கோட்டூர்புரம் பாதிப்புக்கு யார் காரணம்….?

.

.

கோட்டூர்புரம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால்
கட்டப்பட்ட 1800 வீடுகளில் வாழ்க்கையின் அடித்தட்டு மக்கள்
சுமார் 8,000 பேர் வசிக்கிறார்கள். அடையாற்றில் வந்த வெள்ளம்
அவர்களை அடித்து துவைத்துவிட்டு போய் விட்டது.

இந்த பாதிப்புக்கு அடிப்படையில் யார் காரணம் என்று அலசுகிறது
ஒரு தமிழ் இதழ் – அவர்களின் பார்வையையும் அறிய
துண்டுச் செய்தி கீழே –

kotturpuram

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

8 Responses to கோட்டூர்புரம் பாதிப்புக்கு யார் காரணம்….?

 1. ஆவி சொல்கிறார்:

  பதிவுக்கு சம்பந்தமே இல்லையென்று போர் தொடுக்காமல் இருந்தால்……………
  தமிழக மக்களுக்கு முதல்வர் என்ற முறையில் ஜெயலலிதா அவர்கள் வாட்ஸ்-அப் மூலம் செய்தி வெளியிட்டதை அனைவரும் அறிவோம்.முதல்வர் என்ற முறையில் அப்படி ஒரு செய்தியை மக்களுக்கு சொல்ல அவருக்கு உரிமை உண்டு. செய்வது சரியோ தவறோ தமிழக மக்கள் அனைவருக்கும் அவர் முதல்வர் என்பதை யாரும் மறக்க முடியாது.

  அதைக் கிண்டலடித்து தளபதி(?) கருத்து வெளியிட்டிருக்கிறார். எதிர்கட்சி என்றால் எல்லாவற்றையும் எதிர்ப்பது என்று இன்று பொருளாகி விட்டது. முதல்வர் வேட்பாளராக மட்டுமல்ல எதிர்கட்சியில் கூட இருக்க அவருக்கு தகுதி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அவருக்கு அப்படிச் சொல்ல தகுதி உண்டா என்பதை விட, அப்படி சொல்லலாமா?

  இந்நிலையில் மேலே பதிவில் உள்ள பத்திரிகை செய்தியை படியுங்கள். இரண்டிற்கும் தொடர்புண்டு. அதை நான் சொல்வதைவிட தமிழ் புலவன் வள்ளுவன் சொல்வதே மேலானது என எண்ணுகிறேன்.

  தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
  என்குற்ற மாகும் இறைக்கு.

  (யார் எந்தக் கட்சியை சேர்ந்தவர் என.)…….. என்றிகழார் நின்ற
  ஒளியோடு ஒழுகப் படும். (அவர் வகிக்கும் பதவிக்கு மதிப்புக் கொடுத்து பண்புடன் நடந்து கொள்பவனே ஆட்சிக்கு வரத் தகுதியானவனாகிறான்.)

  வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
  கேட்பினும் சொல்லா விடல். (இதன்படி எதிர்க்கட்சியில் இருப்பதற்கும் அவர் தகுதியற்றவராகிறார்)

 2. nparamasivam1951 சொல்கிறார்:

  அந்த இதழ் கூறி இருப்பது 100% உண்மை. அந்த சமயம் முந்தைய முதல்வர் சைதை தொகுதியில் போட்டி இட்டார்.(முதலில் போட்டி இட்ட தொகுதியில் திரும்ப ஏனோ அவர் நிற்பது இல்லை). தனது தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றும் முகத்தான் அடையாறு ஆற்றின் நடுவே கட்டப் பட்டது தான் இக் குடியிருப்புகள். இது உண்மை என்பது நான் அறிவேன். 66 கிரவுண்டு பற்றி தெரியாது. இவ்வாறு அடையாறு மறிக்கப் பட்டதால், இப்போது கஷ்டப்பட்டவர்கள், அவர்கள் மட்டும் அல்ல. சைதை, ஜாபர்கான்பேட்டை, நன்தம்பாக்கம், என பல குடியிருப்புகள். இனி மேலாவது அவர்களுக்கு நல்ல இடத்தில் வீடு அரசு அமைத்து கொடுக்க வேண்டும்.

  • இளங்கோ சொல்கிறார்:

   கோட்டூர்புரத்தில் அடையாறு ஆற்றின் குறுக்கே ( அல்லது
   அத்தனை அருகே ) 1800 அடுக்கு மாடி குடியிருப்புகள்
   கட்டிக் கொடுத்த முன்னாள் முதல்வர் கலைஞரும்,
   எதிர்கால முதல்வராக களத்தில் இறங்கி இருக்கும்,
   ( முன்னாள் துணை முதல்வர் ) ஸ்டாலினும்
   மேற்குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் கொடுக்க
   கடமைப்பட்டிருக்கிறார்கள்.

   ஆற்றின் நீரோட்டத்தை தடுத்த குற்றத்தில்,
   ஆற்றங்கரை குடியிருப்பு வாசிகளுக்கு இன்றைய தினம்
   இத்தனை இன்னல்களை உருவாக்கிய குற்றத்தில் –
   அவர்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது.

   தங்கள் மேல் இத்தனை பாவச்சுமையை வைத்துக்கொண்டு
   அடுத்தவரை குற்றம் கூற அவர்களுக்கு எந்த அருகதையும் இல்லை.

 3. இளங்கோ சொல்கிறார்:

  கே.எம்.சார் மீண்டும் நாந்தேன்.
  நீளமான பின்னூட்டம். தயவுசெய்து மன்னிக்கவும்.

  இன்றைய மாலைச் செய்தி –

  சிட்னி: ஆஸ்திரேலியாவில் அதிகமான வேகத்தில் சூறாவளி
  காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. பல இடங்களில்
  மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில்
  பீதி நிலவுகிறது.

  சிட்னியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம் மற்றும் புறப்பட்டு செல்லும் விமான சேவைகளும்
  ரத்து செய்யப்பட்டுள்ளன.

  சிட்னி நகரில் இன்று அதிகமாக சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. வீடுகள், கட்டடங்களின் கூரைகள் பறந்தன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் நகரின் பல இடங்கள் இருளில்
  மூழ்கியுள்ளன.

  மு.க.ஸ்டாலின் :
  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத
  ஜெயலலிதா உடனே அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

  டா.ராம்தாஸ் :
  செயலிழந்து விட்ட முதலமைச்சரை
  உடனடியாக கவர்னர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.

  கேப்.விஜய்காந்த் :
  இது சூறாவளிக் காற்றை கூட தடுக்க தெரியாத
  அரசு மக்கலே. நான் வந்து எப்படித் தடுக்கிறேன்
  பாருங்க மக்கலே.

  • Sharrom சொல்கிறார்:

   Yes u are right Mr.Elango. Heavy rain and wind.Even in some placed hail storm too.So power cut in some places and some road accidents too caused many delays and traffic jams. This is the natural calamity here in NSW. Another state s busy fire. But the political parties are not fighting like this.Instead they are fixing the problems as quick as possible. Only our politicians are playing dirty politics.

 4. ரிஷி சொல்கிறார்:

  தோற்றமளிக்கும் (அடுத்த தடவை அடையாற்றின் நடுவே கட்டப்பட்டிருக்கிறது என தெளிவாக எழுதச் சொல்லுங்கள்)

  மிகப்பெரிய தொழிலதிபர்
  முக்கிய குடும்பதினர்
  வேறொரு நிறுவனம்

  (பொதுவாக இப்படி எழுதுவது எனக்குப் பிடிப்பதில்லை. பொட்டில் அறைந்தாற்போல தெளிவான விவரங்கள் வேண்டும். இல்லையேல் இவை போன்ற இதழ்கள் மதிக்கத்தக்கவையல்ல)

  மற்றபடி திமுக குடியிருப்புகள் கட்டிக்கொடுத்ததாக குறிப்பு உள்ளது. முதல் வரியில் கரை ஓரம் என்று சொல்லியிருக்கிறார்கள். இருபத்தோராவது வரியில் நடுவில் இருப்பது போல தோற்றமளிக்கிறது என்கிறார்கள்.

  உண்மையில் அடையாற்றின் நடுவில் கட்டப்பட்டிருந்தால் திமுக மீது குற்றம் சுமத்துவதை நிச்சயம் வரவேற்கிறேன்.

  (பின் குறிப்பு : இது எந்த இதழ் எனத் தெரிவித்தால் நன்றாக இருக்கும்)

 5. ஆவி சொல்கிறார்:

  எனக்கு ஒரு விடயம் புரிந்து கொள்ள முடியவில்லை. அரசியல்வாதிகள் தெரிந்தே தவறு செய்கிறார்களா? எம்.ஜி.ஆர். முத்து அவர்கள் எழுதிய வள்ளல் எம்.ஜி. ஆர். வாழ்க்கை வரலாறு என்ற நூலில் ஒருமுறை படித்தது நினைவுக்கு வருகிறது.

  அதில் சைதாப்பேட்டை வழியாக அடையாருக்குப் போகும் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு குடிசைகள் அழியும் என்றும், 1978ல் சென்னையில் கோட்டூர்புரம் என்ற இடத்தில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்கு மாடி வீடுகள் நடுத்தர மக்கள் வசிக்கும் இடம் மற்றும் குடிசை வாசிகள் வீடுகள் அழிய வாய்ப்பு இருப்பதாக கூறி (எம்.ஜி.ஆர். தோட்டம் அருகில்தான் அந்த சைதாப்பேட்டை ஆறு போய்க் கொண்டிருக்கிறது.) தடுப்புச் சுவர் போடப்பட்டது.

  1985 இல் ஏற்பட்ட பெருமழையால் பலத்த அழிவு ஏற்பட்ட நிலையில் நிரந்தர தீர்வு தேவை எனச் சொன்ன எம்ஜீஆர் தீர்வு காணாமலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார்.

  தொடர்ந்து இந்த அழிவுகள் நடந்தும் அரசியல்வாதிகள்,ஆட்சியினர் பாராமுகம் காட்டியது ஏன்? ஆக்கிரமித்தது ஏன்?

 6. chollukireen சொல்கிறார்:

  இவ்வளவு விஷயங்களா. முதுகில் இவ்வளவு வைத்துக்கொண்டு கண்ணிற்கும் தெரியவில்லை கைக்கும் எட்டவில்லை அறிப்பு. யார் செய்தாலும், குறைகாண்பதே,அதுவும் பதவியிலுள்ளவர்கள் மீது காண்பதே என்றாலும், இம்மாதிரி முன் நடந்ததை ஞாபகப்படுத்துகிறவர்களும் இருக்கிரார்கள் என்பதே ஒரு நல்ல விஷயம். இம்மாதிரி விஷயங்கள் என்மாதிரி சனங்களுக்கு அறியக் கொடுத்தது மிக்க ஸந்தோஷம். எப்போதும் தெருச்சண்டையே போட்டு வழக்கமாகிவிட்டது. யார் ,எந்த கட்சியானாலும்,நல்லதை செய்து பாராட்டு வாங்குங்கள். மலிவான ,வழி வேண்டாம். கட்டுரைக்கு மிகவும் நன்றி.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.