தெரியும்.இன்னொன்றிலும் விஷம் என்று 95% உறுதியாகத் தெரியும் ஏதாவது ஒன்றை குடித்தே ஆகவேண்டும்.எதை தேர்ந்தெடுப்பது? சொல்லுங்களேன்? 🙂

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      கண்பத்,

      இந்த பின்னூட்டங்களைப் பார்த்தால் எனக்கு –

      ஒரு துளி விஷம்,
      ஒரு முழம் கயிறு,
      … அடடா அந்த மூன்றாவது என்ன …. மறந்து விட்டதே…
      யாராவது கை கொடுங்களேன்…

      இவை தான் நினைவிற்கு வருகின்றன…
      எனவே தேர்தல் முடிவுகள் – தற்கொலை தான் என்பது
      நிச்சயம் ஆகி விட்டது…? 🙂 🙂

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   தம்பி இளங்கோ,
   (நிச்சயம் தம்பியாகத் தான் இருப்பீர்கள்…!!! )

   -ஏன் இப்படி பயமுறுத்துகிறீர்கள்.
   உங்கள் பின்னூட்டங்களை பார்த்தால்
   எனக்கு “விடாது கருப்பு” தான் நினைவிற்கு வருகிறது.. 🙂 🙂

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 11. R.Gopalakrishnan சொல்கிறார்:

  sorry I forget some more names.S,Swamy,Ponnar,H.Raja. Then you, KM, Ganpat.Certainly not me This field is not my turf. I am simply an observer.

 12. ravi சொல்கிறார்:

  பக்கங்களை நிரப்பினால் மட்டுமே புத்தகம் விற்கும் .. அவ்வளவே ..
  அதற்கு மேல் விகடன் , குமுதம் , நக்கீரன் .. சொல்வதற்கு ஒன்றும் இல்லை .. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது அடுத்தவன் வாயை புடுங்காமல் இருப்பதற்கு இந்த பத்திரிக்கைகள் உதவும்.. அதற்கு பிறகு இவை செல்லும் இடம் குப்பைதொட்டி மட்டுமே …

 13. yogi சொல்கிறார்:

  Sir,

  Oru thuli visham

  Oru Thambuk Kayiru

  Oru Paazhum Kinaru,

  this was told by Cho during 1989 state election

  rgs

  yogi

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி யோகி.

   அந்த மூன்றாவதைத்தான் நான் மறந்து விட்டேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.