” என்னவோ நடக்குது – மர்மமா இருக்குது “

220px-Adams_bridge_map

இந்து ஆங்கில நாளிதழ் தெரிவிக்கும் செய்தி
திகைக்கச் செய்கிறது.

இந்தியாவின் ராமேஸ்வரத்தையும்,
இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும்
கடல் வழிப்பாலம் ஒன்றினை இந்தியா உருவாக்கப்போகிறது.
23,000 கோடி வரை செலவழியக்கூடும் என்று சொல்லப்படும்
இந்த திட்டத்திற்கு முழுவதுமாக கடன் தர ஆசிய வளர்ச்சி
( ADB ) வங்கி ஒப்புக்கொண்டிருக்கிறது….!!!

மத்திய போக்குவரத்து அமைச்சர் திருவாளர் நிதின் கட்காரிஜி
அவர்கள் தெரிவித்துள்ள இந்த செய்திக்கு … பதிலாக –

இந்த செய்தி குறித்து, இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய
ஆளும் கட்சித்தலைவர், அமைச்சர், Lakshman Kiriella
கூறுகிறார் –
” இந்த திட்டத்தைப் பற்றி எங்கள் அரசுக்கு ஒன்றும் தெரியாது.
எங்களிடம் யாரும் இதைப்பற்றி விவாதிக்கவில்லை “

( http://www.thehindu.com/news/national/tamil-
nadu/no-knowledge-of-sea-bridge-project-sri-lankan-
minister/ )

——————

இலங்கைக்கு தெரியாமலே (!), இலங்கையையும் இந்தியாவையும் இணைத்து பாலம் கட்ட கட்காரிஜி திட்டம் போடுகிறாரா …?

யார் கேட்டது இப்படி ஒரு பாலம் வேண்டுமென்று …?
ராமேஸ்வரத்தையும் -தலைமன்னாரையும் இணைக்கும்
பாலம் என்றால்,
தமிழக மக்களிடம்,
தமிழக அரசிடம் – இது குறித்து
பேசினார்களா…? கலந்தாலோசித்தார்களா…?
(இலங்கையிடமே பேசாதவர்கள் நம்மிடமா பேசப்போகிறார்கள்..?)

ஆமாம் – இலங்கை சம்மதம் கொடுக்கவில்லையென்றால் – ராமேஸ்வரத்தில் தரையை தொட்டுக் கொண்டும் –
தலைமன்னாரில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டும்
தொங்கு பாலம் அமைப்பார்களா …?

இலங்கையிடம் கூட கலந்தாலோசிக்காமல் இந்த திட்டத்தை
அவ்வளவு அவசரமாக அறிவிக்க வேண்டிய தேவை என்ன .. ?
யாருக்காக இந்த திட்டம்….?

ஏற்கெனவே காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில்,
சேது சமுத்திர திட்டம் என்று சொல்லி கடலில் போட்டதாகச்
சொல்லி தன் பாக்கெட்டில் தமிழகத்தைச் சேர்ந்த
மத்திய அமைச்சர் பணம் போட்டுக் கொண்டது
நம் நினைவை விட்டு அகலவில்லையே…!

அதுவாவது வெறும் 2500 கோடி சொச்சம் ….!
இங்கே 23,000 கோடி என்கிறாரே கட்காரிஜி….?

யாருக்காக இந்த பாலம் ….?
யார் கேட்டது….?
யாரை கலந்தாலோசித்தார்கள்…?
மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்து யோசிக்கப்பட்டதா …?
சுற்றுச்சூழல், கடல் வாழ் உயிரினம் பற்றி யோசிக்கப்பட்டதா ..?
பலன், விளைவு – குறித்து யோசிக்கப்பட்டதா …?
போட்ட முதல் எப்படி திரும்பும் என்று யோசிக்கப்பட்டதா …?
இரண்டு நாடுகளுக்குள்ளும் உள்ள commercial and
passenger traffic குறித்து கணக்கெடுக்கப்பட்டதா …?
எப்போது….? எப்படி ….?
( 600 பேரைக் ஏற்றிச் செல்லும் கப்பல் சர்வீஸே
லாபகரமாக இல்லையென்று இழுத்து மூடப்பட்டதே –
23,000 கோடியில் பாலம் கட்டி என்ன செய்ய …? )

இத்தனை ஆயிரம் கோடி பணத்தை கடலில் கொண்டு போய்
கொட்டுவதற்கு பதிலாக, உள்நாட்டில் இவர்களுக்கு
நிறைவேற்ற வேறு உருப்படியான திட்டங்களே இல்லையா …?

தினமும் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் உருப்படியாக திரும்பி வருவார்கள் என்கிற உறுதிநிலை
இல்லாதபோது,

தினம் தினம் தமிழக மீனவர் கைது என்கிற சம்பவங்கள்
தொடர்ந்து கொண்டிருக்கும்போது,

இந்த மீனவர்களுக்கு பிழைக்க ஒரு வழி செய்ய
துப்பில்லாமல்,

பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த இடத்தில்
தொழில் செய்ய முடியாமல் விரட்டப்படுவதை
இலங்கையிடம் தட்டிக் கேட்க துப்பில்லாமல் –

அவர்களது வாழ்வுரிமையை காத்திட துப்பில்லாமல்,

அவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடிப்பு என்கிற
மாற்று வழியையும் செய்து கொடுக்கத் துப்பில்லாமல் –

இது என்ன “கடல் வழிப் பாலம்” திட்டம் ….?

எங்கேயோ …அல்ல …
எல்லா பக்கமும் உதைக்கிறது…!
யாரோ கோடிக்கணக்கில் புகுந்து விளையாட வழி
உருவாகிக் கொண்டிருக்கிறது ….!

“என்னவோ நடக்குது… மர்மமாய் இருக்குது ”

Advertisements
படத்தொகுப்பு | This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

27 Responses to ” என்னவோ நடக்குது – மர்மமா இருக்குது “

 1. நெல்லைத் தமிழன் சொல்கிறார்:

  ஒண்ணும் தெரியாமல் நிதின் கட்காரி அவர்கள் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன். அல்லது யாரேனும் காண்ட்’ராக்ட் கம்பெனிக்கு கேரட் காண்பிப்பதுபோல் சொல்லியிருக்கலாம். கூரை ஏறிக் கோழி பிடிக்கத் தெரியலை..வானம் ஏறி வைகுந்தம் போவேன் எங்கிற கதையாயிருக்கு கட்கார் சொல்லுவது. எதுக்கு முன்னுரிமை என்று தெரியாதவர்களையெல்லாம் நாம் அமைச்சர்கள் என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

  அப்புறம் நீங்கள் 2500 கோடியை ஒருவர் சுருட்டிக்கொண்டார் என்று சொல்லியிருக்கிறீர்கள். அதில் 20% தலைவருக்குப் போகியிருக்கும் என்பது தெரியாதா?

 2. ராஜ நடராஜன் சொல்கிறார்:

  K.M. Sir,

  The article you are looking for is no longer available in this website. என்கிறது இந்து பக்கம்.
  பெரும்பாலும் இந்து பத்திரிகை ஒரு தூங்குமூஞ்சி பத்திரிகையாக இருந்தாலும் செய்திகள் வந்தால் அதன் பின்புலம் உறுதியாக இருக்கும். இல்லையென்றால் நூல் விட்டுப் பார்ப்பதற்கும் செய்திகள் கசிய விடுவதுண்டு. வந்த செய்தி வடை காணாமல் போனதன் மர்மம் என்ன?

 3. ஆவி சொல்கிறார்:

  யார் யாரோ கொள்ளை அடிக்கப் போகிறார்கள் என்பதிலோ சுருட்டப் போகிறார்கள் என்பதிலோ எனக்கு கருத்து வேறுபாடு எதுவும் கிடையாது.
  ஆனால்………….
  மத்திய போக்குவரத்து அமைச்சர் திருவாளர் நிதின் கட்காரிஜி சொன்னதில் அல்லது
  //இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய ஆளும் கட்சித்தலைவர், அமைச்சர், Lakshman Kiriella கூறுகிறார் –” இந்த திட்டத்தைப் பற்றி எங்கள் அரசுக்கு ஒன்றும் தெரியாது.
  எங்களிடம் யாரும் இதைப்பற்றி விவாதிக்கவில்லை “ //
  என்பதில் உள்ள தவறை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

  நிதின் கட்காரிஜி சொன்னதில் எதுவித தப்பும் கிடையாது. இலங்கை அமைச்சருக்கு தெரியாமல் போனதில் தான் தப்பு உள்ளது.

  இந்த கடல்வழிப்பாலம்,Tunnel திட்டம் காத்மண்டுவில் நடந்த சார்க் மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதை அன்று இலங்கைப் பிரதிநிதியும் ஏற்றுக் கொண்டுள்ளார்.சில மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்த இலங்கை அமைச்சர் ரவி கருணாநாயக்க அந்த நேர்காணலிலும் இதை உறுதிப்படுத்தி இருந்தார்.இதைவிட ரணில் விகிரமசிங்கே உடனான நிதின் கட்காரிஜியின் பேச்சிலும் இந்தத் திட்டம் பேசப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

  ஆக இலங்கை அமைச்சர் தெரியாமல் சொல்லி இருக்க வாய்ப்புண்டு.நம்ம நாட்டு அமைச்சர்களை விட அவர்கள் சற்று பரவாயில்லை.

  உங்கள் Hindu இணைய முகவரி….
  The article you are looking for is no longer available in this website.
  இப்படிக் காட்டுகிறது.

 4. Anitha Ramnath சொல்கிறார்:

  வாசிக்கவே திகிலாயிருக்கு

 5. ஆவி சொல்கிறார்:

  மன்னிக்கவும்……………பதிவுக்கு சம்பந்தப்படாத தகவல்………..
  இந்தத் தளத்தில் வந்த பலரின் கருத்து – அவை டாக்டர் ராமதாசின் வாயால்……

  விகடன் குழுமம் பற்றியது….
  //50 ஆண்டுகளில் தமிழகம் சந்தித்த அனைத்து சீரழிவுகளையும் தொடங்கி வைத்ததுடன், முதன்மை பங்குதாரராகவும் திகழ்ந்தது தி.மு.க. தானே? அதை மறுக்க முடியுமா? இத்தனை உண்மைகளையும் உணர்ந்திருந்தும் முரசொலியை விட அதிகமாக தி.மு.க. புராணம் பாடுகிறீர்களே? விகடன் இதழ்களில் விகடன் தாத்தா படத்திற்கு பதிலாக கலைஞரின் படத்தை போடாதது மட்டும் தான் பாக்கி. அந்த அளவுக்கு விகடன் குழுமத்தை தி.மு.க.வின் குடும்ப இதழ்களாக மாற்றி விட்டீர்களே…இது சரியா?//

 6. புது வசந்தம் சொல்கிறார்:

  சிலர் வெளிநாடு போய்க்கொண்டே இருக்கிறார்கள். விமானம் வேண்டாம், இப்படி கடல் வழி பாலத்தில் போகலாம் என்று முடிவு செய்திருக்கலாம். அப்புறம் மீனவர்கள் கடல் வழி போனால் தானே அவன் புடிக்கிறான். பாலம் வந்தவுடன் மீனவர்களுக்கு தூண்டில் இலவசம், பாலத்தில் இருந்து தூண்டில் போட்டு மீன் பிடிக்கலாம். நிறைய டீசல் மிச்சமாகும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு. அப்புறம் கடந்த வாரம் கேரளா பிரச்சாரம் பார்த்தீர்களா ?

 7. LVISS சொல்கிறார்:

  The link does not open —
  The Minister would not have said that without the knowledge of Srilanka government Probably it was discussed and agreed — Will ADB agree to fund a project if it is not agreed to between the two countries —

 8. ஆவி சொல்கிறார்:

  மேலே குறிப்பிட்ட செய்தியை ஏன் வைத்தேன் என்றால்,ராமதாஸ் அவர்கள் சொல்கிறார்களே என்பதற்காக அல்ல…….

  இந்தப் பதிவர் மட்டுமல்ல உலகமே விகடனின் பக்கச் சார்பைப் பற்றி பேசுகிறது. ஆனாலும் இந்தப் பதிவில் …………
  https://goo.gl/OkyTJo
  பிழை திருத்துனர் இ.பு.ஞானப்பிரகாசன் விகடனின் செயல்களை நியாயப்படுத்தியதற்காக தெரிவிக்கப்பட்டதாகும். காமை அவர்கள் விகடனை கேலி செய்ய வேண்டிய அவசியம் என்ன?,அவர் போட்டிப் பத்திரிக்கை எதுவும் நடத்தவில்லையே!

 9. today.and.me சொல்கிறார்:

  காங்கிரஸ் பினாமி
  பாஜக சுனாமி….

 10. vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

  நண்பர்களுக்கு,

  வெளியில் சென்றிருந்தேன்.இப்போது வந்து தான்
  பார்க்கிறேன்.

  மன்னிக்கவும். லிங்க் கொடுக்கையில் ஒரு error
  ஏற்பட்டிருக்கிறது. சரியான லிங்க்-ஐ மேலே தெரிவித்த
  நண்பர்களுக்கு நன்றி.

  —————–

  நண்பர்கள் பல கருத்துக்களை தெரிவித்திருக்கிறீர்கள்.
  மீண்டும் ஒருமுறை ஆங்கில செய்தியை நோக்கும்போது –
  பல contradictions தெரிகின்றன…..

  //a project to build a sea bridge and tunnel
  connecting Sri Lanka,//

  //The India-Sri Lanka connectivity project was
  estimated to cost about INR 24,000 crore.//

  இவ்வாறு sea bridge and tunnel என்கிற விஷயம்
  சாத்தியமா இல்லையா என்பது எப்படி தெரிந்தது…?
  அதற்கான ஆராய்ச்சிகள் -studies – எப்போது, யாரால்
  மேற்கொள்ளப்பட்டன….?
  எந்த கம்பெனி project report தயாரித்தது….?
  எந்த survey யும் பண்ணாமலே எப்படி 24,000 கோடி ரூபாய்
  என்கிற முடிவுக்கு வந்தார்கள்….?

  பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்களுக்குள் இந்த
  விஷயம் இவ்வளவு வேகமாக, இவ்வளவு தூரம் போனது
  எப்படி…? அதுவும் தமிழ்நாட்டில் யாருக்கும் தெரியாமலே
  இவ்வளவு ஆராய்ச்சிகள் நடந்து முடிந்து விட்டனவா …?

  மீனவர் பிரச்சினை – பற்றி எரியும்போதெல்லாம்
  இதைப்பற்றி ஒன்றுமே பேசவில்லையே ஏன்…?
  தமிழக மீனவர்களை இது எந்த அளவிற்கு பாதிக்கும்
  என்று ஏன் யோசிக்கவில்லை… விவாதிக்கவில்லை…?

  “We are not aware of this proposal,”
  Mr. Kiriella, Leader of House in Parliament,
  told The Hindu on Saturday.

  – Leader of House in Parliament என்றால்,
  பாராளுமன்றத்தில், ஆளும் கட்சியின் தலைவர்.
  அப்படியென்றால், அவர் சொல்வது எல்லாமே
  அதிகாரபூர்வமானவை தானே….?

  Ever since India’s Ministers began making
  statements on the matter six months ago,
  the Sri Lanka’s Foreign Affairs Ministry
  has been saying that it had no information.

  – இது எப்படி ….?

  Many groups and parties here, especially
  those claiming to represent interests of
  Sinhalese-Buddhists, have expressed
  opposition to the project .

  – இதற்கு பிறகும் கட்காரிஜி-பாட்டிற்கு நாங்கள் பாலம்
  கட்டப்போகிறோம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே
  அது எப்படி …?

  மீண்டும் தலைப்பிற்கு தான்
  வர வேண்டி இருக்கிறது.
  ” என்னவோ நடக்குது – மர்மமா இருக்குது “

  இதில் – “வெளிப்படையான நிர்வாகம்” –
  ” a government with transperancy ” –
  என்று பெருமை வேறு…..!

  கடைசியாக திடீரென்று ஒரு சந்தேகம் வருகிறது….
  அதெப்படி தமிழகத்தை சேர்ந்த அத்தனை தலைவர்களும்,
  எதிர்கால முதல்வர்களும் இது குறித்து, இதுவரை,
  வாயே திறக்காமல் இருக்கிறார்கள்….?

  -வாழ்த்துக்களுடன்,
  காவிரிமைந்தன்

  • R.Palanikumar சொல்கிறார்:

   எதிர் கால முதல்வர்கள் கிடக்கட்டும்..இப்போதைய முதல்வர் ஏன் ஒன்றும் சொல்லவில்லை? மீண்டும் தலைப்புதான் ஞாபகம் வருது..

 11. LVISS சொல்கிறார்:

  The link below throws more light on the subject–
  The fact that leaders of parties in Tamil Nadu have not spoken about it may mean that they may be aware of this –Let us wait for some more time for reaction from any of the leaders –
  If the govt wasnt transparent this news would not have come to be published —

  http://articles.economictimes.indiatimes.com/2015-09-15/news/66568745_1_sri-lankan-pm-union-minister-nitin-gadkari-adb

 12. paamaranselvarajan சொல்கிறார்:

  பேராசிரியர் க . அன்பழகனுக்கு 94 — வயது ஆகிவிட்டது ….! ஆனால் கலைஞர் 92 — வயதுக்கு உள்ள பாராட்டும் — விழாக்களும் —- பரபரப்பும் கட்சியினர் — ஊடகங்கள் — மற்ற அரசியல்வாதிகளால் — பெரிது படுத்தும் போது — திரு . க . அன்பழகனாரின் மனநிலை எவ்வாறு இருக்கும் …. ?

 13. Sharrom சொல்கிறார்:

  This comment is not relevant to this .Last week I met a Nepali friend and he was sharing about the Modi’s government unwanted and ugly involvement in their politics.Now even Nepal does not like India.

 14. R.Gopalakrishnan சொல்கிறார்:

  I have a doubt about the hindu for some time that it has lost its neutrality and one sided

 15. Sreenivasan சொல்கிறார்:

  Whatever may be the doubts or suspicious dealings, there wouldn’t have been smoke without fire. Something is happening and i am happy at least Bharathiar’s dream (singaLa theevinirkor palam amaipom) is getting a little bit closer to reality.

 16. yogi சொல்கிறார்:

  The plan to construct a bridge connecting Sri Lanka and India will suffer the same fate as the Sethu Samurdram project due to environmental issues, a minister said yesterday.

  Highways and Higher Education Minister Lakshman Kiriella said the proposed bridge would never materialise as it would adversely affect the marine environment.

  The minister made this comment with regard to a recent allegation by the joint opposition that the Sri Lankan government had given the go-ahead for the project.

  He said the government had no interest in such a bridge as there was no need for it. “A bridge between Sri Lanka and India is not needed at all,” he said; adding that Sri Lanka should rather concentrate on constructing roads within the country. “Preparation of the ground for the Colombo — Kandy Highway has already begun and construction work is due begin early next year. Work on the Northern Highway will begin before the end of 2016,” he said.

  In response to a journalist who asked him what the government would do if the India insisted on constructing the highway, he said the Indian gover – See more at: http://www.dailymirror.lk/101237/no-troubled-water-over-bridge#sthash.NFEMM9jU.dpuf

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.