இந்த கஞ்ச நாயகனிடம் கால் காசு பெறுவது கூட தமிழ் மக்களுக்கு அவமானம்….

k.h.

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரை ஊடகங்களின்
மூலம் அறிந்த அமெரிக்க அரசு வெளியிட்டுள்ள செய்தி –

———————-
சென்னை மக்களுக்கு துணையாக நின்று உதவி செய்ய
அமெரிக்கா தயாராக உள்ளது. தமிழ்நாடும் இந்திய அரசும்
கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான
வெள்ள சேதத்தை எதிர்கொண்டு உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு எங்களது
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். வெள்ளத்தில்
சிக்கி தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து வாடும்
மக்களை பற்றியே எங்களது சிந்தனை உள்ளது

இந்த கடினமான நேரத்தில் உதவி அளிப்பது குறித்து
இந்தியாவுடன் கலந்தாலோசித்து வருகிறோம்.

உதவி கேட்டு இந்தியாவிடம் இதுவரை எந்த கோரிக்கையும்
வரவில்லை. தங்களுக்கு ஏற்பட்ட அவசர கால நெருக்கடிகளை

சமாளித்துக்கொள்ளக்கூடிய வளர்ச்சி பெற்ற நாடுதான் இந்தியா…

———————-

முழு சேதாரமும் தெரிய வராத நிலையிலேயே,
தமிழக அரசு இன்னமும் உதவி கோராத நிலையிலேயே –
கர்நாடகா அரசும், பீகார் அரசும் தலா ஐந்து கோடி ரூபாய்
உதவி நிதியாக தாமாகவே முன்வந்து அறிவித்துள்ளன.

———————–

உலகில் மற்றவர் எல்லாருமே தமிழகம் சந்திக்கும்
இந்த பேரிடரை, உயிரிழப்புகளை –
இப்படியெல்லாம் பார்க்கும்போது, வருந்தி, துடித்து
ஓடி உதவ முன்வரும்போது –

நூற்றுக்கணக்கான உயிரிழப்புகளைப் பற்றியோ..
லட்சக்கணக்கானோரின் உடைமைகள் இழப்புகளைப் பற்றிய
கவலையோ வருத்தமோ இல்லை….
தன் பணத்தைப் பற்றியே,
தன்னை பணம் கேட்கிறார்களே என்கிற எரிச்சல் மட்டுமே
வெளிப்படுகிறது அவரது இந்த பேட்டியில் —

5 வயது முதல் இன்றைய 60 வயது வரை தமிழ் மக்களின்
காசில் வயிறு வளர்த்து இன்று உலக நாயகன் என்று
உலா வந்து கொண்டிருக்கிற உதவாக்கரை நாயகன்
வெளியிட்டுள்ள அறிக்கை தன்மானமுள்ள எந்த தமிழரையும்
கொதித்து எழவே செய்யும்.

இந்த கஞ்ச மகா நாயகனிடம் தமிழக அரசோ, மக்களோ
இதுவரை உதவி செய்யச்சொல்லி எந்த கோரிக்கையும்
வைக்கவில்லை.

இருந்தாலும், நடிகர் சங்கம் நிதி திரட்டுவதையும், அதற்கு
மற்ற நடிகர்கள் எல்லாம் நன்கொடை கொடுப்பதையும் கண்டு –

பணம் கொடுக்கவும் மனமில்லாமல், ஆனால் மற்ற எல்லா
நடிகர்களும் கொடுக்கும்போது தான் மட்டும் கொடுக்காமல்
இருந்தால் அது பிரச்சினைகளை உண்டாக்குமே என்கிற
எரிச்சலில் –

இன்னும் ஐந்து காசு உதவி கூட அறிவிக்காமலே
யாரோ தன்னிடம் நிதியுதவி / நன்கொடை கேட்டதாக உளறி, அதில் என்ன நியாயம் இருக்கிறது என்றும் வயிற்றேரிச்சலையும் கொட்டுகிறார் கஞ்ச நாயகன்.

————–

அவரது அறிக்கையிலிருந்து சில பகுதிகளும்
அவருக்கான சில கேள்விகளும் கீழே –

(அறிக்கை ஆதாரம் –
http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?
N=156293 )

வெள்ளசேத பாதிப்பால் மக்கள் படும் கஷ்டங்கள் தன்னை
கவலையில் ஆழ்த்தி உள்ளதாகவும், சென்னைக்கே
இந்த நிலைமையா? என்று வியப்படைவதாகவும் கமல்ஹாசன்
கூறியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,

மழை வெள்ளத்தால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை, இயற்கை பேரிடர் என்பது குறைத்து மதிப்பிடும்
வார்த்தை. சென்னைக்கே இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளது.

ஏழைகளும் நடுத்தர மக்களும் வெள்ள பாதிப்பினால்
அச்சத்தில் இருக்கிறார்கள். இதற்காக வசதி படைத்தவர்கள்
வெட்கப்பட வேண்டும். நான் பெரிய பணக்காரன் இல்லை,
ஆனாலும் என் ஜன்னலை திறந்து வெளியே மக்கள் படும்
கஷ்டங்களை பார்த்து வெட்கப்படுகிறேன்.

( இவர் பெரிய பணக்காரன் இல்லையாம்….
ஜன்னல் வழியே மக்கள் படும் கஷ்டங்களை பார்த்து
வெட்கப்படுகிறாராம் –

நாம் எல்லாம் வெட்கப்படுவதில்லை.
வேதனைப்படுகிறோம். துன்புறுகிறோம்.
தெருவில் இறங்கி எந்த விதத்தில் அவர்களுக்கு
உதவி செய்ய முடியும் – எந்த வகையில்
எல்லாம் அவர்களது துன்பத்தை குறைக்க முடியும் என்று
யோசித்து – அந்த வழிகளில் எல்லாம் முயற்சிக்கிறோம். )

நிர்வாகம் சீர்குலைந்து இருக்கிறது. மழை நின்ற பிறகும் கூட
பாதிப்பில் இருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு சென்னை
திரும்புவதற்கு பல மாதங்கள் ஆகும். மக்கள் செலுத்திய
வரிப்பணம் எங்கே போனது?

( மக்களின் வரிப்பணம் எங்கே போகிறது என்பதை
பட்ஜெட்டை தொடர்ந்து பார்த்திருந்தால் தெரிந்திருக்கும்.
தன்னிடம் துட்டு கேட்டு விடப்போகிறார்களோ என்று
பயந்து நடுங்கும் கஞ்ச மகா நாயகர்களுக்கு இது
தெரிந்திருக்க வாய்ப்பில்லை தான்.

மேலும், இந்த கேள்வியை எழுப்பும் நேரமா இது …?
சாதாரண நாட்களில் இவர் எங்கே போயிருந்தார்…?
இத்தகைய கேள்விகளை ஏன் எழுப்புவதில்லை…? )

நான் கருப்பு பணம் வைத்திருக்கவில்லை,
என்னுடைய வரியை ஒழுங்காக செலுத்தி வருகிறேன்.

( இதற்கு என்ன ஆதாரம்…?
இவர் statement மட்டும் போதுமா ?
போத்தி விளம்பரத்தில் நடித்து சம்பாதித்ததாகச்
சொன்ன 16 கோடியைப் பற்றி –
எத்தனை பேர், எவ்வளவு ஊடகங்கள் கேட்டாலும்
எவ்வளவு தடவை கேட்டாலும் – காது கேளாத, கண் தெரியாத,
வாய் பேசாத ஆசாமியாக நடிப்பது ஏன் ?

விளம்பரத்தில் நடிப்பதன் மூலம் வரும் வருமானம்
முழுவதையும், தொண்டு நிறுவனங்களுக்கு கொடையாக
கொடுப்பதாக தானாகவே முன்வந்து சொல்லிக் கொண்டாரே –
கொடுத்தாரா ? எத்தனை கோடி ?

“பெற்றால் தான் பிள்ளையா” என்கிற தனது சொந்த
ட்ரஸ்டுக்கேயா ? அதைப்பற்றி போலியாக செய்தி கொடுத்த
ஆசாமி மீது ஏன் போலீசில் புகார் கொடுக்கவில்லை ?

இப்போது கூட போத்தீஸ் மூலம் எத்தனை கோடி வருமானம்
கிடைத்தது, அதில் எவ்வளவு தானமாக கொடுத்தார் என்று
இவரால் வெளியே சொல்ல முடியாமல் போவது ஏன் ? )

கடுமையாக நான் உழைத்து சம்பாதித்த அந்த பணத்தை
வைத்து எனக்கும் என் மக்களுக்கும் நிர்வாகம்
என்ன செய்து இருக்கிறது?

( யாரை கேட்க வேண்டிய கேள்வி இது…?
எங்கே கேட்க வேண்டிய கேள்வி இது ..?
எப்போது கேட்க வேண்டிய கேள்வி இது ..?

இவர் கொடுத்ததாக பீற்றிக் கொள்வது –
போலி வருமானத்திற்கான வரியைத்தானே ?
தனிப்பட ஒவ்வொருவர் கொடுக்கும் வருமான வரியையும்
எப்படி செலவழித்தார்கள் என்று இவர் வரி கட்டும் மத்திய அரசு
விலாவாரியாக இவரிடம் கணக்கு காட்ட வேண்டுமா ? )

எனக்கு கடவுள் கிடையாது.
கடவுளாக பாவித்துக்கொள்பவர்களின் முடிவுகளையும்
ஏற்கமாட்டேன். ஆளும் அரசாங்கமானது,
அது எந்த கட்சியாக இருந்தாலும் ரூ.4000 கோடி வரை செலவிட
முடிகிறது. நாட்டில் நாம் 120 கோடி மக்கள் இருக்கிறோம்.
இந்த மக்களுக்கு ரூ. 4000 கோடியை ஏன் பிரித்துக் கொடுக்க
கூடாது? அப்படி கொடுத்து இருந்தால் இந்தியர்கள்
கோடீஸ்வரர்கள் ஆகியிருப்பார்கள்.

(இது என்ன உளறல் ? 4000 கோடியை 120 கோடி மக்களுக்கு பிரித்து கொடுத்தால் ஒவ்வொரு இந்தியரும் கோடீஸ்வரர் எப்படி ஆக முடியும் ? இவர் சொல்வது எந்த 4000 கோடி ? இவர் என்ன சொல்ல வருகிறார்
என்பது யாருக்காவது விளங்குகிறதா ? இவர் எந்த
வருமானத்தை பிரித்துக் கொடுக்க சொல்கிறார் …? )

அரசாங்கத்துடன் ஒப்பிடும்போது எனது வருமானம் மிகவும்
சொற்பமானது. ஆனால் வெள்ள நிவாரணத்துக்கு
அரசு நம்மிடம் பணம் கேட்கிறது.

( இவர் வருமானத்தை அரசின் வருமானத்துடன்
ஒப்பிடுவது மடத்தனம் என்பது இவருக்கே
தெரியவில்லையா ? –

ஆமாம் – இவரிடம் யார் வெள்ள நிவாரணத்திற்கு
பணம் கேட்டார்கள் ? எந்த அரசும் கேட்கவில்லையே ..?
கேட்பதற்கு முன்னரே ஏன் இந்த பிலாக்கணம் ..?)

ஆனாலும் நான் பணம் கொடுப்பேன். ஏனென்றால் அரசு
நிர்வாகத்தை நான் மதிக்கிறேன் வசதி படைத்தவனாக
என்னை நினைத்துக்கொண்டு கொடுக்கப்போவது இல்லை.
நான் எனது மக்களை உண்மையாகவே நேசிக்கிறேன்.

(இவர் கொடுக்கப் போகும் பிச்சைக்காசை வைத்துக் கொண்டு
வெள்ள நிவாரண வேலைகள் நடக்கப்போவது இல்லை…

மிஞ்சி மிஞ்சி போனால் இவர் நடிகர் சங்கத்திடம்
5 லட்சமோ, 10 லட்சமோ கொடுக்கப்போகிறார் –
அதுவும் தன் கௌரவத்தை காத்துக் கொள்ள….

சிபிராஜ் கூட இரண்டரை லட்சம் கொடுத்திருக்கிறார்…
ரஜினி பத்து லட்சம் கொடுத்திருக்கிறார்….
இவரும் தன் கௌரவத்தை காத்துக் கொள்ள “எதாவது”
கொடுத்தே ஆக வேண்டும்..
ஆக இந்த ஐந்து அல்லது பத்து லட்சத்திற்காகத்தான்
இத்தனை ஆவேசமும், கோபமும், புலம்பலும்…..)

இந்த கஞ்ச நாயகனிடமிருந்து ஐந்து காசு நன்கொடை
பெற்றால் கூட அதை அவமானமாகக் கருதுவார்கள்
சுயமரியாதை உள்ள தமிழ் மக்கள்…..

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

21 Responses to இந்த கஞ்ச நாயகனிடம் கால் காசு பெறுவது கூட தமிழ் மக்களுக்கு அவமானம்….

 1. johan paris சொல்கிறார்:

  நீங்கள் சரியாகக் கேட்கிறீர்கள், ஆனால் அவர் பக்தர்கள், இப்போ வந்து உங்களைத் இந்த மழையிலும், துவைத்துத் தொங்கவிடப் போகிறார்கள். தயாராக இருங்கள்.

 2. paamaran சொல்கிறார்:

  // கமல்ஹாசன் தரும் திடுக்கிடும் திருப்பங்கள் … !!
  Posted on ஜனவரி 30, 2013 by vimarisanam – kavirimainthan ..// அன்றைய இடுக்கையில் நீங்கள் குறிப்பிட்டு இருந்த ” ஒன்று முதல் ஏழு ” ஷாக்குகளை மீண்டும் ஒரு முறை படித்தால் ….— அன்றிலிருந்தும் — அதற்கு முன்பிருந்தும் கூட இவர் விடுத்த அறிக்கைகளை பார்த்தால் ….. இன்றுவரை இவர் திருந்தவே இல்லை என்பது நன்கு விளங்கும் …. ! இவரை பற்றியும் —- இவரது அறிக்கையை பற்ற்யும் இன்றைய நிலையில் ஏதாவது கருத்து கூறுவது கூட கேவலமாக தோன்றுகிறது ….. !! இன்றைய செய்தி ஒன்று : — // சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.1 கோடி நிதி/////Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/actor-raghava-lawrence-gives-rs-1-crore-chennai-rains-relief-fund-241483.html ….. ” மனிதன் என்பவன் தெய்வமாகலாம் — மாறி – மாறி வழங்கும் போது — வள்ளல் ஆகலாம் ” …. !!! இந்த கஞ்ச உலக நாயகன் பற்றி எழுதுவதே ……. ?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   பாமரன் –
   நீங்கள் தந்த செய்திக்கு மிக்க நன்றி.

   இந்த சமயத்தில் திரு.ராகவா லாரன்ஸ் சம்பந்தப்பட்ட
   ஒரு விஷயத்தை நான் அவசியம் சொல்ல வேண்டும்.

   ராகவா லாரன்ஸ், மாற்றுத் திறனாளி சிறுவர் சிறுமிகளுக்காக
   ஒரு இல்லத்தை உருவாக்கி நடத்தி வருவது எனக்கு
   நீண்ட நாட்களுக்கு முன்னரே தெரியும். இடையில் அவர்
   உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு செயல்பட
   முடியாத நிலையில் இருந்ததையும், திரைப்படத்துறையில்
   வாய்ப்புகளே இல்லாமல் இருந்ததையும் நான் அறிவேன்.

   நீண்ட இடைவெளிக்குப்பிறகு, அவரது சொந்தப்படமான,
   முனி- காஞ்சனா-2 படம் திரையிடப்பட்ட சமயத்தில்
   நான் திருச்சி சென்றிருந்தேன்.

   நட்சத்திர மதிப்பு இல்லாததால் -துவக்கத்தில்
   அந்த திரைப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லை.
   கூட்டமும் இல்லை. அது ஒரு மிகச்சிறிய தியேட்டரில்
   ( அண்ணா சிலையருகே -ஊர்வசி )திரையிடப்பட்டிருந்தது.

   நான் அனேகமாக தினமுமே அந்த வழியாக நடந்து
   போவது உண்டு. இரண்டாம் நாளே அந்த தியேட்டர் வாசலில்
   எக்கச்சக்கமான பெண்கள் கூட்டத்தை பார்த்தேன்.
   ( வாய் மொழி விளம்பரம் …!)
   டிக்கெட் கிடைக்காத பெண்கள் பலர்,
   தங்கள் குழந்தை குட்டிகளுடன்,
   அடுத்த காட்சிக்காக அங்கேயே காத்திருந்தனர்.

   இத்தகைய ஒரு காட்சியை நான் பார்த்து 30-35 ஆண்டுகளுக்கு
   மேலாகி விட்டது. அந்தக் காலத்தில், சிவாஜி, எம்ஜிஆர்
   படங்களுக்காக டிக்கெட் கிடைக்காத மக்கள் அடுத்த காட்சிக்காக
   இப்படி காத்திருப்பது உண்டு. “பேய்ப்படம்” ஒன்றிற்கு பெண்கள்
   கூட்டம் இப்படி திரளுவது கண்டு ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

   மறுநாள் முதற்கொண்டு திருச்சியில் இன்னொரு மிகப்பெரிய
   தியேட்டரிலும் இந்த படம் திரையிடப்பட்டது. அப்போதும் கூட்டம்
   சற்றும் குறையவில்லை. அதற்கடுத்த நாள் மூன்றாவதாக
   இன்னொரு தியேட்டரிலும் ஆக மொத்தம் மூன்று அரங்கங்களில்
   திரையிடப்பட்டது. மூன்றிலும் house full board தொங்கியது.

   மிக நல்ல உள்ளம் கொண்ட மனிதரான ராகவா லாரன்ஸ்
   படம் இந்த அளவிற்கு கூட்டத்தை வரவழைத்தது எனக்கு
   மனதளவில் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நல்ல மனிதர் –
   அவருக்கு அவசியம் பணம் திரள வேண்டும் என்று
   நினைத்துக் கொண்டேன்.

   இந்த “பேய்” படங்கள் எல்லாம் என் ரசனைக்கு ஒத்து வராது.
   இருந்தாலும், இவ்வளவு கூட்டம் வர அந்தப்படத்தில் என்ன தான்
   இருக்கிறது என்று பார்க்க வேண்டும் என்று தோன்றியது.
   அடுத்த நாளே நானும் பார்த்தேன்.

   அரங்கம் முழுவதும் பெண்களும், சிறுவர், சிறுமிகளும் தான்.
   சில காட்சிகள் வரும் முன்னரே அவர்கள் சிரிக்கத் துவங்கியதை
   பார்த்ததும் அது “ரிபீட் ஆடியன்ஸ்” என்பது புரிந்தது.
   ஒரு “பேய்ப்படத்தை” இவ்வளவு காமெடியாக எடுக்க முடியும்
   என்பதை முதல் முதலாக நிரூபித்திருந்தார் ராகவா லாரன்ஸ்.
   அன்று பார்த்ததை தான் நான் அடிக்கடி இந்த தளத்தில் கூட
   கூறிக்கொண்டிருப்பேன். “பேய்க்கும் பேய்க்கும் சண்டை” என்று
   டிக்ளேர் செய்து விட்டு, கடைசியாக ஒரு வித்தியாசமான
   “பேய்ச்சண்டை” காட்சியை வைத்திருந்தார் ராகவா லாரன்ஸ்.

   க்ளைமாக்சில் – ஒரு சண்டைக் காட்சியில்,
   சிரிப்பினால் அதிர்ந்தது அரங்கம்…

   படம் மிகச் சாதாரணமாக இருந்தாலும்…
   மிக நல்ல வசூலைக் குவித்ததால் – எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
   படத்தைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது மனதில்
   நினைத்துக் கொண்டே வந்தேன்…

   “இறைவன் என்று ஒருவர் நிச்சயம் இருக்கிறார்…
   சமுதாயத்திற்கு தேவைப்படும் ஒரு மனிதரை – அவர்
   எந்த அதல பாதாளத்தில் இருந்தாலும், கை கொடுத்து,
   தூக்கி விட்டு – மீண்டும் எழுந்து நிற்க வைக்கிறார்” என்று.

   தான் வாழ்வது சமுதாயத்திற்காக என்பதை மீண்டும்
   ஒருமுறை நிரூபிக்கிறார் ராகவா லாரன்ஸ் – இந்த
   ஒரு கோடி ரூபாய் வெள்ள நிவாரண நிதி மூலம்.

   ராகவா லாரன்ஸ் விஷயத்தை என்றாவது எழுத வேண்டுமென்று
   நினைத்துக் கொண்டிருந்தேன். சரியான சமயத்தில் நீங்கள்
   நினைவுபடுத்தி விட்டீர்கள்.

   what a strange comparison –
   கமல்ஹாசன் எங்கே – ராகவா லாரன்ஸ் எங்கே ?

   “வாழ்க ராகவா லாரன்ஸ் – வளர்க அவர் சமுதாயப் பணி”

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. gopalasamy சொல்கிறார்:

  ஏன் வெட்க பட வேண்டும்? ஜன்னலை மூடி வைத்து விட்டு தனக்கு பிரியமான, பழக்கமான பொழுது போக்கில் ஈடுபடலாமே? தலை கனத்துடன் உளறுவதை விட அது நல்லது. இவருடைய பேசும் செயலும் அருவெருப்பாக உள்ளது.

 4. gopalasamy சொல்கிறார்:

  தொண்டுள்ளம் கொண்டவர்கள் எத்தனையோ பேர் கடுமையாக உழைத்து உதவி பண்ணும் பொழுது தான் கட்டிய வருமான வரியை பற்றி பேசுவது
  கேவலம்.

 5. Nimiththigan சொல்கிறார்:

  உலக மகா நடிகனிடம் உண்மை மனிதனைத் தேடும் நாம் ஒரு முட்டாள்.

 6. வாய் பேசாமல் இருப்பதே இவரின் மரியாதையை காக்கும்.

 7. Lala சொல்கிறார்:

  மாநிலத்தின் முதல்வரே பாதுகாப்பாக , சொகுசாக உலங்கு வானூர்தியில் பறந்து வெள்ள அவலங்களை பார்வையிடும்போது , ஒரு நடிகர் வெள்ள அவலத்தை ஜன்னலூடாக பார்வையிட்டு வருந்தியதில் பெரிய தவறு ஏதுமில்லை .

  ஒரு வேளை, அரசைப்பார்த்து நாம் செலுத்தும் வரிப்பணமெல்லாம் என்னவானது? என பொதுவாக கேட்டதுதான் உங்கள் கோபத்துக்கு காரணமோ என்னவோ ?

  • johan paris சொல்கிறார்:

   //வருந்தியதில் பெரிய தவறு ஏதுமில்லை .// தவறு – மிகத் தவறாகக் கூறுகிறீர்கள், அவர் வருந்தவில்லை, கவிஞர் கமல் வேடிக்கை பார்த்தாராம்,வெட்கப்பட்டாராம். அத்துடன் பொருமியும் உள்ளார்- எங்கே தன்னிடம் காசு கேட்பார்களோ, மேலும் பொங்கியுமுள்ளார்- எங்கே – வரிப்பணம்.
   நீங்க தாங்குங்க! நல்லா வருவீங்க!
   முடிந்தால் அவருக்கு இப்படியான சமயங்களில் அதாவது, அவர் பணத்துக்குப் பங்கம் வருமோ எனும் சலனம் வரும் போது, பொத்திக் கொண்டு இருக்கும்படி!

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   இவர்கள் தான் என்ன எழுதுகிறோம் என்பதை அறியாமல் எழுதுகிறார்கள். ஒரு ஃபார்மாலிட்டிக்கும், தான் தெரிந்துகொள்வதற்கும் ஜெவும் மோதியும் வெள்ளச்சேதத்தையும் ‘நிலைமையையும் பார்த்துவிட்டார்கள். அவர்கள் வேலை, இதை எப்படிச் சமாளித்து, அனைத்து அதிகாரிகளையும் அரசு இயந்திரங்களையும் உபயோகப்படுத்தி உதவி செய்வது, கண்காணிப்பது என்பதுதான். இதைச் செய்யாமல், ஓரடித் தண்ணீரில் இறங்கி அரைமணி நின்றுவிடுவதால் என்ன சாதிக்கமுடியும்? அப்புறம், இங்கே வரவில்லை, அங்கே சென்றார்கள், இந்த சமுதாயத்தை மதிக்கவில்லை என்று அரசியல் பேசத்தான் உதவும்.

 8. johan paris சொல்கிறார்:

  காவிரி மைந்தா! இந்தா, துவைச்சுக் காயவிட , இந்த மழையிலும் ஒரு பக்தர் லாலா களத்தில் குதித்து விட்டார்.
  நான் ஓடுகிறேன். இனி உங்க பாடு…..

 9. thiruvengadam சொல்கிறார்:

  நான் ரசிகன் அல்லது வெறியரோ அல்ல. இந்த பதிவு அவர் மேல் குற்றம் சாட்ட சந்தர்ப்பத்திற்கு காத்திருந்து இப்போது பயன்படுத்தியதாக கருதுகிறேன். வரி சம்பவங்களில் ஏதேனும் நமக்கு ஏய்ப்பு பற்றி தெரிந்தால் உரிய நடவடிக்கைக்கு ஆவன செய்யலாம். எவ்வளவோ நல்ல பதிவுகள் கண்டுவந்தவன் , இது நெருடல் கொடுத்துவிட்டது. Repeat my first sentence. Of late we find many postings accusing / exposing the non help by big establishments. They may have their own problems. Some might have not informed to public what they offered. In my view it is better to publish who donated & request to all generally. There are equal accusations for not giving much money, who has equal to this celebrity. Hope U have gone through an article in yesterday central page of Dinamani.

 10. venkat சொல்கிறார்:

  sir what about rajini?Even lawerence is contributing 1 crore

 11. karikaalan சொல்கிறார்:

  ரஜினி எனது சொந்தப் பணம் எல்லாவற்றையும் பாதுகாப்பாக சினிமாவுக்கு வெளியே முதலிட்டு இருப்பதாகவே சொல்லப்படுகிறது .கமல் தனது சொத்துக்களை எல்லாம் மீண்டும் மீண்டும் சினிமா மேலே முதலிடுவதாகவே அறிகிறேன் .இதனால் ஏற்றம் இறக்கம் அவர் வாழ்வில் அதிகம் .அவர் என்ன
  வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்த்து வைத்திருப்பவரா ?

  கமல் அரசை பற்றி சற்று காரமாக சொல்லியிருப்பதாகவே அறிகிறேன் .
  கமலின் அடுத்தபடம் என்ன பாடு படப்போகிறதோ ?

 12. ஆவி சொல்கிறார்:

  //எவ்வளவோ நல்ல பதிவுகள் கண்டுவந்தவன் , இது நெருடல் கொடுத்துவிட்டது. // என்கிறார் திருவேங்கடம் ஐயா. அவர் உண்மையாகப் பதிவுகளைப் படித்திருந்தால் இப்படி குறிப்பிடமாட்டார். ஒரு பதிவை வைத்தோ ஒரு ஊடகத்தை வைத்தோ ஒருவரை /ஒரு ஊடகத்தை எடை போட முடியாது. நடுநிலையில் எழுதும் போது ஒரு பதிவு ஒருவருக்கு சாதகமாகவும்,இன்னொரு பதிவு அதே நபருக்கு எதிராகவும் இருப்பதை இணையத்தில் மட்டுமல்ல நடுநிலை வகிக்கும் ஊடகங்களிலும் பார்க்க முடியும். இதை அனைவரும் புரிந்து கொண்டு கருத்தை வைப்பது நல்லது.

  இந்த நாட்டில் ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய மரியாதை ஒரு அயோக்கியனுக்குக் கிடைத்து விடுகிறது என்று மகாநதி படத்தில் வசனம் பேசிய கமல், இன்று அதை தன் வாழ்வில் செய்து காட்டி இருக்கிறார்.அவருக்கு (?)அந்த மரியாதை கிடைத்து இருக்கிறது.
  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
  என்குற்ற மாகும் இறைக்கு.
  சமீபத்தில் அவர் பேசி வரும் பேச்சுகள் அரசியலுக்கு வருவதற்கான செயல்களாகப் பார்க்க முடிகிறது.

  தமிழர்கள் கொடுத்த உப்பு என்ற ரஜனி பெங்களூரில் சொத்தைக் குவிக்கிறாரே தவிர,தமிழகத்திற்கு எதையும் கொடுக்கவில்லை. அவரின் நிவரண நிதி பற்றி,பிரபல இயக்குனரான ராம் கோபால் வர்மா சொல்கிறார்- ரஜனி 10 இலட்சம் கொடுத்ததை விட கொடுக்காமலே இருந்திருக்கலாம்.

  எந்தக் கருத்தையும் வைக்காமலே சித்தார்த் செய்வதையும், தன் வீடு உட்பட தனக்கு சொந்தமான அனைத்து இடங்களையும் திறந்து விட்டு பராமரிப்பையும் ஏற்றுச் செய்கிறார் அஜித்.இப்படி சில நல்ல உள்ளம் கொண்ட நடிகர்கள் இருக்கவே செய்கிறார்கள்.இவர்கள் தங்களை நியாயப்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கு கருத்து சொல்ல முயலுவதில்லை.

  உலங்குவாநூர்தியை விட்டு ஜே இறங்கவில்லை என்று குற்றம் சுமத்துகிறார்கள். ஜே/கருணாநிதி எந்த முதல்வராயினும் வெள்ள நிலை பற்றி அறிய வெள்ளத்தில் கால் வைப்பதை விட மேலிருந்து பார்த்து நிவாரணம் பற்றி முடிவு செய்வதே மேலாதாகும். மின்சாரம் பற்றியும் குறிப்பிட்டார்கள். மின்சாரம் கொடுத்திருந்தால் எத்தனை உயிர்கள் பலியாகி இருக்கும் என்பதை எண்ணிப் பார்த்தார்களா?

  மன்னிக்கவும் கருத்து நீண்டு விட்டது.

 13. yarlpavanan சொல்கிறார்:

  கடவுளே! கண் திறந்து பாராயோ!
  http://www.ypvnpubs.com/2015/12/blog-post_6.html

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் யாழ்பாவாணன்,

   தமிழ் மக்களும், தமிழ்நாடும் -நிச்சயம் இந்த துயரில் இருந்து
   மீண்டு வருவார்கள். இறையும், இயற்கையும் அதற்கு துணை நிற்கும்.
   நம்புங்கள்… அது நிச்சயம் நடக்கும்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 14. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களுக்கு

  தமிழக அரசு பற்றி எந்த ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை,
  வரி பற்றியும் நான் குறிப்பிடவில்லை.
  வட இந்திய நண்பருக்கு எழுதிய ஆங்கில கடிதத்தின் ‪#‎தோரயமான‬ தமிழாக்கம் அந்த செய்தி!
  யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்!!
  நான் எந்த பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்கவில்லை.

  ……….. கஞ்சநாயகன் தொலைக்காட்சி பேட்டி.

  பேட்டி என்று செய்தி முதலில் வெளியானது விகடனில்….

  ஒரு பொறுக்கிக்கு ஆதரவாக இன்னொரு போக்கிரி…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.