உத்தமரா, வில்லனா, ஹீரோவா, ஜோக்கரா … டாக்டர் சு.சுவாமி….?

sswamy

இந்தியாவில் எந்த மனிதருக்கும் கிடைக்காத தனிப் பெருமையும்
புகழும் டாக்டர் சு.சுவாமிக்கு கிடைத்திருக்கிறது….!!!

அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் ….
இந்தியாவை இந்து நாடாக்க வேண்டும்….
அகன்ற ஹிந்துஸ்தானத்தை உருவாக்க வேண்டும்…..
என்றெல்லாம் தீவிரமாகப் பேசி தீவிர இந்துத்வா
ஆதரவாளர்களிடையே பெரும் புகழும், ஆதரவும் பெறும் உத்தமர்…..!!!

இதற்கு நேர் எதிராக, போலி சாமியார், கொலைகாரர் –
கற்பழிப்பாளர் என்று சொல்லி சிறையில் தள்ளப்பட்டுள்ள
” ஆசாராம் பாபு ” வழக்கை நடத்தி –
அவரை வெளியே கொண்டு வர நீதிமன்றங்களில் ஏறி இறங்கி
படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் வில்லன்….?

ஊழலை ஒழிக்கவே அவதாரம் எடுத்திருக்கிறேன் என்று சொல்லி –
பல அரசியல்வாதிகளுக்கு எதிராக லஞ்ச, ஊழல் வழக்குகளைத்
தன்னிச்சையாகத் தொடர்ந்து – அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக
விளங்கும் ஹீரோ…?

அதே சமயம், பிசிசி – கிரிக்கெட் ஊழலினாலேயே உலகப்புகழ் பெற்ற திருவாளர் சீனிவாசன் ஒன்றும் அறியாத அப்பாவி என்று கூறியும் அவரது அப்பாவித்தனத்தை நிரூபிக்கிறேன் என்று சொல்லி சென்னை கிரிக்கெட் அணியின் மீதுள்ள தடையை போக்க – உலகம் பூராவும் தெரிந்த ஊழலை
இல்லவே இல்லை என்று சொல்லி நீதிமன்ற வழக்கு
போட்ட வில்லன் …?

தனக்கு “நிதிமந்திரி” பதவியைத் தர மறுத்தார் என்கிற
ஒரே காரணத்திற்காக – மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான
பாஜக அரசை, பரம வைரி திருமதி சோனியா காந்தியுடன்
கூட்டு சேர்ந்து “டீ” பார்ட்டி வைத்து கவிழ்த்த வில்லன் …?

தேர்தலில் ஜெயித்து பாஜக ஆட்சிக்கு வந்தால் தனக்கு
மத்திய அமைச்சர் பதவி உறுதி என்கிற நம்பிக்கையில்,
அதே பாஜகவுடன், தனது கட்சியை இணைத்து, 2014 தேர்தலில்
மோடிஜி வெற்றி பெற உழைத்த உத்தமர்….?

அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டியே இன்னும்
இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்தும் –
முற்றிலுமாக மோடிஜி அரசுக்கு எதிராக வெளிவர
துணிச்சல் இன்றி – திரு.அருண் ஜெட்லியை மட்டும்
காய்த்துக் கொண்டிருக்கும் ஜோக்கர்….?

அதற்கு ஈடாக அவ்வப்போது பாஜக அரசிலிருந்து தனக்கு
போடப்படும் ரொட்டித்துண்டுகள் போன்ற சில்லரை பதவிகள்,
வெளிநாட்டு அசைன்மெண்ட்-கள்,
விசேஷ செக்யூரிடி-பங்களா போன்ற சலுகைகளை
ஏற்றுக் கொண்டு – நிதி அல்லது உள்துறை அமைச்சர்
பதவி என்றாவது கிடைக்குமென்ற நம்பிக்கையோடு இன்னமும்
மோடிஜி அரசை ஆதரித்துக் கொண்டிருக்கும் போக்கு ……?

இதில் முக்கியமாக கடைசியாக உள்ள “ஜோக்கர்” பட்டம் நினைவிற்கு வருவது –

தேர்தலுக்குப் பின் பலம் குன்றி மஹா பலவீனமாக இருந்த
காங்கிரஸ், திருமதி சோனியா – முக்கியமாக ராகுல்காந்தி
ஆகியோரை மீண்டும் அரசியலில் முன்னணிக்கு கொண்டு
வரச்செய்த இவரது கோமாளித்தனமான முயற்சிகள்….

சுய தம்பட்டங்கள்….

கடைசியாக ” நேஷனல் ஹெரால்டு வழக்கு”
தொடர்பாக நான் இதுவரை மோடிஜியிடம் பேசியதே இல்லை
என்கிற சூப்பர் பொய்…. !!!

பலவீனமான வழக்கு என்று சொல்லி சிபிஐ கிட்டத்தட்ட
முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, அதை விசாரித்த சிபிஐ
அதிகாரியை டிரான்ஸ்வர் செய்யச் சொல்லி இவர் மோடிஜிக்கு
லெட்டர் எழுதி,

அந்த அதிகாரியும் டிரான்ஸ்வர் செய்யப்பட்டு,
வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டதும் – மேற்படி
விவரங்களை தானே தன் வலைப்பக்கத்தில் தம்பட்டம்
அடித்துக் கொண்டதையும் இன்னமும் பலர் மறக்காததால் –

அரசியல் விமரிசகர்களிடையே இவர் ஹீரோ பட்டத்தை
பெறுவதற்கு பதிலாக “ஜோக்கர்” பட்டத்தையே பெறுகிறார்….!!!

டெல்லி ஆங்கில செய்தித்தளம் ஒன்று இட்டிருக்கும் தலைப்பு –

” Swamy doesn’t need Z security,
nobody wants to kill him,
he’s great entertainment value ”

——————–

இப்படி, உத்தமரா, வில்லனா, ஜோக்கரா என்று அகில இந்திய அளவில் விவாதிக்கப்பட்டு வரும் வேளையில் தமிழக
பாஜக பற்றி அவர் உதிர்த்திருக்கும் கருத்து முத்துக்களை
தெரிந்து கொள்ள வேண்டாமா …?

டாக்டர் சு.சுவாமியின் வாக்குமூலம் –
———-

கே: பாஜகவில் சேர்ந்த பிறகு தமிழகம் மீது உங்களுக்கு
ஆர்வம் குறைந்தது ஏன்?

ப: வாஜ்பாய் பதவிக் காலத்தில் இளைஞர்களாக இருந்த
பல தமிழக பாஜக தலைவர்கள் இப்போது கட்சியில் முக்கியப்
பொறுப்புகளை வகித்து வருகின்றனர்.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் கைக் கூலிகளாக
இருந்தே சில பாஜக தலைவர்கள் பழக்கப்பட்டு விட்டனர்.

அந்த இரு கட்சிகளின் தோள் மீது நிற்காவிட்டால் தங்களின்
அடையாளம் மக்களுக்கு தெரியாது என்ற கலாசாரத்துடன்
அவர்கள் வாழுகின்றனர். அதனால், அவர்களிடம் இருந்து
ஒதுங்கி இருக்கிறேன்.

கே: பாஜகவால் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் அளவுக்கு
வளர முடியும் என்று நம்புகிறீர்களா?

பதில்: தமிழகத்தில் பாஜக வளர வேண்டுமானால்
குறைந்தபட்சம் இரண்டு பொது தேர்தல்களிலாவது பாஜக
தனித்து போட்டியிட்டு மக்களுக்கு நம்பிக்கையை
ஏற்படுத்த வேண்டும்.

கே: உங்கள் நோக்கத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள்
ஆதரவு உள்ளதா?

பதில்: தமிழக பாஜகவில் உள்ள சில தலைவர்களின்
செயல்பாட்டை நான் ஆதரிக்கவில்லை. அதனால் என்னை
சில தலைவர்கள் ஆதரிப்பதில்லை. கூட்டணி இருந்தால்
நான்கு, ஐந்து பேரை தலைவராக வைத்துக் கொண்டு
தங்களுக்கு வேண்டியவர்களுக்கு எம்எல்ஏ சீட் வாங்கிக்
கொடுக்கலாம் என்றும், மத்திய அமைச்சரவையில் சேரலாம்
என்றும், தில்லியில் இருந்து பணம் நிறைய வரும் என்ற
எதிர்பார்ப்பிலும் சில தலைவர்கள் அரசியல் செய்கின்றனர்.

தேர்தலில் திமுக அல்லது அதிமுக அல்லது வேறு
கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் அவையும்
பாஜகவுக்கு பணம் கொடுக்கும் என சிலர் உள்ளனர்.
இதனால், களப்பணியில் ஈடுபடாமல் சுகமாக வாழும்
கனவுடன் தன்மானமின்றி வாழும் சில தலைவர்கள்

என்னை ஆதரிப்பதில்லை.

கே: பாஜக அகில இந்திய தலைமை உங்களுக்கு உரிய
மதிப்பை அளிக்கிறதா?

பதில்: பாஜகவில் சேர்ந்த பிறகு என்னை தமிழகத்
தலைவர்கள் மதிக்காவிட்டாலும் –

எனது ஆலோசனைகளை எல்லா தருணத்திலும் கட்சித்
தலைமை கேட்கிறது. தேசிய செயற்குழுவில் உறுப்பினராக்கி,
“மூத்த தலைவர்’ என்ற அங்கீகாரத்தை பாஜக மேலிடம்
அளித்துள்ளது. பிரதமர் மோடியையும் பாஜக தலைவர்
அமித் ஷாவையும்
எப்போது வேண்டுமானாலும் சந்தித்து
மக்கள் நலனுக்காக முறையிடும் உரிமை எனக்கு
வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழக பாஜக தலைவர்கள்
என்னை மட்டுமின்றி என் பின்னால் இக்கட்சியில் சேர்ந்த
எனது தொண்டர்களையும் அரவணைப்பதுமில்லை,
ஆதரிப்பதுமில்லை.

கே: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில்
பிரசாரம் செய்யும் திட்டம் உள்ளதா?

பதில்: இந்த அழைப்பை பாஜக மேலிடம் விடுத்த போது,
“தன்மானத்தை விட்டு விட்டு என்னை மதிக்காத
மாநிலத்தில் உள்ள சில தலைவர்களுக்காக எனது
உழைப்பை எவ்வாறு செலவிட முடியும்?’ என்று கேட்டேன்.

பாஜகவை வளர்க்க கட்சி மேலிடம் விரும்பினால்,
செயல்படாத தலைவர்களை கேள்வி கேட்டு நீக்கவும்,

அவர்களை செயல்பட வைக்கும் அதிகாரத்தையும்
எனக்கு பாஜக மேலிடம் தர வேண்டும்.

அப்படிச் செய்தால் –

தேர்தலின்போது தனித்துப் போட்டியிடும் உத்வேகத்தை
தொண்டர்களுக்கு அளிப்பேன். அனைத்துத் தொகுதிகளிலும்
இப்போதே வேட்பாளர்களைக் களமிறக்கி தொகுதிவாரியாக
பிரசாரம் செய்வேன்.
தனித்துப் போட்டியிடுவதன் மூலம்
திமுக, அதிமுக ஆகிய இரு ஊழல் தலைவர்களை
எதிர்த்துப் போட்டியிடும் துணிவு எங்களுக்கு மட்டுமே உண்டு
என்பதை மக்களுக்கு நிரூபிப்போம்.

——————————————————–

பின் குறிப்பு –

அதற்கு முன்னதாக –
தமிழகத்தில் போஸ்டர் அடித்து, பொதுமக்களை அழைத்து,
ஒன்றிரண்டு திறந்த வெளி பொதுக்கூட்டங்களிலாவது
(மூடிய அரங்குகளுக்குள் அல்ல…) டாக்டர் சு.சுவாமி
பேசிக் காட்டினார் என்றால் –
பாஜக மேலிடத்திற்கு, (தமிழக மக்களுக்கு கூட )
அவர் மீது ஓரளவு நம்பிக்கை ஏற்படும். செய்வாரா ஸ்வாமி….?

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

10 Responses to உத்தமரா, வில்லனா, ஹீரோவா, ஜோக்கரா … டாக்டர் சு.சுவாமி….?

 1. thiruvengadam சொல்கிறார்:

  இரண்டு கருத்து ( அ ) நாயகன் படத்தில் மகன் அப்பாவிடம் கேட்கும் பிரபலமான வசனத்தை நாம் கேட்பதாக எண் ணி சாமி பதில் அளிக்கவேண்டும். ( ஆ ) இந்தபதிவை முன்மாதிரியாக வைத்து ஆர்வமுள்ளோர் முனைவர் பட்டம் பெற வழிகாட்டியுள்ளீர்கள். எச்சரிக்கையாக அவரிடம் அனுமதி பெறல் நலம்.

 2. R.Gopalakrishnan சொல்கிறார்:

  U have missed one more title.”Black mailer and kuttai kuzhapi”

 3. gopalasamy சொல்கிறார்:

  “பலவீனமான வழக்கு என்று சொல்லி சிபிஐ கிட்டத்தட்ட
  முடிவுக்கு கொண்டு வந்த பிறகு, அதை விசாரித்த சிபிஐ
  அதிகாரியை டிரான்ஸ்வர் செய்யச் சொல்லி இவர் மோடிஜிக்கு
  லெட்டர் எழுதி”,
  Wrong information. The matter was not referred to CBI at all. ED director was holding additional charge. ED did not take any action in NH case. You are having every right to support Sonia in National Herald case. But pl furnish correct information.

  • vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

   coooooool Mr.Gopalasamy…..

   நான் சிபிஐ என்று தவறுதலாகச் சொல்லி விட்டேன்.
   Enforcement Directorate என்பது தான் சரி.

   ஆனால் அந்த வழக்கை மேற்கொண்டு தொடர
   அடிப்படை ஆதாரம் இல்லை என்று சொன்ன அதிகாரி –
   திருவாளர் சு.சுவாமி மோடிஜிக்கு கடிதம் எழுதிய பிறகு
   அங்கிருந்து transfer செய்யப்பட்டது உண்மை தானே…?

   ஆமாம் – நீங்கள் இத்தனை நாட்களாக இந்த வலைத்தளத்தை
   படிக்கிறீர்களே –
   நான் கடந்த ஐந்து வருடங்களில் ஒரு தடவையாவது
   திருமதி சோனியா காந்திக்கு ஆதரவாக எதையாவது எழுதி
   நீங்கள் பார்த்ததுண்டா….?

   Please do not jump into hasty conclusion ….!!!
   இந்த வழக்கில் நான் திருமதி சோனியா காந்திக்கு ஆதரவாக
   எதையும் எழுதவில்லை…. டாக்டர் சு.சுவாமி செய்கிற
   கோமாளித்தனங்களை விமரிசிக்கும்போது வந்துபோகிற
   just passing remarks may make you think like that…!!!

   -வாழ்த்துக்களுடன்,
   காவிரிமைந்தன்

 4. M. Syed சொல்கிறார்:

  ///// பின் குறிப்பு –
  அதற்கு முன்னதாக –
  தமிழகத்தில் போஸ்டர் அடித்து, பொதுமக்களை அழைத்து,
  ஒன்றிரண்டு திறந்த வெளி பொதுக்கூட்டங்களிலாவது
  (மூடிய அரங்குகளுக்குள் அல்ல…) டாக்டர் சு.சுவாமி
  பேசிக் காட்டினார் என்றால் –
  பாஜக மேலிடத்திற்கு, (தமிழக மக்களுக்கு கூட )
  அவர் மீது ஓரளவு நம்பிக்கை ஏற்படும். செய்வாரா ஸ்வாமி….?/////

  ஏன் சார் உங்களுக்கு இந்த வேண்டாத ஆசை. அவர் தமிழகத்திலே பொதுகூட்டம் நடத்தி அழுகிய முட்டைகள் அபிசேகம் வாங்கவேண்டும் என்று !!! தமிழகத்துக்கு மழை நிவாரணம் தரக்கூடாது என்று சொன்ன இந்த ஆளை தமிழக மக்கள் சும்மாவிடுமா ??? அல்லது அதிமுக மகளிர் அணிதான் சும்மாவிடுமா ??? அதன் பலத்தை காட்டாது !! எதை பார்க்கும் துணிசல் தான் சு சு வுக்கு இருக்கா ???

  M. செய்யது
  துபாய்

 5. LVISS சொல்கிறார்:

  Yes it is difficult to understand Mr Swamy –But he is a fascinating person–
  But how does one assume that he was promised a ministerial berth by the P M- I very much doubt this presumption —

 6. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  சு.சுவாமி எல்லோர் மேலும் கல் எறிவதால் (தன் கட்சி முதற்கொண்டு), அவர் நல்ல என்டெர்டைனர். அவர் பேசுவதில் ஓரளவு உண்மையும் இருப்பதால் நகைச்சுவையாகவும் இருக்கிறது. அவர் தமிழக பா.ஜ.க பற்றி சொன்னது உண்மைதான். அவர்கள் தேமுதிக பின்னாலும் பாமக பின்னாலும் ஓடுவது அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. தனித்து நின்று 5 சதம் ஓட்டு வாங்கினாலும் பிற்காலத்தில் உபயோகப்படும். இப்போது சுவாமி சொல்வதுபோல், திமுக அல்லது அதிமுக குதிரையில் ஏறிச் சவாரி செய்யத்தான் பாஜக விரும்புகிறது. அது அமைவதுபோல் தெரியாததால், தேமுதிக பாமக போன்றவற்றை தாஜா செய்ய முயல்கிறது. இவர்கள் அடுத்த காங்கிரஸ் கட்சிதான், தமிழகத்தில்.

 7. Ns raman சொல்கிறார்:

  Swamy is a main instrument for limelight of 2 G scam and SC cancelled the spectrum allocation. The present day Tamil Nadu politics reserved for school dropout leaders and their “bending” followers.

 8. ravi சொல்கிறார்:

  இவரை தான் , “அம்மா” நம்பி , மத்திய அரசை கவிழ்க்க உதவி செய்தார்…

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.