கேப்டன் விஜய்காந்தின் முயற்சி “பூமராங்” ஆகிறதா …?

????????????????????????????????????

 

பாஜக உள்வட்டங்களிலிருந்து நேற்று “கசிந்த”
(அல்லது “கசிய” விடப்பட்ட ) செய்தி இது…..

டாக்டர் அன்புமணி ராம்தாஸ் நேற்று டெல்லியில்
பிரதமர் மோடிஜியை சந்தித்தது குறித்து வெளியே
சொல்லப்பட்ட காரணம் – தமிழகத்திற்கான வெள்ள நிவாரண
உதவியாக 40,000 கோடி, மற்றும் சில கோரிக்கைகளை
முன்வைத்து என்று. ஆனால், பாஜகவில் இருந்து வரும்
தகவல்கள் வேறு விஷயத்தை சொல்கின்றன….

சட்டமன்ற தேர்தலில், கேப்டன் விஜய்காந்த்
பாஜக கூட்டணியில் சேரும் நிலையில் தான் இருந்தார்…
இப்போதும் கூட இருக்கிறார் என்றும் சொல்லலாம்.
ஆனால், அதற்காக விஜய்காந்த் விதிக்கிற நிபந்தனைகளை
எல்லாம் பாஜக தலைமை ஏற்க விரும்பவில்லை.

ஒரு நிபந்தனை – தேர்தலுக்கு முன்னர் தன்னை
முதல்வர் வேட்பாளர் என்று பாஜக அறிவிக்க வேண்டும்.
இரண்டாவது நிபந்தனை – தேர்தலுக்கான நிதியுதவி
சம்பந்தப்பட்டது. விஜய்காந்த், தன் கட்சியை பாஜகவுடன்
இணைத்தால் – அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது
குறித்து பரிசீலிக்கலாம் என்று பாஜக தலைமை
தெரிவித்திருப்பதாகத் தெரிகிறது. தனிக்கட்சியாகவே
தொடரும் பட்சத்தில் இதை ஏற்பது சாத்தியமில்லை
என்றும் சொல்லி இருக்கிறது.

ஆனால், பாஜகவுடன் ஒட்டுமொத்தமாக கட்சியை இணைக்க திரு.விஜய்காந்த் தயாராக இல்லை….. தான், மக்கள் நல கூட்டணியுடன் சேரத்தயாராக இருப்பதாக காட்டிக் கொண்டால், பாஜக தன் நிலையிலிருந்து இறங்கி வரக்கூடும்
என்று எண்ணி, விஜய்காந்த் நேற்று முன்தினம் அந்த
எண்ணத்தை கோடி காட்டிப் பேசி இருக்கிறார்.

– ஆனால், அவரே எதிர்பாராதவிதமாக விஷயம் “பூமராங்க்”
ஆவது போல் தெரிகிறது. கேப்டனின் அறிவிப்பை
தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது
பாமக.

நேற்று டாக்டர் அன்புமணி ராம்தாஸ் டெல்லியில்
பிரதமர் மோடிஜியை நேரில் சந்தித்துப்பேசினார்.
தமிழகத்திற்கு வெள்ள நிவாரண உதவியாக 40,000 கோடி
அளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார் – என்பது
வெளிப்படையாக கூறப்பட்ட செய்தி.

ஆனால், பின்னணியில், விஜய்காந்த் பாஜக கூட்டணியில்
இல்லை என்கிற பட்சத்தில் தங்களுக்கு பாஜகவுடன்
கூட்டணி சேருவதில் பிரச்சினைகள் ஏதும் இருக்காது
என்று பிரதமரிடம் டாக்டர் அன்புமணி தெரிவித்திருப்பதாக
பாஜகவின் “கசியும்” செய்திகள் கூறுகின்றன….

பாஜக வுடன் கூட்டணி சேருவது டாக்டர் அன்புமணி மீதான
சிபிஐ வழக்கை சந்திக்கவும் உதவும் என்பதும் ஒரு
முக்கிய காரணம்.

இது விஜய்காந்துக்கு வைக்கப்பட்டிருக்கும்
ஒரு ” counter check “….!

ஆக மொத்தத்தில் – இப்போதைக்கு -தே.மு.தி.க.
அல்லது பாமக இரண்டில் ஒரு கட்சி
பாஜக கூட்டணியில் இடம் பெறுவது நிச்சயம்
என்று வைத்துக் கொள்ளலாம் ….!!!

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

11 Responses to கேப்டன் விஜய்காந்தின் முயற்சி “பூமராங்” ஆகிறதா …?

 1. thiruvengadam சொல்கிறார்:

  To get a sizeable portion in TN அரசியலில் இடம் பெறுவது என்ற நோக்கில் பாஜகா காய் நகர்த்தும். காங்கிரஸின் முந்தைய அடிப்படை ” மேலே எனக்கு கீழே உனக்கு ” என்ற நிலை ( தனி மெஜாரிட்டியால் ) பின்பற்ற வேண்டியதில்லை. எந்தகடையில் பொருள் ( சீட் ) அதிகமாக கிடைக்குமென்பது மட்டுமே ஆய்வுக்குரியது. As we repearely hear word ” Swing ” in N DTV analysis , i hope Anbumani may be tied with an understanding on his cases which U referred. Dr. Ramadoss may change the tune , to reach the ultimate goal of wiping out ” Dravidian Parties ” took this stand.

 2. ரிஷி சொல்கிறார்:

  0 + 0 = 0

  மிக எளிமையான கணித சூத்திரம்.

 3. ravi சொல்கிறார்:

  Rishi ,

  some times 0+0 =1 in politics..
  even if they cannot win, they may disturb both DMK/ADMK Fronts esp in north/kongu belts.

  Both PMK/DMDK have a better cadre base than mdmk

 4. LVISS சொல்கிறார்:

  Leaving these two parties the BJP may ally with the AIADMK –That alliance will be unbeatable — the BJP will like to grow in the state -It cannot do so in the company of PMK or Vijayakanth’s party –

  • ரிஷி சொல்கிறார்:

   கொள்கை மற்றும் புரிந்துணர்வு அடிப்படையில் இரு கட்சிகளும் இணைவதற்கான முகாந்திரம் நிறையவே இருக்கிறது. அதையே பிஜேபியும் விரும்புகிறது. ஆனால் ஜெ. விரும்ப மாட்டார். என் கணிப்புப் படி அதிமுக தனித்தே நிற்கும். அதே நேரம் வெல்லவும் வாய்ப்புண்டு (நான் விரும்புகிறேனா, விரும்பவில்லையா என்பது வேறு விஷயம்!!)

   • LVISS சொல்கிறார்:

    The AIADMK would like to go it alone and as you say may do –It would be in the interest of the BJP if they do not try to displace the ruling party in states like T Nadu Punjab Andhra Pradesh but instead try to strike a moderate alliance and not try to dictate terms —

 5. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  எப்படி இப்படித் தவறாகக் கணிக்கிறீர்கள் என்பது புரியவில்லை. (அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவு தெரிந்தும்). ஜெ. எந்தக் காரணம் கொண்டும் பா.ஜா.காவைச் சேர்க்கமாட்டார். பா.ஜா.காக்கு 5 சதவிகிதம் ஓட்டு இருப்பதாகக் கருதினாலும், அவர்களைச் சேர்த்தால், 7 சதவிகித ஓட்டுக்களை (‘நாடாளுமன்றத் தேர்தல் அடிப்படையில்) ஜெ. இழப்பார். இப்போது அவரது கவலை, ‘ஆட்சிக்கு எதிரான வாக்குகள்’ மட்டுமே. எந்தப் பேரிடருக்குமே ஆட்சியாளர்கள்தான் பொறுப்பு என்று மக்கள் நினைப்பார்கள். அவர்கள் எப்போதும் சுய பரிசோதனை செய்ய எண்ண மாட்டார்கள் (பிளாஸ்டிக், இட ஆக்ரமிப்பு, குப்பைகளைப் போடுதல் போன்ற பல குறைகள்)

  பா.ம.கவுக்கு நிச்சயம் தெரியும்..கூட்டணி இல்லாமல் 20 தொகுதிகளுக்கு மேல் என்ன முயன்றாலும் பெற முடியாது என்று.

  மக்கள் நலக் கூட்டணியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. அதில் மக்கள் நலம் என்று ஒன்று இல்லவே இல்லை. தன்னலம் மட்டும்தான் இருக்கிறது.

  ஸ்டாலினுக்கு தன் ஆளுமையை வெளிப்படுத்தியாக வேண்டும். (கருணானிதியின் நிழலிலிருந்து வந்தாக வேண்டும்). அப்போதுதான் எதிர்காலத்தில் (குறைந்தது அடுத்த 3 வருடங்களுக்கு) கட்சியைத் தன் பிடியில் சரியாக வைத்துக்கொள்ள முடியும். அதற்கப்புறம், திமுகவில் வேறு யாரும் வர இயலாது.

  ஜெவுக்கு உடல் நலம் அவ்வளவு சரியில்லை. இதுதான் அதிமுகவின் பெரிய பிரச்சனை. எம்ஜியாரை விட, ஜெ. கட்சியைத் தன் பிடியில் வைத்திருப்பதாகத்தான் தெரிகிறது.

  விஜயகாந்த், திமுக பக்கம் சென்றால், பெரிய அளவில் வருவதற்கு வாய்ப்பே இல்லை. ஜெ அவருக்குச் செய்ததை ஸ்டாலின்/திமுக அவருக்குக் கண்டிப்பாகச் செய்யும் (business only. தங்கள் கட்சி வளம் பெற அவர்கள் விஜயகாந்தை வளர்க்கக்கூடாது). அதனால், விஜயகாந்த் பா.ஜ.க பக்கம் செல்ல வாய்ப்புகள் அதிகம்.

  வாசன், அதிமுக செல்வதற்கு நிறைய வாய்ப்பு உள்ளது. அதற்கு அவர், குறைந்த தொகுதிகளைப் பெற்றுக்கொண்டே ஆகவேண்டும். அவர் எந்த முடிவு எடுத்தாலும், பீட்டர் அவரை விட்டு விலகுவது உறுதி.

  காங்கிரஸுக்கு வேறு வாய்ப்பே இல்லை. அவர்கள் திமுகா உடன் சேர்ந்தாகவேண்டும்.

  மக்கள் நலக் கூட்டணி (தி.முகா அல்லது வேறு பக்கமோ தாவாமலோ, உடைந்து சிதறாமலோ இருந்தால்) – 0 தொகுதிகள்.
  பாமக – 20 தொகுதிகள்
  அதிமுக-80-110 தொகுதிகள்
  திமுக – 70-80 தொகுதிகள்
  காங்கிரஸ்-5 தொகுதிகள்
  பாஜக/தேதிமுக – 10 தொகுதிகள்
  மீதி – எங்கு போகும் என்பது தெரியவில்லை.
  இதுதான் இன்றைய நிலவரம் என்று எனக்குத் தோன்றுகிறது.
  கா.மை – இதை எலக்ஷனுக்குப் பின் குறிப்பிடுவார் என்று ‘நினைக்கிறேன்.

 6. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்ப நெல்லைத்தமிழன்,

  // கா.மை – இதை எலக்ஷனுக்குப் பின் குறிப்பிடுவார்
  என்று ‘நினைக்கிறேன்.//

  இன்னும் இரண்டு மூன்று விஷயங்கள் தொங்கலில் நிற்கின்றன…
  அவை முடிவிற்கு வந்தால் இன்னும் கொஞ்சம் விவரமாக
  விவாதிக்க முடியும் என்று நினைக்கிறேன்….

  (நீங்கள் சொன்னது போலவே அதிமுக – பாஜக கூட்டணி
  உருவாக வாய்ப்பில்லை என்றே நானும் நினைக்கிறேன்.
  பாஜக விரும்பினாலும் கூட, ஜெ.அவர்கள் இதற்கு
  தயாராக இல்லை என்றே தெரிகிறது…)

  1) கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டாக வேண்டும்…
  விஜய்காந்த்துக்கு பாஜக தான் safe என்றாலும் கூட,
  ஒருவேளை தமாகவும் கூட வருவதாக இருந்தால் –
  “முதல்வர் வேட்பாளர்” என்கிற பெருமைக்கு ஆசைப்பட்டு,
  மக்கள் நலக்கூட்டணிக்கு அவர் போகவும் வாய்ப்பு இருக்கிறது….

  2) அநேகமாக தமாகா வுக்கும் அதிமுக கூட்டணியில்
  வாய்ப்பு இல்லை என்றே தோன்றுகிறது….

  3) கடைசி நேரத்தில், கலைஞர் தனது “பிரம்மாஸ்திரம்” – ஆக,
  கூட்டணி ஆட்சி என்கிற நிலைக்கு ஒத்து வரக்கூடும்….
  அது நேர்ந்தால் – தேர்தல் கணக்குகளில் நிறைய மாறுதல்கள்
  ஏற்படும்… அத்தகைய சூழ்நிலையில் –
  .விஜய்காந்த், திருமா ஆகிய இருவருமே கலைஞர் வசப்படக்கூடும்…!!!

  -இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்…. காத்திருப்போம்….!!!

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.