வெள்ளம் – யார் காரணம்…? ஒரு பொதுவான பார்வை ….

.

.

சென்னை வெள்ளம் குறித்து பலரும் பலவிதமான
கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். பெரும்பாலான
கருத்துக்கள் அரசுக்கு எதிராகவோ அல்லது
அரசின் செயலுக்கு ஆதரவாகவோ இருக்கின்றன.

இரண்டுக்கும் இடையில் நின்று கருத்து தெரிவிக்கிறார்
வட்டாட்சியராக பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.பி.எஸ்.
பசுபதிலிங்கம் என்கிற சமூக ஆர்வலர்.

அனுபவப்பட்ட அரசு அதிகாரி என்கிற முறையில்
அவர் கருத்துக்களையும் பார்ப்போமே….

u.s.-1

u.s.-2

பின் குறிப்பு –

இவரது கருத்துக்கள் – எனக்கும் ஏற்புடையவே.

Advertisements
Gallery | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

வெள்ளம் – யார் காரணம்…? ஒரு பொதுவான பார்வை …. க்கு 7 பதில்கள்

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  எனது எண்ண ஓட்டத்தை அப்படியே திரு. பசுபதிலிங்கம் அவர்கள் கூறி இருக்கிறார். இது தான் பெரும்பாலோர் கருத்தாக இருக்கும்.

 2. தெளிவான விளக்கம் அனைவரும் ஏற்றுக்கொண்டே தீரவேண்டும்

 3. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர் ரிஷி -க்காக எழுதியது,

  ஆனால் விஷயம் எல்லாருக்குமே சேர்த்து தான்….!

  ரிஷி,

  இரண்டு தீவிர திமுக உறுப்பினர்கள் –
  செய்தி என்கிற தலைப்பில்,

  சுத்தமாக அடிப்படை ஆதாரமே இல்லாத,
  தாங்கள் சார்ந்த கட்சி பயன்பெற வேண்டும் என்கிற
  ஒரே நோக்கத்தோடு கிளப்பி விட்ட “வதந்”தீ” -யை
  நீங்களும் உண்மையென்று நம்பி இந்த
  வலைத்தளத்தில் விவாதம் செய்ய வேண்டும் என்று
  வேண்டுகோள் வைத்தீர்கள்.

  உங்களைப்போன்ற படித்த, பொறுப்பான,
  சுயேச்சையாக சிந்திக்கக்கூடிய இளைஞர்களையே
  இந்த வதந்திகளால் வளைக்க முடிந்தது என்றால் –

  செய்தித்தாள்களில் வரும் தலைப்புச் செய்திகளை
  மட்டுமே படித்து விட்டு நகர்ந்து கொண்டிருக்கும்
  மற்ற சாதாரண பொது மக்களை இந்த செய்திகள்
  -மன்னிக்கவும் வதந்”தீ-க்கள் – எந்த அளவு பாதித்திருக்கும் …?

  உயிர்களை பலி கொடுத்த குடும்பங்கள் –
  உடைமைகளை பலி கொடுத்த குடும்பங்கள் –
  இருந்த இடமும் வெள்ளத்தில் போய்
  தெருவில் நிற்கும் குடும்பங்கள் – இதை உண்மை என்று
  நம்பி எந்த அளவிற்கு கொதித்துப் போயிருப்பார்கள்…?
  எத்தனை மனவேதனை அடைந்திருப்பார்கள் ..?

  யாருடைய அஜாக்கிரதை காரணமாகவோ
  நாம் அத்தனையையும் இழந்தோமே என்கிற கொதிப்பு
  எந்த அளவிற்கு அவர்களிடம் உண்டாகும்…?

  திமுக வேண்டுமென்றே பொது மக்களிடம்,
  இத்தகைய பீதியையும், வெறுப்பையும்,
  கலவரத்தையும் உண்டு பண்ண வேண்டும்
  என்கிற சுயநலநோக்கத்துடன் கிளப்பிய இந்த வதந்”தீ” யை
  விகடன், தினமலர் போன்ற இதழ்கள் எப்படி
  ராட்சத விசிறிகளை இயக்கி பரவ வைத்தன என்பதைத்தான்
  எல்லாரும் பார்த்தோமே.

  இதை எழுதியவர் திமுக வைச் சேர்ந்தவர் என்கிற எந்த
  குறிப்பையும் கொடுக்காமல் – ஒரு பெரும் பரபரப்பான செய்தி
  போன்ற தோற்றத்துடன் இந்த ஊடகங்கள் ஊதிப்பெரிதாக்கியதன்
  பின்னணி என்ன ? அவர்களின் உள்நோக்கம் என்ன …?

  குறைந்த பட்சம் இந்த வலைத்தள நண்பர்களுக்காவது
  இந்த உண்மைகள் போய்ச்சேரட்டும் என்பதற்காகத்தான்
  நான் இத்தனை முயற்சிகளை மேற்கொண்டேன்.
  அதற்கு சில நண்பர்களின் ஆதாரபூர்வமான பின்னூட்டங்கள்
  துணை சேர்த்தன.

  என்னுடைய கண்ணோட்டத்தில் –

  செய்திகள் என்பவை செய்திகளாகவே இருக்க வேண்டும்.

  எந்த செய்தியைப் பற்றியும் –
  நமக்கும் சரி,
  ஊடகங்களுக்கும் சரி –
  கருத்து தெரிவிக்க நிச்சயம் உரிமை உண்டு.
  ஆனால், செய்தி வேறு, நம் கருத்து வேறு
  என்பதை வாசகர்களுக்கு தெளிவாகப் புரியவைக்க வேண்டிய
  பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

  வேண்டுமென்றே ஊடகங்களுக்கான இந்த பொறுப்பை
  மறந்து விட்டு தொழில் செய்பவர்கள், ஊடகத்தொழிலை
  செய்யவில்லை. “வேறு” தொழிலைச்செய்கிறார்கள்
  என்கிற என் கருத்தினை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள்
  என்றே நம்புகிறேன். நன்றி.

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 4. today.and.me சொல்கிறார்:

  appo ivargalellaam kaaranamilaiyaaa?

  //கடந்த மைனாரிட்டி திமுக ஆட்சியில், துரைமுருகன் PWD மினிஸ்டர் ஆக இருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளை தூர் வாரப்போவதாக ஆயிரம் கோடிகளுக்கு மேல் டெண்டர்களை துண்டு துண்டாக பிரித்து பல கம்பெனிகள் பேரில் டெண்ட்டர் விட்டார்கள். ஆனால் அனைத்தும் மந்திரியின் சொந்த மாவட்டத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவருக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு, ஏரிகளை தூர் வாராமலேய பில் போட்டு நூற்றுக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்பட்டது. அதில் செம்பரமபாக்கம் போருர் பூண்டி ஏரிகளும் அடங்கும். இப்போ நந்தகுமாரை நைசா மாவட்ட செயலாளர் ஆக்கிட்டார். இன்னைக்கு நந்தகுமார் சொத்துமட்டுமே 500 கோடிக்கு மேலன்னு சொல்றாங்க 10% லாபம் பார்த்த இவருக்கே இவ்ளோ சொத்துன்னா 40% வாங்கின மந்திரி துரைமுருகன்கிட்ட எவ்ளோ சொத்துன்னு பாருங்க.மந்திரி அடிச்ச கொள்ளையில கொஞ்சம் ஷேரை BGR ENERGY ன்ற கம்பெனியில ஷேரா இருக்காம்.//

  any Anti-ADMKians can argue on this.

  • நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

   இந்த அரசியல்வாதிகளுக்கெல்லாம், இப்போ உள்ள கட்சிக்காரன் சாப்பிடுறானே.. நாம கொள்ளையடிக்க வழியில்லையே என்ற வயித்தெரிச்சல்தான். இல்லாட்ட இவங்கள்ட்ட எல்லாம் எப்படி கல்லூரிகள் மற்றும் பல சொத்துகள் இருக்கும்? (எல்லோரும்தான்). பேசாம, அமெரிக்கா, நமக்குத்தெரிந்த கம்ப்யூட்டர் வேலைகளை அவுட்சோர்ஸ் பண்ணுவதுபோல், தமிழ்னாட்டை நிர்வகிப்பதை, சிங்கப்பூருக்கு அவுட்சோர்ஸ் ஒரு 20 வருடங்களுக்குப் பண்ணினால் என்ன?

   • இளங்கோ சொல்கிறார்:

    பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டி –
    சிங்கப்பூர் நிர்வாகம் சாக்கடையாகி விடும்.

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  yes,accepted

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.