இவர்கள் ” தேவதைகள் ” – பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்…!

.

.

தமிழ் நாட்டில் பல நேர்மையான, தைரியமான,
புத்திசாலித்தனமான அதிகாரிகள் பணி புரிகிறார்கள்.
ஐஏஎஸ், ஐபிஎஸ் – ஆகிய இரண்டு துறைகளிலும்
இத்தகையோர் நிறைய பேரைப் பார்க்கலாம்.
இவர்களில் திரு.ககன்சிங் பேடி, விக்ரம்கபூர் ஆகியோரையும்

அவர்களைப் போன்ற இன்னும் சில மூத்த
அதிகாரிகளையும் – பொதுமக்கள் ஏற்கெனவே
நன்கு அறிவார்கள்.

இத்தகைய அதிகாரிகளில் இன்னும் பலரை அண்மைய மழை, வெள்ளம் வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. சிறப்பாக பணிபுரிந்தவர்களில் முக்கியமான இரண்டு பெண் அதிகாரிகளை பற்றிய விவரங்களைச் சொல்வது இந்த இடுகையின் நோக்கம்.

அரசை எப்போதும் உள்நோக்கத்துடன் குறைகூறிக்கொண்டிருக்கும்,
ஊடகங்களால் கூட, இவர்கள் செயலைப் பாராட்டாமல் இருக்க
முடியவில்லை என்கிற அளவிற்கு இருக்கிறது இவர்கள் பணி.

இவர்களைப் பற்றிய செய்திகளை ஊடக வாயிலாகவே
கீழே படிக்கலாம் …..

ias-1

ias-2

ias-3

கஜலட்சுமி, அமுதா ஆகிய இருவரும் ஊடக வெளிச்சத்திற்கு வந்த இரண்டு சிறப்பான அதிகாரிகள். இவர்களைப் போன்றே
செயல்திறன் மிக்க இன்னும் பலர் இருக்கிறார்கள்
தமிழக அரசுப் பணியில்.

இவர்கள் அனைவரையும் நாம் மனம் நிறைந்து பாராட்டும்
அதே வேளையில்,
இந்த இளம் அதிகாரிகளுக்கு –
தங்கள் லட்சியத்தை தொடர்ந்து செயல்படுத்தும்போது
சுயநலம் பிடித்த அரசியல்வாதிகளிகளால் சிக்கல்கள்
ஏதும் வராமல் பார்த்துக் கொள்வதும் அந்தந்த உள்ளூர்
மக்களின் கடமை. ஆக்கிரமிப்புகள் அத்தனையும்
அகற்றப்படும்வரை அந்தந்த உள்ளூர் மக்களும் விழிப்போடு
இருப்பது அவசியம். ஆக்கிரமிப்பை அகற்றும்போது,
வரும் குறுக்கீடுகளை முழுமூச்சோடு மக்கள் எதிர்க்க வேண்டும்.
இந்த சமயத்தை விட்டால் இதற்கு தீர்வே கிடைக்காது.

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

24 Responses to இவர்கள் ” தேவதைகள் ” – பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்…!

 1. thiruvengadam சொல்கிறார்:

  Are U little shy to note these are extracts from the magazine of which you doubts abt its concealed ownership ?

  • today.and.me சொல்கிறார்:

   நண்ப திருவேங்கடம்

   காமை எதைப் பற்றி எப்படி எழுத வேண்டும் எதற்கெல்லாம் வெட்கபடவேண்டும் எதற்கெல்லாம் ownership கோரவேண்டும் என்று ஒரு லிஸ்ட் கொடுத்துவிடுங்களேன்.

   இல்லை. புரியாமல் தான் கேட்கிறேன்….
   ஒரு பதிவை முதல் ஆளாக வந்து படிக்கிறீர்கள்
   முதல் ஆளாக பின்னூட்டமிடுகிறீர்கள்

   இன்னொருவர் இடத்தில் வந்து பதிவுக்கு சம்பந்தமில்லாமல் எதையோ சொல்லுகிறோமே என்று don’t you little shy?

   :-/

   • thiruvengadam சொல்கிறார்:

    Mr. To & me : My views are spontaneous & when see express & thank KM sir for allowing. You ask me for a list. Pl have a look . Earlier there were his opinoins by himself based on news which he came across. I opined when he referred the source. He is repeatedly Vikatan group may be under MK , for that , i suggrsted to check with authorities. Why cann’t there be ref on the source, as in past. It is welcome to bring to notice of public for good things. You say i am pointing some thing which do not have relevance for the current subject .But my intention we need be unbiased. There is no harm to declare abt our supporting whom we wish, but it need have show of neutrality. You referred my first posting opinions. This is like you are first replying before KM. Hope you have seen mine before him & responded . I just take as a platfarm to express my things which I know. Once again thanks KM .

    • today.and.me சொல்கிறார்:

     நண்ப திருவேங்கடம்,

     1, சரி.. உங்களால் லிஸ்ட் ஆகத் தரமுடியாது பரவாயில்லை. ஆனால் இந்தப் பதிவைப் பொறுத்தவரை காமை தன்னிஸ்டத்துக்கு ஏதோ ஒரு பத்திரிகையில் வந்ததை அப்படியே எடுத்து தன்னுடைய பெயரிலா வெளியிட்டிருக்கிறார்? பத்திரிகை பிரசுரத்தை ஸ்கேன் செய்து இமேஜ் ஆகத்தானே வெளியிட்டிருக்கிறார்…. இதிலே எங்கே வந்தது ஓனர்ஷிப் பிரசசினை… நீங்கள் இதை ஒரு பிரச்சினையாகப் பார்க்கவேண்டிய அவசியமே இல்லையே.. அந்த பத்திரிகையை வாங்கிப்ப படிக்க இயலாதவர்களையும், கருத்துக்கள் சென்றடைவதற்காக ஸ்கேன்பண்ணி வெளியிட்டிருக்கிறார் அவ்வளவுதானே……

     2. இப்பொழுதும் விமரிசனம் அன்பயஸ்ட் என்பதில் எனக்கு சந்தேகமேயில்லை…. உங்களுக்கு சந்தேகம் வந்தால் எப்படி என்பதை புரியும்படி விளக்குவது உங்கள் பொறுப்பு.. அதைவிடுத்து பதிவுக்கு சம்பந்தமில்லாமல் எதையாவது எழுதுவது என்பது பதிவரை பதிவரின் எழுதும் ஊக்கத்தை குறைக்கும் செயல்…… சற்றுக் கடினமாகச் சொல்வதானால் “சுத்தம் செய்பவனின் விளக்குமாற்றை பிடிங்கி குச்சிகளாக இறைக்கும் செயல்”

     3. there is no harm to declare about…. என்று சொல்லுகிறீர்கள்… மக்களுக்குத் தீமை செய்யும் தீயசக்திகளை ஆதரித்தால் அது மக்களுக்குத் தீமை தான்.. இல்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள்.நன்மை தீமை பற்றிய விழிப்புணர்வு இல்லாத மக்களுக்கு அரசு , அரசாங்கம் , செயல்படும் முறைகள், நீதி, சட்டம், சட்ட அறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் வேண்டும். அதை ஏற்படுத்த விமரிசனம் முயன்றால் அது தீமை ஆகிவிடுமா?

     4. ஆமாம். இந்தப் பதிவில் முதன்முதலில் வந்த உங்கள்பின்னூட்டத்திற்கு காமை தான் பதிலளிக்கவேண்டும் என்ற அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை…எனக்கும் கூட காமைஜியின் சில கருத்துக்களில் மாற்று உண்டு. ஆனால் இத்தளத்தின் மையக்கருத்துக்களில் ஒத்துப்போகும் எவரும் உங்கள் கருத்துக்குப் பின்னூட்டமிடலாம்…..

     ஆனால் உங்களோடு அயர்ச்சியின்றி பதில்போராடவேண்டுமே. எல்லாரையும் களைப்படையச் செய்வதில் உங்களுக்கு நிகர் நீங்களேதான். வேறு யாரும் போட்டிக்கு வரவேமுடியாது. 🙂

     5. நிச்சயமாக விமரிசனம் உங்கள் எண்ணங்களை வைக்க சிறந்த இடம்தான். காமையும் அதை வரவேற்கிறார், அதனால்தான் நீங்களும் எழுதுகிறீர்கள்…..

     நானும் கூட உங்களோடு வார்த்தையாடுவதில் மிகவும் மகிழ்கிறேன்… இப்படிப்பட்ட தளங்களில் வந்தாவது unbiased government unbiased administration unbiased adminisitriator unbiased law, unbiased social reformation. கடைசியாக unbiased for the people, unbiased by the people, unbiased of the people பற்றித் தெரிந்து கொள்வீர்கள். என்று…

     நன்றி.

     • thiruvengadam சொல்கிறார்:

      தொடர் வாதம் செய்து மற்ற நண்பர்கள் நேரத்தை வீணாக்கவிரும்பவில்லை. தங்களது / கா.மை மெயில் முகவரி கிடைத்தால் பதில் மூலம் இருவரும் தெளிவு பெறலாம். கருத்துக்கள் பதிவு அனுமதிக்கு கா.மை அவர்களுக்கு மீண்டும் நன்றி.

  • Sharrom சொல்கிறார்:

   Mr.Thiruvengadam sir I stay abroad. I don’t get any chance to read many news papers or magazines. So I really appreciate this article by KM sir. It is an wonderful article. Happy to know about these 2 ladies job and courage.

 2. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார்,

  இந்த மாணிக்கங்களை கண்டெடுத்து, பொருத்தமான இடங்களில் அமர்த்தி, பொறுப்பினைக் கொடுத்து,
  செயல்பட துணையாகவும், பின்புலமாகவும் இருக்கும்
  “அந்த தேவதை”யையும் சேர்த்து பாராட்டி இருக்கலாம்.
  ஒரு வேளை அதை மற்றவர்கள் தாமாகவே
  புரிந்து கொள்ளட்டும் என்று
  இருந்து விட்டீர்களோ ?

  • ரிஷி சொல்கிறார்:

   ஓ மை காட்!!!!! நண்பர்கள் கா.மை, டுடேஅன்ட்மீ எவ்வளவோ பரவாயில்லை போலிருக்கிறது! இளங்கோ சார் தெறி பின்னூட்டம் 🙂

   • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    ரிஷி,

    வாதம் என்று வந்த பிறகு நான் விடுவதாக இல்லை.
    இளங்கோ சொன்னதில் என்ன தவறு …?

    திருவாளர்கள் –
    கலைஞரில் இருந்து –
    ஸ்டாலினில் இருந்து –
    டாக்டர் ராம்தாசிலிருந்து,
    டாக்டர் அன்புமணியிலிருந்து,
    கேப்டன் விஜய்காந்த் -லிருந்து,
    டாக்டர் அக்காவிலிருந்து –
    ஈவிகேஎஸ் இளங்கோவனிலிருந்து,
    வைகோவிலிருந்து,
    டாக்டர் கிருஷ்ணசாமியிலிருந்து
    ( இன்னும் யாராவது விட்டுப் போயிருந்தால்
    அவர்களையும் சேர்த்துக் கொள்ளவும் …..! )

    அத்தனை பேரும் திரும்ப திரும்ப அடித்துக் கூறுகிறார்கள்…
    மன்னிக்கவும் – அடிக்காத குறையாக கூறுகிறார்கள்….

    தமிழக அரசில் ” எதைச் செய்வதாக இருந்தாலும்
    முதல்வரைக் கேட்க வேண்டி இருக்கிறது. அதிகாரங்கள்
    பகிர்ந்தளிக்கப்படவில்லை. எல்லாமே முதல்வருக்காக
    காத்திருக்கின்றன… எல்லாருமே காத்திருக்கிறார்கள்…” –

    இந்த நிலை உண்மையானால் – இந்த ஐஏஎஸ் அதிகாரிகள்
    இவ்வளவு சுதந்திரமாகவும், துணிச்சலாகவும் தங்கள்
    நடவடிக்கைகளை தொடங்கி இருக்க முடியுமா ?
    தொடர்ந்திருக்க முடியுமா…?
    முதல்வர் சொல்லாமல், முதல்வர் உத்திரவு இல்லாமல்,
    முதல்வர் அனுமதி இல்லாமல்,
    இந்த demolitions நடக்குமா, ஆக்கிரமிப்புகள்
    அகற்றப்பட்டிருக்குமா … ?

    “டான்” விஷயம் விவாதிக்கும்போதே உங்கள் “நடுநிலை”
    ” சந்தேகத்திற்கிடமான நிலையில் ” இருந்தது. இப்போது
    D.I.list- க்கு வந்து விட்டது….

    இடுகையில் உள்ள மிக முக்கியமான அம்சமான
    அந்த பெண் ஐஏஎஸ் அதிகாரிகளின், துணிச்சலான,
    அயராத பணிகளைப் பாராட்ட உங்களுக்கு தோன்றவில்லை.
    ஆனால்- இளங்கோவின் பின்னூட்டத்தின் மீது தான்
    உங்கள் கவனம் போகிறது. அதைப்பற்றி தான்
    கவலைப்படுகிறீர்கள்…காரணம் ….?

    என்ன செய்வது…. மழை வெள்ளத்தில் சிலரின்
    பற்றற்ற தன்மை கரைந்து விடுகிறது…. 🙂 😀

    நீங்கள் எங்கிருந்தாலும், எப்படி இருந்தாலும்,
    -நட்புடனும், வாழ்த்துக்களுடனும்,
    காவிரிமைந்தன்

    • ரிஷி சொல்கிறார்:

     ஐயா, அமுதா, கஜலட்சுமி போன்றோரின் மகத்தான பணிகள் நிச்சயம் பாராட்டுகுரியவையே. அவர்கள் பாதுகாக்கப்படவேண்டியவர்கள் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இவர்களைப் போல தங்கள் அளவில் இயன்றவரை நேர்மையாக, அயராது பணியாற்றும் பல அதிகாரிகள் உள்ளனர்தான்.

     நீங்கள் சொல்வதுபோலப் பார்த்தால் முதல்வர் உத்தரவு இல்லாமல், முதல்வர் வழிகாட்டுதல் இல்லாமல் எந்த ஐஏஎஸ்ஸூம் தமிழ்நாட்டில் இயங்குவதில்லை எனும்போது…

     இதையே பொருத்திப் பார்த்தால் மதுரை கிரானைட் உள்ளிட்ட கனிமவள கொள்ளைக்கு சகாயத்தை நீதிமன்றம் விசாரணைக்கு ஆட்படுத்தியபோது அதை எதிர்த்ததே ஜெ.தானே? மேல் நீதிமன்றங்கள் வரை சென்றும் சகாயத்தை நீக்க முடியாமல் மூக்குடைபட்டாரே. ஒருவேளை சகாயம் திமுக காரரா? அவர் அமுதா வரிசையில் சேர்க்கப்பட வேண்டாமா?

     தென் தமிழக கடலோர மாவட்டங்களில் வைகுண்டராஜன் தாதுமணல் கொள்ளையில் ஈடுபட்டபோது எந்த ஐஏஎஸ்சும் ஜெ. வழிகாட்டுதல்படி ஆக்சன் எடுத்ததாகத் தெரியவில்லையே! ஒருவேளை அங்கு உண்மையில் பாதுகாக்கப்பட வேண்டியவர் வைகுண்டம்தானா?

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப ரிஷி

    நான் இந்தப்பக்கம் வரமுடியாமல் ரொம்ப லேட்டாக வந்தால் இப்படி ரிஷி கூட தெறி பின்னூட்டம் போட்டால் எப்படி?

    நம்பிட்டேன் நடு நிலைமைன்னு 😛

   • today.and.me சொல்கிறார்:

    நண்ப ரிஷி,

    ஓ மை காட்!!!!! இல் வருகிற காட் யார்- ? 😀

    • ரிஷி சொல்கிறார்:

     நிச்சயமாக.. 🙂

     அதிமுக ஆட்சியில் இருக்கும்போது திமுக காரனாக இருப்பதுபோல தோற்றமளிப்பேன்!

     திமுக ஆட்சியில் இருக்கும்போது அதிமுக காரனாக இருப்பதுபோல தோற்றமளிப்பேன்!

     ரெண்டு பேரும் ஆட்சியில் இல்லாதபோது எந்த காரனாகவும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருப்பேன்! 😉

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   இளங்கோ,

   உங்களுக்கு தானாகவே புரிந்தது… ரிஷி போன்ற
   சில நண்பர்களுக்கு நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகு கூட
   புரியவில்லையே என்ன செய்வது …?

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

   • today.and.me சொல்கிறார்:

    காமைஜி

    ஆண்கள் கூட பெண்களைப்போல குரங்குபெடல் சைக்கிளில் சுடிதார்பாட்டம் போட்டுக்கொண்டு. முதல்வர் என்னைப் போல சைக்கிள் ஓட்டுவாரா என்று தமிழர்களை வாயாலேயே ஓட்டிக் கொண்டிருக்கும் அரசியல் ஸ்டன்ட் அடிக்கும் இந்தக் காலத்தில்

    ஆண் பெண் பேதம் தேவையில்லை என்பது என் கருத்து….

    அப்படிப் போட்டிருந்தீர்களானால் ஒருவேளை ரிஷி நடு நிலையில் இருந்திருபாரோ என்னவோ?

 3. ஆவி சொல்கிறார்:

  கஜலட்சுமி, அமுதா மற்றும் பெயர் வெளிவராமல் மக்கள் பணியாற்றும் அதிகாரிகளின் சேவைக்கும் கடமை உணர்விற்கும் வாழ்த்தும் வணக்கமும்.

  அதே சமயம் காஞ்சீபுரம் ஆட்சியர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அக்டோபரில் கஜலட்சுமியும், வெள்ள நிவாரண சிறப்பு அதிகாரியாக அமுதாவும் ஜெயலலிதாவினால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் என்பதையும் மறந்துவிட முடியாது.

  தன்னிச்சையாக செயல்பட்டவர்கள் கடந்த காலங்களில் இரண்டு கட்சிகளின் ஆட்சியிலும் பட்டபாட்டையும் மறந்துவிட முடியாது.

  • thiruvengadam சொல்கிறார்:

   I too in the same opinion in last mentioned. Like ” Viva ” procedure in Ph.d success , let us wait what will happen if they came across like this by ” un constitutional ” persons. Any way wish them for having joined the band vagan of good officers from Tamilnadu.

 4. today.and.me சொல்கிறார்:

  தலைப்பிலே சொல்லியிருக்கிற ‘பாதுகாக்கப்படவேண்டியவர்கள்’ என்பதைக் குறித்து யாருக்காவது கருத்து இருக்கிறதா மக்களே?

  உண்மையில் பெரும்பாலான ஆக்கிரமிப்புகள் நிகழ்ந்தது யாரால்? எந்த ஆட்சியில்? இப்போது அவை அகற்றப்படுவதால், அகற்றப்படுபவர்களுக்கு ஆபத்து வந்தால் யாரால்?

  இவர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.

  • ரிஷி சொல்கிறார்:

   இந்த புள்ளிவிவரம் எப்படி எடுப்பது? அதிமுக ஆட்சியில் எடுத்தால் திமுகவினரின் விவரங்கள்தான் தொன்னூரு சதவீதம் இருக்கும். திமுக ஆட்சியில் எடுத்தால் அதிமுகவினரின் விவரங்கள்தான் தொன்னூரு சதவீதம் இருக்கும். இதை எப்படி நேர்மையாக எடுப்பது?

 5. today.and.me சொல்கிறார்:

  ஓடை மற்றும் புறம்போக்கு நிலங்களில் பத்துவருடங்களாவது நீர்வளம் குறைந்தால் அங்கு தொடர்ந்துகுடியிருந்து வருபவர்கள் பட்டா வழங்கலாம்
  என்ற அரசாணையை
  மூன்று வருடங்களாகக் குறைத்து ஆணையிட்டதும், உலகிலேயே அதிகமான நிலஅபகரிப்புகளில் ஈடுபட்டதும், குறைவான நிலஅபகரிப்பு வழக்குகளில் சிக்கியதும், திருவாளர் முத்துவேல் கருணாநிதி அரசாங்கம்தான் என்பது வரலாறு மறந்தவர்களுக்காக…

 6. ravi சொல்கிறார்:

  மாற்று கருத்து இல்லை .. இவர்கள் பாதுகாக்க பட வேண்டியவர்கள் .. கலெக்டர் அமுதா செங்கல்பட்டு பகுதியில் செய்த பணிகள் , குறிப்பாக மணல் கொள்ளை மாபியாவை அருமையாக கையாண்டார் .. ஆதலால் தூக்கி அடிகபட்டார் ..
  சகாயம் , அவர்களும் பாதுகாக்க படவேண்டியவர் ..
  ஆனால், இவர்கள் விதிவிலக்குகள் மட்டுமே ..
  இன்னும் எத்தனை நாள் இந்த பதவியில் இருப்பார்களோ ??
  கூடிய சீக்கிரம் இவர்களும் தூக்கி அடிக்க படுவார்கள் ..
  நடக்காமல் இருக்க இறைவனை வேண்டுகிறேன் ..

 7. ravi சொல்கிறார்:

  //ஓடை மற்றும் புறம்போக்கு நிலங்களில் பத்துவருடங்களாவது நீர்வளம் குறைந்தால் அங்கு தொடர்ந்துகுடியிருந்து வருபவர்கள் பட்டா வழங்கலாம் என்ற அரசாணையை மூன்று வருடங்களாகக் குறைத்து ஆணையிட்டதும், உலகிலேயே அதிகமான நிலஅபகரிப்புகளில் ஈடுபட்டதும், குறைவான நிலஅபகரிப்பு வழக்குகளில் சிக்கியதும், திருவாளர் முத்துவேல் கருணாநிதி அரசாங்கம்தான் என்பது வரலாறு மறந்தவர்களுக்காக//
  சரி சார், இதை சொல்லி எதனை நாள் ஓட்ட போகிறீர்கள் .. 5 வருடம் முடிய போகிறது ..இந்த ஆணையை மாற்ற முடியாதா ?? கேஸ் போட்டு லாடம் கட்ட வேண்டியதுதானே சார் ..
  இந்த வெள்ளம் வரவில்லை என்றால் , கண்டிப்பாக இந்த ஆணையை பற்றி எந்த கட்சிக்காரரும் பேச போவதில்லை .. காரணம் , இந்த பகுதியில் உள்ளவர்களின் வோட்டு பலம் ..
  சென்னை புறநகர் பகுதி உள்ளாட்சி அமைப்புகள் முழுவதும் கிட்டத்தட்ட ஆளும் கட்சி தான் ..
  திமுக செய்த அதே தவறுகளை தானே இவர்களும் செய்கிறார்கள் .. அவ்வளவே ..

 8. selvarajan சொல்கிறார்:

  அமுதா அவர்கள் கடலூரில் துணை ஆட்சியராக முதன் முதலில் அரசு பணியேற்று வந்தபோதும் — இதே போன்ற ஒரு பெரும் மழை வந்து கெடிலம் ஆற்றின் கரையில் { அதாவது தினதந்தி அலுவலகம் முன்பாக இம்பீரியல் ரோட்டில் } விரிசல் ஏற்பட்டு வெள்ளம் வந்தபோது அவர் ஆற்றிய பணியை நேரில் பார்த்தவன் என்கின்ற முறையில் —- அவர் ஒரு சிறந்து துடிப்பான அதிகாரி என்பதிலும் — அதே போல் திரு ககன் சிங் பேடி கடலூர் ஆட்சியராக இருந்த போது சுனாமியின் பேரழிவை சமாளித்த விதமும் நன்கு அறிந்தவன் நான் … அவருடைய சிறப்பான பணியினை பாராட்டி எவனவனுக்கோ ” பேனர் — கட் அவுட் ” வைக்கின்ற காலத்தில் அவருக்கு வைத்து — காலெண்டரில் அவருடைய படத்தை போட்டு தங்களின் நன்றியை தெரிவித்தவர்கள் கடலூர் மக்களாகிய நாங்கள் …. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஸ்டாலின் துணை முதல்வராக இருந்த போது அவருக்காக பணியாற்றியவர் திரு சிங் அவர்கள் ….. அதனால் தான் ஜெயா அரசில் அவரை கிரானைட் விசாரணை குழுவுக்கும் — தற்போதைய கடலூர் வெள்ள நிவாரண பணிக்கும் முக்கியத்துவம் கொடுத்து பணி செய்ய ஆணையிட்டுள்ளார் முதல்வர் …. யார் சிறந்த அதிகாரிகள் என்பது ஜெயலலிதாவிற்கு நன்கு தெரியும் —- ” இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் ” என்கின்ற திருக்குறளுக்கு ஏற்ப யாரிடம் எந்த பணியை ஒப்படைத்தால் சிறக்கும் — என்பதை மற்றவர்களைவிட நன்றாக அறிந்தவர் தற்போதைய முதல்வர் என்பது புரியும் … !!!

 9. Thanavanam சொல்கிறார்:

  Why never take care police office Miss Vishnu priya?????

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.