திருவாளர் தயாநிதி மாறன் வழக்கின் தற்போதைய நிலை…..!!!

dayanithi-1

இடையில் வெளியான ஒரு முக்கியமான செய்தியை
கவனிக்கத் தவறி விட்டேன்……!

” தயாநிதி மாறன் கைது அவசியம்!
உச்ச நீதிமன்றத்தில் முறையிட சிபிஐ முடிவு.”….

First Published :
06 December 2015 01:36 AM IST

பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக
வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் மத்திய
தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி
மாறனின் கைது நடவடிக்கை அவசியம் என்று உச்ச
நீதிமன்றத்தில் வலியுறுத்த சிபிஐ முடிவு செய்துள்ளது.

ஆறு நாள் விசாரணை: இந்த வழக்கில் தயாநிதி மாறனை
கைது செய்ய கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்காலத் தடை
விதித்த உச்ச நீதிமன்றம், அவரை கடந்த திங்கள் முதல்
சனிக்கிழமை வரை விசாரிக்க சிபிஐக்கு கடந்த வாரம்
அனுமதி அளித்தது.

இதன்படி, தில்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில்
கடந்த திங்கள் முதல் சனிக்கிழமை வரை விசாரணைக்காக
தயாநிதி மாறன் ஆஜரானார். காலை 11 மணி முதல்
மாலை 5 மணி வரை அவர் விசாரணை அதிகாரிகள் முன்பு
ஆஜராகி, அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தனது தரப்பு விளக்கத்துக்கு ஆதாரமாக, தகவல் உரிமைச்
சட்டத்தின் மூலம் பெற்ற கடிதங்கள், சொத்து விவரங்களின்
நகல்கள், வங்கிக் கணக்கு ஆவணங்களின் நகல்களை
அதிகாரிகளிடம் அவர் காண்பித்தார்.

இந்த வழக்கில் தயாநிதி மாறனிடம் கடந்த ஜூலை 1 முதல் 3-ஆம் தேதி வரை சுமார் 22 மணி நேரம் சிபிஐ அதிகாரிகள்
விசாரணை நடத்தினர். அப்போதும் மேற்கண்ட
ஆவணங்களைக் காண்பித்து தனக்கும் பிஎஸ்என்எல்
சட்டவிரோத இணைப்புகள் விவகாரத்துக்கும் நேரடித் தொடர்பு
இல்லை என்று கூறினார்.

புகாருக்கு மறுப்பு: ஆனால், தயாநிதி மாறனின் சென்னை
போட் கிளப் சாலையில் உள்ள வீட்டில் இருந்து சென்னை
தேனாம்பேட்டையில் முன்பு இயங்கிய சன் தொலைக்காட்சி
தலைமை அலுவலகம் வரை பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர்
கேபிள் இணைப்பு போடப்பட்டது, அதன் மூலம் அதிவேக
இணைய சேவை கொண்ட “ஐஎஸ்டிஎன்’ வசதி நிறுவப்பட்டது,

அந்த இணைப்புகளின் பிரதான இணைப்பு தயாநிதி மாறனின்
போட் கிளப் சாலையில் உள்ள தொலைபேசி எண்களுடன்
இணைக்கப்பட்டது தொடர்பான தொழில்நுட்ப விவரங்களை
சிபிஐ விளக்கும்படி கேட்டது. ஆனால், அது பற்றி எல்லாம்
தனக்குத் தெரியாது என்று தயாநிதி கூறி வருவதாக
சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து சிபிஐ உயரதிகாரி கூறியதாவது: தயாநிதி மாறனின் வீட்டில் 764 தொலைபேசி இணைப்புகள் கொண்ட சேவை
வழங்கப்பட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்திய போது,
அந்த இணைப்புகள் “அமைச்சர்’ என்ற முறையில் பிஎஸ்என்எல்
நிர்வாகம் வழங்கிய ஏற்பாடு என்றும், தனது அதிகாரத்தைத்
தவறாகப் பயன்படுத்தவில்லை என்றும் தயாநிதி மாறன்
கூறுகிறார்.

2004, ஜூலை முதல் 2007, ஜூன் வரை இந்த இணைப்பக வசதி
தயாநிதி மாறன் வீட்டில் இருந்தது தொடர்பாக அதிகாரிகள்
கேட்ட போது, “அது பற்றி எல்லாம் எனக்குத் தெரியாது’ என்றும்,
அந்த இணைப்புகள் மூலம் யாருடன் பேச்சு நடத்தினார் என
விளக்கும்படி கேட்ட போது, “நினைவில்லை’ எனவும்
தயாநிதி மாறன் கூறுகிறார். அவரது பதில் விசாரணைக்
குழுவினருக்கு திருப்தியளிக்கவில்லை.

சட்டப் பாதுகாப்பு கோரிக்கை: இந்த விஷயத்தில் காலம் கடந்து
சில அரசியல் நெருக்குதல் காரணமாக சிபிஐ மூலம் மத்திய
அரசு வழக்குப் பதிவு செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டுகிறார்.
“இந்த வழக்கில் எனக்கு சட்டப் பாதுகாப்பு கோரும் உரிமை
உண்டு.

ஆகவே, வழக்குரைஞரை வைத்துக் கொண்டு கேள்விகளுக்கு
பதிலளிக்க விரும்புகிறேன்’ என தயாநிதி மாறன் கூறுகிறார்.

அவரைக் கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம்
கூறியுள்ளதால், கடந்த ஆறு நாள்களாக நடத்தப்பட்ட
விசாரணையின் போது எழுப்பிய கேள்விகளுக்கான அவரது
பதில்கள் எழுத்துப்பூர்வமாகப் பெறப்பட்டுள்ளன.

நீதிமன்ற உத்தரவிற்கிணங்க விசாரணைக்கு தயாநிதி மாறன் முழு ஒத்துழைப்பு தருவார் என எதிர்பார்த்தோம். ஆனால்,
அந்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
எனவே, உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகி அவரைக்
காவலில் வைத்து விசாரிக்க வேண்டிய அவசியத்தை
சிபிஐ வலியுறுத்தும்’
என்றார் அந்த உயரதிகாரி.

அதிகாரிகளிடம் மறுவிசாரணை!

பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்தது தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பிஎஸ்என்எல் முன்னாள் உயரதிகாரிகள் பிரம்மனாதன், எம்.பி. வேலுசாமி ஆகியோரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தத்
திட்டமிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக தயாநிதி மாறன் உள்பட
அனைவரிடமும் 2014, ஆகஸ்ட் மற்றும் 2015, ஜனவரி ஆகிய
மாதங்களில் நேரிலும்,

அவரது சகோதரர் கலாநிதி மாறனிடம் கடந்த ஏப்ரல்
மாதத்திலும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
சன் டிவி நிர்வாகிகள் ஹன்ஸ்ராஜ் சக்சேனா, கண்ணன்,
தயாநிதி மாறனின் உதவியாளர் கௌதமன், ஊழியர் ரவி
ஆகியோரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக கலாநிதி மாறன் நீங்கலாக
தயாநிதி மாறனை முதலில் காவலில் வைத்து விசாரித்தால்
மட்டுமே, மற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை
நிரூபிக்கும் ஆதாரம் தங்களுக்குக் கிடைக்கும் என்று
விசாரணைக் குழுவினர் கருதுவதாக
சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

( நன்றி – தினமணி நாளிதழ் )

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to திருவாளர் தயாநிதி மாறன் வழக்கின் தற்போதைய நிலை…..!!!

 1. thiruvengadam சொல்கிறார்:

  Usually U will just refer the source for any information. Now U try to get insulation from any possible opposition ( mighty one ) by ack.to Dinamani. While reading U may point on Gurumurthi article which give some relevant now.

  • today.and.me சொல்கிறார்:

   திருவேங்கடம் ஐயா என்ன சொல்ல வருகிறார்? புரியவில்லை. புரிந்த நண்பர்கள் கொஞ்சம் எனக்குப் புரியும்படி விளக்கவேண்டுகிறேன்.
   நன்றி.

   • இளங்கோ சொல்கிறார்:

    அய்யா பின்னூட்டம் எப்போதுமே கொஞ்சம் வித்தியாசமாக
    இருக்குமாம். அவரே முன்பு சொல்லி இருக்கிறார்.

   • ஆவி சொல்கிறார்:

    எனக்குப் புரிகிறது. thiruvengadam என்பவரின் கருத்துப் பதிவை புரிந்து கொள்வதற்கு ஆங்கிலம் தெரியாத ஒருவர் வேண்டும். பழைய கருத்துகளை பார்த்தாலே தெரிந்திருக்கும். இருப்பினும்…………
    ஏன் இந்த அவசரம்?
    வலைப்பதிவாளர் தினமணியில் வந்த ஒரு செய்தி என்று குறிப்பிட்டு அதை தந்திருக்கிறார். வேறு எந்தக் கருத்தையும்,விமர்சனத்தையும் அவர் வைக்கவில்லை. படிக்காதவர்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

    இது ஒரு செய்தி அவ்வளவுதான். அதற்கு திருவேங்கடம் ஐயா கோபம் கொள்வதேன்?

  • paamaran சொல்கிறார்:

   // நீங்கள் எப்போதுமே எங்காவது இருந்து தகவல்களை எடுத்து தான் மேற்கோள் கட்டுவீர்கள் …. ஆனால் தற்போது உங்களின் தற்காப்புக்காக —– ஒருவருக்கு எதிராக உள்ள பலதில் ஒன்றான தினமணியிடம் இருந்து எடுத்துள்ளிர்கள் ….இதை படிக்கும்போது நீங்கள் குருமூர்த்தியின் செய்திகளை மேற்கோள் காட்டியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும் // ….. அய்யா திவேங்கடம் … அவர்களே நீங்கள் ” திரு .கா.மை . ” அவர்களுக்கு கூற வந்தது இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன் …… தயவு செய்து இனி மேலாவது …. ஆங்கிலத்திலத்திலோ … அல்லது தமிழிலோ கருத்துக்களை ” கொஞ்சமாவது தெளிவாக ” குறிப்பிட்டால் எல்லோருக்கும் — நல்லது தானே ….?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் திரு.திருவேங்கடம் அவர்களே,

   மேற்கண்ட இடுகையில் – என்னுடைய பங்களிப்பு –
   கருத்துக்கள், விமரிசனங்கள் எதுவுமே இல்லை –
   வெறும் செய்தி தான்

   எனவே இது தினமணியில் வந்த செய்தி என்று
   காண்பித்திருக்கிறேன். அவ்வளவே….!

   இது ஒரு பக்கமிருக்க –

   நான் பாதுகாப்பாக இருக்க முயற்சிப்பதில்
   உங்களுக்கு எதாவது ஆட்சேபணை உண்டா …?

   கண்டு பிடித்து விட்டேன் பார் என்கிற தோரணையில்
   நீங்கள் எழுதி இருக்கும் பின்னூட்டம் எனக்கு
   அந்த “திகிலை” ஏற்படுத்துகிறது… !!!

   என்னை இப்படி பயமுருத்துவது நியாயமா…. 😉 😉

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    //கண்டு பிடித்து விட்டேன் பார் என்கிற தோரணையில்
    நீங்கள் எழுதி இருக்கும் பின்னூட்டம் எனக்கு
    அந்த “திகிலை” ஏற்படுத்துகிறது… !!!////

    நண்பர் திருவேங்கடத்தின் இந்த மிரட்டலை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்களோ எனக்கும் பயந்து பயந்து தான் வந்தது.

    கடைசியில் ஸ்மைலி கைகொடுத்துவிட்டது.

    😀 😀

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நண்ப டுடேஅண்ட்மீ,

     எல்லாம் உங்கள் தயவு, பயிற்சிக்கொடை – தான்…. 😉 😉

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

 2. today.and.me சொல்கிறார்:

  எனக்கு விளக்கம் அளித்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
  திருவேங்கடம் ஐயா, கொஞ்சம் எனக்குப் புரிகிற மாதிரி எழுதிவிட்டீர்களானால்,
  உங்கள் கருத்தை இப்படி எல்லாரும் தோலுரிக்கவேண்டிய வராது என்று எண்ணுகிறேன்.

 3. today.and.me சொல்கிறார்:

  கா.மை.ஜி,
  சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஒருவர்
  அயல்நாடு செல்லமுடியுமா? அதுவும் குடும்பத்துடன்.
  திரும்பி வருவாரா….

  கேடிகளில் மூத்தவர் இன்று குடும்பத்துடன் பின்லாந்து பயணம்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.