( பகுதி-2 ) தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

.

.

தொடர்ந்து மீதியை எழுதிக்கொண்டு இருக்கும்போது
இன்றைய தினமலரை பிரித்து தலைப்பு செய்திகளை
ஒரு ரவுண்டு பார்த்தேன்.

புரட்டிய உடனே தோன்றிய எண்ணம்
” இதைவிட இவர்கள் ” வேறு ” தொழிலுக்கு
போயிருக்கலாமே ” என்பது தான்.

காரணம் – ஆறு காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள
கடைசிபக்க தலைப்புச் செய்தி –

————–

” டி.எல்.எப்., -ஐ.டி., வளாகத்தில் 20 பேர் பலி…? ”

இதே செய்தியின் கடைசி பத்தி இதற்கு நேர் எதிராக
இவ்வாறு சொல்கிறது –

// இதுகுறித்து, டி.எல்.எப்., துணை தலைவர் மற்றும் விற்பனை
பிரிவு தென்மண்டல தலைவர், இ.டேவிட் கூறியதாவது:
” மழை வெள்ளம் சூழ்ந்ததும் ஊழியர்களை பத்திரமாக
வெளியேற்றி விட்டோம். அவர்கள் கார் மற்றும் இருசக்கர
வாகனங்களை நிறுத்திபின், தகவல் கட்டுப்பாட்டு அலுவலகத்தில்
சாவியை கொடுத்துவிடுவர். அதனால், உடனடியாக,
360 கார்களை நீரில் மூழ்காமல் காத்துவிட்டோம்.
பாதுகாப்பு கருதியே பணியாளர்கள் அனுமதிக்கப் படவில்லை.
உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது என்பது வதந்தி. “

———–

இவர்களை எல்லாம் என்னவென்று அழைக்கலாம் என்பதை
இதைப்படிக்கும் நண்பர்களிடமே விட்டு விடுகிறேன்.

அடுத்தது –

சென்னை சீரழிவுக்குக் காரணம் யார் தெரியுமா? –
அதிர வைக்கும் உண்மைகள்!

-என்கிற தலைப்பில் -விகடன்.காம் செய்தியில்
ஒரு தகவல் ( ? ) –

செம்பரம்பாக்கம் அணையை உரிய நேரத்தில்
திறக்காததால் தான் இத்தனை பெரிய
பேரழிவு ஏற்பட்டது என்று சொல்கிறது.

( http://www.vikatan.com/news/
article.php?aid=56137 )

– அந்த கட்டுரை இவ்வாறு போகிறது –

” அரசு செய்த மிகப்பெரிய தவறுக்கு, பலி பீடத்திற்கு
ஏற்றப்பட்டவர்கள் ஒன்றும் தெரியாத சென்னை மக்கள்.

ஆக, சென்னை சீரழிவுக்குக் காரணம் தமிழக அரசும்
அதன் மெத்தனப் போக்கும்தான் என்று நாம்
சொல்லலாம்தானே..! இதை அரசுத் தரப்பில்
மறுக்க முடியுமா?”

சரி இவ்வளவு பொறுப்புடன் யார் எழுதி இருக்கிறார்கள்
இந்த செய்திக் கட்டுரையை என்று கீழே பார்த்தால் –

சந்தியா ரவிஷங்கர் என்பவர் ஆங்கிலத்தில் எழுதி
thewire.in என்கிற வலைத்தளத்தில் வெளியான
கட்டுரையை ஞா.சுதாகர் என்பவர் மொழிபெயர்த்துப்
போட்டதாக கூறி இருக்கிறது……..!!!

நதிமூலம் ரிஷிமூலத்தை (…. ?) தானே பார்க்கக்கூடாது என்று
சொல்வார்கள். விகடனின் மூலத்தை பார்ப்போமே –

என்று thewire.in
தளத்திற்கு சென்று பார்த்தால் –

( http://thewire.in/2015/12/09/how-official-
negligence- turned-a-natural-crisis-into-a
human-made-catastrophe-16938/ )

“How Official Negligence Turned a Natural Crisis
into a Human-Made Catastrophe ”

என்கிற தலைப்பில் ஒரு ஆங்கில கட்டுரை –
எழுதியவர் பின்னணியைப் பார்த்தால் –

Sandhya Ravishankar is a
freelance journalist in Chennai –

அவரது பின்னணி இவ்வளவே……!!!!!

எந்தவித பத்திரிகை பின்புலமோ, பொறுப்போ,
அனுபவ அறிவோ இல்லாத,
அட்ரசே இல்லாத தன்னிச்சையாக எழுதும்
ஒரு பொழுது போக்கு எழுத்தாளரின் வாய் வார்த்தையை நம்பி,
எந்தவித ஆதாரமும் இல்லாமல் –

இவ்வளவு சீரியசான விஷயத்தை பிரசுரம்
செய்திருக்கிறார்கள்…..
இந்த செய்திக்கான முதலும் முடிவுமான ஆதாரம்
இந்த சந்தியா ரவிஷங்கர் என்கிற பெண்மணியின்
கற்பனை வளம் மட்டுமே…

————————————————-

அடுத்து –

http://www.luckylookonline.com/2015/12/
blog-post.html –
-என்பது திரு. யுவகிருஷ்ணா அவர்களின் வலைத்தளம்.
( திமுகவின் தீவிர உறுப்பினர் என்று தன்னைத்தானே
ஒரு சமயத்தில் அறிமுகப்படுத்திக் கொண்டவர் என்று
எனக்கு நினைவு – உறுதிப்படுத்த முடியவில்லை….
தெரிந்தவர்கள் யாராவது உறுதிப்படுத்தவும் அல்லது
மறுக்கவும் …)

“சென்னையில் நிகழ்ந்திருப்பது செயற்கைப் பேரழிவு”
என்கிற தலைப்பில் ஒரு செய்திக் கட்டுரை வருகிறது.

இதற்கான ஆதாரமாக இந்த கட்டுரையை –

– 09-12-15 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வில்
வெளிவந்திருக்கும் செய்திக் கட்டுரையின் தமிழாக்கம்! –

என்று கட்டுரையாளர் குறிப்பிட்டிருக்கிறார்.

சரி என்று அந்த ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில தளத்திற்கு
சென்று பார்த்தால் –

( http://timesofindia.indiatimes.com/india/
Delay-in-opening-sluice-gates-caused-

flooding/articleshow/50099873.cms – )

” Delay in opening sluice gates caused flooding ”
-என்கிற தலைப்பில் ஒரு செய்தி கட்டுரை வந்திருக்கிறது.
அதை எழுதியவர் யாரென்று போடாமலே.

இவ்வளவு பெரிய ஆங்கில பத்திரிகையின் சென்னை பதிப்பு –
எந்தவித பொறுப்பும் இல்லாமல், செய்தி நிஜமா, பொய்யா
என்று உறுதிப்படுத்திக் கொள்ளாத நிலையில்
இவ்வளவு serious matter -ஐ போட்டிருக்கிறது….

அந்த கட்டுரையின் இறுதிப் பகுதி இவ்வாறு போகிறது –

TOI’s repeated efforts to get responses
from the chief secretary and PWD secretary
went in vain. Some pertinent questions that
remain unanswered are: Whose orders were
the bureaucrats waiting for to open
the reservoir sluices? Will anybody be held
responsible for the lapses?

அதாவது செய்தி என்று கூறி வெகு serious matter
ஒன்றை பிரசுரித்து விட்டு, இறுதிப்பகுதியில் வதந்தியை
பரப்புவதால் வம்பு எதுவும் வந்து விடக்கூடாதே என்று
புத்திசாலித்தனமாக –

” இந்த செய்தியை தலைமைச்செயலாளரிடம் கேட்டு
உறுதி செய்ய முயற்சி செய்தோம் “- ஆனால் முடியவில்லை
என்று கூறி முடித்து விட்டார்கள்.

அதாவது இது உறுதிசெய்யப்படாத தகவல் என்பதை
அவர்களே இறுதியில் உறுதி செய்திருக்கிறார்கள்…

ஆக – டைம்ஸ் ஆப் இந்தியாவில் வந்து விட்டதால் மட்டும்
இது உண்மையான செய்தி ஆகிவிடுமா ?
இதுவும் அப்பட்டமான வதந்தி தானே …?

உணர்ச்சி வசப்படுபவர்களும்,
மேலோட்டமாக செய்தியை பார்ப்பவர்களும் –
இது உண்மையான செய்தி தான் என்றே நினைப்பார்கள்.

ஆனால் – படிக்கும் எதையும் கொஞ்சம் யோசித்து,
இது உண்மையாக இருக்க வாய்ப்புண்டா என்று யோசிப்பவர்கள்
இது வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்தி தான் என்பதை
புரிந்து கொள்வார்கள்.

———————————————-

அடுத்து –

http://donashok.blogspot.com/2015/12/
blog-post.html -ல் வெளிவந்துள்ள

” சென்னை வெள்ளம் நடந்தது என்ன? -டான் அசோக் ”

கட்டுரையைப் பற்றி நண்பர்கள்
என் கருத்தைக் கேட்டிருந்தார்கள்….

நண்பர் டான் அசோக் எழுதியுள்ள மேற்கண்ட
கட்டுரையிலிருந்து
(நண்பர் ரிஷி மிகவும் ” ரசித்த ” ) சில வரிகள் –

————————————-

அதாவது சுருங்கச் சொன்னால் மழை மிகவும் குறைவாகவோ
அல்லது இல்லாமலோ இருந்த (Dry days) நவம்பர்
மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும் நீரை
வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை
அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை.

பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின்
உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ
முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.
(இந்த இடத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பி.எஸ்சின் உத்தரவுக்காக தலைமைச் செயலாளர் காத்திருக்கிறார் என்றுதான் நாம் எழுதியிருக்க வேண்டும். ஆனால் இது அம்மாவின் ஆட்சி.
அம்மாவின் ஆட்சியில் “அணையை திறக்க நான்
உத்தரவிட்டுள்ளேன்… அணையை மூட நான் ஆணை
பிறப்பித்துள்ளேன்,” என எல்லா வேலைகளையும் அம்மாவே
இழுத்துப்போட்டுச் செய்வார் என்பதால் இதில் மட்டும்
நாம் ஓ.பி.எஸ்சை இழுத்துவிடுவது அறம் அல்ல.
அதனால் தலைமைச் செயலாளர் அம்மாவின்
ஆணைக்காகத்தான் காத்திருந்திருக்கிறார் என்பது
குழந்தைக்கும் தெளிவு)

டிசம்பர் 1:

· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே
கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள்
சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)

—————————————————–

இப்போது டான் அசோக் அவர்களுக்கு சில கேள்விகள் –

படித்த இளைஞர் தானே நீங்கள் …?
வலைத்தளம் வைத்திருக்கிறீர்கள் அல்லவா…?
அதில் இவ்வளவு serious- ஆன ஒரு விஷயத்தைப்பற்றி
எழுதும்போது – ஒரு சிறிதேனும் யோசித்தீர்களா …?

இந்த செய்திகளுக்கு என்ன ஆதாரம் …?

1) நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் ஏரியில் இருக்கும்
நீரை வெளியேற்றி நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை

அதிகாரிகள் பரிந்துரை செய்தும் கூட எந்த நடவடிக்கையும்

எடுக்கப்படவில்லை.

2) பொதுப்பணித்துறை செயலாளர் தலைமைச் செயலாளரின்
உத்தரவுக்காக காத்திருக்கிறார். தலைமைச் செயலாளரோ
முதல்வரின் உத்தரவுக்காக காத்திருக்கிறார்.

-நீங்கள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை அல்லது
தலைமைச் செயலகத்தில் வேலை செய்கிறீர்களா…?

இந்த தகவல் உங்களுக்கு எப்படி கிடைத்தது ….?

– நீங்கள் பதில் சொல்ல மாட்டீர்கள்….
நானே உங்களுக்காக பதில் சொல்கிறேன்….

-அந்த கத்துக்குட்டி so called free lancer journalist-
thewire.in தளத்தில் எழுதிய கட்டுரையும் –
டைம்ஸ் ஆப் இந்தியாவில் – வெளிவந்த பெயரில்லாத ஒருவர்
எழுதிய – உறுதி செய்யப்படாத “வதந்தி”யும்
தான் உங்கள் கட்டுரையின் அடிப்படை.

மேற்கொண்டு உங்கள் திருப்திக்கு ஓபிஎஸ் அவர்களையும்,
முதலமைச்சரையும் கிண்டல் செய்து, உதவாக்கரைகள்
என்று சர்டிபிகேட்டும் கொடுத்து விட்டீர்கள்.

3)டிசம்பர் 1:

· சர்வதேச வானிலை மையங்கள் சொன்னதைப் போலவே
கிட்டத்தட்ட 50செமீ கனமழை பெய்கிறது. (தாம்பரத்தில் அவர்கள்
சொன்னதை போலவே மிகச்சரியாக 49செமீ பெய்தது)

– தயவுசெய்து எந்த சர்வதேச வானிலை மையங்கள் எல்லாம்
சென்னையில் டிசம்பர் ஒன்றாம் தேதி 50 செமீ மழை பெய்யும்
என்று சொன்னது என்பதை ஆதாரத்துடன் விளக்குவீர்களா….?

தனது கட்டுரையில் இன்னமும் உறுதியாக இருந்தால் –
இங்கு நான் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கெல்லாம்
டான் அசோக் அவர்கள் பொறுப்பாக பதில் அளிக்க வேண்டும்.

நண்பர் ரிஷி இதை உறுதி செய்வாரென்று நம்புகிறேன்….

——————————————————

பொதுவாக –

இண்டர்னெட் டெக்னாலஜி – என்பது ஒரு விதத்தில் வரம்..
இன்னொரு விதத்தில் சாபம்….!!!

அவசர காலத்தில், மிக விரைவாக செய்திகளை எடுத்துச்
சொல்ல உதவும் அதே டெக்னாலஜி – உதவிக்கரங்களை
உடனே அணுக உதவிய அதே டெக்னாலஜி,
நிவாரண உதவிகளை கோரிப்பெற உதவிய அதே டெக்னாலஜி –

உறுதி செய்யப்படாத வதந்திகளையும்,
வேண்டுமென்றே பொதுமக்களிடையே – திகிலையும்,
கலக்கத்தையும், குழப்பத்தையும் உண்டு பண்ண
திட்டம் போட்டு செயல்படும் சில அரசியல் விபச்சாரிகளால்
தங்கள் நோக்கத்தை குறுக்கு வழியில் நிறைவேற்றிக்கொள்ள
தவறாகவும் பயன்படுத்தப்படுகிறது.

அற்புதமான சிந்தனையாளர்களையும், தெளிவான,
நேர்மையான, அழகான – எழுத்து நடைக்கு சொந்தக்காரர்களான
பல தமிழ் எழுத்தாளர்களை கொண்ட இதே தமிழ் உலகில் –

சமுதாயத்தை குழப்பத்தில் வீழ்த்தவென்றே –
புதிதாக உருவாகி வரும் விகடன் போன்ற, தினமலர் போன்ற
ஏய்த்துப் பிழைக்கும் சுயநல கும்பல்களை அடையாளம்
கண்டு கொண்டு எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்று
இந்த வலைத்தளம் வேண்டுகோள் விடுக்கிறது.


பின் குறிப்பு –

இதில் மாறுபட்ட கருத்து கொண்டவர்கள் தாராளமாக –
உணர்ச்சி வசப்படாமல், தெளிவாக, ஆதாரபூர்வமாக தங்கள்
வாதத்தை எடுத்து வைக்கலாம்….

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

38 Responses to ( பகுதி-2 ) தமிழ்நாட்டில் பத்திரிகைத் துறையில் ஒரு ஏய்த்துப் பிழைக்கும் கும்பல் ..!!!

 1. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  They r not Fourth Estate,420 state,pls ignore them, Vilai poi vittargal.

 2. today.and.me சொல்கிறார்:

  KM ji
  please check your mail.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   Dear friend todayandme –

   I have opened your mail from my mailbox and
   reproduced the contents below -with my remarks.
   thank you for your hardwork.

   -with all best wishes,
   Kavirimainthan

 3. சஹா, சென்னை. சொல்கிறார்:

  ஆஹ, இந்த பதிவின் நோக்கம் அவர்களின் கருத்திற்கு பதில் கூறுவதில்லை. ஒட்டு போட்டாச்சு என்பதர்காக கண்ட குப்பனும் சுப்பனும் கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்லனுமா என்ன!?

  சரி அதெல்லாம் வதந்தியாவே இருந்திட்டு போகட்டும், இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனாக கேக்கிறேன் (என் வீட்டில் கழுத்தளவு நீர் நள்ளிரவில் புகுந்தது.),

  1) டிசம்பர் ஒன்று அன்று செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இவ்வளவு அதிகமான அளவு நீர் ( சுமார் 33,500 கன அடி நீர் என்கிறார்கள்) திடீரென்று திறந்துவிட உத்தரவிட்டது யார்?

  2) அவருக்கு இவ்வளவு அதிகமான அளவு நீர் திறக்கப்படுவதினால் ஏற்படும் பேரழிவு குறித்து தெரியாதா?

  3) இவ்வளவு அதிகமான நீரை வெளியேற்றும்முன் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது, மக்கள் எச்சரிக்கப்பட்டனரா அல்லது செத்து தொலையட்டும் என்று நினைத்தார்களா?

  4) அரசின் சார்பில் நடக்கும் மீட்பு, நிவாரண பணிகளில் ஏன் ஒரு தனிநபரின் புகைப்படம் மட்டும் அளவுக்கு மீறி முன்னிறுத்தப்படுகிறது? அரசிற்கென்று இலச்சினை ஏதும் இல்லையா அல்லது அதையும் மாற்றிவிட்டார்களா? அல்லது மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்காக செலவு செய்வதை, தன் பணத்தை செலவு செய்வதாக எண்ணுகிறாரா?

  இதற்கெல்லாம் நேர்மையாக கா.மை ஐயா பதில் பெற்று தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்…

  சஹா, சென்னை.

  • ஆவி சொல்கிறார்:

   இது வாதம் செய்வதற்காக அல்ல. தெரிந்து கொள்ள சில தகவல்.
   3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம், 24 அடியாக வரையறை செய்திருந்தாலும் பாதுகாப்பு கருதி 21 அடி வரும் போது நீரை திறந்து விடுகிறார்கள்.

   திறக்கப்படும் நீர் குன்றத்துார் சாலை, திருமுடிவாக்கம் கால்வாய் வழியாக அடையாற்றில் கலந்து, கடலுக்கு செல்லும்.மறுகால் திறக்கப்பட்டால், ஈக்காட்டுத்தாங்கல், நந்தம்பாக்கம், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும்.

   தொடர்மழை காரணமாக நொவெம்பர் 16 இல் ஏரி திறக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி, அந்த பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

   அத்துடன் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, சென்னை கலெக்டர் சுந்தரவல்லி அறிவுறுத்தி இருந்தார். சூளிப்பள்ளம், சைதாப்பேட்டை உள்ளிட்ட கரையோரப்பகுதி மக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர்..(இது பத்திரிகை /இணைய/தொலைக்காட்சி செய்தி)

   செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததாக பரவும் வதந்தியை நம்பவேண்டாம் என்று அடையாற்றின் கரையோர மக்களுக்கு போலீசார் ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர் எனவும் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல துவங்கினர் எனவும்,….. இது திமுக சார்பு பத்திரிகை தினகரனும்,நக்கீரனும் 1.12 இல் செய்தி வெளியிட்டன.

   நவெம்பர் இறுதி வாரத்தில் விகடனும் செய்தியாக வெளியிட்டு, தண்ணீர் வரத்துக்கேற்ப திறந்து விடப்படும் எனவும் அதிக நீர் வெளியேறும் பட்சத்தில் வெள்ளப்பேருக்கு ஏற்படலாம் எனவும் மக்களை வெளியேறுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக செய்தி வெளியிட்டிருந்தது.

   நீங்கள் குறிப்பிட்டது போலன்றி நவெம்பர் 16/17 இல் இருந்தே நீர் திறப்பும், எச்சரிக்கைகளும் தொடங்கி விட்டன.

   • சஹா, சென்னை. சொல்கிறார்:

    நண்பா,
    நவம்பர் 16ம் திறக்கப்பட்ட நீரின் அளவு 10,000 கண அடி மட்டுமே, அதனால் பாதிக்கப்பட்டது அடையாறு ஆற்றின் கரையில் வசித்த மக்கள் மட்டுமே. அந்த வெள்ளம் ஒரே நாளில் முழுமையாக வடிந்துவிட்டது. அதன்பிறகு இருவாரம் சென்று திறந்த நீரின் அளவும் பாதிப்பும் உங்களுக்கு தெரியும்தானே. இரண்டிற்கும் சேர்த்து, இனி அடுத்த ஆண்டு (!?) திறக்கப்போவதற்க்கும் சேர்த்து ஒரே அறிவிப்பு? பலே..

    செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததாக வதந்தி பரவியது 4 டிசம்பர் அன்று, அதே தினத்தில் தான் எங்கள் பகுதியில் போலீசார் அந்த செய்தி வதந்தி என்று ஒலிபெருக்கியில் அறிவிப்பு செய்தனர். நீங்கள் குறிப்பிட்டது போல் 1 டிசம்பர் அன்று அல்ல.

  • ஸ்ரீநிவாசன் சொல்கிறார்:

   திரு. சஹா அவர்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

   என் அறிவுக்கெட்டியவரை, கீழ்கண்ட சில விஷயங்கள் / கேள்விகள்

   1. அரசாங்கம் மட்டுமே உடனேயே எல்லாமும் செய்துவிட முடியாது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும். எ.கா. எத்தனை பேர் வீட்டில் மழைநீர் சேகரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது? இப்போது எத்தனை பேர் வீட்டில் நடைமுறையில் உள்ளது?

   2. அரசாங்கம் நினைத்திருந்தால் / சற்றே உஷாராக இருந்திருந்தால், கண்டிப்பாக இந்த பாதிப்புகளை குறைத்திருக்க முடியும்.

   எண்ணற்ற, ஈடுசெய்ய முடியாத, செய்தியை பார்க்கும்/கேட்கும் போதே ஜீரணிக்க முடியாத பல நிகழ்வுகள் நடந்திருந்தாலும். சில நல்ல விஷயங்களும் நடந்துள்ளன மேலும் சில நடக்கவுள்ளன….

   1. மனித நேயம், 2. மத இணக்கம் 3. இயற்கைக்கு ஒத்த செயல்கள் 4. பணம் எவ்வளவு வைத்திருந்தாலும் அதை மட்டுமே வைத்துக் கொண்டு எதையும் சாதித்துவிட முடியாது என்ற உண்மையை அறிதல். மேலும் பல….

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    நண்ப ஸ்ரீநிவாசன்,

    இடுகையின் மையக்கருத்து –
    சில ஊடகங்களின் அயோக்கியத்தனமான போக்கு பற்றியது.

    நீங்கள் அதைப்பற்றியும் கருத்து தெரிவித்திருந்தால் –
    இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்.
    இருந்தாலும் உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.

    -வாழ்த்துக்களுடன்,
    காவிரிமைந்தன்

    • today.and.me சொல்கிறார்:

     இன்னொரு விபச்சாரம்…

     ////////// யூடுபில் Adyar river has swollen again after Chembarambakkam reservoir என்று தேடினால் வரும் காணொளியில் ஒரு தொகுப்பாளினி ( NEWS 7) DEC 1 ஆம் தேதி (யூடுபில் UPLOAD செய்த தேதி DEC 1 என்று இருக்கிறது) காலை சைதாபேட்டை மறைமலை அடிகள் பாலத்தில் நடந்தவாரே நேரடி ஒளிபரப்பில் சொல்லுகிறார் .. “..மாவட்ட ஆட்சியர் 20000 அடி திறந்து விடப்பட்டு வெள்ளம் வரும் என்று எச்சரித்திருக்கிறார் … ஆதலால் அரசு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு மக்களை வெளியேற சொல்லி இருக்கிறார்கள் …” என்று பாலத்துக்கு அடியில் உள்ள குடிசைகளை காட்டுகிறார் ..குடிசை மக்கள் அங்கும் இங்கும் ஓடவில்லை .. மாறாக கேமராவை பார்த்தபடி வீட்டில் இருக்கிறார்கள் …DEC 1 மாலை மறைமலை அடிகள் பாலம் மூழ்கி விட்டது … DEC 1 இல் பகலில் எடுத்திருந்தால் கருணாநிதி மற்றும் எதிர்கட்சிகள் கூறும் “எச்சரிக்காமல் திறந்து விட்டார்கள் ..” என்பது பொய்யாகிறது … .. நல்லா எழுதுறாங்கப்பா கட்டுகதைய …. /////////// நன்றி லாரன்..

 4. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களிடமிருந்து
  வந்த பின்னூட்டம் –

  ( இந்த இடத்தில் மெயிலை திறக்க முடியவில்லை
  என்பதால் என் மெயில் பாக்சிலிருந்து திறந்து
  இங்கே பதிவிடுகிறேன் …)
  – ( தனது பின்னூட்டத்திற்கு ஆதாரமாக நண்பர்
  டான் அசோக் கூறியுள்ள Wired மற்றும் ப்ரண்ட் லைன்
  பக்கங்களை ஸர்ச் செய்ததற்கான ஸ்க்ரீன் ஷாட்’களையும்
  தந்திருக்கிறார்… அவற்றை இங்கே பதிய முடியவில்லை… )

  ——————

  https://www.facebook.com/donashok/
  posts/903341009773865

  டான் அசோக் தனது பதிவில் டைம்ஸ்ஆப்இன்டியா
  சொன்னதாக முதல்வரியில் தரும் தகவல்
  சர்வதேச வானிலை மையங்கள் சென்னையில் டிசம்பர் 1
  மற்றும் 2ஆம் தேதி 50செமீ வரையில் கனமழை பெய்யும்
  என எச்சரிக்கை விடுக்கின்றன.
  ஆனால் நாசா தனது பணி வானிலை எச்சரிக்கைசெய்வது
  இல்லை என திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

  Wired – ஐ ஆதாரமாக்க் காட்டுகிறது உங்கள் லிங்க்.
  அந்த wired ல் தமிழ்நாடு குறித்த செய்திகள் 2011 க்கு
  அப்புறம் வானிலை தொடர்பாக எதுவும் இல்லை.
  அதைக்கூட ஆராயமாட்டார்கள் மக்குத் தமிழர்கள் என்று
  தெரிந்தே அடித்துவிட்ட பொய்…

  ப்ரண்ட் லைன் – னும் அப்படித்தான்.

  இந்த பொய்யான அடித்தள பாய்ண்ட் ஒன்றிலேயே
  தெரிகிறது, இவர்கள் எவ்வளவுதூரம் வதந்திகளைப்
  பரப்புவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று.

  நடுராத்திரியில் அணை அதிகாரிகள் அலர்ட் விட்டதால்
  பயனில்லை என்று சொல்கிறார்களே, அணைக்கு நீர்வரத்து
  அதிகமாக இருந்துகொண்டே இருக்கும் நிலையில்,
  அணை நிரம்பிக்கொண்டிருக்கும் நிலையில்,
  எந்த நேரமும் அணை திறக்கப்படலாம்
  இல்லாவிட்டால் ஏரி உடையக்கூடும், (உடைந்தேவிட்டது
  என்று ஊடகங்களால் பரப்பப்பட்ட வதந்திகள் உட்பட)
  என்று ஜெயா டிவி தவிர அனைத்து தொலைக்காட்சிகளும்
  மீண்டும் மீண்டும் வெள்ளக் காட்சிகளை ஒளிபரப்பி
  மக்களை பைத்தியமாக அடித்துக்கொண்டிருக்கும்
  நிலையில் நடுவீட்டில் நிம்மதியாக மதுராந்தகம்,
  செம்பரம்பாக்கம் அணை ஓரம் தூங்கிக்கொண்டிருந்த
  பைத்தியக்காரன் யார்?

  டைம்ஸ் ஆப் இன்டியா உட்பட அனைத்து ஆங்கில
  மீடியாக்களும் தமிழகத்தை ஒரு இந்திய மாநிலமாகக்
  கருதவேயில்லை, சென்னை-கடலூர் வெள்ளம் குறித்து
  தங்கள் ஊடகங்கள் சொல்லவில்லை, வடமாநிலத்தாருக்கு
  இவை பற்றி தெரியக்கூட வாய்ப்பில்லாமல்
  பார்த்துக்கொண்டார்கள், இங்கே வெள்ளத்தில்
  தவித்துக்கொண்டிருந்தபோது நீங்கள் சகிப்புத்தன்மை
  பற்றி பாடம் நடத்திக்கொண்டிருந்தீர்கள் என்று
  தமிழக அரசோ அரசுப் பிரநிதிகளோ மக்கள் பிரதிநிதிகளோ சொல்லவில்லை. வெள்ளப்பகுதிகளில் நிவாரணப்பணியை
  களத்தில் சென்று செய்த சித்தார்த் ஆர்ஜே பாலாஜி
  போன்றவர்கள் சொன்னார்கள்.

  இப்படிப்பட்ட நாளிதழ்கள், ஊடகங்களை காகிதக்
  கப்பல்களை – ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு
  அசோக் சொன்னால் அவர் டான் ஆகிவிடுவாரா?

  ===========================

  அடித்தளமே பொய்யுரை என்று நான் கூறுகிறேன்.
  2 முதல் மற்ற பாய்ண்ட்கள் எதற்காவது நீங்கள்
  ஆதாரத்தைத் தரமுடியுமா?

  இதன்மூலம் இந்த இயற்கைப் பேரிடர் காலத்தில் அரசும்
  அரசு இயந்திரம் எனப்படும் பல்லாயிரக்கணக்கான
  அரசு ஊழியர்களும் தன்னார்வலர்களும் செய்த உதவியை,
  மனிதநேய ஒருங்கிணைப்பை தவறாகச் சித்தரிப்பதே
  இவர்கள் நோக்கம்.
  எவ்வகையிலாவது பேரிடர் காலத்தில் மனிதநேயத்தோடு
  உதவிகள் செய்து கொண்டிருந்தவர்கள், மழைவிட்டு
  நீர்வற்றி சூரியன் உதித்ததும் ஆர்எஸ்எஸ் உதவி செய்தான்,
  தமுமுக உதவி செய்தான், முஸ்லிம் என்றால் இப்படித்தான்,
  கிறிஸ்தவன் உதவி செய்தானா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்புகிறார்கள்…. அல்லது எழுப்பவைக்கப்படுகிறார்கள்.

  ஆபத்துக்காலத்தில் நண்பனை அறி என்பது பழமொழி.
  சூரியன் உதித்தாலே பிரச்சினைதான்… என்பது
  இப்போதாவது புரிகிறதா?

 5. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  இது நண்பர் டுடேஅண்ட்மீ அவர்களிடமிருந்து
  வந்த பின்னூட்டம் –
  ( இந்த இடத்தில் மெயிலை திறக்க முடியவில்லை
  என்பதால் என் மெயில் பாக்சிலிருந்து திறந்து
  இங்கே பதிவிடுகிறேன் …)

  இது முந்திய பின்னூட்டத்தின் பின்குறிப்பு –

  பதிவர் எந்த சூழ்நிலையில் இருந்து வந்தவர்,
  எங்கே உட்கார்ந்து இதை எழுதுகிறார், எப்படிப்பட்ட
  இரசனைகள் உள்ளவர் என்பதை அனைவரும்
  அறியத்தந்தால் இப்படிப்பட்ட சிந்தனைகள் யார் மூளையில்
  உதிக்கக்கூடும் என்று வாசகர்கள் அறிந்துகொள்ள வசதியாக

  ————–
  // நேற்று இரவில் இருந்து அரசின் மெத்தனம் பற்றிய
  எல்லா செய்திகளையும் மக்களுக்கு புரியும் வண்ணம்
  எளிதாக விளக்கும் ஒரு கட்டுரை எழுத வேண்டி தொடர்ந்து படித்துக்கொண்டே இருந்தேன். நொடிக்கு இத்தனை கன அடி,
  இத்தனை மில்லியன் கன அடி, இத்தனை அடி உயரம்,
  இந்த நாளில் இவ்வளவு திறப்பு என குறிப்பெடுப்பதற்குள்
  ஒரு சுத்து சுத்திவிட்டது. இன்று கலைஞர் அட்டகாசமாக,
  சுருக்கமாக அரசின் மெத்தனத்தையும், அதனால் இந்தப்
  பேரழிவு என்பதையும் மிகவும் நாகரீகமாக எடுத்துரைத்திருக்கிறார். அவருக்கு வயது 93.

  கலைஞர் ஏதோ பேருக்கு ஒரு இடம் போய் பார்த்துவிட்டு
  அதோடு நிறுத்திக்கொள்வார் என நேற்று நினைத்தேன்.
  அவரோ சென்னையின் ஒவ்வொரு பகுதியாக போய்க்கொண்டே இருக்கிறார். இன்று ஏதோ ஒரு இடத்தில் அவரிடம் நிவாரணப்
  பொருள் வாங்கும் ஒரு எழுபது வயது மதிக்கத்தக்க பெண்
  கலைஞரின் கன்னங்களை தன் இருகைகளாலும் தடவி
  திருஷ்டி கழிக்கிறார். கலைஞர் சிரித்தபடியே அமர்ந்திருக்கிறார்.

  இத்தனைக்கும் 93வயது கலைஞருக்கு மற்றவர்களால்
  கிறுமித் தொற்று ஆபத்து இருப்பதால் அவரது மருத்துவர்கள்
  அவரை தொடவிட மாட்டார்கள். ஆனால் அந்த சாமானியப்
  பெண்ணின் அன்பு அவருக்கு இருக்கும் கிறுமித்தொற்று
  ஆபத்தை எல்லாம் தொலைதூரம் விரட்டும் சக்தி என்றும்
  அதுதான் தன்னை இந்த வயதிலும் சுறுசுறுப்பாக செயல்பட
  வைக்கிறது என்றும் கலைஞருக்குத் தெரியும்.

  நான் கலைஞரைப் புகழும் பொருட்டு கூட அவரை
  யாருடனும் எப்போதுமே ஒப்பிடுகிறவன் அல்ல.
  கற்பூரத்தின் வாடையறியா கழுதைகளுக்கு புரியவேண்டும்
  என்பதற்காக கற்பூரத்துக்கு அருகில் எதையோ எடுத்து
  வைத்து பாடம் நடத்த முடியுமா என்ன?

  ஆனால் கற்பூரமும், ஏதோ ஒன்றும் ஒன்றுதான் என
  ஏதோ ஒன்றை காப்பாற்றும் பொருட்டு பல ஏதோ ஒன்றுகள் கிளம்பியிருக்கும் அசூசையான, அருவெறுப்பான சூழலில்
  நான் அதுகளிடம் ஒன்றை கேட்கத்தான் வேண்டியிருக்கிறது.

  நீங்கள் மாய்ந்து மாய்ந்து காப்பாற்றும் அந்த ஏதோ ஒன்றை
  இப்படி தெருவில் மக்களோடு மக்களாகப் பார்க்க முடியுமா?
  அந்த ஏதோ ஒன்று தன் கையால் இப்படி நிவாரணப்
  பொருட்களை வழங்குமா? அந்த ஏதோ ஒன்றின் கன்னம்
  தொட்டு ஒரு ஏழைப் பெண் திருஷ்டி கழிக்க முடியுமா?
  அந்த ஏழைப்பெண் பிறகு நிம்மதியாக வீடுதான்
  திரும்பத்தான் முடியுமா? அடப் போங்கடா… //

 6. எழில் சொல்கிறார்:

  சுருக்கமாக சொல்லி விடுகிறேன். மேற்படி ஆர்வம் உள்ளவர்கள் இணையத்தில் வேண்டிய அளவு தகவல்கள் உள்ளன. தேடி படித்து கொள்ளலாம்.

  – பிப்ரவரி மாதம் வரை உலகெங்கும் ‘எல் -நினோ’ காலநிலை மாற்ற கோட்பாடுக்கமைய பல தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அதி உயர் வெப்பநிலையும், சுழல்காற்று, புயல், மிக கனமழை என்பன அவற்றின் விளைவாகும். இங்கு கன மழை எனும் போது புரிந்து கொள்ள வேண்டியது சாதாரண மழை காலங்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு நாளில் பெய்ய வேண்டிய மழை 45 நிமிடத்திலோ அல்லது ஒரு மணி நேரத்திலோ கொட்டி தீர்ப்பது; இன்னொரு விதமாக சொல்வதானால் துளிகளாக பெய்யும் மழை, குழாயை துறந்து விட்டது போல் பெய்வது. அப்படி ஒரு மழை, 100 வருடங்களாக சென்னை கண்டிராத மழை இம்முறை பெய்தது. எனவே இம்முறை சாதரான மழை கால மழையை விட விதிவிலக்கான நிகழ்வு.

  – செம்பரபாக்கம் ஏரி நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் தேக்கம். எனவே எப்போதும் குறிப்பிட்ட அளவு நீர் கொள்ளளவில் வைத்திருந்தே உபரியை திறந்து விட வேண்டும். அதாவது சாதாரண அணைகட்டு போல மழை வரும் முன்னே நீரை வெளியேற்ற முடியாது. மழை வந்து ஏரி ஒரு குறிப்பிட்ட அளவை எட்டிய பின் (உதாரணத்துக்கு 90% என்று வைத்து கொள்ளலாம்) தான் நீரை திறந்து விடமுடியும். நிச்சயம் அதற்கான செயல் முறை குறிப்பேடு (manuals ) அங்கு உள்ள பொறியாளர்களிடம் இருக்கும். அதை செயல் படுத்த யார் உத்தரவையும் கேட்க வேண்டியதில்லை. அப்படி பொறியாளர்கள் அம்மாவின் உத்தரவுக்கு காத்திருந்தார்கள், ஐய்யாவின் உத்தரவுக்கு காத்திருந்தார்கள் என்று கூறுபவர்கள் ஒரு அணைக்கட்டு, நீர் தேக்கம் எப்படி செயல் படும் எனும் அடிப்படை அறிவற்றவர்கள்.

  – இப்போது முதல் கூறியதையும், இரண்டாவது கூறியதையும் இணைத்து பார்த்தால், யாராலும் என்ன நடந்திருக்கும் என்பதை இலகுவாக ஊகிக்க முடியும். பொறியாளர்களின் கையேட்டின்படி குறிப்பிட்ட அளவு நீர் மட்டம் வரும் வரை அவர்கள் காத்திருந்திருக்கலாம். அதன் பின் அதி கனமழையால் நாம் அனைவரும் வாழ்நாளில் கண்டிராத வேகத்தில் நீர் வரத்து அதிகமாகி இருக்கலாம். அதற்கேற்ப அவர்கள் கையேட்டின் படி நீரை வெளியேற்றும் அளவையும் அதிகரித்து கொண்டே போயிருக்கலாம். அப்படி அதிகரிக்காவிடில் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டிருக்கும் என்பது மட்டுமல்ல அதை தான் அவர்கள் கையேட்டின் பிரகாரம் செய்ய வேண்டும் என்பது தான் விதி.

  – இதைவிட இன்னொன்று காரணியையும் கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு 30000 கியூசெக்ஸ் நீர் செம்பரம்பாகத்தில் திறந்து விடப்பட்டது என்று கொண்டால், அடையாற்றி ஒட்டி இருக்கும் ஊர்களில் பெய்த அதி கனமழையால் மேலும் அதே அளவோ இல்லை அதற்கு மேலாகவோ மழை நீர் கால்வாய்கள் மூலம் அடையாற்றை நோக்கி வந்திருக்கும். மொத்தத்தில் அடையாற்றில் 60000 முதல் 80000 ஆயிரம் கியூசெக்ஸ் நீர் போக முற்பட்டிருக்கும். ஆக அடையாற்றில் வந்த வெள்ளத்தில் பாதியளவே செம்பரபாக்க உபரி நீர். ஒருவேளை எந்தவித நில, ஏரி, குள அபகரிப்பும், ஆட்சிக்கு ஆட்சி சென்னையில் உள்ள ஆறு கால்வாய்களை சுத்தபடுத்தி சீர்படுத்த ஒதுக்கப்படும் நிதி சீராக பயன் படுத்திருக்கப்படின் ஒரு வேளை அடையாறும், கூவமும் மழை நீரை செவ்வனே எடுத்து சென்று கடலில் சேர்த்திருக்கலாம்.

  • today.and.me சொல்கிறார்:

   இங்க இருந்த ஏரி, குளம் ஆறு ஒண்ணையுமே காணமே???

   1.நுங்கம்பாக்கம் ஏரி
   2.தேனாம்பேட்டை ஏரி,
   3.வியாசர்பாடி ஏரி,
   4.முகப்பேர் ஏரி,
   5.திருவேற்காடு ஏரி,
   6.ஓட்டேரி,
   7.மேடவாக்கம் ஏரி,
   8.பள்ளிக்கரணை ஏரி,
   9.போரூர் ஏரி,
   10.ஆவடி ஏரி,
   11.கொளத்தூர் ஏரி,
   12.இரட்டை ஏரி,
   13.வேளச்சேரி ஏரி,
   14.பெரும்பாக்கம் ஏரி,
   15.பெருங்குளத்தூர் ஏரி
   16.கல்லு குட்டை ஏரி,
   17.வில்லிவாக்கம் ஏரி,
   18.பாடிய நல்லூர் ஏரி,
   19.வேம்பாக்கம் ஏரி,
   20.பிச்சாட்டூர் ஏரி,
   21.திருநின்றவூர் ஏரி,
   22.பாக்கம் ஏரி,
   23.விச்சூர் ஏரி,
   24.முடிச்சூர் ஏரி,
   24.சேத்துப்பாடு ஏரி – ஸ்பர் டாங்க்
   25.செம்பாக்கம் ஏரி,
   26.சிட்லபாக்கம் ஏரி
   27.போரூர் ஏரி,
   28.மாம்பலம் ஏரி,
   29.கோடம்பாக்கம் டேங்க் ஏரி,
   30. சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் இருந்த குளம்,
   31. சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்த இரண்டு குளம்…..
   32.வேளச்”ஏரி”
   33.செம்மஞ்”ஏரி”
   34.ரெட்”ஏரி”
   35.பொத்”ஏரி”
   36.கூடுவாஞ்”ஏரி”
   37அடை”ஆறு”
   38.”அணை”காபுத்தூர்
   39.பள்ளிக்கர”அணை”
   40.காட்டாங்”குளத்தூர்”

 7. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  எழில்,

  மிக அழகாகவும், நியாயமான-நேர்மையான முறையிலும்
  நடந்ததை எடை போட்டிருக்கிறீர்கள்.

  உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 8. ரிஷி சொல்கிறார்:

  மன்னிக்கவும். வார இறுதியில் நேரமொதுக்கி என் கருத்துகளைப் பகிர்கிறேன்.
  IT பணிக்கே உண்டான டார்கெட் முடிக்கும் அலுவலில் சிக்கியிருக்கிறேன்.
  வேகமாகப் பதிவிடும் உங்கள் விரைவுக்கு என்னால் உடனடியாக கருத்திட இயலவில்லை.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   கவலை வேண்டாம். ஆனால், அவசியம்
   உங்கள் கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள் விரும்புவேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 9. today.and.me சொல்கிறார்:

  இதோ அடுத்தவன் ஆரம்பித்துவிட்டான்.

  கட்சி, மதம், இனம், மொழி எல்லாவற்றையும் மறந்து இந்த தமிழக – சென்னை மக்கள் ஒன்றாக வாழ்ந்துவிட்டால் எப்படி?
  இந்த முட்டாள்களை எதைக் கொண்டு பிரிக்கலாம்?

  அடுத்து தலித்தாம்………
  எரிகிற கொள்ளியில் எண்ணைய்
  ஒன்று செய்தி வெளியிடுகிற அவர்கள் திருந்தவேண்டும்,
  அல்லது படிக்கிற நமக்கு …… வேண்டும்.

  http://www.hindustantimes.com/analysis/flooded-chennai-s-dirty-secret-dalits-clean-rotting-mess/story-nyqoydzM32dnCoR9C1wZQI.html

 10. ரிஷி சொல்கிறார்:

  வயர்ட் இல் இருந்து டைம்ஸ் ஆப் இந்தியாவுக்குப் போய், அங்கிருந்து டான் அசோக்கிற்குப் போய், அங்கிருந்து தினமலருக்குத் தாவியிருக்கிறது இம்மேட்டர்!!!

  தினமலர் அதிமுக ஆதரவு பத்திரிகையாத்தானே இருந்து.. எப்போதிலிருந்து இந்த மாற்றம்!!

  • today.and.me சொல்கிறார்:

   எனக்குத் தெரிந்து எப்போதுமே தினமலர் அதிமுக எதிர்ப்புதான்.. உறவாடிக்கெடு தந்திரம்…. (ஜானகி எம்ஜிஆர் காலத்திலிருந்து என்று நினைக்கிறேன்.)

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   ரிஷி,

   உங்களிடமிருந்து – பதிவைப்பற்றிய முறையான முழு
   விளக்கமும் வருமென்று நினைத்தேன். இந்தப் பதிவை எழுத
   என்னைத் தூண்டியவரே நீங்கள் தானே …?
   நீங்களும் இப்படி வழுக்கினால் எப்படி …?

   உங்களுக்கு தெரியாத தினமலரா…?

   முதலில் உங்கள் நண்பர் திருவாளர் டான் அசோக்கிடமிருந்து
   இந்த இடுகையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு
   விளக்கங்களை பெற முயற்சியுங்களேன்…

   கூடவே, முடிந்தால் -அவரது இடுகையை தினமலரில் பிரசுரம்
   செய்ய அவர் ( அல்லது அவர் சார்ந்த கட்சியினர் ) –
   “என்ன வழிவகைகளை” பின்பற்றினர் என்கிற
   விவரங்களையும்….

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    //அவரது இடுகையை தினமலரில் பிரசுரம்
    செய்ய அவர்/// in vikatan too.

   • Jayasree சொல்கிறார்:

    Don Ashok has removed his blog after he found Twitter traffic to his blog https://twitter.com/jayasartn/status/676316138884628481

    – Jayasree

     • Jayasree சொல்கிறார்:

      Only now. Buy why that blog alone went off after I posted the link in twitter and people followed it to his blog?

      Mr Rishi’s anxiety is well understood:)

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ரிஷி,

      இதில் மட்டும் நீங்கள் இவ்வளவு அவசரமும்
      ஆர்வமும் காட்டுவது எனக்கு வியப்பையே அளிக்கிறது…! 😉 😉

      -வாழ்த்துக்களுடன்,,
      காவிரிமைந்தன்

     • ரிஷி சொல்கிறார்:

      அட நீங்க வேற ஜெயஸ்ரீ. பின்னூட்ட மெயில் வந்தது. போயிப் பார்த்தா பதிவக் காணோம்னு போட்டிருந்தீங்க. என்னடா கிணத்தைக் காணோமான்னு போயிப் பார்த்தேன். இருந்திச்சு. உடனே பதில் போட்டேன். அவ்ளோதான். மற்றபடி என் ‘நடுநிலைமையை’ சந்தேகம் கொள்ள வேண்டாம் 🙂

    • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

     நன்றி திருமதி ஜெயஸ்ரீ சாரநாதன்.

     -வாழ்த்துக்களுடன்,
     காவிரிமைந்தன்

     • today.and.me சொல்கிறார்:

      நான் மட்டும் எப்போதும் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டுமா என்று தவித்துக்கொண்டிருந்தேன்.. 🙂 😀 நன்றி நண்ப ஜெயஸ்ரீ

     • ரிஷி சொல்கிறார்:

      //கிணத்தைக் காணோமான்னு போயிப் பார்த்தேன்.//

      கிணத்தைக் காணோமான்னு போயிப் பார்த்தேன்.
      கிணத்தைக் காணோமான்னு பதறிப்போயி பார்க்கவில்லை மை லார்ட். 🙂

     • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      ரிஷி,

      என்னைப் போன்ற மென்மையான
      பதிவர்களே சந்தேகிக்கப்படும்போது,
      “திமுக செயல்வீரர்களின் பதிவுகளை”
      நிஜமென்று அடிப்படையாக வைத்து
      விவாதம் செய்ய அழைத்த
      உங்கள் நிலை சந்தேகிக்கப்படுவதில்
      ஆச்சரியம் என்ன …? 😉 😉

      ( இருந்தாலும், உங்களால் தூண்டப்பட்டு – நான் இந்த
      விஷயத்தை ஆராயப்போனபோது, எனக்கு இதற்கு முன்னர்
      தெரிந்திராத பல புதிய “சமாச்சாரங்கள் ” தெரிய வந்தன.
      அதற்காக உங்களுக்கு நன்றி.
      எல்லாவற்றிற்கும் மேலாக – உங்களின் “நடுநிலை”
      வேறு புரிய வந்ததே……. 🙂 🙂
      அதற்காகவும் நன்றி சொல்ல வேண்டும்… 😀

      -வாழ்த்துக்களுடன்,
      காவிரிமைந்தன்

 11. today.and.me சொல்கிறார்:

  விபச்சார ஊடகஙகள்…

  உண்மையில் விசாரணை தேவைதான்.
  எத்தனைபேரை ஆற்றுக்குள் தள்ளிவிட்டார்களோ?

  ///////
  சென்னையைச் சேர்ந்த டாக்ஸி டிரைவரின் உடல் இலங்கையில் கரை ஒதுங்கியதாகச் செய்தி வந்ததல்லவா?

  அதில் ஒரு ட்விஸ்ட்டு.

  அந்தச் செய்தியில் வெளியான பூமிதுரை என்ற டாக்ஸி டிரைவர் தான் உயிருடன் இருப்பதாகவும், 2007-ம் ஆண்டு தான் கோவை வந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

  எனில், அவருடைய அடையாள அட்டையை வைத்திருந்த நபர் யார். அவர் உடல் எப்படி இலங்கையில் கரை ஒதுங்கியது?

  விசாரணையிலே பல உண்மைகள் வெளிவரும் போலயே!

  ////

  பிணந்திண்ணும் அரசியல்வியாதிகள்.

 12. thiruvengadam சொல்கிறார்:

  ஊடகங்கள் மட்டுமே நிகழ்வுகளை விவரிக்கவில்லை.தங்களின் ஒருதலைச்சார்பு இல்லையென்று வாததிற்கு ஏற்றுக்கொண்டாலும், ஊடகங்கள் சுட்டிக்காட்டியவற்றை பிறரும் பதிந்துள்ளர். இனியாவது மறுநிர்வாணப்பணிகள் சீராக நிறைவேற அனைத்துக்கட்சியினரின் ஒத்துழைப்போடும் , வெளித்தன்மையோடும் நடக்க , முன்னோட்டமாக முதல்வர் தொலைக்காட்சியில் மக்களுடன் எந்த வடிகட்டும் இல்லாது நேரடி உரையாடல் செய்ய தங்கள் கருத்து கோருகிறேன். இந்த பதிவுகளில் சிலர் தரம் தாழ்ந்திருப்பது வருத்தமடையச்செய்தது.ஜெ அவர்களின் இச்சமய நடவடிக்கைகளில் தங்கள் கருத்து காணாமை , தங்களின் சார்புத்தன்மை என்ற நிலைக்கு அவர்கள் கருதியிருக்கலாம்.

 13. drkgp சொல்கிறார்:

  சந்தேகமே வேண்டாம். தமிழகத்தில் உள்ள பல ஊடகங்களும் அரசியல்வாதிகளும்
  பிணம்திண்ணிகழுகுகளேதான். பிணம் இல்லாவிட்டாலும் அதை கற்பனையிலாவது
  உண்டாக்கிவிட்டு அதை சுற்றியே வலம்வருவதில் வல்லவர்கள்.

 14. gopalmohan சொல்கிறார்:

  ij fully endorse ur view sir

 15. ரிஷி சொல்கிறார்:

  அன்பின் கா.மை,
  இவ்வளவு அவசர அவசரமாக சேகரித்து வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை. இப்பகிர்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவசர நோக்கம் புரிகிறது.

  யுவா திமுக ஆதரவாளர் என்பது ஊரறிந்த விஷயம்தான். அதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை. டான் அசோக் பற்றி தெரியாது. தமிழ்மணம் வழியாகத்தான் அவரை சென்றடைந்தேன். டுடேஅன்ட் மீ அனுப்புவதற்கு முன்னரே அசோக்கின் பேஸ்புக் பதிவுகளைப் பார்த்து விட்டேன். அவரது கலைஞர் புகழுரைகளைக் காணும்போது அவர் திமுக சார்புடையவர் என்றே புலனாகிறது.

  என்னைப் பொறுத்தவரை திமுக, அதிமுக இருவருமே நீர்நிலைப் பாதுகாப்புகளில் அக்கறை காட்டவில்லை அதன் உச்சம்தான் தற்போதைய சோகம் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். கலைஞர் இன்று ரோட்டில் இறங்கி பணி செய்கிறார் என்பதெல்லாம் மோசமான ஆட்சிகளைத் தந்ததற்கு நிவாரணமாகிவிடாது. ஆகவே அசோக்குக்குப் புல்லரித்த வகையில் எனக்கு நேரவில்லை!

  (இது நேற்று எழுதி வைத்திருந்தது. மேலும் தொடர முடியாமல் இருந்தது. அவசரப்பட்டு கருத்திடக்கூடாது என்பதால் நேரம் எடுத்துக்கொண்டேன். இன்று பார்த்தால் அடுக்கடுக்காய் இடுகையும் பின்னூட்டங்களும். )

  வட இந்திய ஊடகம் எனும் போது வயரும் அதன் பகுதி நேர நிருபரும் எழுதியது மட்டுமே ஆதாரப் பதிவாகத் தெரிகிறது. நானும் பல இடங்களில் தேடி விட்டேன். வேறெங்கும் இப்புலனாய்வின் ஆதாரப்பதிவு இல்லை. டைம்ஸ் ஆப் இந்தியாவும் reproduce தான் செய்திருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா எழுதியிருப்பதால் புலனாய்வு செய்து எழுதியிருப்பார்கள் என நினைத்தேன். அதையே அசோக் மொழிபெயர்த்திருக்கிறார் என்றும் கருதினேன்.

  நீங்கள் பதிவிடும் முன்னரே அசோக்கின் பின்புலத்தை பார்த்துவிட்டேன். அவர்தான் கலைஞருக்கு ஆஸ்திரேலிய தபால்தலையே வெளியிட்டார் போலிருக்கிறது. எனக்கு வருத்தமளிக்கும் விஷயம் விகடன், தினமலர் போன்றவர்கள் அப்படியே அவற்றை ரீ-பப்ளிஷ் செய்ததுதான். தினமலர் ஒரு வரி கூட மாறாமல் அப்படியே போட்டு ‘நமது நிருபர்’ எனப் போட்டுக் கொண்டது. இப்புள்ளிவிவரங்களைக் கருவாக வைத்துக்கொண்டு தொலைக்காட்சியுலுமே விவாதங்கள் நடக்கின்றன.

  ஆக நடுநிலை, புலனாய்வு ஊடகங்கள் என எவற்றையுமே குறிப்பிட முடியவில்லை. மக்களிடம் இச்செய்திகள் சேரும்போது செய்திகள் பலவித பரிணாம மாற்றங்களை அடைகின்றன.

  இதையனைத்தும் தாண்டி,

  செம்பரம்பாக்கம் ஏரியைக் காக்க பொதுப்பணித்துறையினர் சீரிய முயற்சிகளில் இருந்தனர் என்பதை நான் மறுக்கவேயில்லை. தீபாவளிக்குப் பின்னர் எவரும் ஓய்வாகவே இல்லை என்பது நன்கு தெரிகிறது. ஆனாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போதவில்லை எனத் தோன்றுகிறது. எதற்கெடுத்தாலும் ‘மேலிட உத்தரவு’களுக்கு காத்திருப்பது என்பதை மேலிடம் பழக்கிவிட்டது என்றே கருதுகிறேன். அரசு ஊழியர்கள், அதிகாரிகள் மட்டத்திலான அரசு சிறப்பாகவே செயல்பட்டது.. ஆனால் மக்கள் பிரதிநிதி மட்டத்திலான ‘அரசு’ என்பது செயல்படவே இல்லை என்பது என் அவதானிப்பாக உள்ளது. பலவித போராட்டங்களும் குடைச்சல்களுமே கொஞ்சம் செயல்பட வைத்தன என்றே நினைக்கிறேன். நிவாரணப்பணிகளில் Rest of Tamilnadu தன்னார்வலர்கள் இயங்கியிருக்காவிட்டால் இவ்வளவு விரைந்து மீண்டிருக்க முடியாது. அதற்கு அரசு திட்டமிட்டதாகவே தெரியவில்லை. கடந்த வருடங்களில் ஏரிப் புனரமைவுகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் என்னவாயிற்று என்பதும் புரியவில்லை.

  இப்பேரிடர் காலத்தில் எல்லாமே அரசு “தெளிவாகத் திட்டமிட்டது; தெளிவாகவே நடந்தது” என ஒரு வாதத்திற்கு நம்பினால் கூட, இதுபோன்ற பேரிடர்களை வருங்காலத்தில் தடுக்க ஏதுவாக “ஏரிகளை இனி மீட்டெடுப்போம்; வரத்து வாய்க்கால்களை சீரமைப்போம்; முறையற்று நடக்கும் சிஎம்டிஏ அப்ரூவல்களை நிறுத்துவோம்” என அதிமுக, திமுக உள்ளிட்ட எந்தவொரு ஓட்டுக்கட்சியுமே தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் பேச வேண்டிய ‘மக்கள் முதல்வர்’ மன்றத்தில் வெளிப்படையாகப் பேசாமலிப்பதே அதீத எரிச்சலூட்டுகிறது.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.