பொறுக்கியா …போக்கிரியா…? இன்னமும் சந்தேகமா….?

.

.

வலைத்தள நண்பர்களுக்கு,

மழை, வெள்ளம் காரணமாக இன்னல்களை சந்தித்துக்
கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதை விட்டு விட்டு,
குற்றம் சொல்வதையே, மக்களிடையே வெறுப்பையும்,
பீதியையும் உண்டு பண்ணுவதையே தொழிலாக
கொண்டிருக்கின்றனர் சில சுயநலவாதிகள்.
இதில் சில செய்தித்தாள்களும், தொலைக்காட்சி சேனல்களும்
கூட அடக்கம்…

காரணம் ?

இன்னும் 4-5 மாதங்களில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல்கள்.
ஆளும் கட்சி எதையாவது உருப்படியாகச் செய்து,
மக்களிடையே நல்ல பெயர் வாங்கிவிடக்கூடாதே என்கிற
பதைபதைப்பு…

முடிந்த அளவு குழப்பங்களையும், கலவரங்களையும்,
பீதியையும், வதந்திகளையும் மக்களிடையே பரப்பி –
அவர்களை தொடர்ந்து அச்சத்தில் வைத்திருக்க திட்டமிட்டு
செய்யப்படும் சில செயல்கள்….

படித்த, நடுத்தர வர்க்கத்து இளைஞர்களிடையே
நியாயமாகவோ, நியாயமில்லாமலோ – ஜெ.அவர்களின் மீது
ஏற்பட்டுள்ள எரிச்சல், அதன் விளைவாக நிஜமா,
நடந்திருக்க வாய்ப்பு இருக்குமா என்றெல்லாம் யோசிக்காமலே
திமுகவின் sleeper cell-கள் பரப்பி விடும் வதந்திகளுக்கு
துணை போகும் நிலை….

இவற்றின் மொத்த எதிரொலியை நேற்றிரவு நான் எழுதிய
ஒரு இடுகையின் பின்னூட்டங்களில் காணலாம்…

இதற்கு முன்னால் இந்த வலைத்தளத்தின் பின்னூட்டங்களில்
நீங்கள் கண்டு வந்த தீர்க்கமான விவாதங்கள் இந்த
பின்னூட்டங்களில் இருக்கின்றனவா ? அதன் காரணம் –
பின்னணி – என்ன …?

நீங்கள் தன்னிச்சையாக –

இந்த வலைத்தளத்தையும்,
என் எழுத்தையும்,
நான் எடுக்கின்ற நிலைகளையும்,
எடை போட இது ஒரு சந்தர்ப்பம்…..

விகடன் என்கிற திமுகவின் பினாமி செய்தி நிறுவனத்தின்
உண்மையான பின்னணி என்ன …?
இன்றைய தினம் அது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது …?
அதன் உண்மையான உரிமையாளர்கள் யார்….?

எத்தனையோ முறை வெளிப்படையாக கேள்விகள்
எழுப்பப்பட்டும் இதுவரை அவர்களிடமிருந்து எந்தவித
விளக்கமும் வராதது ஏன் …?

நேற்றைய இரவு நான் பதிவிட்ட “பொறுக்கி விகடனா –
போக்கிரி விகடனா ?” என்கிற இடுகைக்கு மட்டும்
திடீரென்று இத்தனை விரோதமான பின்னூட்டங்கள்
வரக்காரணம் என்ன …?

இந்த வலைத்தளத்தின் நிரந்தர வாசகர்களான, நேர்மையான
எனது நண்பர்கள் என்னை, என் எழுத்தை, என் நிலையை
முழுமையாக புரிந்து கொண்டவர்கள் என்பதை நான்
உணர்வேன். அவர்களுக்கு நான் எந்தவித விளக்கமும்
அளிக்காமலே என் நிலை புரியும்.

இருந்தாலும் – பதில் அளிக்காமல் விட்டால்,
sleeper cell -களின் அட்டகாசம் தொடரும் என்பதால்
அத்தனை கேள்விகளுக்கும் விடையளித்து அதை
இந்தப் பதிவிலேயே போட்டிருக்கிறேன்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

———————————————————–

திருவாளர்கள் –

shaja,

நான் ஒரு மனிதாபிமானி – அவ்வளவே.

சூழ்நிலை காரணமாக அம்மாவை ஆதரித்து எழுத வேண்டிய
அவசியம் ஏற்பட்டிருக்கிறது. என் கடமையைச் செய்ய
யாருக்காகவும் தயங்கவோ, வெட்கப்படவோ மாட்டேன்.

– நான் ஏற்கெனவே செய்து கொண்டிருக்கும் பணிகளைப்பற்றி
விளம்பரப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று தான் இதுவரை
எதையும் எழுதவில்லை.
உங்களுக்காக, இதை தனியே எழுதுகிறேன்.

reg. stickers –இது நேற்றே பின்னூட்டத்தில் பதிவானது –

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படும்
நிவாரணப் பொருட்களை பறித்து முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படங்களை ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை எச்சரிக்கை
விடுத்துள்ளது.

நிவாரணப்பொருட்களை தடுத்து நிறுத்துபவர்கள் பற்றி
நேரடியாக ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதாவிற்கு 9551555501
என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், கடலூர்,
காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப்பொருட்கள் மீது
முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டச்சொல்வதாக
எழுந்த புகாரை அடுத்து காவல்துறையினர்
இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/
aiadmk-vows-take-action-against-partymen-
harassing-volunteers-241554.html

சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, தன்னார்வலர்கள் கொண்டு வரும்
நிவாரணப் பொருட்களை அதிமுகவினர் பெற்றுக்கொண்டு,
அதில் ஜெயலலிதாவின் ஸ்டிக்கர்களை ஒட்டுவதாக குற்றம் சாட்டப்பட்டது. புகைப்படங்களுடன் இது தொடர்பான செய்தி
வெளியானது.

இதனையடுத்து, நிவாரணப் பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும்
இடையூறு செய்தால் உடனடியாக கட்சி மேலிடத்துக்கு
புகார் அளிக்கலாம் என அக்கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

மேலும், அதிமுகவினர் இடையூறு செய்யும் ஆடியோ,
வீடியோ பதிவு இருந்தால் அவற்றையும் கட்சி மேலிடத்துக்கு
அனுப்பலாம் சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை
எடுக்கப்படும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்
பொருட்களை வழங்கி வரும் தன்னார்வலர்களுக்கு
அதிமுகவைச் சேர்ந்தவர் யாரேனும் இடையூறு செய்தால்
உடனடியாக கட்சி மேலிடத்துக்கு புகார் அளிக்கலாம்.
044-28130787, 044-28132266, 044-28133510 ஆகிய எண்களில்
தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இதுதவிர info@aiadmk.com என்ற மின்னஞ்சல்
வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம்.
அல்லது @aiadmkofficial என்ற ட்விட்டர் பக்கத்தின்
வாயிலாகவும் புகார்களை தெரிவிக்கலாம்” என்றும்
அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/
aiadmk-vows-take-action-against-partymen-
harassing-volunteers-241554.html

KM_Adimai ( இது எத்தனாவது போலி ஐடி ….? )

உங்களுக்கு வெவ்வெறு போலிப்பெயர்களை வைத்துக் கொண்டு
கலைஞரின் திருட்டு கும்பலுக்கு ஆதரவாக பின்னூட்டங்களை
எழுத வெட்கமாக இல்லை ?

திருட்டு கும்பலுக்கு ஆதரவாக தொடர்ந்து போலிப்பெயர்களில்
எழுதுபவர்களுக்கு பதிலெழுதி என் நேரத்தையும், உழைப்பையும்
வீணாக்க நான் விரும்பவில்லை.
எனவே, உங்களைப் போன்று வேண்டுமென்றே கலைஞரின் திருட்டு
கும்பலுக்கு ஆதரவாக பின்னூட்டம் போடுபவர்களுக்கு
இங்கு நிச்சயம் இடம் கிடையாது.

– உங்கள் வாதத்தில் உங்களுக்கே
நம்பிக்கை இருந்தால் – நக்கலும், கிண்டலும் செய்வதை
விட்டு விட்டு, உங்கள் கருத்தை ஆதாரபூர்வமாக,
விளக்கமாக எழுதினால் மட்டுமே இனி இங்கு பிரசுரமாகும்.

திருட்டு கும்பலின் sleeper cell களுக்கு
இங்கே இடம் கிடையாது.

Grainger

இந்த வலைத்தளத்தில் இதுவரை ஒரு பின்னூட்டமாவது
நீங்கள் எழுதி இருக்கிறீர்களா ? இப்போது மட்டும் இதை மட்டும்
எழுதக் காரணம் ..?

இன்னும் ஒரு sleeper cell என்பது தானே ?

நடுநிலை –

நானும் சென்னையின் பல பகுதிகளுக்கும் சென்று
கொண்டு தான் இருக்கிறேன். நண்பர் சொன்னார்,
அவர் சொன்னார்-இவர் சொன்னார் என்று ஏன் கதைக்கிறீர்கள் ?

பல இடங்களில் திமுக வினருக்கும், அதிமுக வினருக்கும்
கட்சி ரீதியான பிரச்சினைகள் இருப்பது கண்கூடு.
நீங்கள் சொல்பவர் திமுக வாக இருக்கலாம்.
கட்சி ரீதியாக அவர் அதிமுகவினரிடமிருந்து பிரச்சினைகளை
எதிர்கொண்டிருக்கலாம். அதை ஏன் பொது மனிதருக்கான
பிரச்சினை என்று விவரிக்கிறீர்கள் ?


ssk –

விகடனுக்கு வக்காலத்து வாங்குகிற நீங்கள் முதலில்
விகடனின் இன்றைய உண்மையான உரிமையாளர்கள்
யாரென்பதை சொல்லுங்கள் பார்க்கலாம்….

//உண்மை நிலையை விகடன் எழுதியுள்ளது.
கடைசியாக வந்த தகவலை எழுதி உள்ளது.
இதில் என்ன குமுறல் -//

என்று கேட்கிறீர்களே – கடைசி பத்தி தான் உண்மை
என்கிறபோது அதற்கு முன்னர் கூறப்பட்டுள்ள
உண்மைக்கு மாறான செய்திகளை
மேலும் தொடர வேண்டிய அவசியமென்ன ?

செய்தித்தலைப்பை மாற்றி – கடைசியாக வந்த செய்தியை
மட்டும் தானே போட வேண்டும்.

– இப்போது, இந்த நிமிடமும் கூட
(06/12/2015 மதியம் 2.15 மணி ) இன்னமும்
அதே தலைப்பு தான் தொடர்கிறது.
செய்திக்கு நேரெதிரான மோசடியான பொய்த்தலைப்பு….
இவர்கள் பொய்யர்கள், புரட்டர்கள் –
திருட்டு கும்பலின் போலி செய்தி நிறுவனம் என்பதற்கு
இதை விட வேறு என்ன ஆதாரம் தேவை ?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

47 Responses to பொறுக்கியா …போக்கிரியா…? இன்னமும் சந்தேகமா….?

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கா.மை எழுதியுள்ளது சரியாகத்தான் தெரிகிறது. நாம் விரும்பும் செய்திகளையும் அதற்கு கா.மையின் கண்ணோட்டத்தையும் எழுதவேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. உலகில் நடக்கும் (தமிழகத்தில்) எல்லா அ’நியாயங்களையும் எழுதுவதற்கு யாருக்கும் நேரம் இருக்காது. எழுதியுள்ளது சரியா என்று மட்டும்தான் பார்க்கவேண்டும். ஸ்டிக்கர் ஒட்டின ஆர்வலர்கள் (அது யாராக இருந்தாலும்.. திமுகாவோ அல்லது அதிமுக அல்லக்கைகளோ) செய்தது தவறு. தலைமையின் கவனத்துக்கு வந்தஉடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

  விகடன் எழுதியுள்ள இந்தக் கட்டுரை அதன் தரம் தாழ்வடைவதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. விகடன் குழுமம், சன், தயானிதி போன்ற செய்திகளை வெளியிடாது. இப்போது, முழுமையான திமுகவும் அதில் சேர்ந்துள்ளது. To offset this, from time to time, அவர்கள், திருமாவளவன், வைகோ, கம்யூனிஸ்டு, மனித நேயம்.. போன்றவர்களைப் பற்றியும் செய்திகள் வெளியிடுவார்கள்.

 2. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  both

 3. vallavan சொல்கிறார்:

  ## சூழ்நிலை காரணமாக அம்மாவை ஆதரித்து எழுத வேண்டிய
  அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ##

  நண்பர் கா.மை அவர்களே உங்களது தளத்தில் இது வரை நீங்கள் வெளியிட்ட கட்டுரைகளை நீங்களே படித்து பாருங்கள் .நீக்கள் ஒரு அக்மார்க் அதிமுக ஜால்ரா என்பது இந்த தளத்துக்கு வருகை தரும் யாருமே எளிதாக புரிந்து கொள்வர். உங்களை மினி ஒபிஎஸ் என்று அழைத்தாலும் தகும்.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப வல்லவன்,

   நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ள
   உங்களுக்கு சுதந்திரம் இருக்கிறது…. தாராளமாகச் செய்யலாம்.

   ஆனால், நீங்கள் தொடர்ந்து திருட்டு கும்பலுக்கு
   இந்த வலைத்தளத்துக்கு வந்து ஆதரவு தேட நான் அனுமதிக்கப்போவதில்லை….

   முதலில் உங்களுடைய முந்தைய பின்னூட்டத்திற்கு நான்
   எழுப்பியுள்ள இந்த கேள்விக்கு சரியான விளக்கத்தை கூறி விட்டு,
   பிறகு மேற்கொண்டு சங்கதிகளை எழுத வாருங்கள்….

   கேள்வியை மீண்டும் கீழே தந்திருக்கிறேன் –

   Mr. Vallavan,

   When they were able to take so many photographs,
   why not they indicate the place, time, and date of occurrence….?

   Why the faces of all the people in the photographs are
   deliberately in dark – so that should not be identified.

   If the intention of the news is to bring out the truth –

   they should clearly indicate –
   where it happened ?
   when it happened ?
   who were the people involved ?
   when so many photos are taken – why faces are not visible
   typically in all the photographs ?

   Now when the Police authorities have called for
   details of the culprits –
   what prevents the NEWS CREATORS to hide the identity ?

   இந்த செய்தியை யார் முதலில் வெளியுலகிற்கு கொண்டு வந்தது ?
   அவர்கள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்…?
   (எனக்குத் தெரிந்து ” பொறுக்கி விகடன் -“ல் தான் முதலில்
   இந்த செய்தி வெளியிடப்பட்டது. )

   I ALSO WILL BE GLAD TO KNOW THE REAL TRUTH BEHIND THIS NEWS –
   i AM ALSO KEEN TO KNOW WHO THE PEOPLE ARE REALLY INVOLVED….!!!

   I HAVE ABSOLUTELY NO PROBLEM
   EVEN IF IT HAPPENS TO BE ADMK WORKERS.
   LET THE TRUTH COME OUT…..

   -WITH ALL BEST WISHES,
   KAVIRIMAINTHAN

   • vallavan சொல்கிறார்:

    I gave you my answer in my previous comment. may be you are run out of false ideas.
    Its not surprising me that you going to block my comments because you are a slave of female dictator

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப வல்லவன்,

     // ADMK thugs never allow anybody take
     any picture of their atrocities and
     they have police force support too..//

     இது உங்களுடைய OWN STATEMENT….
     அப்படியானால், இந்த புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டிருக்கும் ?
     அவை எப்படி பொறுக்கி விகடனில் வெளிவந்திருக்கும் ..?

     இதற்கு நீங்கள் – “பொறுக்கி விகடனின்”
     கெட்டிக்கார நிருபர், அதிமுக தக்ஸ்” களையும்
     ஏமாற்றி விட்டு இந்த புகைப்படங்களை எடுத்திருப்பார் “
     என்று சொல்லி தப்பிக்க முடியாது.

     அப்படியானால் – அந்த நிருபர் நான் கேட்டிருக்கும்
     அத்தனை தகவல்களையும் இப்போது போலீசுக்கு தந்து,
     மேற்கண்ட அதிமுக”தக்ஸ்”-ஐ மாட்டி விடலாமே…

     இதற்கு மீண்டும் – “இது அதிமுக போலீஸ் – நடவடிக்கை எடுக்காது ” என்று சொல்லி தப்பிக்க முடியாது.

     காவல் துறை நடவடிக்கை எடுக்காது என்கிற சந்தேகம்
     இருந்தால் – அதே “பொறுக்கி விகடனிலும்” மற்ற
     செய்தித்தாள்களிலும் அந்த விவரங்களை வெளியிடலாமே…!!!

     நீங்கள் திருட்டு கும்பலின் சார்பாக என் மீது
     குற்றச்சாட்டை அள்ளி வீசி விட்டு தப்பித்து ஓட நான்
     விட மாட்டேன்.

     இது பொது தளம். இவற்றை எல்லாம் படிக்கிற
     வாசக நண்பர்கள் நமது விவாதங்களை எல்லாம்
     பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

     இந்த கேள்விகளுக்கு “நியாயமான” விளக்கங்களையும்,
     அதற்கான ஆதாரங்களையும் நீங்கள் வெளியிட்டே
     ஆக வேண்டும்….

     எதையாவது சொல்லி –
     தட்டிக்கழித்து ஓடிப்போக முயற்சி செய்யாதீர்கள்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      கொல்லைக் கதவை சாத்துங்கள்.
      ஓடிப்போகிறவர்கள் அதன்வழியாகத்தான் ஓடுவார்கள்.

     • vallavan சொல்கிறார்:

      I wasn’ t talk about Vikatan reporter . meant ordinary people.

     • vallavan சொல்கிறார்:

      I have already told you about ADMK statement is fair enough for evidence.
      அதுதான் எங்க அப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல் வெளிப்பட்டு விட்டதே ? அப்படியில்லாவிட்டால் இது தவறான செய்தி , விஷமிகளின் வதந்தி என தெரிவித்து விட்டு போக வேண்டியதுதானே . அதிமுகவின் வாயாலேயே உண்மை வெளிவந்த பின் , புகைப்படம் ஆதாரங்கள் எல்லாம் எதற்கு ?
      I am really glad to hear that your regular jalraa joining with you. But too much sound..

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      நண்ப வல்லவன்,

      உங்கள் சாயம் வெளுத்து விட்டது பார்த்தீர்களா …?

      செய்திக்கு – ஆதாரம் இல்லை…
      புகைப்படம் யார் எடுத்தது ? ஆதாரம் இல்லை…
      பிரசுரம் பண்ண யார் கொடுத்தது …? ஆதாரம் இல்லை…

      தப்புக் காரியம் பண்ணியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் –
      விவரங்களை கொடுங்கள் என்றால் –
      ஜமக்காளத்தை எடுத்து போர்த்திக் கொண்டு, முகம் தெரியாமல்
      ஓடி மறைகிறார்கள்… அதில் நீங்களும் சேர்த்தி….!!!

      சரி போனால் போகட்டும்….
      அடிப்படை இல்லாத,
      ஆதாரம் இல்லாத,
      பொய்யான,
      புனையப்பட்ட – கட்டுக்கதையை உருவாகி –
      செய்தியென்றும் அநியாயம் என்றும் அக்கிரமம் என்றும்
      வதந்திகளைப் பரப்பி வருகிறீர்கள்
      திருட்டு கும்பலுக்கு துணை போகும் நீங்களும்
      உங்களைப்போன்ற மற்ற sleeping cell- களும்.

      இது தான் உங்கள் சாயம் கலைக்கப்பட்ட உண்மை முகம்…

     • today.and.me சொல்கிறார்:

      //female dictator// vallavan-ன் பின்னூட்டத்தில் இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. 🙂

      எந்தவித கூச்ச நாச்சமும் இல்லாமல் Male dictator ஆக இருந்தால் பரவாயில்லை என்று உண்மையை ஒப்புக்கொள்ளும் எங்கப்பன் குதிருக்குள் இல்லை ரகம். பரவாயில்லை..
      இவர்களும் ஒரு பெண்ணின் வயிற்றில் இருந்து வந்தவர்கள்
      ஒருவேளை பெண்ணுடன் வாழ்பவர்களாகவோ அல்லது பெண்ணைப் பெற்றவர்களாகவோ இருக்கக்கூடும்.

      அந்தப் பெண்களின் பரிதாபநிலைக்காக இந்த மனிதனை விடுகிறேன்.

    • ஆவி சொல்கிறார்:

     வல்லவன் அவர்களே! முந்தைய பதிவில் எனது கருத்தை, பக்கச் சார்பற்று பயணர்களையும்,இணையப் பதிவாளரையும் குறிப்பிட்டு நடுநிலையுடன் தந்திருந்தேன்.

     //நண்பர் கா.மை அவர்களே உங்களது தளத்தில் இது வரை நீங்கள் வெளியிட்ட கட்டுரைகளை நீங்களே படித்து பாருங்கள் .//

     தயவு செய்து நீங்கள் ஒருமுறை பழைய பதிவுகளைப் படித்துப் பாருங்கள். பக்கச் சார்பற்று-கட்சி சார்பற்று பாருங்கள்.அப்போதுதான் பதிவுகளில் உள்ள
     உண்மைத்தன்மையை புரிந்து தெரிந்து கொள்ள முடியும்.

     தப்பு செய்யாதவர்கள் இவ்வுலகில் எவருமில்லை. வள்ளுவனில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்,ஒருமுறை இந்தக் குறளை படித்துப் பாருங்கள்.
     குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
     மிகைநாடி மிக்க கொளல்.

     எதிர்க்கட்சி என்றால் எதிர்ப்பது என்று பொருளல்ல. ஆட்சியைக் கருத்தில் கொள்ளாது மக்கள் நலன் கருதி நல்லது யார் செய்யினும் அதற்கு ஆதரவு தருவது அவர்கள் கடமை. நல்லவற்றை ஆதரிப்பதுடன் குறைகளையும் நிறைகளையும் சுட்டிக் காட்டுவது எதிர்க்கட்சியின் கடமை.

     தமிழக அரசியலில் இது யாரிடமும் கிடையாத நிலையில், குணம் நாடி குற்றமும் நாடி, தமிழகத்தில் சிறந்த ஆட்சி அமைய செயல்படுவதே விவேகமான செயலாகும்..

     //நீக்கள் ஒரு அக்மார்க் அதிமுக ஜால்ரா என்பது இந்த தளத்துக்கு வருகை தரும் யாருமே எளிதாக புரிந்து கொள்வர். உங்களை மினி ஒபிஎஸ் என்று அழைத்தாலும் தகும்.//

     இப்படி யாரும் கருதவில்லை. பொறுமையுடன் பதிவுகளைப் படித்து, உண்மைக்கு மாறானவை இருப்பின் ஆதரங்களுடன் வைப்பதே சிறப்பான செயலாகும்.அதை விடுத்து கோபம் கொள்வதேன்?

  • MOHAMED THAMEEM , SHARJAH, UAE சொல்கிறார்:

   நண்பா VALLAVA ,
   ## சூழ்நிலை காரணமாக அம்மாவை ஆதரித்து எழுத வேண்டிய
   அவசியம் ஏற்பட்டிருக்கிறது. ##
   KM சாரின் பதிவுகளை நீங்கள் தொடர்ந்து படித்தீர்கள் ஆயின் எங்கேயும் அம்மாவை அவர் ஆதரித்து எழுத வில்லை . அம்மாவை விமரிசனம் செய்யாமல் இருக்கலாம் . வரும் நாட்களில் விமரிசனம் செய்யலாம் ..

 4. R.Chandrasekaran சொல்கிறார்:

  Dear KM Sir,

  Don’t bother about sleeper cells. Keep it up

 5. today.and.me சொல்கிறார்:

  நமக்கு நாமே இயக்குனரின் அடுத்த பிரமாண்ட படைப்பு : சென்னை இசிஆர் ல் உள்ள ஜியார்ட்டி கேட்டட் கம்பூனிட்டி அபார்ட்மெண்ட்டில் 50 பேர் அடங்கிய குழு சமூகவலைதளங்கள், பேஸ்புக், ட்விட்டர், வாட்சப் இன்ன்பிறவற்றை உபயோகித்து முடிந்தவரை மக்களை மக்களின் கவனத்தை சீரழிப்பது….

  எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதுபோல…

  அல்லது

  சென்றமுறை இதேபோன்ற இயற்கைச் சீரழிவின்போது
  நட்டநடுராத்திரியில் நிவாரணம் தருகிறார்கள் என்று புரளியைக் கிளப்பிவிட்டு பலரை கொன்றதுபோல

  இம்முறையும் வேறுவிதமாக நடத்துகிறார்கள்
  அதில் ஒன்று
  செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பு பற்றி புரளி.. காவல்துறையிடம் ஏழுபேர் சிக்கியிருக்கிறார்கள்,

  மற்றொன்று
  ஸ்டிக்கர் பற்றியது
  இதில் வதந்தி மட்டும்போதாது என்று களத்திலேயே இறங்கியிருக்கிறார்கள்.
  களத்தில் மாட்டியவர்களை விசாரித்தபோது கொடுத்த முன்னுக்குப்பின்னான முரண் பதில்களில் பலர் மாட்டியிருக்கிறார்கள். முக்கியமானவர் சென்னையின் முன்னாள் தந்தையான மாசுவும், முன்னாள் அதிமுக அமைச்சரும் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமானவரின் சகோதரர் திமுகவில் முக்கிய பதவி வகிப்பவருமானவர். /இருவரும் விசாரணை வளையத்திற்குள் இருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும்.

  இது மட்டுமில்லாமல் கிளைப்பலனாக
  ‘மாறன் கைது அவசியமான ஒன்று’
  என்பதை எந்த ஊடகமும் வெளிப்படுத்திவிடக்கூடாது என்பதுவும் ஆகும்.

 6. today.and.me சொல்கிறார்:

  இந்தத் தளத்திற்கு அவ்வப்போது வருகைதரும் திடீர் பொங்கல்களுக்கு

  என்னுடைய பகிரங்க சவால்.

  விகடனின் தற்போதைய உரிமையாளர்கள் யார் யார் என்று ஆதாரத்துடன் இங்கே வைக்க முடியுமா?

  இல்லையென்றால் அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டு விகடனிலேயே உங்கள் கமெண்ட்களை வாந்தியெடுக்கவும்.

  இங்கே வரத்தேவையில்லை.

 7. today.and.me சொல்கிறார்:

  //மாட்டிக்கொண்ட மாறன்’ என யாரும் எழுதிடக்கூடாதுன்னுதான் சன் டிவியும், விகடனும் வெள்ளம் பற்றின செய்திகளில் நிறைய புரளிகளை கிளப்புறாங்க. அது நல்லாவே வேலை செய்யுது.

  நான்கு நாட்களாக தயாநிதி மாறனை சிபிஐ அலுவலகத்திற்கு கூப்பிட்டு நோண்டி நொங்கெடுத்த விஷயத்தை நம்ம கண்ணுலேர்ந்து மறைச்சிட்டாங்க பாருங்க.// நன்றி நல்லசிங்கம்.

  https://scontent.fmaa1-1.fna.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/s720x720/12341276_917939841615008_5749869819324629272_n.jpg?oh=192a1de2f4097d58c56cb0e73cd54ba7&oe=56EE0A29

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் டுடேஅண்ட்மீ,

   மிக்க நன்றி -உங்கள் எல்லா தகவல்களுக்கும்,
   பின்னூட்டங்களுக்கும் சேர்த்து….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 8. KuMaR சொல்கிறார்:

  அனல் பறக்கும் விவாதம்.
  தொடருங்கள் KM Sir..

 9. yarlpavanan சொல்கிறார்:

  சிறந்த திறனாய்வுப் பார்வை
  தொடருங்கள்

  • R.Gopalakrishnan சொல்கிறார்:

   mr.km. I am yet to believe that u r so aggresive. But I like it. i am also a of your age
   a couple of years older or younger. Please continue. For your information I am reading
   your site from day one.

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    பாதகம் செய்வோரை கண்டால்
    பயம் கொள்ளலாகாது பாப்பா,
    மோதி மிதித்துவிடு பாப்பா,
    அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா –
    -பாரதி

    -நன்றி நண்பர் கோபாலகிருஷ்ணன்.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

 10. Surya சொல்கிறார்:

  நிவாரண பொருள்களில் அம்மா படம் ஒட்டியது உண்மையே. பெங்களூர்-இல் இருந்து சென்ற என் நண்பர்கள் சிலர் இதை நேரில் காண நேரிட்டது.

  எனக்கு vallavan மற்றும் KM_Adimai தெரியாது. ஆனால் அவர்கள் அம்மாவை ஆதரிக்காததால் DMK அடிமை என்று கூறுவது சரியில்லை.

  ஒரு நல்ல ஆச்சியாளர் (CM ) சிறந்த பணியாளர்களை உருவாக்க வேண்டும். துரைசாமி மற்றும் Valarmathi போன்றவர்களை போல் அல்ல.

  • இளங்கோ சொல்கிறார்:

   Mr. Surya,

   கே.எம். சார், மற்றும் todayandme எழுதி இருப்பதையும்,
   அனைத்து பின்னூட்டங்களையும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.
   உங்களுக்கே புரியும். இது சென்னையின் முன்னாள் நகரத்தந்தை
   மாசு குழுவினரால் நிறைவேற்றப்பட்ட .ஒரு திட்டமிட்ட சதி.
   விரைவில் முழு உண்மைகளும் வெளிவரும்.

 11. today.and.me சொல்கிறார்:

  நண்ப சூர்யா,
  படத்தை ஒட்டியே ஆகவேண்டும், ஒட்டினால்தான் சென்னைக்குள் நுழையமுடியும் என்றெல்லாம் அந்தந்த ஊர் அதிமுக என்று சொல்லிக்கொண்டு திரிந்தவர்களில் 13பேரை பிடித்து விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் வந்த தகவல்தான் நான் முன்னே கூறியுள்ளது. மாசுவும் இன்னொரு முன்னாள் அதிமுகஅமைச்சரின் தம்பியும் சிக்குவார்கள்.

  சாதாரண காலங்களிலேயே
  மந்திரிகளையே எந்திரி என்று சொல்லும்போது…

  இதுபோன்ற கட்சி பாகுபாடு பார்க்காமல்
  மக்கள் பணி செய்யவேண்டிய நேரத்தில்
  இதுபோன்ற உதிரிகளின் ஆட்டத்தை
  ஒடுக்க வல்லவர் என்றால்
  அது அரகன்ட் என்று எல்லாராலும் தூற்றப்படும் ஜெவால் மட்டுமே முடியும்.

  இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எல்லாருக்கும் இந்தக் கருத்தில் ஏற்பு இருக்கும் என சொல்லவில்லை.

  இதே சூழலில் முகவோ அல்லது வேறு யார் இருந்திருந்தாலும் நடவடிக்கை வேறுமாதிரி இருந்திருக்கும் என்பது நன்றாகப் புரிகிறது.

   • today.and.me சொல்கிறார்:

    பொய்,புரட்டு,பித்தலாட்டம்,புரளி இது அனைத்திற்கும் ஒரு உருவம் கொடுத்தால் மு.க வீட்டுகும்பல் சிக்கும்.

    • today.and.me சொல்கிறார்:

     அடுத்த வதந்தி:
     அடையாறு முகத்துவாரம் 1300 கோடியில் தூர்வாரப்பட்டதாக அடுத்த வதந்தி முகநூல் மற்றும் டுவிட்டரில் பரவ ஆரம்பித்துள்ளது.

     தூ……. அரசியல் வியாதிகள் இந்த மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டால் நன்றாக இருக்கும்.

     https://scontent-sin1-1.xx.fbcdn.net/hphotos-xlf1/v/t1.0-9/12308565_10207010102284671_7861989157661508166_n.jpg?oh=6cbf8c7920ac3d0f322d301fe7306456&oe=56E0C03F

     வீட்டையே காணோம்,
     இருக்குற வீட்டுக்குள்ள சேறும் சகதியும்

     வெள்ளநிவாரணமாக

     தக்காளி கொடுக்கிறாராம் தக்காளி….

     • today.and.me சொல்கிறார்:

      ஸ்டாலின் கேரளாவிற்கு மந்திரபூஜை போடப் போயிருக்கிறார் தான் முதல்வராக. கருணாநிதியும் 3 நாள் கழித்து வாயை திறந்து அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கனும் என்று சொல்லிட்டார்

      இவர்களுடைய அடிமைகள் இனி அதிகமாக வதந்தியை பரப்புவார்கள்

      ..,மக்களே உஷார்.

  • Surya சொல்கிறார்:

   today.and.me…

   யார் இதை ஆராம்பித்தது?

   எந்த புது initiative வந்தாலும் அதற்க்கு அம்மா பெயர் மற்றும் அவர் படம். அம்மா உணவகம்… அம்மா மருந்தகம்.. அம்மா தண்ணீர்… தற்பொழுது நிவாரணம் செய்வதுக்கு புது வாகனங்கள்… அதில் பெரிய சைஸ் அம்மா புகைப்படம்.

   எல்லாம் political mileage -க்கு. கேட்டால் DMK இதைதான் செய்தார்கள் என்று ஒரு வாதம் வரும்!

   இனிமேல் அரசாங்கம் தரும் பொருளில் “தமிழ்நாடு அரசு – வாய்மையே வெல்லும்” படத்தை பெரிதாக பிரிண்ட் செய்யவும்.

   .

   • today.and.me சொல்கிறார்:

    வெளியில் தெரியவந்ததே சன் , கலைஞர் மற்றும் விகடன் ஊடகங்கள் வழிதான். அதனால்தான் இதை ஆராய்கிறார்கள்.

    மனித நேயத்துடன் உதவிசெய்ய வேண்டிய நேரத்தில் அரசியல் செய்யும் கழிசடைகளை இப்போது கவனிக்கவேண்டியதுள்ளது.

    இந்த வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான அரசு தொழிலாளர்கள், ஊழியர்கள் அனைவரும் சேர்ந்தது தானே அரசாங்கம்.

    இனிமேல் . நீங்கள் கூறும் யோசனையை மனதில்வைத்து தாங்கள் ஓட்டுப்போடும்போது செயல்படவும்..

    முன்குறிப்பாக சொல்லவேண்டிய பின்குறிப்பு:

    அதைத்தான், அரசு, அரசாங்கம், நீதித்துறை, சட்டம், மக்கள், மக்கள் பணி பற்றி கொஞ்சம் படித்துக்கொள்ளுங்கள், வெறும் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியலோடு நின்றுவிடாதீர்கள் என்று தலையால் தண்ணிகுடிக்கிறோம், விமரிசனத்தில்…. மக்கள் கேட்டால்தானே…

    அவசர அவசரமாக பாலைப் பொங்கவிடுவதிலேயே குறியாய் இருக்கிறார்கள். 🙂 😀

 12. theInformedDoodle சொல்கிறார்:

  விகடன் செய்வது பொறுக்கித்தனம். ஒரு தவறான தகவலை முழுப் பக்கத்தில் எழுதி நாறடித்து விட்டு, அடுத்த நாள், ஒரு மூலையில், நேற்று வந்த செய்தி தவறு என்று ஓரிரு வார்த்தையில் எழுதி கை கழுவும் நாளிதழ்களை பார்த்திருக்கிறோம். அதுவே பெரிய அயோக்யத்தனம். ஒரே செய்தியில் தவறான தகவலும், அதற்க்கு மறுப்பும் இடம் பெறுவது பொறுக்கித்தனம்தான்!

 13. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்கள் –
  srinivasanmurugesan மற்றும்
  Thiruvengadam –
  உங்கள் பின்னூட்டங்களை நீக்கி இருக்கிறேன்.

  – தயவு செய்து இத்தகைய வதந்திகளை எல்லாம்
  பொறுப்பின்றி, பரப்பாதீர்கள். இதில் எவ்வளவு
  சதவீதம் உண்மை எவ்வளவு சதவீதம் திமுகவினரால்
  பரப்பப்படும் வதந்தி என்பது உங்களுக்குத் தெரியுமா ?

  இதையெல்லாம் – பிரச்சினைகள்
  தீர்ந்த பிறகு பார்த்துக் கொள்வோம்.
  இப்போதைக்கு – உங்களால் முடிந்த உதவிகளை
  செய்யப் பாருங்கள்.

 14. ravi சொல்கிறார்:

  ஆளும் கட்சி எதையாவது உருப்படியாகச் செய்து,மக்களிடையே நல்ல பெயர் வாங்கிவிடக்கூடாதே என்கிற பதைபதைப்பு……//

  சார், நீங்கள் ஏன் பதைபதைகிரீர்கள் … இதை பற்றி கவலை படவேண்டியது கட்சிகாரர்கள் … நீங்கள் அல்ல ..

  //படித்த, நடுத்தர வர்க்கத்து இளைஞர்களிடையே நியாயமாகவோ, நியாயமில்லாமலோ – ஜெ.அவர்களின் மீது ஏற்பட்டுள்ள எரிச்சல், /////

  சரி சார்.. இந்த இளைஞர்கள் என்ன செய்ய வேண்டும்.. அரசியல் தலைவர்கள் புகழ் பாட வேண்டுமா !! 4 ஆண்டுகளில் ஏதாவது செய்து இருந்தால் அரசு கண்டிப்பாக கவலை படவேண்டாம்..
  அதிமுக வின் பலம் , திமுக செய்யும் சொதபல்கள் மட்டுமே.. கொஞ்சம் அமைச்சர்கள் அடக்கி வாசிக்கிறார்கள் .. அவ்வளவே… இல்லை என்றால் சுருட்டுவதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை …

  சென்னையில் நாங்கள் நேரடியாக கண்டது , கவுன்சிலர்கள் சம்பாதித்து வைத்து இருக்கும் கெட்டபெயர் ..
  திமுக சென்னையில் தோற்றத்தின் முக்கிய காரணம் மாநகராட்சி கவுன்சிலர்கள்.. கிட்ட தட்ட அதிமுக நிலையம் அதுவே…
  வெள்ள உதவிக்காக நாங்கள் சிலர் , அமைப்புகள் உதவியுடன் புறநகர் பகுதியில் சென்றோம் .. புறநகர் பகுதிகள் பலவும் கிராம பஞ்சாயத்துகள் .. நகராட்சிகள் குறைவு.. கவுன்சிலர்கள் பெரும் கேட்ட பெயரை சம்பாதித்து உள்ளார்கள் .. சிறு ஏரிகள்,குட்டைகள் ஆகியவற்றை உடைத்து விடுவது சாதாரணம் .. தகவல்கள் எதுவும் சரியாக வருவதில்லை ..

 15. ravi சொல்கிறார்:

  sleeper செல் …
  இதை தான் பாஜகா வும் (குறிப்பாக LVIS ) சொல்கிறது .. அணைத்து ஊடகங்களும் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று ..
  பரவாயில்லை .. பாஜாக வும் , அதிமுக வும் இதில் நல்ல ஒற்றுமை ..
  ஆர்.எஸ்.எஸ் , சேவாபாரதி , ரவிசங்கர் , வேளுக்குடி , மடங்கள் பலவும் ஒவ்வொரு வழியில் நல்ல உதவி புரிந்தனர் .. ஆனால் , எவரும் இதை போட்டோ எடுத்து பறைசார்ரவில்லை … பத்திரிக்கைகளும் இதை கண்டுகொள்ளவில்லை ..
  இதுவும் sleeper செல் தானோ …

  திருட்டு கும்பல் — மாற்று கருத்து இல்லை …
  ஆனால் , உங்கள் கணக்குப்படி .. நேர்மை என்பது 100% தானே.. அதிமுக , இதில் கண்டிப்பாக வராதே ..

  ஆனால் ஒன்று,, இந்த மழை வெள்ளம் , அதிமுக வின் பலவீனத்தை வெளியே கொண்டு விட்டது ..
  வெள்ளம் வராமல் இருந்தால் ,தேர்தலில் கண்டிப்பாக ஜெயித்து இருப்பார்கள் … இப்போது கொஞ்சம் கடினம் …
  காரணம் , சென்னை + புறநகர் – கிட்டத்தட்ட 50 தொகுதிகள் .. இந்த தொகுதிகளின் போக்கு எப்படி என்பது கடவுளுக்கே வெளிச்சம் …
  வேறு வழி … இருக்கவே இருக்கிறது , கூட்டணி ஆட்சி ..

 16. srinivasanmurugesan சொல்கிறார்:

  From. What’s App.
  To all my fellow volunteer friends who are on the ground providing support and supplies, here’s the most economic and affordable way to disinfect yourself. An awesome Doctor friend suggested it to me and I’ve been using it.

  Buy a packet of Potassium Permanganate, it costs only 12 bucks. Take a pinch (very small) and add it to a bucket of water. The water will turn pink. leave it there for ten minutes and then Use that water to wash your hands and legs. You can even have a bath in that water.

  It’s a very effective disinfectant. Please pass the word on to all our other volunteer friends. Stay safe guys!

  – forward msg

 17. gopalasamy சொல்கிறார்:

  58 ஆண்டுகளாக பத்திரிக்கைகள் படித்து வருகின்றேன். ஜூனியர் விகடன் முரசொலியின் மஞ்சள் பதிப்பு. ஆனந்த விகடன் தி முகவின் கட்சி பத்திரிக்கை. ஒன்று பொருக்கி. ஒன்று போக்கிரி

 18. today.and.me சொல்கிறார்:

  நண்பர்களுக்கு

  ஒரு பொறுக்கிக்கு ஆதரவாக இன்னொரு போக்கிரி…

  தமிழக அரசு பற்றி எந்த ஊடகத்திற்கும் பேட்டியளிக்கவில்லை,
  வரி பற்றியும் நான் குறிப்பிடவில்லை.
  வட இந்திய நண்பருக்கு எழுதிய ஆங்கில கடிதத்தின் ‪#‎தோரயமான‬ தமிழாக்கம் அந்த செய்தி!
  யார் மனதும் புண்பட்டிருந்தால் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்!!
  நான் எந்த பத்திரிகைக்கும் பேட்டி கொடுக்கவில்லை.

  ……….. கஞ்சநாயகன் தொலைக்காட்சி பேட்டி.

  பேட்டி என்று செய்தி முதலில் வெளியானது விகடனில்….

 19. ரிஷி சொல்கிறார்:

  யாராவது விகடன் நிர்வாகத்தார் பற்றிய முடிச்சுகளை அவிழ்த்தால் நல்லது. எனக்கு எங்கும் தகவல் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் பகிருங்கள்.

  அதுவரை இது பற்றிய கருத்துகளுக்கு பதில் சொல்வது சரியாக இருக்காது.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   // அதுவரை இது பற்றிய கருத்துகளுக்கு பதில் சொல்வது
   சரியாக இருக்காது.//

   வழுக்கல்…..!

   Escape…!!! 😉 😉

   -இருந்தாலும் இதையாவது எழுதினீர்களே…! நன்றி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 20. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  காவிரிமைந்தன் அவர்களுக்கு வணக்கம்!

  உங்கள் மீது எந்த அளவுக்கு நான் மதிப்பும் அன்பும் வைத்திருந்தேன் என்பது உங்களுக்கே தெரியும். நீங்களே இதே தளத்தின் கருத்துரைகளில் அதைக் கூறியும் இருக்கிறீர்கள். ஆனால், விகடன் பற்றி அண்மைக்காலமாக நீங்கள் எழுதி வரும் பதிவுகள் உங்களைப் பற்றிய என் மனக் கோட்டையின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்கின்றன!

  நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் தமிழ் இதழ் ஒன்றைப் பற்றிப் ‘பொறுக்கி விகடன்’ என வரிக்கு வரி எழுதுகிறீர்களே, உங்களுக்கே கூசவில்லை? “இதை விட இவர்கள் ‘வேறு வேலை’ பார்க்கப் போயிருக்கலாம்” என்றும் ஒரு கட்டுரையில் எழுதியிருக்கிறீர்கள்! எழுபது வயதுள்ள பெரிய மனிதர் ஒருவர் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகளா இவை?

  ‘கருநாடக அரசு தமிழ்நாடு அரசுக்கு அளித்த உதவி’ பற்றி விகடன் முன்னுக்குப் பின் முரணாக ஒரு செய்தி வெளியிட்டிருப்பதை மட்டும் வைத்துக் கொண்டு, அந்த ஒரே ஒரு விதயத்தை வைத்துக் கொண்டு இலட்சக்கணக்கான உலகத் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய ஓர் ஊடகத்தை வாய்க்கு வந்தபடியெல்லாம் தூற்றுகிறீர்களே, தெரியாமல்தான் கேட்கிறேன், நீங்களே ஒரு கட்டுரையைத் தெரியாத்தனமாகத் தவறாக – தவறான தகவல் கொண்டதாக – எழுதி விட்டீர்கள் என வைத்துக் கொள்வோம். தவற்றை நாங்கள் சான்றுடன் சுட்டிக் காட்டி விட்டால் என்ன செய்வீர்கள்? உடனே அந்தக் கட்டுரையின் தலைப்பை மாற்றி விடுவீர்களா? அது தவறு இல்லையா? அப்படி ஒரு கட்டுரையை நீங்கள் எழுதவே இல்லை என மூடி மறைக்கப் பார்க்கும் முயற்சியில்லையா அது? அப்படி ஒரு வழக்கம் இணைய உலகில் உண்டா?

  எனக்குத் தெரிந்த வரை, அப்படி ஒரு நிகழ்வு நேரிட்டால், உடனே அது தொடர்பாக வருத்தம் தெரிவித்தோ, மறுப்புத் தெரிவித்தோ அதே பதிவின் இறுதியில், உட்தலைப்புடன் உண்மையை வெளியிடுவதுதான் முறைமை! அதுதான் வழக்கம்! விகடனும் அதைத்தான் செய்திருக்கிறது. ஆனால், ஒரே ஒரு தவறு, வருத்தம் தெரிவிக்கவில்லை. அது தவறுதான், நான் மறுக்கவில்லை. ஆனால், அதை மட்டுமே வைத்து அவர்களின் மொத்த நடுநிலைமையையும் இகழ்ந்துரைப்பதா?

  கேட்டால், ‘விகடன்’ நிறுவனத்தை மாறன்கள் வாங்கி விட்டார்கள்; அதனால் விகடன் அ.தி.மு.க-வைத் தேவையில்லாமல் குறை சொல்கிறது என்பீர்கள். அதற்குச் சான்றாகச் ‘சவுக்கு’ தளத்தின் கட்டுரையையும் காட்டுவீர்கள்.

  மனச்சான்றைத் தொட்டுச் சொல்லுங்கள், ‘சவுக்கு’ தளத்தின் அந்தக் கட்டுரையில் அந்த 46.15% பங்குகளை மாறன்கள்தான் வாங்கியிருக்கிறார்கள் என நம்புவதற்குப் போதுமான அளவு சான்று உண்மையிலேயே காட்டப்பட்டிருக்கிறதா?…

  பாடீஸ் கார்ப்பரேட் எனும் பொதுவான அடையாளத்தின் கீழ் பெயர் குறிப்பிடப்படாத ஒருவரோ அல்லது சிலரோ அந்தப் பங்குகளை வாங்கியிருப்பதாகத்தான் அந்தச் சான்றில் காட்டப்பட்டுள்ளது. அதை மட்டுமே வைத்து, அந்த பாடீஸ் கார்ப்பரேட் என்ற பெயரில் இருப்பவர்கள் மாறன்கள்தான் என்கிறது சவுக்கு. அவர்கள் மாறன்கள்தான் என்பதற்கு என்ன அத்தாட்சி? அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லை அந்தத் தளம். விகடனின் பங்கை விகடன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தவிர வேறு யாரோ வாங்கியிருக்கிறார்கள் என்றாலே அது மாறன் குடும்பமாகத்தான் இருக்க வேண்டும் எனத் தானாகவே ஒரு முடிவுக்கு வந்து கற்பூரம் அடிக்கிறது சவுக்கு! எந்தச் சவுக்கு? நீங்கள் எந்த ராஜீவ் காந்தி கொலை பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதி உண்மைக் குற்றவாளிகள் பிடிபடப் பாடுபடுகிறீர்களோ, அதே ராஜீவ் கொலைப் பழியை மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் மீதே சுமத்தி, அந்தக் குற்றச்சாட்டு உண்மைக் குற்றவாளிகள் பக்கம் திரும்பிவிடக்கூடாது என்பதற்காக ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால் -‍ ராஜீவ் கொலைப் பின்னணி’ என்று நூல் வெளியிட்ட சவுக்கு! விகடனில் செம்பரம்பாக்க ஏரித் திறப்புப் பற்றி எழுதியதும் எழுதியவர் யார், என்ன என்றெல்லாம் தோண்டித் துருவி எழுதினீர்களே, விகடன் மீது பழி சுமத்தும் இந்தக் கட்டுரையை நம்பும் முன் அப்படிச் சவுக்கு யார் என்ன என்று ஆராய்ந்தீர்களா?

  போகட்டும், விதயத்துக்கு வருகிறேன். பாடீசு கார்ப்பரேட் என்கிற பொது அடையாளத்தில்தான் விகடனின் மேற்படி பங்குகள் வாங்கப்பட்டுள்ளன எனும்பொழுது, அதை வாங்கியிருப்பவர்கள் மாறன்கள்தான் எனச் சவுக்கு சொல்வது தவறு என்றால், அவர்கள் யார் என்று தெரியாமலே அவர்கள் மாறன்கள் இல்லை எனச் சொல்வதும் தவறுதான் இல்லையா? எனவே, நான் அப்படிச் சொல்லப் போவதில்லை. மேற்படி கட்டுரையில் நீங்களும், கருத்துரைப் பகுதியில் உங்கள் நண்பர் டுடே அண்டு மீயும் ஒரு சவால் விடுத்திருந்தீர்கள் இல்லையா? அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்! விகடனின் இன்றைய மெய்யான உரிமையாளர்கள் யார் என்கிற உண்மையைச் சான்றுடன் வெளியிட நான் ஆயத்தமாக இருக்கிறேன். ஆனால், அத்தாட்சியே இல்லாமல் சவுக்கு போட்ட பழியை மனமுவந்து ஏற்றுக் கொண்ட நீங்கள் அத்தாட்சியுடன் நான் தரும் இந்தத் தகவலை ஏற்றுக்கொள்வீர்களா?… எனக்கென்னவோ நம்பிக்கையில்லை. இதையும் ஏதாவது உப்புச்சப்பில்லாத காரணத்தைக் கூறிப் புறந்தள்ளவே முயல்வீர்கள். இருந்தாலும், உங்களுக்காக இல்லாவிட்டாலும், இத்தளத்தைப் படிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன் கருதி இதை வெளியிடுகிறேன். (இதில் என்ன மக்கள் நலன் வாழ்கிறது எனவெல்லாம் யாரும் வாய்விட்டு மாட்டிக் கொள்ள வேண்டா! அதற்கும் பதிலளிக்க எனக்குத் தெரியும்!).

  விகடன் நிறுவனத்தில் மொத்தம் நான்கு இயக்குநர்கள் (directors). இவர்களில் இருவர் மேலாண் இயக்குநர்கள் (managing directors). அவர்கள் வேறு யாருமில்லை; விகடன் நிறுவனத்தை நிறுவிய வாசன் அவர்கள் பேரன் சீனிவாசனும், அவர் உறவினரான ராதிகா சீனிவாசனும்தான் அந்த மேலாண் இயக்குநர்கள். மூன்றாமவர் குமார் மண்ணூர் வெங்கடேசுவரா என ஒருவர். இவரது இயக்குநர் குறியீட்டு எண் (Director Identification Number) 766877. முகவரி: மனை எண்: 41, ரமேஷ் நகர், வளசரவாக்கம், சென்னை – 600087. நான்காமவர், முயாசிஸ் உனிசா ரசியா என்பவர். இவரது இயக்குநர் குறியீட்டு எண்: 2649929. முகவரி: அடுக்கக (flat) எண்: 6, முதல் தளம், சுபிக்ஷா அடுக்குமாடிக் குடியிருப்பு, கதவு எண்: 4, இரண்டாவது குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், சென்னை – 600024.

  அத்தாட்சி-1: http://www.allcompanydata.com/in/director/muazziz-unissa-razia/2649929 மற்றும் http://www.allcompanydata.com/in/director/kumar-mannore-venkateswara/766877.

  அத்தாட்சி-2: https://business.indiafilings.com/ananda-vikatan-productions-private-limited#large

  நான் இங்கு குறிப்பிட்டிருப்பவை இந்த இரண்டு தளங்கள்தான். ஆனால், இன்னும் இன்னும் பல தளங்களில் இந்தத் தகவல்கள் இருக்கின்றன. ஆனால், இங்கு குறிப்பிடப்பட வேண்டியது அதுவன்று. இந்த நான்கு பெயர்களைத் தவிர இணையத்தில் விகடனின் இயக்குநர்களாக, விகடன் நிறுவனப் பங்குதாரர்களாக வேறு யார் பெயரும் இல்லை என்பதே விதயம். இணையத்தில் Directors of Vikatan எனத் தேடினாலே இந்த விவரங்கள் மீண்டும் மீண்டும் பற்பல இணையத்தளங்களில் காட்டப்படுகின்றன. இவர்கள் எந்த ஆண்டிலிருந்து விகடனின் இயக்குநர்களாகப் பதவி வகிக்கிறார்கள், விகடனில் எந்தெந்தக் குழுமங்களில் இவர்களுக்குப் பங்குகள் இருக்கின்றன ஆகிய பல விவரங்களும் உள்ளன! ஆனால், விகடனுடைய பங்குதாரர்களின் பட்டியலில் எந்த இடத்திலும் மாறன்களின் பெயரோ அவர்களின் நிறுவனங்களுடைய பெயரோ இல்லை. இந்த இரண்டு பேரும் எந்தெந்த நிறுவனங்களை நடத்துகிறார்கள், இன்னும் வேறு எந்தெந்த நிறுவனங்களில் இவர்களுக்குப் பங்குகள் இருக்கின்றன எனத் தேடிப் பார்த்தாலும் விகடன் பெயரும் விகடன் தொடர்புடைய நிறுவனங்களின் பெயரும்தான் இவர்களிடைய பங்குகளின் பட்டியலில் வருகின்றனவே தவிர, மாறன்களின் நிறுவனங்கள் எதிலும் இவர்களுக்குப் பங்கு இருப்பதாக வரவில்லை. இதிலிருந்தே இவர்கள் மாறன்களின் பதிலிகள் (Benami) இல்லை என்பதும் உறுதியாகிறது. காரணம், பதிலிகளை யாரும் ஒரே ஒரு சொத்துக்கு மட்டும் பதிலிகளாகப் பயன்படுத்த மாட்டார்கள். அதுவும் மாறன்களுக்கு இருக்கும் கடலளவுச் சொத்துக்களுக்கும் அவற்றில் இருக்கும் எக்கச்சக்கமான சிக்கல்களுக்கும் இரண்டு ஆட்களை ஒரே ஒரு நிறுவனத்துக்கு மட்டும் பதிலிகளாக அவர்கள் பயன்படுத்த வாய்ப்பில்லை. அவர்களுக்கு இருக்கும் சொத்துச் சிக்கல்களுக்கு இருக்கிற பதிலிகள் ஒவ்வொருவர் தலையிலும் ஏகப்பட்ட சொத்துக்களைக் கட்டினால்தான் முடியும். ஒருவேளை நிறுவனங்கள் தவிர, வேறு ஏதேனும் அசையாச் சொத்துக்களுக்கு இவர்களைப் பதிலிகளாக மாறன்கள் பயன்படுத்தி இருந்தாலும், இந்நேரத்துக்கு இவர்களின் பெயர்கள் ஏதாவது ஒரு வழக்கில் அடிபட்டிருக்கும். இந்தப் பெயர்கள் வெளிவந்திருக்கும். ஆனால், இணையத்தில் இவர்கள் பெயரைப் போட்டுத் தேடினால், விகடனில் இவர்கள் இயக்குநர்களாக இருக்கிறார்கள் என்பது தவிர, இவர்கள் பற்றி வேறு எந்த விவரமும் இல்லை.

  ஆக, எப்படிப் பார்த்தாலும் விகடன் நிறுவனத்துக்கும் மாறன்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் நூற்றுக்கு நூறு விழுக்காடு தெள்ளத் தெளிவாக உறுதியாகிறது!!!

  காவிரிமைந்தன் அவர்களே! டுடே அண்டு மீ அவர்களே! உங்கள் சவால்களுக்கு நான் விடை அளித்து விட்டேன். இதற்கு உங்கள் பதில் என்ன?…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.