இது என் சென்னை இளம் நண்பர்களுக்கு …..

.

.

ஏன் இந்த தலைப்பு ?
கடைசியில் சொல்கிறேன்….

மழை ஓரளவு நின்று விட்டது. நிறைய இடங்களில் நீர்
வடிந்திருக்கிறது. ஆனால், சாலைகளை, சந்துகளை
பார்க்கச் சகிக்கவில்லை. சேறும் சகதியுமாக,
ஒவ்வொரு குடிசையிலிருந்தும், ஒவ்வொரு வீட்டிலிருந்தும்
நனைந்து உதவாமல் போன பண்டங்களை, குப்பைகளை,
அழுகிப் போன காய்கறிகளை தூக்கி தெருவில்
போட்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் – பாவம்,
அவரவர் வீட்டை சுத்தம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

நகராட்சி ஊழியர்கள் வரும் வரை ஒரு கோடி மக்களைக்
கொண்ட இந்த சென்னையின் தெருக்களும், சந்துகளும்,
காத்திருந்தால் – மிகப்பெரிய தொற்று நோய்பரவல்
உருவாகும்.

எனவே,

நேற்று, ஒரு பரிசோதனை முயற்சியாக, நானும் என்
நண்பர் ஒருவருமாக ( இருவரும் 70-க் கடந்தவர்கள் )
துடைப்பங்கள், வாளிகளுடன் எங்கள் தெருவின்
ஒரு கோடியில் துவங்கினோம். தெருவை, தெரு ஓரங்களை –
சுத்தம் செய்து அனைத்து வித அழுகிய குப்பைகளையும்
தெரு ஓரமாக அங்கங்கே குவிக்கத் தொடங்கினோம்.

ஒரே மணி நேரம் – நாங்கள் செய்வதைப்பார்த்து –
எங்களுடன் 13 பேர் சேர்ந்து கொண்டார்கள். 2 பெண்களும்,
ஒரு சிறுவனும் கூட. தொடர்ந்து செய்தோம். பலர்
தேவைப்படும் இடங்களில் தண்ணீர் கொண்டு வந்து
கொட்டினார்கள். எங்கள் தெருவில் துவங்கியது, எங்களை
அடுத்து வலது பக்கம் உள்ளது. ஆக இரண்டு தெருக்களிலும் செய்து முடித்து விட்டோம். அத்தனை அழுகிய குப்பைகளையும்
தெரு ஓரத்தில் இருந்த நகராட்சி குப்பைத் தொட்டியருகே
கொண்டு போய்ச் சேர்த்து விட்டோம்.

இன்று காலை ஒன்பது மணிக்கு மீண்டும் அசெம்பிளி.
இடது பக்கத்தில் முதல் தெரு ஓவர்.
இப்போது அரைமணி நேர time off -ல் வந்திருக்கிறேன்.
அந்த இடைவெளியில் இந்த இடுகை. இது வேலையில்
இருந்தபோது தோன்றிய யோசனை…

சென்னை மாநகரைச் சேர்ந்த எனதருமை
இளைய நண்பர்களே. இது நமது சென்னை.
சிங்காரச்சென்னை கதையை எல்லாம் விடுவோம்.

இப்போதைக்கு உடனடியாக சுத்தமான சென்னையாக
இதை மாற்ற வேண்டியது மிக மிக அவசியம்.

ஒரு விதத்தில் இது சுயநலமும் கூட….
இதை உடனடியாகச் செய்யா விட்டால் –
நாம் சந்திக்கப் போவது மிகப்பெரிய – காலரா, வாந்தி,பேதி
போன்ற தொத்து நோய்கள்.
இதைச் தவிர்க்க வேண்டியது – பொது நலம் என்றாலும் –
அதில் சுயநலமும் சேர்ந்தே இருக்கிறது.

இந்த இடுகையை படிக்க நேரிடும் நண்பர்களைக்
கேட்டுக் கொள்கிறேன். மாநகராட்சி ஊழியர்கள் வரும்போது
வரட்டும். குறைந்த பட்சம் – நாம் வசிக்கும் தெரு,
அதை அடுத்து உள்ள சில தெருக்களை உடனடியாக
சுத்தம் செய்வோம்.

துவங்கத்தான் தயக்கம் எல்லாம்.
துவங்கி விட்டால் பல பேர் ஆர்வமாக வந்து சேர்ந்து கொள்கிறர்கள்.
இது அனுபவத்தில் கண்டது…
come on Friends …. please start…..

இதை எந்த வயதினரும் செய்யலாம்.
இளைஞர்களே என்று ஏன் தலைப்பில் சொன்னேன் என்றால் –
இளைஞர்களுக்கு நண்பர் கூட்டம் ரெடியாக கைவசம் இருக்கும்.
ஒரு தொலைபேசி அழைப்பில் பத்து பேரைத் திரட்டி விட
அவர்களால் முடியும்…. அதனால் தான்….

O.K. -மாலையில் சந்திப்போம்.

-வாழ்த்துக்களுடன்,
காவிரிமைந்தன்

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to இது என் சென்னை இளம் நண்பர்களுக்கு …..

 1. Geetha Sambasivam சொல்கிறார்:

  தங்கள் அளப்பரிய சேவை பாராட்டத் தக்கது. தொடரட்டும். அதற்கான உடல் ஆரோக்கியத்தையும் இறைவன் அருளப் பிரார்த்திக்கிறோம். சென்னையின் அனைத்துக் குடிமக்களுக்காகவும் எங்கள் பிரார்த்தனைகள்.

 2. Sharron சொல்கிறார்:

  Good on you KM sir. Sorry I am not there to join with
  your team.

 3. LVISS சொல்கிறார்:

  Salute you Mr K M -==At 70 you showed the way — The future of India is in safe young hands going by the report of many young people joining the rescue and relief work — Let us hope that this will be the last time we will see a deluge of this proportion – A similar one occurred in 1970s — But this one is unimaginable –

 4. MOHAMED THAMEEM , SHARJAH, UAE சொல்கிறார்:

  K M சார் , பூனைக்கு யார் மணி கட்டுவது என்று காத்திருப்பார்கள் .உங்களுக்கு பரிபூரண சுகத்தை எல்லாம் வல்ல இறைவன் வழங்குவான் . தொடரட்டும் உங்கள் சேவை .

 5. சுரேஷ் சொல்கிறார்:

  ஐயா நல்ல முயற்சி. ஏற்கனவே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள், இப்பணியை ஆரம்பித்து விட்டார்கள். நாமும் குறைந்த பட்சம் நம்மை சுற்றியுள்ள பகுதிகளையாவது சுத்தம் செய்வோம்.

 6. karanthaijayakumar சொல்கிறார்:

  உண்மைதான் ஐயா
  தொடங்கத்தர்ன் கூச்சப்படுவார்கள்
  தொடங்கிவிட்டால்,
  சென்னை பளிச்சிடும் சுத்தமாய்
  சுகாதாரமாய்
  வாழ்த்துக்கள் ஐயா

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அன்பும், ஆதரவும் தெரிவித்த
  நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.

  நேற்று இரண்டு தெருக்கள், இன்று காலை முதல் ரவுண்டில்
  ஒரு தெரு, ஒரு சிறு இடைவெளிக்குப் பின் இரண்டாவது
  தெருவில் முனைந்து வேலை நடந்து கொண்டிருந்தபோது,
  நகராட்சி ஊழியர்கள் – தங்கள் உபகரணங்களுடன்
  வந்து விட்டனர்.
  எங்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு, அவர்களே வேலையை
  மேற்கொள்ளத் துவங்கி விட்டனர்.

  இந்தப் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்ட அக்கம் பக்கத்து
  வாசிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் நன்றி கூறிக்கொண்டு
  சொந்த வேலையை பார்க்க வந்து விட்டோம்.
  இதற்கு மேல் இதைப்பற்றி நான் எழுதினால் அது
  விளம்பரம் ஆகி விடும்… எனவே போதும்.

  ஒரே ஒரு செய்தி – நண்பர்களுக்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
  இந்த மாதிரி பணிகளில், துவக்கத்தில் தான் தயக்கம் இருக்கும்.
  தயக்கத்தை தூர எறிந்து விட்டு, வேலையைத் துவங்கினோமானால்
  நாமே எதிர்பாராத அளவிற்கு துணைகள் சேரும். யாரும்
  கூப்பிடாமலே, பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தாமாகவே
  முன்வந்து சேர்ந்து கொள்வார்கள்.

  நம் மக்கள் – முக்கியமாக இளைஞர்கள் – அவசியம் ஏற்படும்போது
  எல்லாம், எந்தவித தயக்கமும் இல்லாமல் இது போல் பணியாற்ற
  முன்வர வேண்டும் என்பது தான் என் ஆசை.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. மணிச்சிரல் சொல்கிறார்:

  நிம்மதியா தூங்க முடியல… இதப்படிச்சப்புறம். திருத்தாம விடமாட்டிகளா? பின்னூட்டம் போடாம போக முடியல…. வயதாகிக்கொண்டிருக்கும் இளைஞருக்கு வாழ்த்துக்கள்!…

 9. D. Chandramouli சொல்கிறார்:

  KM, appreciate your being a good role model for others to follow.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.