இதைவிட கலைஞர் ராஜினாமா செய்து விடுவது – அவரது சுயமரியாதையை காக்கும்….!!!

.

.

வெள்ள நிவாரண உதவிகளை திரு.ஸ்டாலின் வழங்குகிறார்….
பைகளில் திமுக தலைவர் கலைஞர் படம் இல்லை –
அதற்கு பதிலாக பொருளாளர் ஸ்டாலின் படம் ….!!!

தலைவர் இருக்கும்போதே –
அவரது புகைப்படத்தை தவிர்த்து விட்டு,
பொருளாளரின் படத்தை போடுவது
தலைவரை வெளிப்படையாகவே ஓரங்கட்டுவதாகாதா…?

கலைஞரின் சுயமரியாதை இதை பொறுத்துக் கொள்கிறதா …?

vella nivaaranam with Stalin photo

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

26 Responses to இதைவிட கலைஞர் ராஜினாமா செய்து விடுவது – அவரது சுயமரியாதையை காக்கும்….!!!

 1. தலைப்பு மிகவும் சரிதான் ஐயா

 2. Kamal சொல்கிறார்:

  Ippo ithu rompa mukkiyama sir?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ஆம் நண்பரே,

   இதுவும்….. முக்கியம் தான்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 3. S.Raman சொல்கிறார்:

  அடுத்தவர் பொருளில் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுப்பதைக் காட்டிலும் இது மிகவும் முக்கியமான விஷயமா என்ன?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராமன்,

   உங்களுக்குத் தெரியாததா என்ன …?
   அதுவும் முக்கியம் தான் – இதுவும் முக்கியம் தான்…
   தமிழ்நாட்டு அரசியலில் இரண்டுமே முக்கியம் தான்….
   அதை ஏற்கெனவே விவாதித்தோம் –
   இப்போது இதையும் விவாதிக்கிறோம்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. today.and.me சொல்கிறார்:

  மரியாதை
  அதுவும் சுய மரியாதை
  அதை யாரிடம் எதிர்பார்க்கிறீர்கள்…
  அஞ்சாநெஞ்சர் குடும்பத்திற்குள் நுழையாமல் இதெல்லாம் சரிப்படாது.

 5. S.Raman சொல்கிறார்:

  திமுகவின் உட்கட்சிப் பிரச்சினைக்கும் அடுத்தவர் பொருளில் தமது படத்தை ஒட்டிக் கொடுக்கும் கீழ்த்தரமான செயலும் ஒன்றா? அந்தப் பிரச்சினையில் ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கிறீர்களே?

  • ravi சொல்கிறார்:

   தோழர், 2011 ல் இதே அம்மாவுக்காக நீங்கள் (சி.பி.எம் ) முட்டு கொடுத்தீர்கள் …
   2006 ல் தாத்தாவுக்கு முட்டு கொடுத்தீர்கள் … மாறி மாறி யாருக்கோ முட்டு கொடுக்கிறீர்கள் .. எதற்கு ?? 2001,2006,2011 என்ன மாற்றம் நடந்தது ??
   அடிச்சு விடறது ஏதாவது !!

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராமன்,

   இது எப்படி திமுகவின் உட்பிரச்சினை ஆகும்..?

   அடுத்த முதல்வர் கலைஞர் தான் என்று மக்கள் மன்றத்தில்
   திரும்பத் திரும்பக் கூறி வருகிறார் திருவாளர் ஸ்டாலின்.

   தேர்தலுக்கு முன்னரே ஸ்டாலின் தான் முதல்வர் வேட்பாளர்
   என்று அறிவிப்பது கட்சிக்குள்ளாகவும், வெளியில் கூட்டணி
   சேர்ப்பதிலும் – சில பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால்
   ஸ்டாலின் அவர்களே இந்த மாதிரி ஒரு strategy-ஐ
   மேற்கொள்கிறார். அவர் உள்மனதில் என்ன இருக்கிறது
   என்பதையும், சில சமயங்களில் அது எப்படி வெளியிலும்
   தெனபடுகிறது என்பதையும் இந்த புகைப்படமும்
   என் இடுகையும் வெளிப்படுத்துகின்றன.

   ஆமாம் – நீங்கள் தான் மக்கள் நல கூட்டணி ஆயிற்றே –
   திமுக, அதிமுக இரண்டையும் ஒழிப்பது தானே உங்கள்
   கூட்டணியின் லட்சியம், கொள்கை….

   பிறகு நீங்கள் ஏன் திமுகவுக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்ப ராமன்,

   இங்கே நீங்களே – உங்களையும் அறியாமலே –

   “அடுத்தவர் பொருளில் தமது படத்தை ஒட்டிக் கொடுக்கும்
   கீழ்த்தரமான செயல் ”

   என்று திரு ஸ்டாலின் அவர்களின் செயலை விமரிசித்து
   விட்டீர்கள் பார்த்தீர்களா ….?

   ( தானம் செய்யும் பொருட்களின் மீது படத்தை
   ஒட்டிக் கொள்வது கேவலம் என்கிற உங்கள் கட்சியின்
   கொள்கை தான் உங்களின் கொள்கையும் என்று நம்புகிறேன் ..)

   ஆமாம் – திரு ஸ்டாலின் செய்யும்
   தான, தர்மங்களெல்லாம் அவரது சொந்தப் பணமா …?

   கட்சிப்பணம் என்று சொல்வீர்கள்…
   கட்சித்தொண்டர்கள் கொடுத்த பணம் தானே …?
   அதில் “படத்தை ஒட்டுவதென்றாலும்”
   கட்சித் தலைவரின் படத்தை தானே ஒட்ட வேண்டும் ?
   அதெப்படி பொருளாளரின் படம் அங்கே வருகிறது ?
   அதை பொருளாளர் கையாலேயே கொடுக்கவும் செய்கிறார்…?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • Kamal சொல்கிறார்:

    Appo makkaloda varippanaththula kodukkira mixy, grinder ellaththulayum padam podurathu kevalam ellaya sir?

    • ரிஷி சொல்கிறார்:

     கேவலம் இல்லை சார்.

     சாராய பாட்டில்ல படம் போட்டாத்தான் கேவலம். அதனால் அதை மட்டும் செய்றதில்ல. 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப கமல்,
     ( ரிஷிக்கும் சேர்த்து )

     கேவலம் இல்லை என்று நான் சொன்னேனா…?

     ஆட்சியில் இருக்கும்போது கலைஞர் செய்தார்..
     இப்போது இவர்கள் செய்கிறார்கள்…
     நான் இதை நிச்சயமாக ஆதரிக்கவில்லை…!

     நீங்கள் வசதியாக, ஸ்டாலின் விவகாரத்தை
     திசை திருப்புகிறீர்கள் பார்த்தீர்களா …?

     இந்த இடுகையின் மூலப்பொருளைப்பற்றி –
     உங்கள் அபிப்பிராயத்தை சொல்லாமல்
     எங்கெங்கோ சுற்றி வருகிறீர்களே நண்பரே…!

     இது நண்பர் ரிஷிக்கும் பொருந்தும் 😉 😉

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • ரிஷி சொல்கிறார்:

      ஹா..ஹா. நன்றி ஐயா ஒத்துக்கொண்டதற்கு.

      உங்கள் வரிகள் இவ்வாறு இருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும். இருப்பினும் பரவாயில்லை 🙂

      //ஆட்சியில் இருக்கும்போது கலைஞர் செய்தார்..
      இப்போது ஜெ. செய்கிறார்…
      நான் இதை நிச்சயமாக ஆதரிக்கவில்லை…!//

      தாங்கள் கேட்டபடி மூலப்பொருளுக்கான என் அபிப்ராயம் கீழே தனி பின்னூட்டத்தில்.

 6. raja சொல்கிறார்:

  So stickers will stay across party…OK!

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்… ஸ்டாலின் இன்னும் மக்களிடையே எஸ்டாப்ளிஷ் ஆகவில்லை. அவர் சின்னப் பையன்’தான். அரசியல் தலைவர் இல்லை. கருணானிதியை மீறி ஒரு இமேஜ் பில்டப் பண்ண ஸ்டாலின் கஷ்டப்பட்டுத்தான் ஆகவேண்டும். அதில் தவறில்லை. ஆனால், இதைச் செய்துவிட்டு, அவர்கள் ஜெ.வைக் குறை சொல்வதற்கு ஒரு அருகதையும் கிடையாது. வெள்ளம் மழை வந்தபோது ஸ்டாலின் மஸாஜ் செய்துகொண்டிருந்தார். மழைவிட்டபின் ஜெ எங்கே என்று அவர் கேட்கும்போது, உண்மை பல்லிளிக்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நீங்கள், ஸ்டாலின், டி.ஆர்.பாலு நிதிஷ் மற்றும் லாலுவைச் சந்தித்த புகைப்படத்தைப் பாருங்கள். எல்லோர் கவனமும் டி.ஆர்.பாலு மீதுதான். ஸ்டாலின் அபென்டிக்ஸ் மாதிரித் தெரிவார்.

 8. paamaran சொல்கிறார்:

  சிரிப்பு வருது சிரிப்பு வருது
  சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ………
  சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
  செயலைப் பார்த்து சிரிப்பு வருது
  ” மேடை ஏறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
  மேடை ஏறிப் பேசும் போது ஆறு போலப் பேச்சு
  கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
  கீழே இறங்கிப் போகும் போது சொன்னதெல்லாம் போச்சு
  பணத்தை எடுத்து நீட்டு கழுதை பாடும் பாட்டு
  ஆசை வார்த்தை காட்டு உனக்கும் கூட வோட்டு ” ….. சூப்பர் பாட்டு …… எல்லோருமே — படம் காட்டுறாங்களா …. ?

 9. ரிஷி சொல்கிறார்:

  என்னைப் பொறுத்தவரை கலைஞரே ஸ்டாலினை முன்னிலைப்படுத்த நினைக்கிறார். ஆனால் அதற்கான சரியான நேரத்திற்கு காத்திருக்கிறார். அதற்கான முன்னோட்டம் தான் இது போன்ற ஸ்டிக்கர்கள். நமக்கு நாமே திட்டத்திற்கு ஒப்புதல் போன்றவை. அவரைப் பொறுத்தவரை அழகிரி எத்தருணத்திலும் ஸ்டாலினுக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது. இப்போது அழகிரி செத்த பாம்பாகத்தான் தெரிகிறார். அவருக்கு மதுரையில் இன்னும் செல்வாக்கிருக்கிறது என நான் நிச்சயம் நம்பவில்லை (மதுரையில் சொந்தங்கள் இருக்கின்றன. அதற்கருகில் தான் என் சொந்த ஊர். ஆகவே தெரியும்)

  கலைஞரே தேர்தல் நெருங்குகையில் ஸ்டாலினை முதல்வராக அறிவிப்பார். அதற்காக காத்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். ஆகவே இவையனைத்தும் கலைஞரின் ஒப்புதலுடன்தான் நடைபெறுகிறது.

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  ரிஷி,

  என்னுடைய மதிப்பீடு வேறு –

  தான் இருக்கும் வரை தனது இடத்தை யாருக்கும்
  விட்டுக் கொடுக்க கலைஞர் தயாராக இல்லை…
  அது ஸ்டாலினாகவே இருந்தாலும் கூட….!

  இப்போதைக்கு, ஓரளவிற்கு மேல் கலைஞரால் – ஸ்டாலினை
  கட்டுப்படுத்த முடியவில்லை என்றே தோன்றுகிறது.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • theInformedDoodle சொல்கிறார்:

   நீங்கள் நினைப்பதையே நானும் நினைக்கிறேன். கருணாநிதி ஸ்டாலின் வரவேண்டும் என்று நினைத்திருந்தால், முதல்வராக இருந்த வருடங்களில் மிக எளிதாக ஸ்டாலினை முன்னிருத்திருக்க முடியும். மகனாவது மற்றவராவது. பதவிக்கு முன் அனைவரும் தூசு!

 11. manudan சொல்கிறார்:

  அவங்க கட்சி பையில யார் படத்தையாவது போட்டுகிறாங்க. அது பத்தி “நடுநிலையான” நமக்கு என்ன கவலை இருக்க முடியும்? ஆனா 50 செமீ மழையை எதிர்பார்த்த பொ ப து அதிகாரிகள் அணையை திறக்க தலைமை செயலரிடம் அனுமதி கோரி காத்திருந்த வேளையில் தலைமை செயலர் 3 நாளா முதல்வரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் எதிர்பார்த்த மழையும் வந்து அணை கட்டுக்கடங்காமல் போனதால் அவசர கதியில் திறந்து விட்டு இப்படியெல்லாம் கொடூரமான சாவுகளும் பேரிழப்பும் ஏற்பட யார் காரணம்? அந்த 2-3 நாட்களில் ஒரு தலைமை செயலாளர் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் முதல்வர் ஆற்றிய பணிகள் என்ன?சரிவர செயல்பட முடியாத அவரது நிலையை காரணம் காட்டி முதல்வர் ராஜினாமா செய்ய கூறுங்களேன்.

  • ரிஷி சொல்கிறார்:

   இச்செய்தி பல தளங்களிலும் பேஸ்புக் பதிவுகளிலும் விவாதிக்கப்பட்டு வருகிறது. விமரிசனத்திலும் நாம் விவாதித்தால் நன்று.

   இது தொடர்பான இரு கட்டுரைகள் :
   http://www.luckylookonline.com/2015/12/blog-post.html
   http://donashok.blogspot.com/2015/12/blog-post.html

   டான் அசோக்கின் பதிவில் வாசித்து ரசித்த பத்தி : (துன்பியல் செய்தியாக இருந்தாலும் சரியான இடத்தில் சரியாக பொருத்தி விட்ட விதம் ரசிக்க வைத்தது)

   ////பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார். (இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இது அம்மாவின் ஆட்சி. அம்மாவின் ஆட்சியில் “அணையை திறக்க நான் உத்தரவிட்டுள்ளேன்… அணையை மூட நான் ஆணை பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே இழுத்துப்போட்டுச் செய்வார் என்பதால் இதில் மட்டும் நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல. அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின் ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது குழந்தைக்கும் தெளிவு)////

 12. Sampathkumar.K. சொல்கிறார்:

  விகடன் செய்தியில் போய் பார்த்தால், அத்தனை தலைப்பு செய்திகளுமே
  இதே கோணத்தில் தான் இருக்கும். இதிலெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை ?
  இந்த வதந்திகளை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் ?
  அரசை குறிவைத்து இட்டுக்கட்டப்படும்
  இத்தகைய செய்திகள் எல்லாம்எங்கிருந்து உற்பத்தியாகின்றன ?
  இதில் யானையை பார்த்த குருடர்களை போல ஆளாளுக்கு எல்லாம் தெரிந்தது போல் கமெண்ட்ஸ் வேறு.
  காவிரிமைந்தன் சார் இந்த வதந்திகளுக்கு என்ன ஆதாரம் என்பதை
  முதலில் இவர்கள் விளக்கட்டும். பிறகு வைத்துக்கொள்ளலாம் விவாதத்தை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   உங்கள் பின்னூட்டமும், அதனையொட்டிய
   நண்பர் சம்பத்குமாரின் பின்னூட்டமும்
   என்னை நிறைய வேலை வாங்கி விட்டன.

   காலையில் உங்களுக்கான பதிலுடன் வருகிறேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.