இந்த செய்திக்கு, நீங்களாக இருந்தால், என்ன தலைப்பு கொடுப்பீர்கள்…?

.

.

(பாராளுமன்றத்தில் இன்று …)
இறுதியில் விவாதத்திற்கு பதில் அளித்துப் பேசிய மத்திய
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் –

கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களை ஆக்கிரமித்து
கட்டிடங்கள் கட்டப்பட்டதும்,

வடிகால் மற்றும் கால்வாய்கள் அடைக்கப்பட்டதும் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம்.

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை பொறுத்தவரை –

அதிகளவு பெய்த மழை.
குடியிருப்புகள் கட்டப்பட்டதில் முறையான திட்டமிடல் இல்லை.
நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன்
கழிவு நீர் ஓடைகள் மற்றும் இயற்கையான
வடிகால் வசதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலை சென்னையில் மட்டுமல்ல – கனமழை
மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து அதிக அளவு
தண்ணீர் திறக்கப்பட்டதே வெள்ளத்திற்கு காரணம் என
தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

சென்னையில் பெருமழை பெய்யும் என்பதால்
அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கும்படி 3 நாட்களுக்கு
முன்பே தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும்
கூறினார்.

—————————-

இது “நக்கீரன்” தனது செய்திகள் தளத்தில்
வெளியிட்டிருக்கும் செய்தி…
http://www.nakkheeran.in/Users/frmnews.aspx?N=157453

இந்த செய்திக்கு நீங்களாக இருந்தால்
என்ன தலைப்பு கொடுப்பீர்கள்…? ஒருக்கணம் யோசித்து
விட்டு பிறகு அடுத்த வரிக்கு போங்களேன்…!!!

நக்கீரன் கொடுத்திருக்கும் தலைப்பு –

“கனமழை பெய்யும் என 3 நாட்களுக்கு முன்பே
தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது:
பிரகாஷ் ஜவடேகர்…..!!!” 🙂 😀

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

6 Responses to இந்த செய்திக்கு, நீங்களாக இருந்தால், என்ன தலைப்பு கொடுப்பீர்கள்…?

 1. சைதை அஜீஸ் சொல்கிறார்:

  முதல் முறை ஜெட்லீ அம்மாவை சந்தித்ததின் பயன், அம்மா விடுதலை!
  இம்முறை, பேரம் படியாததால், பிரகாஷ் அப்பா(ஜவா)டக்கரை கொண்டு ஆப்பு!

 2. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  அஜீஸ்,

  மிகவும் நீளமாக இருக்கிறதே நண்பரே….. 🙂

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

 3. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  1. பிஜேபி பேரம் தோல்வி-சென்னை வெள்ளத்துக்குக் காரணம் கண்டுபிடிக்கும் பாஜக
  2. சென்னைப் பெருமழை-மத்திய அரசு எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய ஜெ அரசு
  3. செயல்படாத ஜெ. அரசினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லை-பாஜக குற்றச்சாட்டு
  4. நீர்த்தடங்கள் ஆக்ரமிப்பு, முறையான திட்டம் இல்லை- அரசு அதிகாரிகள் அலட்சியம். பாஜக சாடல்.

  பத்திரிகையின் நிறத்தைப் பொறுத்து எந்தத் தலைப்பையும் வைக்கலாம். இப்போது உள்ள சூழலில் ஆ.வி (3) ஐயும், நக்கீரன் எப்போதும் திமுக அடையாளம் கொண்டிருப்பதால் 1,2,3ல் எதையும் தலைப்பாக வைக்கலாம். இத்தகைய கட்டுரைகள் அந்த அந்தப் பத்திரிகையின் தேர்ந்தெடுத்த வாசகர்களுக்கு அவலாகப் பயன்படுமே தவிர வேறு ஒரு உபயோகம் கூடக் கிடையாது.

  மத்திய அரசு 3 நாளைக்கு முன்பே எச்சரிக்கை விடுத்ததை மழை விட்டு 6 நாளைக்குப் பிறகு கண்டுபிடித்த பாஜகாதான் விரைந்து செயல்படும் அரசு.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   நண்பர்களே,

   நேற்றிரவு இந்த இடுகையை எழுதினேன்.

   இன்று காலை, இப்போது தான் –
   சில நாளிதழ்களைப் பார்த்தேன்.

   தினகரன் கொடுத்திருக்கும் தலைப்பு –
   “சென்னையில் வெள்ளம் – மத்திய அரசு “திடுக்” தகவல்…!!!

   தினமலர் கொடுத்திருக்கும் தலைப்பு –
   “சென்னை மூழ்க காரணம் என்ன ? மத்திய அமைச்சர்
   தடாலடி பதில்….!

   ———-
   ஒரு மேலதிக தகவலும் கிடைத்தது…..!

   சென்னையில் நிரந்தரமாக வசிக்கும் –
   திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மகளும்,
   திமுக பொருளாளர் தளபதி ஸ்டாலினின் சகோதரியும்,
   பாராளுமன்ற உறுப்பினருமான திருமதி கனிமொழி
   அவர்களுக்கு சென்னையில் வெள்ளம் ஏன் வந்தது என்று
   தெரியாமல் போகவே –
   அதை தெரிந்து கொள்ளும் பொருட்டு –

   மத்திய அமைச்சர் திரு பிரகாஷ் ஜவடேகரிடம்
   ” சமீபத்தில் தமிழகத்தில் வரலாறு காணாத
   மழை வெள்ளத்துக்கு காரணம் என்ன…? ”

   என்று வினவியுள்ளார்…..!!!!!! 🙂 😀

   அதற்கு புத்திசாலியான மத்திய அமைச்சர்
   கூறிய பதில் தான் மேலே இருப்பது…

   யார் யார் இந்த மழை வெள்ளத்தை எப்படி எல்லாம்
   ” அரசியல்” ஆக்குகிறார்கள் என்பதற்கு
   எடுத்துக் காட்டாகவே இந்த இடுகையை பதிந்தேன்.

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. paamaranselvarajan சொல்கிறார்:

  // கடற்கரை மற்றும் ஆற்றங்கரையோரங்களை ஆக்கிரமித்து
  கட்டிடங்கள் கட்டப்பட்டதும்,

  வடிகால் மற்றும் கால்வாய்கள் அடைக்கப்பட்டதும் சென்னையில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு காரணம்.

  சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை பொறுத்தவரை –

  அதிகளவு பெய்த மழை.
  குடியிருப்புகள் கட்டப்பட்டதில் முறையான திட்டமிடல் இல்லை.
  நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன்
  கழிவு நீர் ஓடைகள் மற்றும் இயற்கையான
  வடிகால் வசதிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன…..// —- என்று கூறியுள்ளதில் — இந்த ஆண்டிலிருந்து — இந்த ஆண்டு வரை என்று மத்திய அமைச்சர் குறிப்பிட்டு கூறியிருந்தால் — ஆசைமகள் கனிமொழிக்கு இதில் ” அப்பாவின் பங்கு ” மற்றவர்களை விட கணிசமான அளவு என்பது அப்பவாவது புரிந்து இருக்குமா ….? ஏன் இவ்வாறு கேட்டோம் என்று நொந்தாவது இருக்க ஏதாவது சான்ஸ் இருக்கா …?

 5. chandramouly venkatasubramanian சொல்கிறார்:

  karakattam

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.