தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

.

.

நண்பர் ரிஷி நீண்ட நாட்களாக இந்த வலைத்தளத்தின்
வாசகர் – அதன் மூலமாக எனக்கு நண்பர்.

நேற்று அவரிடமிருந்து வந்த பின்னூட்டத்தில் –

—————————————–

இச்செய்தி பல தளங்களிலும் பேஸ்புக் பதிவுகளிலும்
விவாதிக்கப்பட்டு வருகிறது. விமரிசனத்திலும் நாம்
விவாதித்தால் நன்று.

இது தொடர்பான இரு கட்டுரைகள் :
http://www.luckylookonline.com/2015/12/
blog-post.html
http://donashok.blogspot.com/2015/12/
blog-post.html

————————————

என்று எழுதி இருந்தார்.

இதற்கு பதிலாக நண்பர் சம்பத்குமார்.கே. கீழ்க்கண்டவாறு
எழுதி இருந்தார்….

———————————————-

விகடன் செய்தியில் போய் பார்த்தால், அத்தனை தலைப்பு
செய்திகளுமே இதே கோணத்தில் தான் இருக்கும்.
இதிலெல்லாம் எவ்வளவு தூரம் உண்மை ?
இந்த வதந்திகளை எல்லாம் யார் கிளப்பி விடுகிறார்கள் ?
அரசை குறிவைத்து இட்டுக்கட்டப்படும் இத்தகைய
செய்திகள் எல்லாம் எங்கிருந்து உற்பத்தியாகின்றன ?
இதில் யானையை பார்த்த குருடர்களை போல ஆளாளுக்கு –
எல்லாம் தெரிந்தது போல் கமெண்ட்ஸ் வேறு.

காவிரிமைந்தன் சார் இந்த வதந்திகளுக்கு என்ன ஆதாரம்
என்பதை முதலில் இவர்கள் விளக்கட்டும். பிறகு
வைத்துக்கொள்ளலாம் விவாதத்தை.

——————————————

விகடன் பொறுக்கியா அல்லது போக்கிரியா என்பது
குறித்து ஏற்கெனவே பட்டிமன்றம் நடத்தி –
இரண்டும் தான் என்கிற முடிவுக்கும் வந்து விட்ட நிலையில்
மீண்டும் இது ஒரு புதிய சோதனை …

இந்த செய்திகளின் அடிப்படை தான் என்னவென்று
கொஞ்சம் தீர ஆராய்வோமென்று நினைத்து விவரமாக –
உள்ளே போனேன் – –

—————————————————–
முதலில் விகடன் –

” டி.எல்.எஃப். ஐ.டி. வளாகத்தில் என்ன நடக்கிறது? –
மறைக்கப்படும் மர்மம்! “

http://www.vikatan.com/news/tamilnadu/56139-
what-happening-in-dlf-complex-hidden-mystery.art

” டி.எல்.எஃப் உள்ளே என்ன நடக்கிறது? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்களேன்! ”

( http://www.vikatan.com/news/ )
( http://www.vikatan.com/news/coverstory/56167-
whats-happening-inside-dlf-it-park.art )

-என்கிற பயமுருத்தும் தலைப்புகளில்
விகடனில் செய்தி ( ? )கட்டுரை கீழ்க்கண்டவற்றை சொல்கிறது –

———————-

…..
…..

இந்நிலையில் வெள்ள நீர் சூழ்ந்திருக்கும் இந்த வளாகத்துக்குள்
என்ன சேதம் ஏற்பட்டிருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை.
ஒரு நாளின் எந்த நேரமும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும் இந்த வளாகத்துக்குள் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள்… இருக்கிறார்களா என்றெல்லாம் பீதி கிளம்பியிருக்கிறது!

பிரமாண்டத்தின் அடையாளமாக இருக்கும் இந்த ஐ.டி.
மாளிகையின் கதவு, கடந்த திங்கட்கிழமை மாலை முதல்
இழுத்துச் சாத்தப்பட்டிருக்கிறது. இன்றோடு (புதன் 9.12.2015)
அந்த வளாகம் பூட்டப்பட்டு 10-வது நாள். டி.எல்.எஃப்.
ஐ.டி மாளிகை அமைந்திருக்கும் இடத்துக்கும் மெயின்
ரோட்டுக்கும் இடையில் 500 மீட்டர் இடைவெளி. மெயின்
ரோடுவரை வெள்ள நீர் ஓடியதாலும் தொடர்ந்து மழை
பெய்ததாலும் அந்த ஐ.டி. மாளிகை பக்கம் யாரும்
போகவில்லை.

அந்த 500 மீட்டருக்கு அப்பால் செல்ல விரும்புவர்களை
இருபதுக்கும் மேற்பட்ட செக்யூரிட்டிகள் முரட்டுத்தனமாக
வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். இது ஒரு இனம்புரியாத
பீதியை அப்பகுதி மக்களிடம் உண்டாக்கியிருந்தது.

டிசம்பர் 8 மற்றும் 9 தேதிகளில் சென்னையில் மழை
லேசாகத் தூறிக் கொண்டிருந்தபோது, வளாகத்திலிருந்து
தண்ணீரை வெளியேற்றும் வேலையில் நூற்றுக்கணக்கில்
லாரிகளும், நீரை உறிஞ்சித் தள்ளும் மோட்டார்
வாகனங்களும் ஈடுபட்டிருக்கின்றன. இரண்டு நாட்களாக
நீரை வெளியேற்றும் பணியில் இத்தனை கருவிகள்,
லாரிகள், மனிதர்கள் ஈடுபட்டிருந்தும் அங்குள்ள மூன்று
பேஸ் மெண்ட்டுகளின் தலைப் பகுதி இன்னும் வெளியே
தெரியவில்லை.

கேட் வாசலில் நின்று படமெடுத்தபடி இருந்த நம்மை
நோக்கி உள்ளே இருந்தபடியே அடிக்கடி எச்சரித்தனர்.
வெளியே வந்தும் மிரட்டினர். ஏன் இத்தனை கெடுபிடி..?
மீடியாவை மிரட்டும் போக்கு ஏன்? உள்ளே இயங்கிக்
கொண்டிருந்த ஒரு நபரிடம் மெதுவாகப் பேச்சு கொடுத்தேன்…

’பேஸ்மென்ட்டே 46 அடிக்கு மேலே இருக்கும் சார்.
அது முழுகிப்போயி அதுக்கு மேலே இருக்கிற முதலாவது
மாடியும் மூழ்கிடுச்சி. இரண்டாவது மாடிக்கும் தண்ணீர்
ஏறிடுச்சு… இனி நனைய இடமே இல்லை என்கிற
அளவிற்கு மொத்தமாக மூழ்கிடுச்சுங்க. அதான் யாரையும்
உள்ளே விட மாட்டேங்கறாங்க. ஒவ்வொரு
ஃபேஸ்மென்ட்லயும் ஐநூறு கார்களுக்கு மேலே கெடக்கு.
மூணு பேஸ் மெண்ட்டு… ஆயிரத்து ஐநூறு காரு…
இதுக்கு மேலே நான் என்னத்தை சொல்றது ?
இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!’’

என்று நழுவிக் கொண்டார்.

அந்த வளாக வாசலில் தவிப்போடு காத்திருந்த ஒருவர்,
’’நம்ம வீட்டுக்குப் பக்கத்துல இருந்து வந்து இங்கே வேலை
பார்த்த பசங்களைப் பத்தி ஒரு விபரமும் தெரியலைங்க.
மூணு பேரும் தூத்துக்குடி பசங்க. அதான் நேர்லயே வந்தோம்.
இங்கே எந்த விபரமும் சொல்ல மாட்டேங்குறாங்க. அடிச்சு
துரத்துறதுலயே குறியா இருக்காங்க. உள்ளே இந்த மாதிரி
எத்தனை பேர் சிக்கியிருக்காங்கனு இதுவரை யாருக்கும்
தெரியவில்லை.. சிக்கிக்கிட்டாங்களா, இல்லே… பாதுகாப்பா
வெளியேறிட்டாங்களானு கூட சொல்ல மாட்டேங்கறாங்க..!’

என்றார் வேதனையோடு.

உறுதியான எந்த தகவலையும் சொல்ல ஆளில்லை. வெள்ள
சேதங்கள் நிகழ்ந்த பின் தேவையற்ற பல அடுக்கு பாதுகாப்பு, ஏகப்பட்ட தடுப்பு வேலிகள். டி.எல்.எஃப். ஐடி வளாகத்தில் என்னதான் நடக்கிறது?

வெள்ளச் சேதங்கள் உயிர் சேதங்களையும் உள்ளடக்கி
யிருக்கிறதா? பிரமாண்ட கண்ணாடி மாளிகையின்
கதவுகள் உண்மையை வெளிப்படுத்த எப்போது திறக்கும்?
அல்லது வழக்கம்போல அரசாங்கமே உண்மையை
மூடி மறைக்க துணை நிற்கிறதா?

டெயில் பீஸ்: போரூரையும் கிண்டி பட் ரோடையும்
இணைக்கும் நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் பின்புறம்தான்
அடையாற்றின் வேகம் அதிகமாகி வெள்ளமாக
கரையோரங்களில் மோதியிருக்கிறது. அந்தக்
கரையோரத்தையே வீடாக்கி வசித்த குடிமக்களில்
பலர் பற்றிய விபரமே இதுவரை தெரியவில்லை என்கிற
தகவலும் கிலியடிக்கிறது!

———————–

இது விகடன் செய்தியில் வெளியான பிறகு -இதனை மறுத்து அந்த டி.எல்.எஃப். ஐடி வளாகத்திலேயே
பணிபுரிகின்ற – திரு.சந்திரமோகன் என்கிற
ஒருவர் விகடனுக்கு பின்வருமாறு எழுதி
பதிவு செய்து விட்டார்….

————————–

– பேஸ்மெண்ட் முழுகி விட்டது என்பதில் உண்மை
இருக்கலாம், ஆனால் முதல் இரண்டாம் தளம் எல்லாம்
முழுகி இருக்க வாய்ப்பு இல்லை.

தரை தளத்தில் தண்ணீர் சில கட்டடங்களுக்குள் சென்று
இருக்கலாம். நான் புதன் காலை (டிசம்பர் 2) சென்ற போது
என்னை அனுமதித்தனர் (எனது அலுவலகம் அங்குதான்
உள்ளது). ஆனால் மதியம் சென்ற போது உள்ளே
விடவில்லை.

புதன் காலைதான் பல்வேறு அலுவலகங்களின் ஊழியர்களும்
வெளியேறினர். எனக்குத் தெரிந்த வரை, பலரும்
செவ்வாயன்று வெளியேற முடியாமலும், அருகில் தங்கி
இருந்த ஊழியர்கள் சிலர் அவர்கள் வீட்டில் இருக்க
முடியாமல் செவ்வாய் இரவு DLF ல் வந்து தங்கியும்
இருந்ததாலும், கழிவறைகளில் தண்ணீர் இல்லாமல் போனது.

மின்சாரம் இல்லாததால் அவர்கள் அனைவரையும்
வெளியேறச் சொன்னதாக என் சக ஊழியர் ஒருவர் சொன்னார்.
புதனன்று நான் பார்த்த வரையில் உயிர்ச் சேதம் இருக்க
வாயிப்பில்லை. ஆனால், கார்கள், இரு சக்கர வாகனங்கள்

சேதமடைந்திருக்க நிறைய வாய்ப்புள்ளது.
தயவு செய்து உறுதி செய்யப்படாத தகவல்களை
எழுத வேண்டாம்.

—————-

அவரது பதிவை தவிர்க்க முடியாத நிலையில் –
தனது வேஷம் வெளிப்பட்டதில் அதிர்ந்து போன
விகடன்
தொடர்ந்து எழுதுகிறது –

———

பொதுமக்களிடையே செய்தியை கொண்டு
சேர்க்கும் நோக்குடன் அந்தச் செய்தியைப்
பதிந்தோம். அரசாங்கம் மற்றும் பொதுமக்கள்…
இரு தரப்பினரையும் உஷார்படுத்துவதே, அந்தக் கட்டுரையின்
நோக்கம். மற்றபடி பீதி கிளப்பும் நோக்கம் எதுவுமில்லை.

டி.எல்.எஃப்-ல் பணியாற்றும் ஆயிரக்கணக்கான மக்களின் நலன்
கருதியே இந்த செய்தியை சேகரித்து நாங்கள் பிரசுரித்தோம்.
இப்போதும் அந் நிறுவனத் தரப்பிலிருந்து நடந்தது குறித்து
விளக்கம் அளித்தால், அதையும் பிரசுரிக்கத் தயாராக
இருக்கிறோம்.

—————————————————–

பொறுக்கித்தனம், போக்கிரித்தனம் – எல்லாவற்றையும் தாண்டி
எதாவது ஒரு வார்த்தை இருந்தால் – அதைத்தான் விகடனுக்கு
பயன்படுத்த வேண்டும்.

// ஒரு நாளின் எந்த நேரமும் ஆயிரக்கணக்கானோர் பணிபுரியும்
இந்த வளாகத்துக்குள் இப்போது எத்தனை பேர் இருக்கிறார்கள்…

இருக்கிறார்களா என்றெல்லாம் பீதி கிளம்பியிருக்கிறது!//

//இது ஒரு இனம்புரியாத
பீதியை அப்பகுதி மக்களிடம் உண்டாக்கியிருந்தது. //

//’பேஸ்மென்ட்டே 46 அடிக்கு மேலே இருக்கும் சார்.
அது முழுகிப்போயி அதுக்கு மேலே இருக்கிற முதலாவது
மாடியும் மூழ்கிடுச்சி. இரண்டாவது மாடிக்கும் தண்ணீர்
ஏறிடுச்சு… இனி நனைய இடமே இல்லை என்கிற
அளவிற்கு மொத்தமாக மூழ்கிடுச்சுங்க. //

//இதுக்கு மேலே நான் என்னத்தை சொல்றது ?
இதுக்கு மேல என்கிட்ட எதுவும் கேட்காதீங்க!’’
என்று நழுவிக் கொண்டார்.//

//அந்தக் கரையோரத்தையே வீடாக்கி வசித்த குடிமக்களில்
பலர் பற்றிய விபரமே இதுவரை தெரியவில்லை என்கிற
தகவலும் கிலியடிக்கிறது!//

——————————————

இத்தனையையும் எழுதிவிட்டு,
உண்மை வெளிவருகிறபோது –

// பொதுமக்களிடையே செய்தியை கொண்டு சேர்க்கும்
நோக்குடன் அந்தச் செய்தியைப் பதிந்தோம்.
அரசாங்கம் மற்றும் பொதுமக்கள்…
இரு தரப்பினரையும் உஷார்படுத்துவதே, அந்தக் கட்டுரையின்
நோக்கம். மற்றபடி பீதி கிளப்பும் நோக்கம் எதுவுமில்லை.//

என்று தன் “மேக்கப்” கலைந்து தடுமாறி சமாளிக்கிறது.

இன்றைய தினத்தில் வதந்திகளை உற்பத்தி செய்யும்
மிகப்பெரிய தொழிற்சாலையாக 24 மணி நேரமும்
விகடன் குழுமம் இயங்கி வருகிறது.

இன்றைய தினம் எண்ணற்ற இளைஞர்கள்,
செய்தி பரபரப்பாக இருப்பதால், தூண்டப்பட்டு –
அது நிஜமான செய்தியா என்று ஊர்ஜிதம் செய்ய
எந்த வழியும் இல்லாமல், முயற்சியும் செய்யாமல் –
தங்களுக்கு தெரிந்த அத்தனை மீடியா மூலமாகவும்
இந்த வதந்திகள் பரவ தங்களையும் அறியாமலே
துணை போகிறார்கள்.

( இடுகை இன்னும் முடியவில்லை –
எழுதிக் கொண்டிருக்கிறேன். நண்பர்கள் சொன்ன
பகுதிக்கு வந்து கொண்டிருக்கிறேன்.
இதன் தொடர்ச்சி அடுத்த இரண்டு மணி
நேரத்திற்குள்ளாக இதே தளத்தில் வெளியாகும்…)

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

15 Responses to தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

 1. Prakash சொல்கிறார்:

  i’m seeing lot of news like this, i’m working there since DLF started in 2008, around 80% of the place in that entire campus designed Upper & Lower basement which is two floors under ground level. I’m sure that area is more than 15 acre, and we can reach any buildings via basement itself means all the buildings(towers) are interconnected…so if the water entered thru any one building basement which will spread all over all the buildings basements, i heard they were able to remove water in upper basement and now they are working to get water in lower basement….i’m sure entire campus is holding water like one full lake…so taking all those water out of it will take time whatever motor we use…and also they had everything in their lower basement itself like electrical room , generators etc…so get to normal will take another one week or two so….none of the companies are working in basements, few people stayed back at might at office itself due to flood but i’m sure no one allowed to stay at basements, they are all stayed in their office cubicle…no way that any employee trapped there…also water was at ground level only not in first floor level…totally false news…yes few of my friends cars also trapped and i’m guessing many 4 & 2 wheelers are also trapped….Sun news, Kalaignar news and Vikatan doing their best anti goverment activites…

 2. Srini சொல்கிறார்:

  today is great poet barathiyar’s birthday. Please write something about him.

 3. KuMaR சொல்கிறார்:

  KM Sir..
  இன்று பாரதியார் பிறந்த தினம்.
  அவரை பற்றி சில வரிகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

  நன்றி

 4. ஆவி சொல்கிறார்:

  பாரதியார் நினைவாகவே இந்தப் பதிவு வந்ததாக கருதுகிறேன். பாரதி நாட்டு சுதந்திரத்திற்காக மட்டுமன்றி சமுக சுதந்திரத்திற்காகவும் கவி பாடினார்.
  அவர் இன்றிருந்தால் இப்படியான பத்திரிகை-ஊடக சுதந்திரத்திற்காக குரல் கொடுத்திருப்பார். அதனால் இந்த பதிவு அவருக்கு சமர்ப்பணமாக கருதலாம்.

  //Sun news, Kalaignar news and Vikatan doing their best anti goverment activites…// இருந்தாலும் உண்மைகளை சொல்லி நல்ல பெயர் பெற்றிருக்கலாம். ஆனால் ஏன் அப்படிச் செய்யவில்லை………….?

  இது பதிவுடன் சம்பத்தப்படாதிருந்தாலும் கூட ஊடகங்கள் சிறிதாவது சிந்தித்து செயல்பட வேண்டும் என்பதற்காக……………
  2011 இல் இரண்டு கோடிக்கு மேல் பொங்கல் பைகள் கருனாநிதியின் படத்துடன் வந்தனவே…அதை ஏன் யாரும் பெரிதுபடுத்தவில்லை.இன்றும் கூட…

  ஜே காரில் இருந்து இறங்கவில்லை எனச் சொன்னவர்கள்,……………….
  மங்களம் மலையாளப் பத்திரிகை சொன்ன //சென்னை, வெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருந்த சமயத்தில், திமுக சார்பில் அடுத்த முதல்வராக பிரகடனப்படுத்தப்படும் ஸ்டாலின், தனது குடும்பத்தினருடன் கோவளத்தில் உள்ள சமுத்ரா ஐந்து நட்சத்திர விடுதியில் ஓய்வை கழித்துள்ளார்.//

  இதையெல்லாம் சிறு செய்தியாகவேனும் விகடன் சொல்லி தன் நடுநிலையை…இருந்தால்?… நிரூபித்திருக்கலாம்.

  விகடனின் ….//பொதுமக்களிடையே செய்தியை கொண்டு சேர்க்கும் நோக்குடன் அந்தச் செய்தியைப் பதிந்தோம். அரசாங்கம் மற்றும் பொதுமக்கள்… இரு தரப்பினரையும் உஷார்படுத்துவதே, அந்தக் கட்டுரையின் நோக்கம். மற்றபடி பீதி கிளப்பும் நோக்கம் எதுவுமில்லை.//
  இது அனைத்து செய்திகளுக்கும் பொருந்தாது என்று விகடன் கருதுகிறதா?

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர் ஆவி,

   உங்கள் கருத்துக்களுக்கு நன்றியும் வரவேற்பும்.

   திரு.ஸ்டாலின் அவர்களின் நட்சத்திர ஓட்டலில் ஓய்வு
   பற்றிய முழு விவரம் எதிலாவது வந்திருக்கிறதா ?
   வந்திருந்தால் எனக்கு லிங்க் கொடுக்க முடியுமா..?
   just நான் முழு விவரங்களையும் தெரிந்து
   கொள்வதற்காகத் தான் கேட்கிறேன்.

   இன்று டிகேஎஸ் இளங்கோவன் – டிவியில்
   பேசும்போது, ஸ்டாலின் ஏதோ மூன்று மாத course க்காக
   போனதாகவும், சென்னை வெள்ள விவரம் தெரிந்தவுடனே
   மீதி தங்கலை ரத்து செய்து விட்டு, உடனே திரும்பி –
   நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்
   பெருமையுடன் கூறினார்….!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நன்றி ரவி.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   The above news cutting is in Malayalam language.
   Can any friend who knows malayalam – help me by
   translating this news either in English or in Tamil….please.
   அரைகுறையாக மொழி பெயர்ப்பாக இருந்தாலும்
   பரவாயில்லை…..!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 5. Omkar சொல்கிறார்:

  Allakai Kaviri,
  Go and stick the stickers……..Try to do some relief work.

  Why the hell you and your govt should open the floodgates without issuing proper warning?
  I am seeing Sundaravalli’s warning. Nowhere it says Jaferkhanpet, manappakkam, nandampakkam , DLF it park will get flooded.

  Why did you first cause the flood?? Go and do soul search yourself.

  What is your PWD minister doing on Nov 29th/30th, when lakes and reservoirs around Chennai are full and need to be released before the rain???

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   இந்த Omkar என்கிற பெயரில் ஒளிந்து கொண்டிருக்கும் நபரிடமிருந்து
   “சாக்கடை மொழி” யில் இன்னும் சில பின்னூட்டங்கள்
   வந்தன.

   மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் கூட நாகரிகமான,
   அர்த்தமுள்ள பின்னூட்டங்களை இந்த வலைத்தளம்
   என்றுமே வரவேற்கும்.

   ஆனால் சாக்கடையை இங்கே எப்படி அனுமதிப்பது. …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 6. today.and.me சொல்கிறார்:

  பரவயில்லையே நண்ப ஓம்கார்,

  சென்னை மாநகர ஆணையரின் கடிதத்தை இப்போதுதானே பார்க்கிறீர்கள். அது அன்றையத் தினமே பத்திரிகைச் சுற்றுக்கும் செய்திச் சேனல்களுக்கும் அனுப்பட்டிருக்கிறது. அதை நான் அரசுத் தரப்புகளில் உறுதிசெய்திருக்கிறேன்.

  தங்களுக்கு அனுப்பட்ட அதை ஒளிபரப்பியோ வெளியிட்டோ மக்களை எச்சரித்திருக்கவேண்டிய ஊடகங்கங்கள்

  வதந்தியைக் கிளப்புவதற்கு யாருக்கு அல்லக்கை வேலை பார்க்கின்றன?
  மக்களுக்காக செயல்படவேண்டிய ஊடகங்கள் யாருக்கு அல்லக்கை வேலை பார்க்கி‘ன்றன?
  அதே மக்கள் அவதிப்படவேண்டும் என்று யாருக்கு அல்லக்கை வேலை பார்க்கின்றன?
  அதே மக்கள் சாகவேண்டும் என்று யாருக்கு அல்லக்கை வேலை பார்க்கின்றன
  அந்தப் பிணங்களின் மீது சாக்கடை அரசியல் நடத்தவேண்டும் என்று
  யாருக்கு அல்லக்கை வேலை பார்க்கின்றன..?

  அல்லது உங்களுக்கேதான் அவை அல்லக்கை வேலைபார்த்தனவா?

  உங்களது அல்லக்கை ஊடகங்களுடன்
  நீங்களும் சேர்ந்துகொண்டு
  விழுந்த பிணங்களின் மீதும்
  அனாதரவான அவர்கள் பிள்ளைகளின் மீதும்
  அரசியல் நடத்துங்கள்….

  ஒரே நேரத்தில் நீங்கள் ஜாபர்கான்பேட்டையிலும் மணப்பாக்கத்திலும் நந்தப்பாக்கத்திலும் டிஎல்எப்பிலும் இருந்துகொண்டு வதந்தியைக் கிளப்பிக்கொண்டு ….. பிணந்திண்ணும் அரசியல் செய்யுங்கள்.

  உங்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள்.

  திமுக முன்னாள் அமைச்சர் தன்வீட்டில் வேலைசெய்த ஒருவர் தன்பகுதி மக்களுடன் தன் அண்டைவீட்டினருக்கு வெள்ளத்தில் பாதிப்பில் உதவிசெய்ததற்காக , மற்றவர்கள்மூலம் அதைக் கேள்விப்பட்டு, அவனை வேலையில் இருந்து நீக்கியது மட்டுமல்லாமல், அவனிடமே எவன் செத்தால் உனக்கென்ன? நீ ஏன் உதவிசெய்யப்போகிறாய்? மக்கள் அவதிப்பட்டால்தான் செத்தால்தான் எங்களைப் பற்றித் தெரியும் என்று மிரட்டியிருக்கிறாரே… அதை உங்கள் அல்லக்கை ஊடகஙகள் வெளிப்படுத்தினவா? அது அவர் வீட்டுக்குள் நடந்தது என்று சமாளிக்கப்பார்க்காதீர்கள்… ஏனென்றால் அடுத்தவர் வீட்டுப் படுக்கையறை உங்களுக்கு அல்வாத்துண்டு தான்.. எடுத்து சாப்பிட்டுவிடுவீர்கள்….

  அன்றையத் தினம் மட்டுமல்ல
  என்றுமே
  பொதுப்பணித்துறை அமைச்சரின் பணிகளுக்கும் –
  அணைகள் குறித்தான நீர்வளத் துறை அதிகாரிகளின் செயல்பாடுகளுக்கும்

  வித்தியாசம் உண்டு. அவரவர் அவரவர் பணியைச் செய்வார்கள். அதை நண்பர் எழில் மேலே சொல்லியிருக்கிறார்…

  நீங்கள்
  உங்கள் அறியாமையினாலோ
  அல்லது
  அறிந்துகொண்டே அறியாதவர்களை
  அவர்கள் அறியாமலேயே
  அறியாமையிலேயே அமிழ்த்திக்கொண்டோ

  சாக்கடை அரசியல் பண்ணுங்கள்…

  திருந்துங்கள் என்று விமரிசனத்தில் சொல்லுகிறோம்.
  திருந்தாவிட்டால், பாடங்கள் படிக்காவிட்டால்
  அதே சாக்கடையில் பன்றிக‘ளுடன் ஒருநாள் புரளுவீர்கள்

  சந்தேகமே இல்லை.

 7. இ.பு.ஞானப்பிரகாசன் சொல்கிறார்:

  மதிப்பிற்குரிய காவிரிமைந்தன் ஐயா அவர்களுக்கு வணக்கம்!

  நீங்கள் ஏன் இப்படி மீண்டும் மீண்டும் விகடன் மீது சேறு வாரி வீசுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. பொறுக்கித்தனம், போக்கிரித்தனம் – எல்லாவற்றையும் தாண்டி எதாவது ஒரு வார்த்தை இருந்தால் – அதைத்தான் விகடனுக்கு
  பயன்படுத்த வேண்டும் என்று கூறுகிறீர்களே, உண்மையிலேயே அப்படிப்பட்ட ஒரு கீழ்த்தரமான இதழாக அஃது இருக்குமானால், டி.எல்.எப் சந்திரமோகன் அவர்களின் கருத்தை விகடன் வெளியிட வேண்டிய தேவை என்ன? உங்கள் தளத்தைப் போல விகடனில் பார்வையாளர்களின் கருத்துக்கள் உடனுக்குடன் வெளியாவது இல்லை. மட்டறுப்பாளரின் (moderator) பார்வைக்குப் பிறகே ஒவ்வொரு கருத்தும் வெளியாகலாமா வேண்டாவா எனத் தீர்மானிக்கப்படுகின்றன. எனவே, விகடன் நிறுவனம் நினைத்திருந்தால் அந்தக் கருத்தை வெளியிடாமலே அழித்திருக்கலாம். ஆனால், அதை வெளியிட்டு, அதன் பின், குறிப்பிட்ட அந்தக் கருத்துரையைத் தொடக்கமாகக் கொண்டு உரிய விளக்கத்துடன் அடுத்த கட்டுரையை வெளியிட்டதிலிருந்தே அந்த இதழின் நேர்மை புலப்படுகிறது. ஆனால், நீங்களோ அதையும் கேலி பேசுகிறீர்கள்! இது எந்த வகையிலான நியாயம் என்பதை உங்கள் தீர்ப்புக்கே விட்டு விடுகிறேன்!

  • thiruvengadam சொல்கிறார்:

   I too agree with Mr. Gnana. Nobody declares MK & group are 99.9 pure. If there is doubt on Vikatan financial deals, why cann’t check with authorities ? Why there is no same follow up on acts of ADMK cadre on helps by volunteers ? Certainly this was not under her order. If any of their people brought to legal proceedings, others will go back. Why there is no opinion on Ex DGP on his membership actions. It may have excemption as a party affair. In general all parties are doing their best first for survival then to get the throne. The media’s status is same. It is left to us whether to give credit or not. In no house TV remote is kept idle during the time of hot news.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.