ஒரு சுவையான விமரிசனம் …. விமரிசனம் என்னுடையதல்ல ….!!!

.

.

“திருட்டு ரெயில்” பற்றி நேற்றைய ஹிந்து ஆங்கில
செய்தித்தாளில் வெளிவந்துள்ள விமரிசனத்தின் ஒரு பகுதி கீழே.

எழுதியவர் திரு.சுதீர் ஸ்ரீநிவாசன், Principal
Correspondent, Chennai என்று போட்டிருக்கிறது.
அதற்கு முன்னர் இதன் பின்னணி –

என்னை இந்த விமரிசனத்தை கவனிக்க வைத்தது –
என் நண்பர் ஒருவர் – திமுக அனுதாபி – கூறிய விஷயம்.
அவர் மிகத்தீவிரமாக கலைஞரை நேசிப்பவர். ( இதனால்
எங்கள் நட்பிற்கு இதுவரை எந்தவித சேதமும் ஏற்பட்டதில்லை….!)
அவருக்கு திரு.ஸ்டாலின் மீது ஒருவித எரிச்சல் உண்டு.

திமுக பற்றி நிறைய உள்தகவல்களை அறிந்தவர் அவர்.
நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் நிறைய செய்திகள் சொல்வார்.
அவர் என்னிடம் கூறியதன் சாராம்சம்…..

இந்த படத்தை தயாரித்தவர் திருவாளர் ஸ்டாலின் அவர்களின் மைத்துனர் (அதாவது திருமதி ஸ்டாலின் அவர்களின் சகோதரர்…) அவரது குடும்பத்தை சேர்ந்த சிலரே படத்தில் முக்கிய வேடங்களிலும் நடித்திருக்கிறார்கள். ஹிந்து விமரிசனத்தை படித்த பிறகு நான் அவரிடம் “என்ன ….., ஹிந்து விமரிசனத்தில் படம் மகா மட்டம் என்றும் தியேட்டரில் ஏழே பேர் தான் இருந்தார்கள் என்றும் கூறி இருக்கிறார்களே ?” என்றதற்கு
அவர் மிகவும் சந்தோஷமாக – ” தொலையட்டும் சார்…..
தலைவரை அவமானப்படுத்தும் விதமாக வேண்டுமென்றே
இப்படி பெயர் வைத்தார்கள் …
அதான் போட்ட பணம் அத்தனையும் போச்சு…
ஒழுங்கா சம்பாதிச்சிருந்தா தானே நிக்கும் ( ? ) “என்றார்.

அவர் கடுப்பு அவருக்கு…. திருமதி ஸ்டாலினுக்கு, தலைவரை சுத்தமாக பிடிக்காது என்றும், வேண்டுமென்றே தலைவரை அவமானப்படுத்தும் விதத்திலேயே இந்தப் பெயர்
வைக்கப்பட்டது என்றும்
அவர் ஏற்கெனவே சொல்லி இருந்தார்…

இனி திருட்டு ரெயில் திரைப்பட விமரிசனம் பற்றி –

அந்த காலத்தில் “சுப்புடு” என்று ஒரு விமரிசகர் இருந்தார்.
கொஞ்சம் வயதானவர்களுக்குத் தெரிந்திருக்கும்….!
கலை, இலக்கியம், என்று புகுந்து விளையாடுவார்.
முக்கியமாக – இசை, நடனம் – இரண்டிலும் அபார ஞானம்
உடையவர். கலைஞர்கள் நிகழ்ச்சிகளில் சிறிதளவு பிசகினாலும்
போயிற்று…. நாக்கைப் பிடுங்கிக் கொள்ளும் அளவுக்கு
நாராசமாக விமரிசனம் செய்வார்.

இந்த விமரிசனத்தைப் படித்த பிறகு திரு.சுப்புடுவின் நினைவு வந்தது எனக்கு. முதலில் இதை தமிழ்ப்படுத்தி போடலாமா என்று யோசித்தேன்… ஆனால் பின்னர் அந்த யோசனையை கைவிட்டு விட்டேன். நான் எவ்வளவு முயன்றாலும் இந்த ஒரிஜினல் ஆங்கில விமரிசனத்தில் கிடைக்கும் நக்கலை
என்னால் தமிழில் தர முடியாது…

எனவே ஆங்கிலத்திலேயே படித்து ரசியுங்கள்….

விமரிசனத்திலிருந்து சில பகுதிகள் மட்டும் கீழே –

– Thiruttu Rail must be made mandatory viewing
at all film schools, only so the students know
what they shouldn’t do when making a film.

-the lighting is so poor that even in broad daylight,
you can’t quite see the faces of some characters.

– This is the sort of film anybody can make with
their mobile phone, a few friends, some idle time
and sadistic intentions.

– The story is rather bizarre.

– The hero meets a girl, Meena (Kethi) during this
journey and immediately falls in love with her.

For a large part of the film, he stares at her in
a dark, lecherous way, as if running in his mind
the sinister things he’d like to do to her.

– whole movie is quite excruciating to sit through.

– Rakshan, the hero, looks like an anonymous
member of the crew blackmailed into filling in,
to make up for the absence of the real hero.

It isn’t just the acting; –

even in the song sequences,
he simply stands,
his hands in his pockets,
as if waiting for the shot to get over
and the horror to end.

-The songs are mediocre,
the acting bad,
the story disconnected,
and the comedy unfunny.
I was at the movie theatre because
I had to review the film.

I wasn’t sure why the six others
in the theatre were doing this to themselves. ( !!!! )

————

பாவம் திரு.சுதீர் ஸ்ரீநிவாசன்….
அவரது இந்த விமரிசனத்திற்கு பிறகு –
அவருக்கு என்ன treatment கிடைக்கப் போகிறதோ,
அவர் என்ன பாடு படப்போகிறாரோ….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

12 Responses to ஒரு சுவையான விமரிசனம் …. விமரிசனம் என்னுடையதல்ல ….!!!

 1. nparamasivam1951 சொல்கிறார்:

  அந்த பத்திரிக்கை கை மாறி உள்ளது. புதிய உரிமையாளரை மறைமுகமாக படம் விமரிசனம் செய்தால், அவர் பத்திரிக்கையில் விமரிசிக்க உரிமை உள்ளதே. பதவி உயர்வு உண்டு என எண்ணுகிறேன்.

 2. thiruvengadam சொல்கிறார்:

  Extract from yesterday Dinamani Kathir ( Just for fun )

  • இளங்கோ சொல்கிறார்:

   கே.எம்.சார்,

   இவரை மாற்றவே முடியாது.
   இவராக மனமிறங்கி உங்களை விட்டால் தான் உண்டு.

 3. selvarajan சொல்கிறார்:

  ” திருட்டு ரயிலில் உண்மை கதை ” என்று தினமலர் சினிமாவில் எழுதியுள்ளார்கள் — கதாநாயகன் ரஷன் திருமதி துர்கா ஸ்டாலினின் அண்ணன் மகன் என்றும் குறிப்பிட்டு உள்ளார்கள் —-இது ஒருபுறம் இருக்க — ” என்னால் தான் ” ஒருவரை கட்சியை விட்டு நீக்கினார்கள் என்று மார்தட்டி ஒருவர் கூறுவதை என்னவென்று சொல்லுவது // முன்னாள் டிஜிபி நடராஜ் நீக்கத்துக்கு இதுதான் காரணமா? படத்தை மாத்தி போட்டதா டிவி சேனல்? …….. சென்னை: தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்று தவறுதலாக முன்னாள் டிஜிபி நடராஜின் புகைப்படத்தை வெளியிட்டதால் அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்படும் நிலைக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.——Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/former-dgp-nataraj-issue-former-journalist-stands-his-comments-242194.html …..இவர்தாங்க “அந்த” நடராஜன்……. சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஆட்சி குறித்து விமர்சித்துப் பேசியது நான். ஆனால் டிவி நிறுவனம் செய்த தவறால் முன்னாள் டிஜிபி ஆர். நடராஜ் சிக்கலைச் சந்தித்து விட்டார் என்று கூறியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் ஆர். நடராஜன்….//
  Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/senior-journalist-r-natajaran-opines-on-the-removal-r-natraj-242249.html ….. இப்போது அறிக்கைவிடும் இந்த ” மூத்த பத்திரிக்கையாளர் …? ” செய்தி டெலிகாஸ்ட் ஆகும்போதே விளக்கம் கூறாமல் விட்டது ஏன் ….? இல்லை அந்த தொலைக்காட்சியே மறுப்பு தெரிவித்து — தவறை ஒப்புக்கொண்டு அ .தி.மு.க. தலைமையிடம் தெரிவிக்காமல் காலம் கடத்தியது …. ஏன் ?

 4. ஆவி சொல்கிறார்:

  அவ்ர் மீண்டும் சேர்க்கப்பட்டு விட்டார். பத்திரிகையாளர் /தொலைக்காட்சி நிறுவனத்தினர் தாமதமாக கண்டிருக்கலாம்.

  ஆனால் ஜேயின் சர்வாதிகாரப் போக்கையும் அவசர முடிவையும் இதன் மூலம் அவர் நிரூபித்திருக்கிறார். கட்சி ஜனநாயகம், முதலில் அவரிடம் இருந்து பேசியது பற்றி விளக்கம் கேட்டிருக்கலாம். அப்படிச் செய்யாது யாரோ சொல்லியதை வைத்து அவசர முடிவு எடுத்தது ஏன்? அவர் தன்னை திருத்திக்கொள்ளவே மாட்டார்.எத்தனை முறை நிதீமன்றின் கொட்டு கிடைத்த போதும் திருந்தாத அவர், திருந்துவார் என்று நினைப்பது மக்களின் மடமை.ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? பாவப்பட்ட தமிழகம்.

  • Sampathkumar.K. சொல்கிறார்:

   நீங்கள் திருட்டு ரெயிலைப் பற்றி இங்கு எழுதி இருந்தால்
   பொருத்தமாக இருக்கும். அதை விட்டு விட்டு, யார் மீதோ
   உங்களுக்கு உள்ள ஆத்திரத்தை இங்கே வெளிப்படுத்துவது
   எப்படி சரி ஆகும் ?

 5. இளங்கோ சொல்கிறார்:

  இந்த சர்வாதிகாரம் தான் அந்த கட்சியின் கட்டுக்கோப்புக்கும்,
  கட்டுப்பாட்டுக்கும் காரணமாக இருக்கிறது என்பதை
  மறந்து விடக்கூடாது. மற்ற அனைத்து கட்சிகளையும் விட
  இந்த கட்சி கட்டுப்பாடாக இயங்குகிறது. மற்ற கட்சிகளில்
  மாவட்டங்களும், முன்னாள் மந்திரிகளும், தலைமைக்கு
  பண மூட்டைகளை காணிக்கையாக செலுத்துபவர்களுக்கும்
  தான் பதவி, சீட் எல்லாம். இந்த கட்சியில் மட்டும் தான்
  எவர் வேண்டுமானாலும் மந்திரி ஆகலாம், எம்.எல்.ஏ.ஆகலாம்,
  எம்.பி.ஆகலாம். தப்பு செய்கிறார்கள் என்பது தெரிந்தவுடன்
  எந்தவித தயக்கமும் இல்லாமல் அவர்களைத் தூக்கி எறிகிற
  துணிவும், தன்னம்பிக்கையும் இன்று வேறு எந்த தலைவரிடம்
  இருக்கிறது ? ஒன்றரை கோடி பேரை உறுப்பினர்களாக கொண்ட
  ஒரு கட்சியில் சில சமயங்களில் சர்வாதிகாரமும்
  தேவைப்படுகிறது தான். தயவுசெய்து எதை முன்னிட்டும்
  திருட்டு ரெயிலையும், இந்த தலைமையையும் ஒப்பீடு செய்யாதீர்கள்.
  நீக்கப்பட்ட திரு.நட்ராஜ் சொல்லி இருப்பது ” நான் தவறு
  செய்யவில்லை என்பது தெரிய வந்த அடுத்த நிமிடமே
  எனக்கு நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை எனக்குண்டு”.
  அது தானே நடந்தது ?

 6. ரிஷி சொல்கிறார்:

  //I wasn’t sure why the six others
  in the theatre were doing this to themselves. ( !!!! )//

  😀 😀 😀

 7. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  கா.மை சார்…. படம் எடுப்பதில் பலவித அனுகூலங்கள் உண்டு. உங்களுக்குத் தெரியாததல்ல. இருந்தாலும் சொல்கிறேன்.
  1. நடிப்பவர்கள் மக்களிடம் கவனம் பெறுவர். இது அவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு நல்லது. ஸ் அவர்களும் குறிஞ்சி என்ற தொடரில் நடித்தவர். (இப்போ நமக்கு நாமேயில் ‘நடித்தார் என்று அரசியல் பேசக்கூடாது)
  2. படத் தயாரிப்பில் கறுப்புப் பணமும், அதன் தோல்வி/வெற்றியில் கள்ளக் கணக்கு எழுதும் வசதியும், கறுப்பை வெள்ளையாக்கும் தந்திரமும் உண்டு.
  3. அதிகாரத்தில் இருந்தால் வரிவிலக்கு கொடுத்து பணத்தை எடுத்துவிடலாம். தொலைக்காட்சியில் போட்டு கல்லா கட்டலாம். தோல்வி என்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.
  4. தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் போன்றவற்றில் தன் ஆட்கள் அதிகமாகும். இது பலவிதத்தில் உபயோகம். (அதுக்காக, மானாட/மயிலாட போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஆள் பிடிக்கலாம், சிரிப்பு அல்லது நியூஸ் சேனல்களுக்கு நடிக நடிகைகளை வற்புறுத்தி கொண்டு வரலாம், அவ்வப்போது தன்னைப் புகழ்வதுபோல் கலை நிகழ்சி நடித்து அதனையும் ஒளிபரப்பி கல்லா கட்டலாம் என்று அரசியல் பேசக்கூடாது)

 8. ஆவி சொல்கிறார்:

  செல்வராசன் வெளியிட்ட கருத்தின் ஒரு பகுதிக்கான பதிலே எனது கருத்தாகும்.

  பயணர்களே! நடு நிலை தவற வேண்டாம். எனது முன்னைய கருத்துகளைப் படித்தால் தெரிந்திருக்கும். கருணாநிதியை விட, தற்போதுள்ள பலரை விட சிறந்தவர் ஜே என்பதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. ஆனால்…………..

  அறிகொன்று அறியான் எனினும் உறுதி
  உழையிருந்தான் கூறல் கடன்.

  தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
  சொல்லலும் வல்லது அமைச்சு.

  இவற்றுள் பல ஜே யிடம் இல்லை. அவர் தன்னைத் திருத்திக் கொண்டு ஆரோக்கியமான அரசியலை தரவேண்டும் என்பதே எனது கருத்தாகும். ஜே இல்லை என்று வைத்துக் கொண்டால் என்ன செய்வதாக உத்தேசம்.
  அதனால் தான் தனி மனித சர்வாதிகாரம் ஓரளவிற்கும், ஜனநாயகம் நிறைந்தும் இருப்பதே சிறந்த அரசியல் ஆகும்.

  • இளங்கோ சொல்கிறார்:

   நீங்கள் சொல்வது உண்மை தான் என்றாலும் –
   இங்கே வெளியாகும் நேர்மையான, நடுநிலையான
   பின்னூட்டங்களும் கூட தவறிப்போய்
   ஜெ. யை அனுப்பி விட்டு கே.யை
   கொண்டு வருவதே நல்லது என்கிற கருத்தை
   உருவாக்கி விடக்கூடாதே.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.