இவர்கள் குண்டர் சட்டத்தில் “உள்ளே” தள்ளப்பட வேண்டியவர்கள் …

.

.

சில நிமிடங்களுக்கு முன்னர் பாலிமர் செய்தி
தொலைக்காட்சியில் –
நம்பும்படியான, சில வீடியோ இணைப்புகளைப் பார்த்தேன்.

வெள்ள நிவாரண உணவுப் பொருட்களை கொண்டு வந்த
தன்னார்வலர்களை, சில பொறுக்கிகள்
( அவர்கள் எந்த கட்சியைச் சேர்ந்தவர்களாக
இருந்தாலும் எனக்கு கவலை இல்லை –
அவர்கள் பொறுக்கிகள் தான்..)
இடைமறித்து, தங்களிடம் ஒரு பகுதியை கொடுக்கச்
சொல்லி வலியுறுத்தும் காட்சிகளைப் பார்த்தேன்.

காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்து –
குண்டர் சட்டத்தில் உள்ளே போட வேண்டும்.
அவர்களின் அடையாளம் வீடியோவில் மிகத்தெளிவாகத்
தெரிகிறது. அவர்களை கண்டுபிடிப்பதில் எந்த வித
சிரமும் இருக்க வாய்ப்பில்லை.

முடிந்தால், அவர்களை கைது செய்து அழைத்து வரும்போது –
பொதுமக்கள் எதிரேயே அவர்களுக்கு கொடுக்க வேண்டிய
” treatment “ஐயும் கொடுத்து இழுத்துச் சென்றால் –
அடுத்து யாரும் இத்தகைய செயல்களில் ஈடுபடும் முன்னர்
யோசிப்பர்.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

13 Responses to இவர்கள் குண்டர் சட்டத்தில் “உள்ளே” தள்ளப்பட வேண்டியவர்கள் …

 1. B.Venkatasubramanian சொல்கிறார்:

  Well Done Mr. Kavirimainthan.
  Here you prove yourself.
  I am really proud of being your reader.

 2. ஆவி சொல்கிறார்:

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி நண்பரே.

   இது ஒரு பொறுக்கிகளின் கூட்டம்.
   தயவு தாட்சண்யமின்றி அடக்கப்பட வேண்டிய கூட்டம்.

   -காவிரிமைந்தன்..

 3. இரா.பழனிகுமார். சொல்கிறார்:

  நல்ல வேளை..இன்னும் இது போன்ற செயல்களுக்கு வக்காலத்து வாங்காமல் இப்போதாவது கண்டிக்க தோன்றியதே..

 4. ரிஷி சொல்கிறார்:

  பதிவினை வழிமொழிகிறேன்.

 5. Raja சொல்கிறார்:

  Waste of time to read u r blogs. U dont want mention the political party name.

  • B.Venkatasubramanian சொல்கிறார்:

   Then don’t read.
   Who forces u to read ?

   • இரா.பழனிகுமார். சொல்கிறார்:

    This is the right answer coming from the wrong person..Many such persons are there to post here as if this blog is their own..It is a surprise to note that Kaa. mai. never gives such answer ..At the same time never condemns such ällakkais” to write on behalf of him.

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     Dear Mr.Pazhanikumar,,

     Why should I condemn…?

     Rather I would appreciate and thank
     Mr.B.Venkatasubramanian
     for the snub.

     No person with self respect
     will tolerate this sort of insults.
     What Mr.B.Venkatasubramanian
     has stated is absolutely right
     and I agree with his statement.

     I hereby repeat it –
     If anybody things that reading
     my blog is waste of time –
     then who forces them to read …?

     -with best wishes,
     Kavirimainthan

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  இவர்களைக் கட்சி அடையாளம் காட்டிப் பயன்படுத்திக்கொள்ளாமல், குண்டர் சட்டத்தில் தள்ளுவதே சரியானது. இவர்கள் சமுதாயத்தின் கொடிய நோய்கள். வெட்டி எறியப்பட வேண்டியவர்கள். கட்சி அடையாளத்துடன் பணிபுரிந்தவர்களும் ஓரளவு தவறு செய்தவரே (பயனை எதிர்பார்த்துச் செய்வதால்)

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.